சில நேரங்களில் சில முடிவுகள்.
ஒரு முறை ஒரே முறை, அவன் காலை மடியில் வைத்து, ஆசை தீர விரல்களை வருடி, சொடக்கெடுத்துவிட்டாள். மறுபடி அவன் தரவில்லை. அவள் என்னவன் என்று தான் பார்த்து ரசித்ததை இன்று ஷீத்தலும் சொல்கிறாள். நாளை அவனோடு திருமணமானால், உரிமையாக … “ அஹ்… உமட்டுது. இரு”, என்று வேகமாக ரெஸ்ட் ரூம் சென்றாள்.
வியர்த்திருந்த...
மாலை அவள் தந்தை வரும் வரையிலுமே ப்ரீத்தி அங்கேதான் இருந்தாள். சரோஜினியை பேசிப் பேசியே கரைத்திருப்பாள் போல. கீர்த்திக்கு தெரியவில்லை. அவள் தந்தை வந்தும் ஹாலில் பேச்சுக்குரல்கள் கேட்ட வண்ணமிருந்தது. என் உடல் பற்றி நான் எடுக்கவேண்டிய முடிவை இவர்கள் எல்லோரும் ஏன் விவாதிக்கிறார்கள் என்று யோசித்திருந்தாள் கீர்த்தி.
முடியவே முடியாது என்று சொல்லி அனுப்பிட...
அத்தியாயம் - 10
துபாய் மெரினா என்று சொல்லப்படும் இடம் அங்கு வெகு பிரபலமான சுற்றுலா தளம். பல நாட்டு மக்கள் துபாயின் குளிர் காலமான டிசெம்பர் முதல் ஃபெப்ரவரி முடிய வந்து குவியும் இடத்தில் இதுவும் ஒன்று. இங்கிருந்து பல படகுகள் சுற்றுலா பயணிகளின் ஆர்வத்திற்கேற்ப மீன் பிடிக்க, கடல் மார்க்கமாக துபாயின் வானளாவிய...
ஏதோ தோன்ற, “கீர்த்தி....” என்று ஆரம்பித்தவன், பின் இப்போது வேண்டாம் என்று அமைதியாகிவிட்டான்.
“என்ன ஜோ?”
“ஹ்ம்ம்... ஒன்னுமில்லைடா. நான் ஏற்கனவே சொன்னதுதான். எதுனாலும் நான் இருக்கேன் உங்கூடங்கறதை மறந்துடாத”, என்று வலியுறுத்தியவன், ஜெய ராணி அவளைப் பற்றி நிறைவாகப் பேசியதை பகிர்ந்துகொண்டான்.
“நேர்ல இன்னும் நல்லா இருக்கா ஜோ, பக்குவமான பொறுப்பான பொண்ணுதான்னு சர்டிஃபிகேட் குடுத்துட்டாங்க எங்கம்மா”, என்று சிலாகித்து சொல்ல, கீர்த்தி முகத்திலும் புன்னகை.
“ஆன்ட்டி உன்னை பத்திதான் கேட்டாங்க. கொஞ்சம் நான்-வெஜ் சமைச்சு தரணுமாம் உனக்கு. நேரத்துக்கு சாப்பிடறயான்னு பார்த்துக்கணுமாம்”, அவங்க சொன்னதுக்கெல்லாம், சரி ஆன்ட்டின்னு சொன்னேனே, அதுக்கே பிடிச்சிருக்கும்”, என்று கீர்த்தியும் கலாய்த்தாள்.
சற்று சகஜமாகப் பேசி வைத்தார்கள். சிறு புன்னகையுடன் வீட்டினுள் வந்த கீர்த்தியைப் பார்த்த ப்ரீத்தி, ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து, “ஜோசஃப் கிட்ட பேசிட்டு வரியா கீர்த்தி?” என்றாள்.
“ம்ம். அவங்க அம்மா வந்துட்டு போனதை சொல்லிட்டு இருந்தேன் ப்ரீத்தி. “
“ஓ...உன்னை பார்த்துட்டு போய் அவர்கிட்ட என்ன சொன்னாங்களாம்?”
“நல்ல விதமாத்தான் சொல்லியிருக்காங்க. முதல்ல பேசும்போது கொஞ்சம் டெரர்ராதான் இருந்தாங்க. இப்ப பரவாயில்லை.”
“ஹ்ம்ம்... என் மாமியா மாதிரி கிடையாதுன்னு பார்க்கும்போதே புரியுது. கொஞ்சம் ஆளுமையா இருக்காங்க, ஆனா அதே நேரம் நிதானமும் இருக்கு. நீ நல்ல பேர் எடுத்துடுவடா. எனக்கு சந்தேகமே இல்லை”, பாராட்டுபவளிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
மறு நாள் அப்பல்லோ வந்து சேர்ந்திருந்தார்கள். அவள் இரவு இருக்க மாட்டாள் என்று சொன்னதில் ஹர்ஷி ஒரே அழுகை. பேசிப் பேசி ஒரு வழியாக சமாதானப்படுத்திவிட்டு வந்திருந்தாள் ப்ரீத்தி.
ஒரு நாள் இரவுக்கே இந்தப் பாடு. குழந்தை ஏற்கனவே தந்தையை பிரிந்திருக்க, தாயை இறுகப் பற்றிக்கொள்ள நினைக்கிறாள். இதில் ப்ரீத்தியும் போய்விட்டால் என்று நினைக்கும்போதே கீர்த்திக்கு கலக்கமானது.
பரிசோதனைகள் செய்து முடித்து, அன்று இரவிலிருந்து மருந்து சலைன் மூலம் செலுத்த ஆரம்பிக்கப்பட்டது. உடனடியாக பெரிதாக எதுவும் இருக்காது என்று அறிவுறுத்தியிருக்க, அமைதியாக படுத்திருந்தாள் ப்ரீத்தி.
“பாட்டு எதுவும் கேட்கறியா ப்ரீத்தி?”
“ம்ப்ச்... எதைக் கேட்டாலும் மனசு இருக்கற பிரச்சனையிலேயே சுத்தி வருது கீர்த்தி. எத்தனை நாள் இந்த மருந்தால என் வாழ்க்கையை இழுத்து நிறுத்த முடியும்னு தெரியலை”, என்றவள்,
“ நீ சீக்கிரமே, நான் இருக்கும்போதே, கல்யாணம் வெச்சிடு கீர்த்தி. உனக்கு கல்யாணம் செய்து வெக்கணும்னு எங்களுக்கு தோணுச்சே தவிர, நீ சொன்ன காதலைப் பத்தி சுத்தமா மறந்துட்டோம். அவருக்கு மட்டும் ஞாபகம் இருந்து விசாரிச்சு, மெனக்கெட்டு போய் ஜோசஃப்கிட்ட பார்த்து, பேசி..என் புருஷன் ஏற்பாடு செஞ்ச கல்யாணம், நானாவது பார்த்துட்டு போறேன்”, என்றாள்.
ப்ரீத்தியை பார்த்தவள், “ராகினிகிட்ட எப்படியும்...
ஷீத்தலிடம் சவடாலாக பேசிவிட்டாலும், உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. கீர்த்தியை நெருக்குகிறோம் என்ற நினைப்பே கசந்தது. ஆனாலும் புரையோடிப் போன புண்ணை அறுத்துத்தான் சரி செய்ய வேண்டுமெனில் வலியை பொறுத்துத்தான் ஆக வேண்டும்.
நினைவு அவள் இரண்டாவது முறை சந்தித்துப் பேசியபின் நடந்தவற்றை அசை போட்டது. கீர்த்தியின் பேச்சு அவனைக் கூறு போட்டது நிஜம். இதில்...
அத்தியாயம் - 11
காலையில் ஷீத்தல் புன்னகைக்கலாமா வேண்டாமா என்ற ஒரு தயக்கத்தோடே கீர்த்தியைப் பார்த்து காலை முகமன் கூறினாள்.
அவளையே பார்த்து பதில் பேசாது நின்றிருந்த கீர்த்தியிடம், “ஹே...சாரி கீர்த்தி, நீ ஜோ சாரை புரிஞ்சிக்கத்தான்...” என்றவளை,
“இனி அவர் பேரை சுருக்கின கொன்னுடுவேன். முழுசா பேரை சொல்லு இல்ல அண்ணான்னு சொல்லு!”, முகத்தை உர்ரென்று வைத்தபடியே...
அத்தியாயம் - 12
சனிக்கிழமை விடுமுறை எனவும் நாள் முழுதும் சோஃபாவிலேயே கழித்தாள். அங்கேதான் அவளிடம் அடி வாங்கி மடிந்து அமர்ந்து மூச்சு விடவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான் ஜோ. அன்றைய நிகழ்வு, அவளே மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் மறக்காது லூப்பில் ஓடியது.
காதலர்களுக்கு நடுவில் எதோ பிணக்கு என்பதாக அர்த்தம் செய்துகொண்ட ஷீத்தலின் நினைப்பை மாற்ற...
அடைக்கும் தொண்டையை கனைத்து சரி செய்தவன், “நிறைய நிறைய பார்க்கலாம் கீத்து. ஆனா கொஞ்ச நாளைக்கு நீதான் டிக்கெட் எடுக்க வேண்டியிருக்கும். போன மாசம் சம்பளம் வந்தப்பறம்தான் கொஞ்சம் பணம் அனுப்பினேன். அம்மா மெடிக்கல் செக்-அப், அப்பறம் ப்ளான் வரைய, அப்ரூவல் வாங்கன்னு செலவுக்கு ஸ்டீஃபனுக்கு அனுப்பினேன்.”
சூழலை இலகுவாக்க பேச்சை திசை திருப்பினான். அவன்...
அத்தியாயம் – 1
பரபரப்பான துபாய் நகரம் மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வேறுபட்டிருக்கும். ஆடைக் கொள்கையிலிருந்து, கொண்டாட்டக் களிப்புகள்வரை உலகமயமாக்கலின் முழு பரிணாமமும் இங்கே காணமுடியும். வானாளாவிய உலக வர்த்தக கட்டிடங்களுக்கிடையே அழகிய சிறு மசூதிகள் இஸ்லாமிய நாடுதான் இது மறந்துவிடாதீர்கள் என்று ஞாபகப்படுத்தும்.
பலதரப்பட்ட மக்கள், மொழிகள், பண்பாடுகள் இயைந்து இணைந்து பாலைவனத்தில் உருவாக்கியிருக்கும்...
“அம்மா..நிஜமா நடக்குமாம்மா? “, என்றவள் ஒரு நொடியில் வாடி, “ஆனா கீர்த்திக்கு அது கஷ்டம் இல்லையாம்மா? வேணாம்மா அவ சம்மதிக்காம எதுவும் வேணாம். நான் அவருக்கு விவாகரத்து குடு..”, என்று சொல்லும்போதே திக்கியது.
“சாமியை வேண்டிகிட்டு அமைதியா இரு ப்ரீத்தி. இது நல்லதோ கெட்டதோ, எல்லாம் என்னோட போகட்டும்.”
கோவில் நடை சாத்தியிருக்க, வெளிப் பிரகாரத்தில் தாயும்...
“இப்ப வாழ்த்திட்டு போன வாயெல்லாம் என்ன பேசும்னு தெரியும்தானே? வீட்டுக்கு மூத்தவ இப்படி வந்தா, அடுத்து உன் தம்பியை யோசிச்சியா?”, கேவினார்.
“அம்மா... கொஞ்சம் அமைதியா இருங்க. பேசலாம். அவனுக்கு அருமையான மருமக நம்ம சமூகத்துலேயே வருவா. நான் பார்த்து வெச்கிருக்கேன் அந்தக் கவலையை விடுங்க.”
“ஓ... அவனும் காதலிக்கறானா? “,முறைத்தார்.
“இல்லம்மா. அங்க என் கூட வேலை...
உள்ளே சரோஜினியும் , ப்ரீத்தியும் மட்டுமே இருந்தனர். சுற்று முற்றும் பார்த்தவன், “ஹர்ஷிதா எங்க?” என்ற கேள்வியில்,
“அது, ப்ரீத்தி வாந்தி எடுக்க, குழந்தை பயப்படப் போறான்னு எதிர்க்க இருந்த ஒரு பாட்டிமா, அவங்க ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க தம்பி. கீர்த்தி வீட்டுல வெச்சிருந்திருக்கலாம்...”, குறையாக சரோஜினி ஆரம்பிக்கவும்,
“நாளைக்கு கிளம்பப்போறவளை எதிர்பார்க்காதீங்க ஆன்ட்டி. அதுக்கப்பறம் நீங்கதான பார்த்தாகணும்? துணைக்கு வேற ரிலேஷன் யாரும் வரவெச்சிக்கலையா?”, என்று அவர் கவனத்தை தன்புறமே திருப்பினான்.
“எனக்கு இப்பவே இது எல்லாருக்கும் தெரிய வரதுல விருப்பமில்லைங்க. அதுதான்...” பதில் ப்ரீத்தியிடமிருந்து வந்தது.
“வயசானவங்க சமாளிக்கணுமே? உறவுக்காரங்க இல்லைன்னா உங்க ஃப்ரெண்டு யாராவது வர சொல்லலாமே? எல்லா பாரத்தையும் குடும்பத்துல இருக்கவங்களே உங்களுக்காக எல்லா நேரமும் சுமக்க முடியுமாங்க?”
“...”
ப்ரீத்தி எந்த பதிலும் சொல்லாது அமைதியாக இருக்கவும், “சரி, அது உங்க விருப்பம். நான் திடீர்னு கிளம்பி வந்தது, எங்க சம்மந்தப்பட்ட சில விஷயங்களை பேசி தெளிவுபடுத்திடணும்னுதான்”, பார்வை வட்டத்துள் ப்ரீத்தியும் சரோஜினியையும் கொண்டுவந்தான்.
“நேத்து நீங்க குழந்தை பத்தின உங்க எதிர்பார்ப்பை சொன்னீங்கன்னு கீர்த்தி சொன்னா...”, என்று நிறுத்தினான். இருவருமே அவன் முகத்தைத்தான் பார்த்திருந்தனர். அவள் நேற்று சொன்னதும், இப்படி காலையில் வந்து நிற்பவனைக் கண்டு சற்று மிரட்சிதான். ஏன் அவனிடம் சொன்னாய் என்றும் கேட்க முடியாது. அவர்களோடு ஹர்ஷி வளர அவனும் சம்மதிக்க வேண்டுமே.
“உங்க நிலைமையில இப்ப இதை பேசறது கஷ்டமா இருந்தாலும், நான் உடைச்சே பேசறேனே? ஏற்கனவே கீர்த்தி மண்டையை கழுவி குழந்தையை பெத்துக்க வெச்சீங்க. உங்களுக்கு வேணான்னு இருந்தா திருப்பி குடுக்க அவ என்ன அமெசான் ஆர்டரா? கீர்த்தி இல்லாம வேற வாடகை தாய் மூலமாவே பெத்திருந்தீங்கன்னா, இப்படித்தான் தேடிப்போய் ரிட்டர்ன் குடுப்பீங்களா?”, சுட்டெரிக்கும் அவன் பார்வையையும், சுள்ளென்று வந்த கேள்விகளையும் தாங்க முடியாது,
“தம்பி... அவளே நாளை எண்ணிட்டு இருக்கா...”, என்று கண்ணீர் விட்டபடி பெரிய மகளுக்காக சரோஜினி பேச,
“தெரியுங்க. அதனாலதான பேச வேண்டியிருக்கு? எந்த தைரியத்துல ப்ரீத்தி குழந்தையை கீர்த்தி பார்த்துப்பான்னு அவளைக் கூட கேட்காம நீங்களே முடிவு பண்ணீங்க?”
அதற்குள் தன்னை மீட்டுக்கொண்ட ப்ரீத்தி, “ஹர்ஷி அவ இரத்தம். அந்த உரிமையிலதான்..” என்றவளை கையமர்த்தியவன்,
“உரிமை..? நக்கலாக இடைமறித்தான். “ அவ சம்மதிமில்லாம் ஜனிச்ச உயிரை, விருப்பமேயில்லைன்னாலும் உங்க வற்புறுத்தல்ல பெத்து குடுத்துட்டா. உயிரை அழிச்ச பாவம் வேணாம், புண்ணியம் சேரும்னு சொன்னீங்க. இப்ப உன் இரத்தம், காப்பகத்துல விட்டா உனக்கானது மாதிரி அவளுக்கும் ஆயிடும், பழி வாங்கறியான்னு கார்னர் பண்றீங்க. இதுக்கு பேர் என்ன தெரியுமா?
உங்க புருஷன் ஒரு தரம் அவ உடம்பை ரேப் பண்ணான்.... நீங்க... அவ உழைப்பை, அவ மனசை, உணர்வுகளை திரும்பத் திரும்ப அழிக்கறீங்க. இதுவும் ரேப் தான். எமோஷனல் ரேப்”, என்று அழுத்தமான குரலில் பேசியவன்,
“உங்க பணம் உங்ககிட்ட இருக்கணும், நகை இருக்கணும், ஆனா அவ காசு எடுத்துக்கலாம். கல்யாணம் தள்ளி போட்டுக்கலாம். நீங்களே சம்மந்திகிட்ட பேசுவீங்க? எனக்கு புரியலை ...இந்த குடும்பம் அப்படி என்ன கீர்த்திக்கு பண்ணுச்சு? அவ எதுக்கு எல்லா பிரச்சனைக்கும் தீர்வா இருக்கணும்?
இரகுராமன் அவளை நாசம் பண்ணதும், உங்கூட வாழ முடியாதுன்னு சண்டை போட்டு கீர்த்திக்காக உங்க புருஷனை விட்டுட்டு வந்தீங்களா ப்ரீத்தி? அவருக்காகத்தான வாதாடினீங்க?”, ப்ரீத்தி தலை குனிய, சரோஜினியைப் பார்த்தவன்,
“நீங்க அவனுக்கு தண்டனை வாங்கி குடுத்தீங்களா? தப்புன்னு தெரிஞ்சும் ப்ரீத்தி அவ புருஷனுக்கு நின்னா, உன் உறவே வேணாம்னு அவளை தள்ளி வெச்சிட்டு உங்க சின்ன பொண்ணுக்காக பெத்தவங்களா நீங்க நின்னிருக்கணும். செய்யலை. சரி அட்லீஸ்ட் குழந்தை எதுவும் வந்துடாம இருக்க, ஒரு டாக்டரையாவது பார்த்து எதாவது செஞ்சீங்களா? இல்லை. குழந்தை வந்ததும் என்ன பண்ணிருக்கணும்? கீர்த்தி வேணாம்னு சொன்னதை மதிச்சு கலைச்சிருக்கணுமா இல்லையா? அதுக்கு அம்மாவா அக்காவா நீங்க அவ கூட நின்னீங்களா? அது என்ன? கெட்டதுல நல்லதா குழந்தை வந்தது? பிள்ளை பெத்து தரணும்ன்றது கீர்த்தி விதியா? முன் ஜென்ம கடனா?”, கோபத்தில் அவன் குரல் சற்றே ஓங்க, சரோஜினி,
“இப்படியெல்லாம் ஆகும்னு அப்போ தெரியாதுங்களே! நடந்ததை மாத்த முடியாது. அதோட விளைவுனால ஒரு பிரச்சனையாவது முடியும்னு இருக்கவும், அந்த முடிவை எடுத்தேங்க. இவங்க நல்லபடியா குழந்தையை வளர்ப்பாங்கன்னுதானே நினைச்சேன்”, முந்தானைக்குள் கேவினார்.
தன்னை சற்றே நிதானித்துக்கொண்டவன், “யாரும் தீர்க்கதரிசி இல்லைங்க. எல்லாருக்கும் இக்கட்டான சூழ்நிலை வரும். அந்த நேரத்துல நமக்குத் தெரிஞ்சதை வெச்சுத்தான் முடிவெடுக்கணும். இல்லைன்னு சொல்லலை. ஆனா அதை நியாய தர்மம் பார்த்து மனசாட்சியோட எடுத்திருந்தா, முடிவு தப்பா போனாலும் குறை சொல்ல முடியாது. ஆனா நீங்க அப்படியா செஞ்சீங்க?...
அத்தியாயம் - 17
ஜெயராணி வந்திருந்தார். வேணுகோபால் மாரடைப்பும், ப்ரீத்தியின் புற்று நோய் பற்றியும் விசாரிக்க. அதன் வீரியத்தைக் கூறவில்லை ஜோ. ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டும் என்பதோடு நிறுத்தியிருந்தான்.
“நீங்க மனச தளரவிடாதீங்க. இப்பல்லாம் முன்ன மாதிரி பயப்படவேண்டாம். எங்க பக்கத்து சொந்தம் இரண்டு பேருக்கு இப்படித்தான் புற்று நோய்னு சொன்னாங்க. ஆறு மாசம் ஒரு வருஷம்னு ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டு இப்ப நல்லா இருக்காங்க. என்ன உங்க இரண்டு பேருக்குமே பணக்கார வியாதி. இன்சூரன்ஸ் எதுவும்..?”, என்று நிறுத்த, கீர்த்தியின் இல்லை என்ற தலையசைப்பில்,
“ஜோசஃப் அப்பாக்கு முடக்கு வாதம் வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்தப்போ, பணம் தண்ணியா கரைஞ்சுது. கடன் வாங்கி, வீட்டை அடமானம் வெச்சுன்னு அப்படி செலவு செஞ்சும், அந்த கவலையிலேயே மாரடைப்பு வந்து போயிட்டார். இன்சூரன்ஸ் எதுவும் இல்லை. செலவு குடும்பத்தையே முடக்கிடுச்சு. ஜோசஃப் தலையெடுத்து, கஷ்டப்பட்டுதான் இப்ப தலை நிமிர்ந்தோம். இங்க நீங்க திடமா இருக்கணும் சம்மந்தி. பெரிய பொண்ணு உடம்பை பார்க்கணும், சின்னவ கல்யாணத்தையும் பார்க்கணும்.”
அறிவுரையை பொழிந்தார். வேணுகோபால் தலையாட்டி கேட்டுக்கொண்டார். அருகே அமைதியாக அமர்ந்திருந்த கீர்த்தியைப் பார்த்தவர், “தைரியமா இருக்கணும் கீர்த்தி. குடும்பத்துக்கு ஒன்னுன்னா ஓடி வந்ததுலேயே உன் பாசம் தெரியுது. கல்யாணத்தை தள்ளிப்போடாம சீக்கிரமே நடத்திடலாம் கீர்த்தி. வீட்டுல ஒரு நல்லது நடந்தா எல்லாருக்குமே பாசிட்டிவ்வா நடக்கும்”, என்று அவளைப் பார்க்க, தந்தையை பார்த்த வண்ணம் மையமாக தலையாட்டி வைத்தாள்.
“ஏன்மா? ஹாஸ்பிட்டல் செலவு ஆகியிருக்கும்தான். உன் கல்யாணத்துக்கு தேவையானது இருக்குதில்லையா?”, என்று யோசனையாய் கேட்க,
“இருக்கு ஆன்ட்டி”, என்றாள் மெல்லிய குரலில்.
“ம்ம்....
அத்தியாயம் - 13
அந்த வார விடுமுறையின் போது வெளியே சுற்றிவிட்டு கீர்த்தியின் வீடு வந்திருந்தார்கள். வாங்கி வந்திருந்த பொருட்களை மேசையில் வைத்து, அவனுடையதை தனியாக ஒரு பையில் போட்டுக்கொண்டிருந்தான்.
தேநீர் போட்டு எடுத்து வந்தாள் கீர்த்தி. எப்படியோ ஆரம்பித்த விவாதம் கடந்த அரை மணி நேரமாக ஓடிக்கொண்டிருந்தது.
“ஜோ... உன்டாக்டர் ஃப்ரெண்டு சொல்றார் சரி. பட், இதுவரைக்கும்...
அவன் தோள் மீது சாய்ந்து கொண்டவள், “இல்லை நானே பேசறேன். ஆனாலும் கல்யாணத்துக்கு ஒரு வருஷம் ஆகட்டும்னுதான் சொல்லுவாங்க ஜோ.” என்றாள் சங்கடமாக.
“வீட்டுல சொல்லி அவங்க சரின்னு, அப்பறம் அம்மா பார்த்து பேச அது இதுன்னு கொஞ்சம் டைம் எடுக்கும். நமக்கும் லீவ்ல வர ஜூன் ஆகிடும்னு சொல்லிக்கலாம் கீத்துமா. அது ஒன்னும் பிரச்சனையில்லை....
அடுத்த அரை மணி நேரம் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. ப்ரீத்தி, “என் வாழ்க்கையை அழிச்சிடாதடி, எல்லாமே எங்க தப்புதான். மன்னிச்சுடு, அவர் தெரிஞ்சு வேணும்னு எதுவும் செய்யலையடி. கல்யாணம் ஆன இத்தனை நாள்ல அவர் ஒரு வாட்டியாவது உன்னை தப்பா பார்த்திருக்காரா? உன்னைன்னு இல்லை வேற எந்தப் பொண்ணையுமே மரியாதையாத்தான் பார்த்திருக்காருடி. நம்புடி.”, என்று...
அத்தியாயம் - 14
துபாய் வந்து இதோ ஒரு மாதம் ஓடிவிட்டது. ப்ரீத்தி அவள் வீட்டை காலி செய்து, பெற்றோருடன் வந்துவிட்டாள். அவளோடு ஓரிரு முறை மட்டுமே கீர்த்தியால் பேச முடிந்தது.
“அவ பாட்டு விட்டத்தை பார்த்து ஓஞ்சுபோய் உட்கார்ந்திருக்காடி. ஹர்ஷி எதாவது கேட்டா மட்டும் செய்யறா. மத்தபடி பேச்சே இல்லை. பாவம் குழந்தையும் வாடி கிடக்கு....
அத்தியாயம் - 15
மறுபடி ஒரு சங்கடமான அமைதி. துபாய் பள்ளியின் நேர்காணலுக்குக் கூட இலகுவாகத்தான் இருந்தாள். ஆனால் இது அவள் வாழ்க்கைக்கான நேர்காணல், இது போனால் வேறொன்று என்று கடந்துவிட முடியாத நேர்காணல்.
அறிமுக முகமன்கள் முடிந்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள். மடிக் கணிணி திரையை ஜூம் வாயிலாக நிறைத்திருந்தார் ஜெயராணி....
அவளை ஊடுருவிப் பார்த்தவன், “நீதான் உனக்கு தகுதி இல்லை. உனக்கு நான் வேணாம்னு சொன்ன”, என்று சொல்லவும், அவன் மார்பில் இரண்டு கைகளாலும் அடித்தவள், “சொன்னா?... சொன்னா?... கேட்டுட்டு விட்டுருவியா? இப்ப சொல்றேன். உனக்கு பொண்டாட்டின்னா அது நான் மட்டும்தான். அரை போதையாகியாவது உன் கூட குடும்பம் நடத்தறேன். உனக்கு புள்ளை வேணுமா, பெத்து...
அத்தியாயம் – 7
வார நாட்கள் வழமைபோல் ஓடியது. ஜோ கண்ணில் படவே இல்லை. வாரம் தொடங்கியபோது மதியம் அவன் வரவில்லை என்று பார்த்திருந்தவளுக்கு, “ஜோசஃப் சார் வரமாட்டாராம். மெசேஜ் அனுப்பியிருந்தார். எதோ வேலையாம், டெய்லர் மேடமோட”, என்று செய்தி சொன்னாள் ஷீத்தல்.
“உன் நம்பர் அவர்கிட்ட இருக்கா?”, ஆச்சரியமாகக் கேட்டாள். இரண்டு முறை சந்தித்தும் ஜோ...