வர்மனின் காதலி
"இளவரசே, எங்கள் படை தளபதி கூறிய போர் நுணுக்கங்களை கேட்டீர்கள் தானே? அது சரியாக உள்ளதா? தங்கள் விருப்பத்தை கூறுங்கள்", என்றார் மகாராஜா.
"தாங்கள் அனைத்து போரிலும் வெல்வது எப்படி இன்று புரிந்து கொண்டேன் மகாராஜா. ஒரு படையின் தளபதி சரியாக இருப்பது தான் அந்த படையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். தாங்கள் படைத்தலைவரின் அறிவு நுட்பத்தை கேட்டு...
அத்தியாயம் 5
நிஜத்தில் நீ தூரமானாலும்
நிழழாக என்
அருகிலே இருக்கிறாய்!!!
முறைத்து கொண்டிருந்த வான்மதியை ரசித்து பார்த்தான் நரேந்திரவர்மன்.
அவன் பார்வையை உணர்ந்த சித்தர், "மகனே தற்போது உணவில் மட்டும் கவனம் வைத்தால் நன்றாக இருக்கும். உன் வாய்க்குள் நுழைய காத்திருக்கும் அனைத்து பட்சிகளும் உள்ளே சென்று விட போகிறது", என்று சொல்லி புன்னகைத்தார்.
"தந்தையே, பட்சிகள் உள்ளே சென்றாலும் அதில் உள்ள...
"நான் வந்து விட்டேன் தந்தையே", என்று துள்ளி குதித்து அவர் முன்பு போய் நின்றாள் வான்மதி.
"வா மகளே", என்று புன்னகைத்த மகாராஜா, "இவர் பெரிய சித்தர் மகளே. அவர் பாதம் பணிந்து கொள்", என்றார்.
"ஆகட்டும் தந்தையே", என்று மகாராஜாவிடம் சொன்னவள் சித்தர் முன்பு போய் அவர் காலில் விழுந்து வணங்கினாள்.
"நீடூடி வாழ்க மகளே", என்று...
அத்தியாயம் 4
என் காதல் உன் மேல்
பிறந்ததால் கருவறை நீ,
அது மடிந்ததால்
கல்லறையும் நீ!!!
நரேந்திரவர்மன் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்தாள் வான்மதிதேவி.
அவள் பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் திரு திருவென்று விழித்தான். அவன் பார்வையில் என்ன உணர்ந்தாளோ, "தாங்கள் எப்போதும் தங்கள் தேவியை பற்றிய கனவிலே சஞ்சரிக்கிறீர் வீரரே. அதனால் தான் அடிக்கடி கனவுலகத்திற்கு போய் விடுகிறீர்கள்", என்று சிரித்தாள்.
ஒரு...
காதல் என்று வந்துவிட்டால் அரசன் என்ன? ஆண்டி என்ன? அனைவருமே அறிவற்றவர்களாகி விடுகிறார்கள். இவன் மட்டும் விதி விலக்கா என்ன?
"என் மீது அவளுக்கு மயக்கமோ காதலோ வர வில்லை என்றால் ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அவள் மனதில் யாரோ இருக்க வேண்டும். ஆம் மங்கையர் அயலாரை ஆசையாக பார்ப்பது இல்லை என்றால்...
அத்தியாயம் 3
நமக்குள் எழுந்த
விரிசலை காதலால்
தைக்க வா பெண்ணே!!!
மனம் முழுவதும் ஆனந்தத்துடன் அந்த வீரனுடன் நடந்தான் நரேந்திரவர்மன்.
அவன் கண்கள் சுற்றிலும் பார்வையை ஓட்டியது. முதல் பார்வையிலே மனம் கவர்ந்தவளை அவன் கண்கள் தேடின. அவளை நினைத்த மாத்திரத்தில் அவன் நெஞ்சமெல்லாம் இனித்தது.
"இந்த தேசத்தின் நந்தவனம் அவ்வளவு அழகானதா வீரரே?", என்று பேச்சு கொடுத்தான் நரேந்திரவர்மன்.
"ஆம் இளவரசே. ...
அந்த அவையே அமைதியில் உறைந்திருந்தது.
தன் விளையாட்டு தனம் அனைத்தையும் விடுத்து கம்பீரமாக பேச ஆரம்பித்தான் நரேந்திரவர்மன்.
"எமது தந்தை இந்திரவர்மன் தங்களுக்கு என் மூலம் ஓலை அனுப்பி இருக்கிறார் மகாராஜா. அது என்னவென்றால் செங்கல்வராயன் தங்களுடன் போரிட ஆயத்தமாயிருக்கிறான். அந்த செய்தியை தாங்களும் ஒற்றர் மூலம் இதற்குள் அறிந்திருப்பீர். எமது தந்தை தங்களிடம் கூற சொன்னது ...
அதற்காக காத்து கொண்டிருந்தவர்கள் அவனை நெருங்கும் முன்னர் "அவன் மீது வாளை யார் முதலில் நீட்டினாலும் அடுத்த நிமிடம் வாளை நீட்டியவனின் சிரம் தரையில் விழும் மகாராஜா", என்ற மற்றொரு குரல் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தார்கள்.
ஒரு நடுத்தர வயதுடைய துறவி அரண்மனைக்குள்ளே வந்து கொண்டிருந்தார். அவரை துரத்தி கொண்டு காவளாளிகள் இருவர் வந்தனர்.
அந்த துறவியை...
அத்தியாயம் 2
என்னுள் இருக்கும்
மோசமான பலவீனங்களில்
ஒன்று உன் மீதான காதல்!!!
வான்மதியின் கழுத்தில் அவள் வைத்திருந்த வாள் அழுந்தி படிந்தது. அந்த வீரனின் வாளின் கூர்மையால் அவள் கழுத்தில் அது சிறு கீறலையும் ஏற்படுத்தியது.
வெண்ணையை குழைத்தது போல இருந்த அவள் வெண்ணிற சங்கு கழுத்தில் அந்த சிறு கீறலினால் வந்த ரத்தத்தின் சிவப்பு அனைவரையும் கலங்கடித்து.
"இப்படி எல்லாம் செய்யாதே வான்மதி....
"அந்த செங்கல்வராயனை மணந்து கொண்டால் போர் நடக்காது தான். எந்த துயரமும் இல்லை தான். எந்த உயிரும் போகாது தான். என் நாடும் என் நாட்டு மக்களும் இன்னல்கள் இன்றி வாழ்வார்கள் தான். ஆனால் என் நிலைமை. என் நிலைமை என்னவாகும் என்று யோசித்து பார்த்தீர்களா? எவனோ ஒரு ராஜாவுக்கு அந்த புறத்தில் மட்டும்...
"ஒரு யோசனை உள்ளது மகாராஜா", என்றார் அமைச்சர்.
"என்ன அமைச்சரே?"
"செங்கல்வராயன் ஏற்கனவே நம் இளவரசியை பெண் கேட்டான். இப்போது அதை பற்றி நீங்கள் அவனிடம் பேசினால், போரை தவிர்க்கலாம். எனக்கு தெரிந்து இது ஒன்று தான் வழி"
மகாராஜா கண்ணில் ஒளி வந்தது. அவர் யாசித்த கண்களுடன் வான்மதியை பார்த்தார். வான்மதியோ அமைச்சரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அரண்மனையில்...
அத்தியாயம் 1
ஆழ் கடலும் கவிதை
எழுதும் உன் கால் தடம்
அங்கே பதிந்தால்!!!
வான்மதி தேவி, அழகின் மொத்த வடிவம் கொண்டவள். நளினம், கம்பீரம் என அனைத்தும் கொண்ட ராஜகுமாரி. அவள் முகத்தில் எப்போதும் ஒரு தேஜஸ் இருக்கும். வீரத்துக்கு பெயர் போன பேரரசர் வாசுதேவ சக்கரவர்த்தியின் மகள். அவருடைய சாம்ராஜ்யத்தின் இளவரசி. அந்த வானத்து நிலவின் ஒளி போன்றவள்.
மகாராஜா வாசுதேவ...