Wednesday, November 11, 2026

    கவிதைகள் பாடி

    அழகான பெண் என்று, மகனது மனம் ஒருநொடி கொஞ்சமே கொஞ்சம் ஆசைப்பட்டிருக்கும் என்று நினைத்தவரும், இந்த சம்பந்தம் வேண்டாம் என்கிற முடிவினில் அந்தநோடியே வந்துவிட்டார். ஆனால் அங்கே விநாயகமோ மகாவின் மனநிலைக்கு அப்படியே எதிர் துருவமாய் இருந்தார். பாஸ்கரின் நிதானம் அவரை வெகுவாய் கவர்ந்தது. அவரின் குடும்ப விபரத்தையும் கூட, விநாயகத்தின் சித்தப்பா பகிர, அப்போதும்...
    விநாயகம் அனைத்தையும் பார்த்து,உருப்படி கணக்குப் போட்டு, பின் அதில் எத்தனை குறைக்க முடியும் என்று பார்க்க, கவிதாஞ்சலியோ “இவ்வளோ வாங்கிருக்கோம்.. கிப்ட் எதுவுமில்லையா?!” என்று கேட்க, “டிஸ்கவுன்ட் இருக்கு ம்மா..” என்றான் ஒரு சிறு புன்னகையோடு. “அதுவும் இருக்கும்.. ஆனா இத்தனை வாங்குறப்போ, கிப்ட்டா எதுவும் வாங்கலைன்னா எனக்கு சங்கடமா இருக்குமே அங்கிள்..” என்றவள், மீண்டும் பார்வையை...
    கவிதை – 5 “நேத்... யூ க்னோ ஒன் திங். அப்பா அண்ட் அம்மா ரெண்டு பேரும் பாலி ட்ரிப் ப்ளான் பண்ணிருக்காங்க டா..” என்று கவிதாஞ்சலி, அண்ணனிடமும் எடுத்துவிட, “இஸ் இட்?! ரியல்லி?!” என்று கண்களை பெரிதாக்கிய நேத்ரன், அப்பாவையும் அம்மாவையும் பார்க்க, தாரணியோ “ஏய் வாலு. சும்மா இரு..” என்று மகளை செல்லமாய் அதட்ட, “ம்மா அஞ்சுவ...
    கவிதை – 3 “உள்ளூர் சம்பந்தம் வேணாம் மாமா..” என்ற விநாயகத்தின் கூற்றில், கண்ணதாசன் தவிர, மற்ற அனைவருமே கொஞ்சமல்ல நிறையவே  அதிர்ந்து தான் போனார்கள். அதிலும் அதிகமாய் அதிர்வைக் காட்டியது மகாலட்சுமி தான். “என்னங்க மாமா?! என்ன சொல்றீங்க?!” என்று கேட்டவரின் பார்வையோ, நொடியில் அனைவரையும் சற்றி வந்தது. “ஆமா மகா. கண்ணனுக்கு அந்நியத்துல பார்த்தா நல்லதுன்னு தோணுது....
    சுபாஷோ “நம்மாலே பண்ணிக்கலாம்.. சொல்லப்போனா நம்மதான் செஞ்சிருக்கணும். அக்காவும் மாமாவும் ஆசையா செய்றாங்கன்னு விட்டோம்..” என்று சொல்ல, “அதான்.. அந்த ஆசை இப்போ இல்லையா. தம்பிக்கு கல்யாணத்துக்கு பாக்குறாங்க சரிதான். ஆனா தம்பிக்கு பண்ணனும்னு வர்றப்போ, அப்போ என்னை அப்படியே விட்டுடுவாங்களா?” என்று விதாண்டாவாதம் பேசினாள் தனா.   ஓரளவுக்கு மேலே அங்கே எதுவும் பேசி முடிவெடுக்க...
    கவிதை – 2 சிலரின் பிறப்பு, வாழ்வு, அவர்களின் வாழ்க்கை லட்சியம், எல்லாமே குடும்பம் சார்ந்ததாய் இருக்கும். எக்காரணம் கொண்டும், குடும்பத்தின் அமைதியோ, கட்டமைப்போ, குடும்ப உறவுகளின் பிணைப்போ கேட்டுவிடக் கூடாது என்பதில், மிக மிக திண்ணமாய் இருப்பர். அப்படியொரு நபர் தான் மகாலட்சுமி. சரியாய் மகாவின் பதிமூன்றாவது வயதில் அப்பா அம்மா இல்லை. தாத்தா மற்றும்...
    “ம்மா, அப்பாவும் தான் எத்தனை நாளைக்கு ஓட முடியும்?! போதும்மா நீயும் அப்பாவும் பாரத்தை தாங்கினது எல்லாம் போதும். உங்க காலத்துக்கு நீங்க வீடு எடுத்து கட்டிட்டீங்க, பிள்ளைங்களை படிக்க வச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க. ஆனா அடுத்து என்னோட காலத்துக்கு நானும் என் பிள்ளைகளுக்கு சேர்க்கணும் தான. என்னோட ஓராளு சம்பளம் போதுமா?!”...
    கவிதை – 7 கண்ணதாசனுக்கு, ஒருமாதிரி படபடப்பான மனநிலை. இப்படி குடும்பத்தினர் அனைவரும், திருமணத்திற்குச் செல்லும் பெயரில் பெண் பார்க்கக் கிளம்பி நின்றதைக் கண்டு, ஒருநொடி திடுக்கிட்டுத்தான் போனான். அதுவும் எப்படி, பெண்ணுக்குத் தெரியாமல், பெண்ணின் குடும்பத்திற்கும் தெரியாமல் ஒரு பெண் பார்க்கும் நிகழ்வு. இதில் மாப்பிள்ளையும் கூட இடம்பெறவில்லை. இப்படியெல்லாம் அவனுக்கு மட்டும் தான், இவ்வுலகில்...
    கவிதை – 6 “ப்பா, இந்த அலையன்ஸ் நமக்கு செட்டாகாது ப்பா. வேணாம்..” என்கையில், கண்ணதாசன் முகத்தினில் அப்படியொன்றும் இயல்பான பாவனை இல்லைதான். சொல்லப்போனால் அவனது குரல் கூட, உறுதியாய் எல்லாம் ஒலிக்கவில்லை. விநாயகமோ, மகன் அப்பெண்ணின் புகைப்படத்தைக் கூட பார்க்காது, வேண்டாம் என்று சொல்லவும், அவனிடமே “பொண்ணு போட்டோ கூட பார்க்காம, வேணாம்னு சொன்னா எப்படி...
    கவிதை – 4 கண்களோ இமைக்கவும் மறந்திருக்க, விரல்களோ அசைய விரும்பாது  கணினித் திரையில், அவள் படத்தின் மீதுதான், பார்வையும், மனதும் லயித்து நிற்கவேண்டும் என்று, வேலை செய்யாமல் அப்படியே இருந்தது. ‘கவிதாஞ்சலி..’ என்று கண்ணதாசனின் அழுத்தமான இதழ்கள் அவளின் பெயரை ஒருமுறை உச்சரித்துப் பார்க்க,  பார்வையோ அவள் முகத்தினில் படிந்து, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் அவளது...
    error: Content is protected !!