அத்தியாயம்-5

“என்ன நடந்தது சொல்லுங்க சாந்தா?” என சுப்ரியா கேட்டாள். அவள் எதேச்சையாகத்தான் அங்கே வந்தாள்.

“இது சைவ ஈரல் வறுவல், அதாவது பச்சைப்பயிறில் செஞ்சது. இது சிக்கன் பிரியாணி இல்ல, பலாப்பழக்காயில், அதாவது பலாக்காய்ல செஞ்ச பிரியாணி. இது மீன் இல்ல, வாழைக்காய். இது முட்டை ஆம்லெட் இல்ல, கடலை மாவுல செஞ்ச தோசை,” என்றார்.

அழுது சிவந்த கண்களுடன் நீர் வழிய, செம்பருத்தி குருசேத்ரனைப் பார்க்கப் பிடிக்காமல் வேகமாக அவளறைக்குச் சென்றாள்.

‘பளார்’ என்று அறையும் சத்தம் கேட்டது.

“மா!” எனக் குரு கத்த, இன்னொரு கன்னத்திலும் அறைந்திருந்தார் மணியம்மை.

குருசேத்ரன் எதுவும் பேசாமல் வேகமாக அவனறைக்குச் சென்றுவிட்டிருந்தான்.

“ஆண்ட்டி,” என சுப்ரியா ஆரம்பிக்க, “இந்த ஒரு தடவை பிரியா மா! எனக்காக டா, ப்ளீஸ்! நான் செம்பருத்திகிட்ட பேசிக்கிறேன். அவள் கூட இருந்தால் எனக்கு நிம்மதியா இருக்கு. ப்ளீஸ் மா,” என்று கெஞ்சாத குறையாகப் பேசினார்.

“சரிங்க ஆன்ட்டி. நான் சும்மா உங்களைப் பார்த்து எல்லாமே ஓகேவா அப்டின்னு கேட்க வந்தேன். ஆனால் குரு எதுக்கு இப்படி நடந்துகிறான்? எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. நம்மகிட்ட வேலை செய்யுறாங்க அப்படிங்கிறதுக்காக என்ன வேணும்னாலும் பேசிடலாமா? அது தப்புதானே ஆன்ட்டி? பாவம் செம்பருத்தி. யாருமே இங்கே வேலை செய்வதற்கு ரொம்பத் தயங்குனாங்க,” என்றாள் சுப்ரியா.

“இனி இப்படி நடக்காது,” என அனுப்பி வைத்தார் மணியம்மை.

‘அவளுக்காக என்னை அடிச்சுட்டாங்க! இந்த அம்மா… நோ… அவங்க என்னோட அம்மா! அவங்க ஹெல்த் எனக்கு முக்கியம்,’ என அங்கும் இங்கும் நடந்தவன் வேகமாக மதுவை எடுத்தான்.

அந்த நேரம் ஃபோன் அலறியது. சுப்ரியாதான் அழைக்கிறாள். ‘ச்ச, இவள் வேற,’ என ஃபோனை எடுத்தான்.

“குரு, நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல,” என்று சுப்ரியா ஆரம்பிக்க, “எல்லாமே எனக்குத் தெரியும்! அவ என்கிட்ட கேட்காம அம்மாவோட டைம்டேபிளை மாத்திருக்கா. அதுவும் அவ இஷ்டத்துக்கு பண்றா. நான் கேட்கக் கூடாதா?” என்று குரு கொந்தளிக்க, “டேய், நீதானே கேட்ட ஒரு கேர் டேக்கர் வேணும்னு அப்பாயின்ட் பண்ண! தட்ஸ் ஓகே, அப்போ உங்க அம்மாவுக்கு நீயே கேர் டேக்கரா இருந்து பார்த்துக்க. நீயே இத்தனை பர்ஃபெக்ட்டா இருக்கும்போது அங்கே நர்ஸ் எதுக்கு இருக்கணும்? செம்பருத்தி கிளம்பட்டும்.”

“நூ…”

“வாட் நூ? நீ பண்ண காரியத்துக்கு அவளோட இடத்துல நானா இருந்திருந்தேன்னு வெச்சுக்கோ! கன்னம்கண்ணமா அறைஞ்சிருப்பேன். உங்க அம்மா பண்ணதை நான் பண்ணியிருப்பேன்டா! அந்தப் பொண்ணு சம்பளம் வாங்குது அப்படின்றதால என்ன வேணும்னாலும் பேசிடுவியா? சீ, உன்னை மாதிரி ஒருத்தனப் பார்த்ததே இல்ல நான்!” என்று பொங்கினாள்.

குருசேத்ரன் ஒரு பெருமூச்சு விட்டபடி, “நான் சொல்றது கேளு சுப்ரியா,” என்று ஆரம்பிக்க, “நோ, இனி நான் சொல்றதை நீ கேளு! டாக்டர் நித்யாவைப் பார்க்கப் போனியா? இல்லையா?”

“எனக்கு டைம் இல்ல. ரொம்ப பிஸி ஷெட்யூல்! நீ நினைக்கிறபோல எனக்கு எதுவும் இல்ல. நான் எதுக்குப் பார்க்கப் போகணும்? எனக்கு நியூ ப்ராஜெக்ட்ல மூச்சு விட முடியாத அளவுக்கு பிஸி… நிறைய ஃபாரின் க்ளையன்ட்ஸ் கூட மீட்டிங் இருக்கு,” என்றான்.

“எது வேணும்னாலும் இருக்கட்டும். நீ இன்னைக்குப் போய் அவங்களை மீட் பண்ணலன்னா, கண்டிப்பா நான் செம்பருத்தியைக் கூட்டிட்டுப் போயிடுவேன். நீயே உங்கம்மாவப் பார்த்துக்க,” என்றுவிட்டு அவள் ஃபோனை வைக்க, “டோன்ட் கட்… ஒன்ஸ் அகெய்ன்… இரு, கட் பண்ணாத,” என்று பற்களைக் கடித்துக்கொண்டே கூறினான்.

“சொல்லு,” என்று சுப்ரியா கோபமாகப் பேச, “இன்னைக்கு என்னால முடியாது. நாளைக்கு நான் போறேன்.”

“கண்டிப்பா நாளைக்கு போவியா?” என்று சுப்ரியா பற்களைக் கடித்தாள்.

“நான் தான் சொல்றேன்ல! குருசேத்ரன் சொன்னதைச் செய்வான். நாளைக்கு நான் கண்டிப்பா போறேன். ஓகே?” என்று அவன் சொல்ல, “ஓகே. அண்ட் அவகிட்டப் போய் நீ சாரி கேக்குற,” என்று சுப்ரியா சொல்லி முடிப்பதற்குள் ஃபோனைக் கட் செய்திருந்தான் குருசேத்ரன்.

“செம்பருத்தி! மணியம்மை வந்திருக்கேன். கதவு திறம்மா, ப்ளீஸ்மா, எனக்காக,” என்று அவர் கேட்க, கண்களைத் துடைத்தபடி உடனே கதவைத் திறந்தாள்.

அவளின் கையைப் பிடித்துக்கொண்டவர், “இந்த ஒரு தடவை, ப்ளீஸ், இந்த ஒரே தடவை மன்னிச்சுடு! இதுக்குக் காரணம் நானும் தான். என் பையனை நான் ஒழுங்கா வளக்கல. அதைவிட, நான் தப்பு பண்ணிட்டேன்! உன்கிட்ட நான் சாப்பிடக் கேட்டுத் தொந்தரவு பண்ணினதனாலதானே, நீ எனக்காக மெனக்கெட்டு நீயும் சாந்தாவும் அத்தனை ஐட்டம் பண்ணீங்க! ஆனா அந்தக் கடன்காரன் அதுக்குள்ளாட்டியும் வந்து எல்லாத்தையும்…” என்று அவர் கண்களில் நீர் கோர்க்க ஓடினார்.

“இல்லம்மா… நான்… உங்க மேலே எந்தத் தப்பும் இல்ல! நான்,” என அவள் அழுதாள். அவளால் மட்டும் என்ன செய்ய முடியும்?

“ப்ளீஸ்மா. நீ அதுக்கு என்னை வீட்டைவிட்டுப் போக வேணாம்மா! நான் சுப்ரியாகிட்ட பேசியிருக்கேன். இந்த ஒரு தடவை… இனிமே இப்படி நடக்கவே நடக்காது. கண்டிப்பா நான் சத்தியம் பண்றேன்,” என்று அவர் எவ்வளவோ கெஞ்சினார்.

அந்த வயதான பெண்மணி பேசுவதைப் பார்த்து செம்பருத்தியின் மனம் இளகிப்போனது.

அவள் அமைதியாக இருக்க, மணியம்மை கைகளில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து, “நீ என்னைவிட்டுப் போனா, கண்டிப்பா நான் செத்துப்போயிடுவேன். அந்த நிலையிலதான் அந்தக் கடன்காரன் வச்சிருக்கான்,” என்று மேலும் வருத்தப்பட்டார்.

“என்ன மேடம் இப்படி எல்லாம் பேசுறீங்க?” என செம்பருத்தி கண்கலங்க, “உனக்கு இருக்கிற இந்த பாசம் கூட அந்த நாய்க்கு இல்ல பார்த்தியா? நடுவுல அவங்க அப்பா தவறிட்டார். அதுக்கப்புறம்தான் இப்படி மூர்க்கனா மாறிட்டான். இந்தக் குடும்பத்துல அவன் மட்டும் இப்படி இல்ல. எங்க மாமனாரு, என்னோட வீட்டுக்காரரு எல்லாருமே இதேபோலத்தான். கோபம் அவங்க குடும்பத்துல வழிவழியா வர்றது,” என்றார் மணியம்மை.

அவர் ஏதோ ஆதங்கத்தில் பேசுகிறார் என்றுதான் நினைத்தாள் செம்பருத்தி. அவளும் வருத்தத்தில் இருப்பதால் பெரிதாக இதை எடுத்துக்கொள்ளவில்லை.

மணியம்மை செம்பருத்தி முகத்தைப் பார்த்து, “நீ இருப்பதானே? எனக்காக? ப்ளீஸ்!” என்று கைகூப்பினார்.

“ஐயோ, என்ன மேடம் இப்படி எல்லாம் பண்றீங்க? கண்டிப்பா நான் இருப்பேன். கவலைப்படாதீங்க. உங்களுக்காக நான் இருப்பேன்,” என்று கண்களைத் துடைத்தபடி கூறியவள், “சரி வாங்க மேடம், போய் சாப்பிடலாம். நீங்க உங்களுக்குப் பசிக்கும். மாத்திரை போடணும், சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் ஸ்ட்ரிப் வெச்சு சுகர் டெஸ்ட் பண்ணணும். வாங்க,” என்று அழைத்துச் சென்றாள்.

மீண்டும் ஒரு இலை வைக்கப்பட, அனைத்தையும் சாந்தா பரிமாறினார். முன்பு இருந்த சந்தோஷம் இப்பொழுது இல்லை. செம்பருத்தி அவருக்கு எதிரில் அமர்ந்து, “இது நான் பண்ணேன். என்னோடதுதான். நீங்க முதல்ல சாப்பிடணும்,” எனக் கூற, மெல்லப் பிசைந்து சாப்பிட்டவர் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.

“மேடம்,” என்று சாந்தா மற்றும் செம்பருத்தி இருவரும் ஒருசேர அழைக்க, “சந்தோஷத்தில் கண்ணீர் வந்திடுச்சு,” என்றவர் அரைகுறையாகச் சாப்பிட்டார். முழு நிம்மதியுடன் சாப்பிட முடியவில்லை. மகனை அடித்தது அவருக்கும் வலியைத் தந்தது.

“இன்னும் கொஞ்சம் வைக்கவா?” என சாந்தா கேட்க, “போதும் சாந்தா,” என்றவர், “சாப்பாடு அருமை. இதுல உங்க பாசமும் தெரியுது. நன்றி,” என்றார்.

“அட போங்க மேடம், நன்றியெல்லாம் சொல்லிக்கிட்டு,” என சாந்தா சிரிக்க, ஒரு நொடி அனைவரும் புன்னகைத்தார்கள். பெயருக்கு மட்டும்.

“செம்பா, பிரஷர் மாத்திரை எடுத்துக்கொடு மா,” என்றார் மணியம்மை. அனைத்தையும் எடுத்துக்கொடுத்துச் சாப்பிட வைத்தவள், “கொஞ்ச நேரம் உட்கார்ந்திருங்க மேடம்! அம்மா என்கிட்ட பேசணும்னு சொன்னாங்க, பேசிட்டு வரேன்,” என உள்ளே சென்றாள்.

மணியம்மை மெல்லப் படியேறி மேலே சென்றாள். ஸ்ட்ரெஸ் பந்தை அழுத்தியபடி அமர்ந்திருந்தான் குரு.

கதவைத் திறந்துகொண்டு நுழைந்தார் மணியம்மை.

“சாப்பிட்டீங்களா?” என எதுவுமே நடக்காததுபோல கேட்டான்.

மணியம்மை கண்களில் நீர் கோர்க்கப் பார்த்தார்.

“இப்போ எதுக்கு அழறீங்க? நான் இப்படித்தான் இருப்பேன். என்னால மாற முடியல. எனக்குத் தெரியுது, இது ஓவர் ப்ரோடெக்டிவ் அப்டின்னு. பட் ஐ கான்ட்,” என்றான்.

“டேய், அந்தப் பொண்ணு வேலை செய்ய வந்திருக்கு தம்பி. இப்படி பேசக் கூடாது கண்ணா! அம்மா சொல்றதைக் கேளுடா!”

“ஐ டோன்ட் கேர். அண்ட் ஐ ஹேட் ஹர்.”

“அவள் என்ன பண்ணா?” என மணியம்மை கேட்க, “உங்களுக்கு எப்போதும் நான் தான் ஃபர்ஸ்ட்… பட் இப்போ அவள் வந்துட்டா, ரைட்? என்னோட ஃபர்ஸ்ட் அவளுக்குப் போயிடுச்சு. ஆஃப்டர் ஆல், ஒரு நர்ஸ் என்னோட இடத்தைப் பிடிச்சிட்டா!” என்றான் குரு.

“கண்ணா! நீ என்னோட பையன். அது என்றைக்கும் மாறாது. அவள் நம்மகிட்ட வேலை செய்யுற பொண்ணு,” என மணியம்மை கூற, குரு சிவந்த விழிகளுடன், “அப்போ அவள் கிட்டப் போய் சொல்லுங்க. இனி உங்களுக்கு என்ன சாப்பிடக் கொடுத்தாலும் என்கிட்ட சொல்லிட்டுத்தான் செய்யணும். என்னோட மம்மிதான் எனக்கு எல்லாமே. அவளே இஷ்டத்துக்கு முடிவெடுக்கக் கூடாது,” என்றான்.

“சரி, நான் இப்போவே சொல்லிடறேன்,” என மணியம்மை கூற, “சரி,” என்றான்.

“நீ சாப்பிடுறியா? அம்மா ஊட்டி விடவா?” என மணியம்மை கேட்க, “நான் கிண்டர் கார்டன் கிட் இல்ல,” என்றான் குரு.

“எனக்கு நீ குழந்தைதான்… ஆனால் வளர்ந்த குழந்தை,” என மணியம்மை கூறிக்கொண்டே கீழே சென்றவர், சைவ பிரியாணி மற்றும் சைவ கல் மீன் வைத்துக்கொண்டு மேலே ஏறினார்.

“ம்ம், வழக்கம் போலதான்,” என சாந்தா சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்.

“ம்ம், ஆ, காட்டு,” என மணியம்மை ஊட்ட, வேண்டாவெறுப்பாகச் சாப்பிட்டான். கோபம் மட்டும் குறையவில்லை.

அவன் விழுங்க விழுங்க ஊட்டினார். குரு புருவம் சுருக்கிக்கொண்டு, “இது இன்னும் வேணும்,” என்றான்.

மணியம்மை சிரித்துக்கொண்டே திரும்ப, சாந்தா பணியாள்கிட்ட உணவைக் கொடுத்துவிட்டிருந்தார்.

“இது நல்லா இருக்கா?” என மணியம்மை கேட்க, “ஆவரேஜ்,” என்றான் குரு.

மணியம்மை முகத்தில் புன்னகை பரவ, அனைத்தையும் ஊட்டிவிட்டார்.

“ஓகே, எனக்கு நைட்டு ஒரு டின்னர் இருக்கு. நீங்க சரியா சாப்பிட்டுத் தூங்குங்க. அந்தக் காப்பர் செம்புகிட்ட கதையளக்க வேணாம்,” எனப் புறப்பட்டான்.

“சரி கண்ணா! ஒரு நிமிஷம்,” என்றார்.

“என்ன? சொல்லுங்க?”

“அவள்கிட்ட நீ!” என மணியம்மை ஆரம்பிக்க, “என்னால சாரி சொல்ல முடியாது,” என்றான் குரு கோபமாக.

“தேங்க்ஸ் சொல்லலாமே?” என்றார் மணியம்மை.

“எதுக்கு?”

தொடரும்…