Pirayillaa Pournami
பிறை 2:
“முன்னால் நீதிபதியின் மகன் சேகர் திடீர் மரணம்...” என்ற செய்தி அன்றைய எல்லா நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டு....அவர்கள் குடியிருந்த ஏரியா முழுவதும் ஒரே கூட்டமாக இருந்தது.
நீதித்துறையில் பலவருடங்களாக பழம் தின்று கொட்டை போட்டவராக பாண்டியராஜன் இருந்ததால்..ஆளும் கட்சி,எதிர்க்கட்சி...என பலதரப்பட்ட ஆட்களும் வந்து போய் கொண்டிருந்தனர்.
அனைத்து செய்தி சேனல்களிலும்...இந்த செய்தியே பெரிய விவாதமாய் ஓடிக் கொண்டிருக்க....
சேனலின்...
பிறை 5:
“லல்ல லல்ல
லல்லலே லா....லாஆ.... லல்ல லல்ல லல்லலே லா....” என்று தாளம் போட்டுக் கொண்டே வீட்டினுள்
நுழைந்தாள் மீனாட்சி.
செய்த
காரியத்தின் சுக துக்கம் தெரியாமல்..தன் போக்கில் சந்தோஷமாக வீட்டினுள் வந்த
மீனாட்சியைப் பார்த்த தேவகிக்கு....அவ்வளவு கடுப்பு.
“அம்மா..பசிக்குது..!” என்றபடி பேக்கை தூக்கிப் போட....
“நான் என்ன இந்த
வீட்டு சமையல்காரியா...?” என்று தேவகி
கடுப்புடன் கேட்க....
“இல்லம்மா...அப்பாவுக்கு
வீட்டுக்காரி...! ஒய் இப்போ ஆங்கிரி...நான் என்ன பண்ணேன்...!”...
பௌர்ணமி 8:
அவளின் பதிலில்
ஓராயிரம் வலிகளும்,வேதனைகளும் அடங்கியிருக்கும் என்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சில
நிகழ்வுகளின் போது அவன்... சம்பந்த பட்ட இடத்தில் இருந்திருந்தால்.. தன் காதலையே
காப்பாற்றி இருப்பானே..! தன் காதலையும், காதலியையும் காப்பாற்ற முடியாமல் போன
அவனுக்கு மற்ற நிகழ்வுகள் எப்படி தெரியும்...?
“நீங்க என்ன
சொல்ல வரீங்க..? நிம்மதியா இருக்கான்னா..?” என்ற கேள்வியுடன் நிமிர்ந்தவன்....அங்கிருந்த
மகாவின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தான்.
“இது எப்ப
நடந்தது..?”...
பௌர்ணமி 11:
பழைய நினைவுகளின்
ரணத்தால்..அவளின் மனக் காயங்கள் மீண்டும் கிளறிவிடப்பட..கோவில் என்பதையும் மறந்து
அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது.சுற்றுப் புறம் கொஞ்சமும்
உறைக்கவில்லை அவளுக்கு.
அவளின் அருகில் வந்து
அமர்ந்து..அவளின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருந்த குமரனைக் கூட அவளுக்குத்
தெரியவில்லை.
“மீனாட்சி...!” என்றான் அமைதியான குரலில்.அவனின் குரலில்
கலைந்தவள்..அவனை அங்கு கண்டு வேகமாக கண்ணைத் துடைக்க...
“என்கிட்டே
இருந்து எதை மறைக்க....உனக்குள்ள இந்த போராட்டம்...!”...
பிறை 1:
“கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
எண்ணெய் ஊத்தி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி...”
சென்னையின் பரபரப்பான அந்த காலை வேளையில்....செழுமைக்கு கொஞ்சமும் குறைவில்லாத அந்த திருமன மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக்...
பௌர்ணமி 9:
வீட்டிற்கு வந்திருந்தவர்களைப்
பார்த்து மீனாட்சிக்கு கொஞ்சம் அதிர்ச்சியும் ஆச்சரியமும்.அந்த நாளில் அவர்களை
அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் முகத்தில்
இருந்தே தெரிந்தது.
கோபாலனுக்கு தான்
ஒன்றும் புரியவில்லையே தவிர...தேவகிக்கு நன்றாக புரிந்தது.அவர்கள்
வந்திருப்பதற்கான காரணம்.
ராஜ்மோகனும்,செல்லமாவும்
சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாக மீனாட்சியைப் பெண் கேட்டனர்.
“என்னடா இப்படி
வந்து கேட்குறோம்ன்னு நீங்க தப்பா நினைக்கக் கூடாது.எங்க பையன் மீனாட்சி மட்டும்
தான் அவனுக்கு மனைவியா வரமுடியும்ன்னு தீர்மானமா...
பௌர்ணமி 7:
அன்றுதான்
செந்தில் குமரன் அவளை இறுதியாகப் பார்த்தது.அதற்கு பிறகு ஒரு கேஸ் விஷயமாக அவன்
பக்கத்து மாநிலம் சென்று வர...அதற்குள் மீனாட்சிக்கும் திருமணம் முடிந்திருந்தது.
தன் மனதில் உள்ள
காதலை எப்படியாவது அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணி அவளைத் தேடித் போன
குமரனுக்கு கிடைத்த தகவல் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது.
என்னவென்று
வெளியில் சொல்ல முடியாத ஒரு உணர்வு அவன் தொண்டையை...