கடல் அலைகள் பெரிதான ஆர்பாட்டமின்றி கரையை தொட்டுத் தொட்டு சென்று கொண்டிருந்தது. மாலை மயங்கும் வேளை பாரசீக வளைகுடாக் கடலின் காற்று உடலை மெல்ல வருடித் தந்தது.
அபுதாபியின் கார்னீஷ் பீச். சாய்வு நாற்காலிகள் இரண்டில் அருகருகே படுத்திருந்தார்கள். ஜூஸ் வாங்கி வருவதாய்ச் சொல்லி கீர்த்தி சென்றிருந்தாள். அவன் மனைவி கீர்த்தி. திருமணம் முடித்து ஒரு மாதம் முடிந்திருக்க, வார விடுமுறையில் அதைக் கொண்டாட அபுதாபி வந்திருந்தார்கள்.
வெள்ளிக் கிழமை தலை பொங்கல் என்று புதிது உடுத்தி, கீர்த்தி செய்த சர்க்கரைப் பொங்கல் வடையை காலி செய்துவிட்டு கிளம்பியிருந்தார்கள். வரும் வழியில் பிரதமர் மோடி வந்து பிரபலமாக்கிய பாப்ஸ் ஹிண்டு மந்திர் சென்று வழிபட்டுவிட்டு வரும் வேளையே மதியமாகியிருந்தது.
வாழ்க்கை அவனைப் பொறுத்த வரை அழகாகத்தான்் சென்று கொண்டிருந்தது. ஆனால் கீர்த்திக்கு கவலை. “ஒரு மாசமாகியும் இன்னும் பிரம்மச்சாரியாவே இருக்கியே ஜோ…. “, என்று நேற்றும் அழுதிருந்தாள்.
அதை இப்போது நினைக்க, ஒரு மெல்லிய புன்னகை உதித்தது ஜோவின் இதழ்களில். இந்த நாலு வாரங்களில் அவன் கீத்துமா கடந்து வந்திருந்தது அதிகமே. சின்னச் சின்ன முன்னேற்றங்களெல்லாம் அவளுக்குப் போதவில்லை.
பதிவுத் திருமணம் முடித்து, வரவேற்பிற்கு கன்னியாகுமரி சென்று அவன் வீட்டில், அவர்கள் அறையில் குளித்துவிட்டு துண்டோடு வந்தவனைப் பார்த்து கண்கள் விரிய உறைந்து நின்றாள்.
இரு கைகளையும் உயர்த்தியவன், “உங்கிட்ட வர மாட்டேன் கீத்துமா. அதுக்காக பாத்ரூம் ஈரத்திலையும் துணி மாத்திக்க மாட்டேன். என் மேல நம்பிக்கை இருந்தா, இரு, இல்லைன்னா கொஞ்ச நேரம் வெளிய இரு”, என்றவன் அவள் பதிலுக்குக் காத்திராமல் கப்போர்டில் உடைகளை எடுக்க, அவள் அங்கேயே அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தாள். அதில் நமுட்டுச் சிரிப்பு சிரித்தவன்,
“என் மேல ஆசையிருந்தா, திரும்பி வேடிக்கை கூட பார்க்கலாம். நான் தப்பால்லாம் நினைக்க மாட்டேன். நீதான் தைரியசாலி ஆச்சே…”, என்று கிண்டலாக சொல்ல, “எனக்கொன்னும் பயமில்…”, திரும்பியவள் குரல் அவன் அரை குறை நிலையைக் கண்டு தேய்ந்தது.
பாண்ட் போட்டு முடித்தவன், வேண்டுமென்றே ஆர்ம்ஸ் பார்க்கறியா என்று கைகளை மடக்கி போஸ் தர, பெண்ணின் கண்கள் அவனை வெட்கத்தோடு மேய்ந்தது. மெதுவாய் எடுத்து வைத்த டீ-ஷர்ட்டை அவளை பார்த்துக்கொண்டே அணிய, சற்று நிதானம் பெற்றவள், “ஹ்ம்…ரொம்பத்தான்”, என்று நொடித்தாள்.
நின்ற இடத்திலிருந்தே கையை விரிக்க, ஒடி வந்து கட்டிக்கொண்டாள். “என்னைப் பார்த்துப் பழகிக்கோ கீத்துமா”, என்றான் லேசாய் அணைத்து.
அப்படி ஆரம்பித்து, படுக்கையை இடையில் தலையணை வைத்து பகிர்ந்து படுத்து, துபாய் திரும்பியதும் அதையும் அவளே தூக்கிப்போட்டாள். சில நாட்களிலேயே அவனை அணைத்தபடி படுத்துக்கொண்டாள்.
துபாய் திரும்பும் முன் ஜெயசந்திரனை இருவரும் சென்று பார்த்திருந்தார்கள். கீர்த்தி தனியாகவும் பேசினாள். அடுத்த ஐந்து வருடங்களில் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்து அதை நோக்கி செல்ல பார் என்று அவளிடம் அறிவுரை வழங்கினார். அவனிடமோ, கீர்த்தியை அணுகும்போது, பொறுமை முக்கியம். கன்ட்ரோல் எப்போதும் அவளிடம் இருக்க வேண்டும். நெருக்காதே, உன் பாரம் அவளை அழுத்தக்கூடாது. பேசிகொண்டே இரு, உன் குரல், உன் வாசம் என்று அவள் உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று பலப்பல அறிவுறுத்தல்கள்.
ஆன்லைன் கன்சல்டேஷனுக்கு அவருக்குத் தெரிந்த பெண் சைக்கியாட்ரிஸ்ட் ஒருவரையும் பரிந்துரைத்திருந்தார். அவர்களையும் பார்த்து வந்திருந்தாள் கீர்த்தி.
அவன் அப்பார்ட்மென்டில் இருப்பதனால், உள் அறையில் உடை மாற்ற யோசித்தவள், இன்று அவன் முன்னே புடவை கட்டும் அளவு முன்னேறியிருக்கிறாள். அவன் தொடுகைக்கும் பழகிக்கொண்டிருக்கிறாள். ஆனாலும் கீர்த்திக்குப் போதவில்லை. அவனுக்கும்தான். அதுவே அவளுக்கு குற்ற உணர்ச்சியாகிப் போகின்றது. “உன்னை ரொம்ப நோகடிக்கறேன் ஜோ…”, என்று அழுதாள்.
“ம்ம்… போன வாரம் நீ எனக்கு ஆயில் மசாஜ் பண்ணது ஞாபகம் வந்துச்சுமா…”, என்று கண்ணடிக்க, சில்லென்ற தர்பூசணிப் பழசாறு துளிகள் சில கன்னத்தில் பட்டது.
“வரும் வரும்… உனக்குன்னு சொல்லி நீ எனக்கு பூசி விட்டு…அழிச்சாட்டியம் பண்ண…”, கண்களை உருட்டினாலும் முகம் சிவந்தாள்.
அறைக்குத் திரும்பியதும் கீர்த்தி குளிக்கச் சென்று வர, அடுத்து இவன் புகுந்து கொண்டான். பத்து நிமிடங்களில் நீராவிப் புகை மூட்டதிலிருந்து வெளியே வர, எதிரில் கீர்த்தி மெல்லிய ஒரு நைட்டியில் நின்றிருந்தாள். பாடல் ஒன்றை ஒலிக்க விட, சின்மயி முத்த மழை பொழியக் கேட்டார்.
‘கூல் டா… அவ போற முடிய போ..அதுக்கு மேல எதுவும் எதிர்பார்க்காதே…’, இந்த ஒரு மாதமாக அவன் தாரக மந்திரமாகிவிட்டதை உச்சரித்துக் கொண்டே…
“அப்படியா…. நீ பொழியறியா இல்லை நான் பொழியவா மேடம்?”, என்று இலகுவாகக் கேட்டான். அவளே தொடங்கி வைத்தாள்.
“இன்னிக்கு முல்லை இரவு பத்தி எரியணும்… எரிய வெக்கற”, என்று கட்டளையிட்டவள் மீண்டும் தொடர, புன்னகையோடே இணைந்து கொண்டான்.
“வெச்சிருவோம்… பேபி”, என்றவன் கைகள் அத்துமீற, பழகிய எல்லைகள் இன்னும் விரிவடைந்தன. நெஞ்சம் படபடத்தாலும், கண்கள் திறந்து வைத்திருந்தாள் கீர்த்தி. ஜோவின் முகமும், தொடுகையையும் கண்டும் உணர்ந்தும் உள்வாங்கிக்கொண்டிருந்தாள். ஜோவின் நிதானம் சற்றே தப்ப, தன்னை மீட்டுக்கொள்ள முயன்றவனை கட்டிலில் தள்ளியவள், நொடியும் யோசிக்காது அவன் மேல் விழுந்து வைத்தாள்.
“பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன், காதில் காதல் சொல்வேன்”, என்று காதருகில் பாட, அவளை பிரட்டிப் போட்டு ஆள எழுந்த வேட்கையை அடக்கியவன்,
“சொல்லாதடி… செய்”, என்று அவளுக்கு காதில் சொல்லிக் கொடுக்க, கீர்த்தி இன்னும் சற்று தளைகளை உடைத்து முன்னேறினாள். தயங்கும் நேரம் ஜோவின் ஊக்கம், அல்லது “இப்ப வந்து நிறுத்திடாத கீத்துமா…” என்ற கெஞ்சல் என்று அவளை உந்த…. அவனை இன்னும் இன்னும் வதைக்கக்கூடாது என்ற வைராக்கியமும் இணைந்து ஜோவின் பிரம்மசரியத்தை முடித்து வைத்தது.
அவன் மேல் படுத்திருந்தாள் கீர்த்தி. ஜோவின் கை அவள் கூந்தலை அளைந்து கொண்டிருந்தது. “சோ ஸ்வீட் கீத்துமா… ப்ரேவ் கர்ள்’, என்று சிலாகிக்க, அவன் மார்பைக் குத்தினாள்.
“என்னடா…”
“ஹ்ம்ம்…. இப்படித்தான் குதிரை ரேஸ் மாதிரி, கமான் கமான்னு கத்துவியா”, என்று நிமிர்ந்து முறைக்க,
“ஜோ…”, பாவமாக கீர்த்தி பார்க்க… “இன்னிக்கு ஒரு பெரிய ஸ்டெப் வெற்றிகரமா எடுத்திருக்கோம். மத்தது மாதிரி இதுவும் பழகும்… நம்புடா…”, என்றவனை முத்த மழையில் நினைத்தாள்.
இரவு விளக்கின் ஓளியில் படுத்திருக்கும் மனைவியின் முகம் நிர்மலமாக இருந்தது. ஒவ்வொரு முறை அவள் முயன்றும் முடியாது விலகி ஓடி, பின் அவனிடமே வந்து கதறும் போதும் இரகுராமனையும் அவள் குடும்பத்தையும் அடித்து நொறுக்கும் வேகம் எழும். இனியாவது அவள் குற்ற உணர்வு குறையும் என்று நிம்மதியானான். கவலையின்றித் திளைக்க இன்னும் காலமாகலாம் ஆனால் முதல் தடையை உடைத்தாகிவிட்டது.
நினைவுகள் ஏனோ ஹர்ஷிதாவிடம் சென்றது. அவளைப் போல கீர்த்தியின் சாயலில் ஒரு குழந்தை வரம் கிடைத்தால் என்ற நினைப்பே இனித்தது. அவன் மனைவி அந்த ஆசையையும் அவனுக்காகவே நிறைவேற்றுவாள். அவனுக்கு கண்டிப்பாகத் தெரியும்.
அன்று ப்ரீத்தியையும், சரோஜினியையும் அத்தனை வசைபாடியவன், ஹர்ஷிதாவைப் பார்த்ததும்தான் நிதானித்தான்.நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவள் குலுங்கி அழ, அதற்கு மேலும் அவர்களை வருத்தத் தோன்றவில்லை. கேட்டும் பிரயோஜனமில்லை என்பதும் ஒரு காரணம்.
ஒரு பெருமூச்சுடன், “கீர்த்தியும் நானும் ஹர்ஷிதாவை வளர்க்க முடியாதுன்னுதான் சொன்னேன். அதுக்காக அவளை காப்பகத்துல கொண்டு போய் விட்டுட்டு மறந்துடுவேன்னு சொல்லலை. நீங்க வீணா கற்பனை பண்ணிக்காதீங்க”, என்று சொல்லவும் ப்ரீத்தி நிமிர்ந்து பார்த்தாள்.
“குழந்தைக்காக ஏங்கி தத்து கேட்டு நிக்கறவங்க இருக்காங்க. நல்லவங்களா பார்த்து, நீங்க இருக்கும்போதே தத்து குடுத்திடலாம். அதுக்கான நடைமுறையெல்லாம் லாயர் வெச்சு லீகலா செய்யலாம். அதுக்கு நான் பொறுப்பெடுத்துக்கறேன். அப்பறமும் விட்டுட மாட்டேன். எட்ட நின்னு பார்த்துக்கறேன். ஆனா இதுல கீர்த்தி எங்கேயும் வரமாட்டா. எதுவா இருந்தாலும் என்கிட்ட மட்டும் பேசுங்க”, என்று அவன் யோசனையை முன் வைத்தான்.
“இப்ப நீங்க எடுக்கற முடிவு மட்டும் நீங்க சொன்ன மாதிரி நியாய தர்மப்படியா? சொந்தம்னு இருக்கும்போது யாரோ அசலார்கிட்ட விடுறதுக்கு உங்க மனசாட்சி சரின்னு சொல்லுமா?”, ப்ரீத்தி அத்தனை உடல் நலிவிலும் எழுந்து அமர்ந்தாள்.
“கீர்த்தியும் ஹர்ஷியும் ஒன்னா இருக்கறது இரண்டு பேருக்குமே நல்லதில்லைன்னு புரிஞ்சுதான் இந்த முடிவுக்கு வந்தேன். இது பத்து நாள் ஒரு மாச பொறுப்பு கிடையாது. அடுத்த இருவத்தியஞ்சு முப்பது வருஷம், ஹர்ஷி கல்யாணம், குழந்தைன்னு செட்டில் ஆகற வரை இருக்கப்போகுது. கீர்த்தியால அவளை சகிச்சக்க முடியறதே பெரிய விஷயம். காரணம் தெரியலைன்னாலும் அந்த விலகல் குழந்தைக்கு சீக்கிரமே புரியும். வளர்ந்து காரணம் கேட்டாலும் சொல்ல முடியாது. என்னை சகிச்சுக்க வேணாம்னு அவளே ஹாஸ்ட்டல்ல சேர்க்க சொல்லுவா. சின்ன வயசுல பெத்தவங்களை தொலைச்சுட்டு நிக்கற குழந்தை அன்புக்கு ஏங்கித்தான் வளருவா. அது தேவையா? இப்பதான் கொஞ்சமா தேறிகிட்டு வரா கீர்த்தி. எங்களுக்கு குழந்தை பிறந்தாலும் அவளால பாசம் காட்ட முடியுமான்னு இப்பவே அவளுக்குள்ள நிறைய சந்தேகம் இருக்கு. ஹர்ஷி கூட இருந்தா, இன்னொரு குழந்தை பெத்துக்க மாட்டா, இல்ல எனக்காக பெத்துக்கிட்டாலும், குழந்தைகிட்ட பாசம் காட்டும்போது ஹர்ஷிகிட்ட அப்படி இருக்க முடியலைன்னு குற்ற உணர்ச்சியில எங்க குழந்தைகிட்டயும் தள்ளி நிற்பா. இதெல்லாமே அவளை கொஞ்சம் கொஞ்சமா சிதைச்சிடும். வெறுப்பு ஹர்ஷிமேலயும் திரும்பலாம். என் பொறுமை போய் நானுமே கீர்த்தியை, ஹர்ஷியை எதாவது ஒரு சந்தர்ப்பத்துல பேசிடலாம். வாழ்க்கை எல்லாருக்குமே நிம்மதியில்லாம போறதுக்குத்தான் வாய்ப்பு அதிகம். ஹர்ஷிக்கு அவளை முதன்மையா பார்த்து அவளுக்கு முழுமனசா பாசம் காட்டுற ஒரு குடும்பம் அமையணும். அது அசலாரா இருந்தாதான் நல்லது. கீர்த்திக்கு இனிமேயாவது வாழ்க்கை அவ விரும்பற மாதிரி அமையணும்னு நினைக்கறேன். யாருக்கும் பெருசா சேதாரம் ஆகாம இருக்க இது ஒன்னுதான் ஆப்ஷன்.”
ப்ரீத்தியின் ஆயுள் எண்ணப்படுகிறது என்று தெரிந்ததிலிருந்து, இந்த நிலைமை வரும் என்று புரிந்தது முதல் ஜோ இதைப் பற்றி யோசித்திருந்தான். டாக்டர் ஜெய சந்திரனுடனும் பேசித் தெளிந்திருந்தான். இருந்த கொஞ்ச நஞ்ச சலனமும் அவர்தான் தீர்த்து வைத்திருந்தார். ஊரார் மெச்சுதலுக்காக வளர்ப்பதாக சொல்லிவிட்டு, வீட்டுக்குள் எல்லோரும் அவஸ்த்தை படுவது தேவையில்லை என்ற முடிவில் திடமாக இருந்தான்.