Monday, July 20, 2026

    சில நேரங்களில் சில முடிவுகள்.

    ஏதோ தோன்ற, “கீர்த்தி....” என்று ஆரம்பித்தவன், பின் இப்போது வேண்டாம் என்று அமைதியாகிவிட்டான்.  “என்ன ஜோ?”  “ஹ்ம்ம்... ஒன்னுமில்லைடா. நான் ஏற்கனவே சொன்னதுதான். எதுனாலும் நான் இருக்கேன் உங்கூடங்கறதை மறந்துடாத”, என்று வலியுறுத்தியவன், ஜெய ராணி அவளைப் பற்றி நிறைவாகப் பேசியதை பகிர்ந்துகொண்டான்.  “நேர்ல இன்னும் நல்லா இருக்கா ஜோ, பக்குவமான பொறுப்பான பொண்ணுதான்னு சர்டிஃபிகேட் குடுத்துட்டாங்க எங்கம்மா”, என்று சிலாகித்து சொல்ல, கீர்த்தி முகத்திலும் புன்னகை.  “ஆன்ட்டி உன்னை பத்திதான் கேட்டாங்க. கொஞ்சம் நான்-வெஜ் சமைச்சு தரணுமாம் உனக்கு. நேரத்துக்கு சாப்பிடறயான்னு பார்த்துக்கணுமாம்”, அவங்க சொன்னதுக்கெல்லாம், சரி ஆன்ட்டின்னு சொன்னேனே, அதுக்கே பிடிச்சிருக்கும்”, என்று கீர்த்தியும் கலாய்த்தாள்.  சற்று சகஜமாகப் பேசி வைத்தார்கள். சிறு புன்னகையுடன் வீட்டினுள் வந்த கீர்த்தியைப் பார்த்த ப்ரீத்தி, ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து, “ஜோசஃப் கிட்ட பேசிட்டு வரியா கீர்த்தி?” என்றாள்.  “ம்ம். அவங்க அம்மா வந்துட்டு போனதை சொல்லிட்டு இருந்தேன் ப்ரீத்தி. “  “ஓ...உன்னை பார்த்துட்டு போய் அவர்கிட்ட என்ன சொன்னாங்களாம்?”  “நல்ல விதமாத்தான் சொல்லியிருக்காங்க.  முதல்ல பேசும்போது கொஞ்சம் டெரர்ராதான் இருந்தாங்க. இப்ப பரவாயில்லை.”  “ஹ்ம்ம்... என் மாமியா மாதிரி கிடையாதுன்னு பார்க்கும்போதே புரியுது. கொஞ்சம் ஆளுமையா இருக்காங்க, ஆனா அதே நேரம் நிதானமும் இருக்கு. நீ நல்ல பேர் எடுத்துடுவடா. எனக்கு சந்தேகமே இல்லை”, பாராட்டுபவளிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.  மறு நாள் அப்பல்லோ வந்து சேர்ந்திருந்தார்கள். அவள் இரவு இருக்க மாட்டாள் என்று சொன்னதில் ஹர்ஷி ஒரே அழுகை.  பேசிப் பேசி ஒரு வழியாக சமாதானப்படுத்திவிட்டு வந்திருந்தாள் ப்ரீத்தி.  ஒரு நாள் இரவுக்கே இந்தப் பாடு.  குழந்தை ஏற்கனவே தந்தையை பிரிந்திருக்க, தாயை இறுகப் பற்றிக்கொள்ள நினைக்கிறாள். இதில் ப்ரீத்தியும் போய்விட்டால் என்று நினைக்கும்போதே கீர்த்திக்கு கலக்கமானது.  பரிசோதனைகள் செய்து முடித்து, அன்று இரவிலிருந்து மருந்து சலைன் மூலம் செலுத்த ஆரம்பிக்கப்பட்டது. உடனடியாக பெரிதாக எதுவும் இருக்காது என்று அறிவுறுத்தியிருக்க, அமைதியாக படுத்திருந்தாள் ப்ரீத்தி.  “பாட்டு எதுவும் கேட்கறியா ப்ரீத்தி?”  “ம்ப்ச்... எதைக் கேட்டாலும் மனசு இருக்கற பிரச்சனையிலேயே சுத்தி வருது கீர்த்தி. எத்தனை நாள் இந்த மருந்தால என் வாழ்க்கையை இழுத்து நிறுத்த முடியும்னு தெரியலை”, என்றவள்,  “ நீ சீக்கிரமே, நான் இருக்கும்போதே, கல்யாணம் வெச்சிடு கீர்த்தி. உனக்கு கல்யாணம் செய்து வெக்கணும்னு எங்களுக்கு தோணுச்சே தவிர, நீ சொன்ன காதலைப் பத்தி சுத்தமா மறந்துட்டோம். அவருக்கு மட்டும் ஞாபகம் இருந்து விசாரிச்சு, மெனக்கெட்டு போய் ஜோசஃப்கிட்ட பார்த்து, பேசி..என் புருஷன் ஏற்பாடு செஞ்ச கல்யாணம், நானாவது பார்த்துட்டு போறேன்”, என்றாள்.  ப்ரீத்தியை பார்த்தவள், “ராகினிகிட்ட எப்படியும்...
    அத்தியாயம் - 17  ஜெயராணி வந்திருந்தார். வேணுகோபால் மாரடைப்பும், ப்ரீத்தியின் புற்று நோய் பற்றியும் விசாரிக்க. அதன் வீரியத்தைக் கூறவில்லை ஜோ. ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டும் என்பதோடு நிறுத்தியிருந்தான்.  “நீங்க மனச தளரவிடாதீங்க. இப்பல்லாம் முன்ன மாதிரி பயப்படவேண்டாம். எங்க பக்கத்து சொந்தம் இரண்டு பேருக்கு இப்படித்தான் புற்று நோய்னு சொன்னாங்க. ஆறு மாசம் ஒரு வருஷம்னு ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டு இப்ப நல்லா இருக்காங்க.  என்ன உங்க இரண்டு பேருக்குமே பணக்கார வியாதி. இன்சூரன்ஸ் எதுவும்..?”, என்று நிறுத்த, கீர்த்தியின் இல்லை என்ற தலையசைப்பில்,  “ஜோசஃப் அப்பாக்கு முடக்கு வாதம் வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்தப்போ, பணம் தண்ணியா கரைஞ்சுது. கடன் வாங்கி, வீட்டை அடமானம் வெச்சுன்னு அப்படி செலவு செஞ்சும், அந்த கவலையிலேயே மாரடைப்பு வந்து போயிட்டார். இன்சூரன்ஸ் எதுவும் இல்லை. செலவு குடும்பத்தையே முடக்கிடுச்சு. ஜோசஃப் தலையெடுத்து, கஷ்டப்பட்டுதான் இப்ப தலை நிமிர்ந்தோம். இங்க நீங்க திடமா இருக்கணும் சம்மந்தி. பெரிய பொண்ணு உடம்பை பார்க்கணும், சின்னவ கல்யாணத்தையும் பார்க்கணும்.”  அறிவுரையை பொழிந்தார். வேணுகோபால் தலையாட்டி கேட்டுக்கொண்டார். அருகே அமைதியாக அமர்ந்திருந்த கீர்த்தியைப் பார்த்தவர், “தைரியமா இருக்கணும் கீர்த்தி. குடும்பத்துக்கு ஒன்னுன்னா ஓடி வந்ததுலேயே உன் பாசம் தெரியுது. கல்யாணத்தை தள்ளிப்போடாம சீக்கிரமே நடத்திடலாம் கீர்த்தி. வீட்டுல ஒரு நல்லது நடந்தா எல்லாருக்குமே பாசிட்டிவ்வா நடக்கும்”, என்று அவளைப் பார்க்க, தந்தையை பார்த்த வண்ணம் மையமாக தலையாட்டி வைத்தாள்.  “ஏன்மா? ஹாஸ்பிட்டல் செலவு ஆகியிருக்கும்தான். உன் கல்யாணத்துக்கு தேவையானது இருக்குதில்லையா?”, என்று யோசனையாய் கேட்க,   “இருக்கு ஆன்ட்டி”, என்றாள் மெல்லிய குரலில்.  “ம்ம்....
    “உங்க ப்ரெண்டோட அப்பா என்ன சொன்னார் ஜோ. உண்மையை சொல்லுங்க ப்ளீஸ்?”, என்று கெஞ்ச, மெல்ல அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன், “கொஞ்சம் சீரியசா தெரியுது ஜோ, உடனே கான்சர் ஸ்பெஷலிஸ்ட் பார்க்கறது பெட்டர்னு சொன்னார்டா”, எனவும் மளுக்கென்று கீர்த்தியின் கண்கள் நிறைந்தது.  “ஹே... ரொம்ப யோசிக்காதே. போய் ஒரு அம்பதாயிரத்தை உங்க அப்பா அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணு. எப்படியும் ஸ்கான் அது இதுன்னு எடுக்க சொல்லுவாங்க. கையோட பண்ண முடிஞ்சா பண்ணிடட்டும்”, என்று சொல்ல சரியென்று எழுந்துகொண்டாள்.  ‘ஹ்ம்ம்... எடுத்ததெல்லாம் பத்தாதுன்னு அடுத்து உன் உழைப்பையும் உறியப்போறாங்க’, என்று ஓடியது ஜோவின் மனது. ஒரு வாய் வார்த்தைக்கு கூட அவள் தந்தை பணம் வேண்டாம் என்று சொல்லவில்லை. இத்தனைக்கும் ப்ரீத்திக்கு அவள் கணவனின்...
    அத்தியாயம் - 16  சரோஜினியோடு பேசிக்கொண்டிருந்தாள் கீர்த்தி. ஜெயராணியும் ஸ்டீஃபனும் சென்னை வந்து பேசுவதாக கூறவும் சற்றே பரபரப்பாக இருந்தார்.  “நாளை கழிச்சு சனிக்கிழமை சாயங்காலம் வரதா சொல்லியிருக்காங்க. அன்னிக்கு பாட்டிமை. ஆனா அப்பா வரேன்னு சொல்றவங்ககிட்ட அதெல்லாம் சொல்ல வேணாம்னு சொல்லிட்டார்.” குறைபட்டுக்கொண்டார் சரோஜினி.  “...”  “என்னடி?”   “சொல்லுமா. கேட்டுகிட்டுதான் இருக்கேன்.”  “நீ சொல்லமாட்டியா அவங்ககிட்ட?”  “அவங்க அதெல்லாம் பார்க்கலைங்கும்போது என்னத்த சொல்ல சொல்ற? அவங்க என்ன பொண்ணு பார்க்கவா வராங்க? உங்களையெல்லாம் பார்த்து அடுத்து பேச வராங்க. பொண்ணு எப்ப ஊருக்கு வராங்கறதைப் பொறுத்து கல்யாணம் வெச்சுக்கலாம்னு சொல்லுங்க.”  “உங்கிட்ட வந்து சொன்னேன் பாரு”, சரோஜினி நொடிக்கவும்,  “எல்லாத்துக்கும் நாள் நட்சத்திரம் பார்த்து ப்ரீத்தியை கட்டிக் கொடுத்து என்ன நல்லது நடந்துடுச்சு?  நீதான் சொல்லுவியே, என் விதிப்படித்தான் எல்லாம் நடக்குதுன்னு, அதே மாதிரி இதுவும் நடக்கட்டும் மா. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அவங்ககிட்ட பேசமுடியாது”, கீர்த்தி பேசிய பேச்சில் சரோஜினி வாயை மூடிக்கொண்டார்.  “ப்ரீத்திக்கும் உடம்பு சரியில்லை. சாப்பாடே சாப்பிடமாட்டேங்கறா. மஞ்சக் காமாலை மாதிரி இருக்கு. டாக்டர் கிட்ட போலாம் வாடின்னா இப்பதான் வேலையில சேர்ந்திருக்கேன், லீவு போட முடியாதுங்கறா. பத்தாததுக்கு உன் மாமியா வேற வராங்க. வந்து போகட்டும் அடுத்த வாரம் பார்க்கலாம்னு சொல்லிட்டா”, அடுத்த குற்றப்பத்திரிக்கை வாசித்தார்.  “சாயந்திரம் போய் டாக்டரை பார்த்தா என்னவாம்? போய் ப்ளட் டெஸ்ட் எடுக்கச் சொல்லு. மஞ்சக் காமாலைன்னா ஒழுங்கா மாத்திரை எடுக்கணும். அந்தம்மா வரதுக்கும் இவ டாக்டரை பார்க்கறதுக்கும் என்ன சம்பந்தம்? நீ அப்பாவை அப்பாயிண்ட்மென்ட் போட சொல்லி கூட்டிட்டு போ”, கீர்த்தி கடியவும்,  “ம்க்கும்... நான் என்ன சொல்லாமலா இருக்கேன். வேலைக்கு போயிட்டு வந்து டயர்டா இருக்குன்னு சுருண்டுக்கறா. பாதி நேரம் ஹர்ஷிக்கு சோறு ஊட்டக் கூட எழுந்துக்க முடியலை. என்னால ஆனது, கிழானெல்லி, கரிசலாங்கண்ணின்னு குடுக்கறேன்.”, என்றார் பாவமாக.  நெற்றியை தேய்த்தாள் கீர்த்தி, “தேவையில்லாம நோயை வளர்த்துகிட்டு காம்ப்ளிகேட் பண்ண வேணாம்னு சொல்லு.”, எரிச்சலானது. இரகுராமன் இறந்ததிலிருந்தே உணவு குறைந்துவிட்டது என்று அவ்வப்போது சரோஜினி புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார். இதோ சரியாகிவிடும், இன்னும் கொஞ்சம் போனால் தேறிக்கொள்வாள் என்று சொன்னதற்கு மாறாக இன்னும் மோசமாக படுத்துகிறாள். வயதான...
    அவன் தோள் மீது சாய்ந்து கொண்டவள், “இல்லை  நானே பேசறேன். ஆனாலும் கல்யாணத்துக்கு ஒரு வருஷம் ஆகட்டும்னுதான் சொல்லுவாங்க ஜோ.” என்றாள் சங்கடமாக.  “வீட்டுல சொல்லி அவங்க சரின்னு, அப்பறம் அம்மா பார்த்து பேச அது இதுன்னு கொஞ்சம் டைம் எடுக்கும். நமக்கும் லீவ்ல வர ஜூன் ஆகிடும்னு சொல்லிக்கலாம் கீத்துமா. அது ஒன்னும் பிரச்சனையில்லை....
    அத்தியாயம் - 15  மறுபடி ஒரு சங்கடமான அமைதி. துபாய் பள்ளியின் நேர்காணலுக்குக் கூட இலகுவாகத்தான் இருந்தாள். ஆனால் இது அவள் வாழ்க்கைக்கான நேர்காணல், இது போனால் வேறொன்று என்று கடந்துவிட முடியாத நேர்காணல்.  அறிமுக முகமன்கள் முடிந்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள். மடிக் கணிணி திரையை ஜூம் வாயிலாக நிறைத்திருந்தார் ஜெயராணி....
    “இப்ப வாழ்த்திட்டு போன வாயெல்லாம் என்ன பேசும்னு தெரியும்தானே? வீட்டுக்கு மூத்தவ இப்படி வந்தா, அடுத்து உன் தம்பியை யோசிச்சியா?”, கேவினார்.  “அம்மா... கொஞ்சம் அமைதியா இருங்க. பேசலாம். அவனுக்கு அருமையான மருமக நம்ம சமூகத்துலேயே வருவா. நான் பார்த்து வெச்கிருக்கேன் அந்தக் கவலையை விடுங்க.”  “ஓ... அவனும் காதலிக்கறானா? “,முறைத்தார்.  “இல்லம்மா. அங்க என் கூட வேலை...
    அத்தியாயம் - 14  துபாய் வந்து இதோ ஒரு மாதம் ஓடிவிட்டது. ப்ரீத்தி அவள் வீட்டை காலி செய்து, பெற்றோருடன் வந்துவிட்டாள்.  அவளோடு ஓரிரு முறை மட்டுமே கீர்த்தியால் பேச முடிந்தது.   “அவ பாட்டு விட்டத்தை பார்த்து ஓஞ்சுபோய் உட்கார்ந்திருக்காடி. ஹர்ஷி எதாவது கேட்டா மட்டும் செய்யறா. மத்தபடி பேச்சே இல்லை. பாவம் குழந்தையும் வாடி கிடக்கு....
    “போலீஸ் வந்து விஷயம் எங்களுக்கு தெரிய வந்ததே பன்னெண்டாயிருச்சு மா. குழந்தை எங்க வீட்டுல இருக்கா. ப்ரீத்தி, உங்க அப்பா, அம்மா நான்  எல்லாம் இங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கோம். போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சுதான் பாடி தருவாங்களாம். அடையாளம் காட்ற அந்த ஃபார்மாலிட்டிக்காக இருக்கோம். ப்ரீத்தி, அவங்கம்மா எல்லாம் அழுதுட்டேதான் இருக்காங்க. இரகு அம்மாக்கும் தகவல்...
    அத்தியாயம் - 13  அந்த வார விடுமுறையின் போது வெளியே சுற்றிவிட்டு கீர்த்தியின் வீடு வந்திருந்தார்கள். வாங்கி வந்திருந்த பொருட்களை மேசையில் வைத்து, அவனுடையதை தனியாக ஒரு பையில் போட்டுக்கொண்டிருந்தான்.   தேநீர் போட்டு எடுத்து வந்தாள் கீர்த்தி. எப்படியோ ஆரம்பித்த விவாதம் கடந்த அரை மணி  நேரமாக ஓடிக்கொண்டிருந்தது.   “ஜோ... உன்டாக்டர் ஃப்ரெண்டு சொல்றார் சரி. பட், இதுவரைக்கும்...
    எடுத்ததுமே “அடுத்தவன்  நமக்கு தீங்கிழைத்தால் மன்னிக்கணும்னு சொல்றது சுலபம். ஆனால் அப்படி செய்ய முடியுமா? அவன் மீது கோவம் வருவது தானே இயற்கை? அவனை எதுவுமே செய்யாமல் மன்னித்துவிட்டேன் என்று சொல்லிவிட்டால் நம் மனம் ஆறிவிடுமா? ஏற்றுக்கொள்ளுமா? அப்படி மன்னிப்பவன் அந்த மன்னிப்பிற்கு தகுதியானவனா? இதையே ஒரு சாக்காக எடுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் நம்மை...
    அத்தியாயம் - 12  சனிக்கிழமை விடுமுறை எனவும் நாள் முழுதும் சோஃபாவிலேயே கழித்தாள். அங்கேதான் அவளிடம் அடி வாங்கி மடிந்து அமர்ந்து மூச்சு விடவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான் ஜோ. அன்றைய நிகழ்வு, அவளே மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் மறக்காது லூப்பில் ஓடியது.  காதலர்களுக்கு நடுவில் எதோ பிணக்கு என்பதாக அர்த்தம் செய்துகொண்ட ஷீத்தலின் நினைப்பை மாற்ற...
    மோவாயை சற்றே உயர்த்தி சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தவள், காற்றில் அளைந்த அவ விரல்களை அவன் கைகளுக்குள் அடக்கிப்பிடித்து லேசாய் இழுக்க, ஒரு ஆழ மூச்சுடன், மெல்ல குனிந்து லேசாய் மிக லேசாய் இதழ்களால் அவன் விரல் நுனிகளை உரசினாள்.  அவள் இதழொற்றலை பாதம் வரை உணர்ந்தான் ஜோ. விரல் நுனியிலிருந்து ஜிவ்வென்று மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது....
    அத்தியாயம் - 11  காலையில் ஷீத்தல் புன்னகைக்கலாமா வேண்டாமா என்ற ஒரு தயக்கத்தோடே கீர்த்தியைப் பார்த்து காலை முகமன் கூறினாள்.  அவளையே பார்த்து பதில் பேசாது நின்றிருந்த கீர்த்தியிடம், “ஹே...சாரி கீர்த்தி, நீ ஜோ சாரை புரிஞ்சிக்கத்தான்...” என்றவளை,  “இனி அவர் பேரை சுருக்கின கொன்னுடுவேன். முழுசா பேரை சொல்லு இல்ல அண்ணான்னு சொல்லு!”, முகத்தை உர்ரென்று வைத்தபடியே...
    அடைக்கும் தொண்டையை கனைத்து சரி செய்தவன், “நிறைய நிறைய பார்க்கலாம் கீத்து. ஆனா கொஞ்ச நாளைக்கு நீதான் டிக்கெட் எடுக்க வேண்டியிருக்கும். போன மாசம் சம்பளம் வந்தப்பறம்தான் கொஞ்சம் பணம் அனுப்பினேன். அம்மா மெடிக்கல் செக்-அப், அப்பறம் ப்ளான் வரைய, அப்ரூவல் வாங்கன்னு செலவுக்கு ஸ்டீஃபனுக்கு அனுப்பினேன்.”  சூழலை இலகுவாக்க பேச்சை திசை திருப்பினான். அவன்...
    அத்தியாயம் - 10  துபாய் மெரினா என்று சொல்லப்படும் இடம் அங்கு வெகு பிரபலமான சுற்றுலா தளம். பல நாட்டு மக்கள் துபாயின் குளிர் காலமான டிசெம்பர் முதல் ஃபெப்ரவரி முடிய வந்து குவியும் இடத்தில் இதுவும் ஒன்று. இங்கிருந்து பல படகுகள் சுற்றுலா பயணிகளின் ஆர்வத்திற்கேற்ப மீன் பிடிக்க, கடல் மார்க்கமாக துபாயின் வானளாவிய...
    அவளை ஊடுருவிப் பார்த்தவன், “நீதான் உனக்கு தகுதி இல்லை. உனக்கு நான் வேணாம்னு சொன்ன”, என்று சொல்லவும், அவன் மார்பில் இரண்டு கைகளாலும் அடித்தவள், “சொன்னா?... சொன்னா?... கேட்டுட்டு விட்டுருவியா? இப்ப சொல்றேன். உனக்கு பொண்டாட்டின்னா அது நான் மட்டும்தான். அரை போதையாகியாவது உன் கூட குடும்பம் நடத்தறேன்.  உனக்கு புள்ளை வேணுமா, பெத்து...
    அத்தியாயம் - 9  சனிக்கிழமை மதியமே ஷீத்தல் அழைப்பின் பேரில் அவள் வீட்டிற்குச் சென்றிருந்தாள் கீர்த்தி. சொதி செய்வதற்கான ஆயத்தப் பணிகளை பேசிக்கொண்டே ஆரம்பித்தனர். கீர்த்தியின் குக்கர், ஷீத்தலின் குக்கர் என்று இரண்டையும் சேர்த்து வைத்து வேலைகள் நடந்து கொண்டிருந்தது.  ஓரிருவர் என்றால் சமைக்கக்கூடிய அளவில் பாத்திரங்களை வைத்திருந்தார்கள். இப்படி இருபது பேருக்கும் மேலாக செய்ய வேண்டி...
    ஷீத்தலிடம் சவடாலாக பேசிவிட்டாலும், உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.  கீர்த்தியை நெருக்குகிறோம் என்ற நினைப்பே கசந்தது. ஆனாலும் புரையோடிப் போன புண்ணை அறுத்துத்தான் சரி செய்ய வேண்டுமெனில் வலியை பொறுத்துத்தான் ஆக வேண்டும்.    நினைவு அவள் இரண்டாவது முறை சந்தித்துப் பேசியபின் நடந்தவற்றை அசை போட்டது. கீர்த்தியின் பேச்சு அவனைக் கூறு போட்டது நிஜம். இதில்...
    அத்தியாயம் – 8  வகுப்பு நேரங்கள் தவிர்த்து,  நாட்கள் கடினமாக சென்று கொண்டிருந்தது கீர்த்திக்கு. அவளே கடினமாக்கிக் கொள்கிறாள் என்று புரிகிறது. விட்டு வெளியே வருவதற்கான வழிதான் புரியவில்லை.  செக்குமாடு கணக்காக மனம் ஒரே விஷயத்தை சுற்றி வந்தது. மூளைக்கும் தெளிவாகத் தெரிகிறது, ஜோவிற்கு ஷீத்தல் அருமையாக பொருந்திடுவாள். ஷீத்தலுக்குமே ஜோவின் அன்பும் அனுசரணையும் கிடைத்தால் அற்புதமாக...
    error: Content is protected !!