Advertisement

பௌர்ணமி 10:

செந்தில் குமரன் எதுவும் தனக்குத் தெரிந்ததாக காட்டிக் கொள்ளவே இல்லை.அவனின் மூளைக்குள் யோசனைகள் ஓடிக் கொண்டே இருக்க…அந்த யோசனையில் மீனாட்சியை மறந்தான்.

அவனும் வம்பு செய்வானோ..? திருமண இரவை எதிர்நோக்க வேண்டுமோ..என்ற அச்சத்துடன் இருந்தவளுக்கு…அவ்வளவு நிம்மதியாக இருந்தது.அவன் அவளிடம் எதையும் எதிர்பார்க்காதது ஒரு பக்கம் நிம்மதி தான் என்றாலும்…மனதின் ஓரத்தில் ஒரு சின்ன வருத்தம் அவளறியாமல்.

அதற்கு அடுத்து வந்த நாட்களிலும்…அவன் அப்படியே நடந்து கொண்டான். அவனுக்கு ஒரு விஷயத்தை தெரிந்தே ஆக வேண்டிய கட்டாயம்..அது தெரியும் வரை அவன் மனம் அமைதியின்றி தவிக்கும் என்று அவனுக்கே தெரிந்திருந்தது போலும்..!

மீனாட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டில் பொருந்திப் போக நினைத்தாள்.ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை.எவ்வளவு நினைத்தாலும் அவளால் நடந்த விஷயங்களை மறக்க முடியவில்லை.யாராவது அவளின் மன பாரங்களைக் குறைக்க, தோள் கொடுத்திருந்தால் குறைந்திருக்குமோ என்னவோ..?

குமரனும் அதற்கான முயற்சி செய்யவில்லை.மீனாட்சியும் அவனை நெருங்க நினைக்கவில்லை.

அன்று ராஜ்மோகன் ஆபீஸ் செல்ல கிளம்பி வர…அவருக்கான காலை உணவுடன் காத்திருந்தார் செல்லம்மா..!

“என்ன யாரையும் காணோம்..? என்று அவர் கேட்க…

“பிரியா கிளம்பிட்டு இருக்கா..! குமரன் காலைலயே கிளம்பி போனான்.. இன்னமும் வரலை..மீனா கிச்சன்ல இருக்கா…! என்றார் ஏதோ போல்.

அவரின் முகத்தைப் பார்த்தவருக்கு..என்னாச்சு..? எதுக்கு ஒரு மாதிரி இருக்க..? என்றார்.

“நான் என்னங்க சொல்ல..? உங்களுக்கு பிஸ்னஸ் முக்கியம்..அவனுக்கு கடமை முக்கியம்..இந்த பிரியா கழுதைக்கும் இன்னையோட லீவ் முடியுது..கிளம்பறா..அப்பறம் மீனாட்சி…அதிகம் பேசுறதே இல்லை…கடைசில நான் தான் வீட்ல விட்டத்தை பார்த்து உட்கார வேண்டியிருக்கு.

“அந்த பொண்ணுக்கு இடம் புதுசு செல்லம்மா..பழக கொஞ்ச நாள் ஆகும்..! அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு..! என்றார்.

“மீனாவை நான் ஒன்னும் சொல்லலைங்க..! ஆனா குமரன்…அவனாதான் பிடிவாதமா கல்யாணம் பண்ணினான்.இப்ப என்னடான்னா அவ ஒருத்தி இருக்குறதே தெரியாத மாதிரி நடந்துக்கறான்..அவ கூட சிரிச்சு பேசி என்ன..சாதாரணமா பேசி கூட நான் பார்க்கலை…

அப்பறம் சம்பந்தி வீட்ல…அன்னைக்கு போனவங்க தான்..! அதுக்கு அப்பறம் என்ன ஏதுன்னு கூட கேட்கலை…எனக்கு எதுவுமே சரியா படலைங்க..! என்றார்.

செல்லம்மாவின் கருத்தில் விழுந்த விஷயங்கள் அவர் கண்ணிலும் படாமல் இல்லை.அவரும் அதைப் பற்றி யோசித்துக் கொண்டு தான் இருந்தார்.ஆனால் எதை எப்படி,எங்கே ஆரம்பிப்பது என்று தான் தெரியவில்லை.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே…மாமா..! என்றாள் மீனாட்சி முதன் முறையாக.

 “சொல்லும்மா மீனாட்சி..! என்றார்.

“அது வந்து…நான்..இந்த கல்யாணத்துக்கு மறுப்பு சொன்னேன்னு அம்மாவுக்கு என் மேல் கொஞ்சம் கோபம்..அதான்…!சீக்கிரம் அவங்க கோபம் குறைஞ்சிடும்..! என்றாள்.

“செல்லம்மா அதுக்காக சொல்லலை மீனா…நீ வருத்தப்படுவியோன்னு தான் பேசிட்டு இருக்கா..! என்றார்.

“எனக்கும் புரியுது மாமா..! என்றவள் திரும்ப…அங்கே அவளையே பார்த்துக்கொண்டு..சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தான் முகிலன்.

அவனைப் பார்த்த உடன் அவளுக்கு தான் மனம் அடித்துக் கொண்டது.தான் பேசியதைக் கேட்டிருப்பானோ…? என்று உள்ளுக்குள் ஒரு பதற்றம்.

“எல்லாம் காதுல விழுந்தது.. என்ற மனப்பான்மையில்…தந்தையின் அருகில் சென்று அமர்ந்தான் குமரன்.

“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க செந்தில்..! உனக்கு கல்யாணம் ஆகி வீட்ல ஒரு பொண்ணு இருக்கா…எப்ப வீட்டுக்கு வர..எப்போ போறன்னு எதுவும் தெரிய மாட்டேங்குது..! இதுக்கு தான் நான் அப்பவே தலை பாடா அடிச்சேன்…இந்த வேலை வேண்டாம்..பேசாம பிஸ்னஸ பாருன்னு..!என்று அவர் கோபமாய் சொல்ல…

“அப்பா..காலைலயே வேண்டாம்..இன்னும் கொஞ்ச நாள்..அப்பறம் நீங்களே சொன்னாலும் நான் இந்த வேலையை தொடர மாட்டேன்..போதுமா..? என்றான்.

“போதாது..! என்றார்.

“என்ன சொல்றிங்க..? என்றான்.

“முதல்ல மீனாட்சியை கூட்டிட்டு எங்கையாவது போயிட்டு வா..! மத்ததை எல்லாம் அப்பறம் பார்க்கலாம்..! என்றவர் கையைக் கழுவி விட்டு எழுந்து செல்ல….

“எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன…? இவளை எவ்வளவு லவ் பண்றேன்…? இப்படி இவளை பக்கத்துல வச்சுகிட்டு விரதம் இருக்கனும்ன்னு எனக்கென்ன தலை எழுத்தா…? இவதான் எதுக்கும் சரிப்பட்டு வர மாட்டேங்கிறாளே..! என்று முனுமுனுக்க….அது அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த மீனாவின் காதுகளில் தெளிவாக விழுந்தது.

அவள் அவனைப் பார்த்து முறைக்க…என்ன முறைப்பு..? என்று அவன் ஒரு மார்க்கமாய் பார்க்க..

“கடவுளே..! இதென்ன இப்படி பார்க்குறான்..? என்று அவளுக்கு தான் உள்ளுக்குள் ஏதோ பண்ணியது.

“அப்பா சொன்ன மாதிரி…ஹனிமூன் கிளம்பிட வேண்டியது தான்..! என்று அவன் எழுந்து நின்று முறுக்கெடுக்க..அவனின் அந்த பாவனை…மீனாவுக்கு பதட்டத்தை தான் வரவழைத்தது.

“ரொம்ப தைரியமான ஒரு பொண்ணு இங்க இருந்தது…வாயைத் திறந்தாலே..பொய் சரளமா வருது…இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட எங்கம்மா கிட்ட அள்ளி விட்டுட்டு இருந்தா..அவளைப் பார்த்தியா..? என்றான் மீனாவை நக்கலாய் பார்த்து.

“ம்ம்ம்..அவ..அவளுக்கு ட்ரெயினிங் குடுத்த வாத்தியாருக்கு முன்னாடி நின்னு பேசிட்டு இருக்கா..? என்றாள் துடுக்காய்.

“வாவ்..அப்படியா..? அப்ப நான் தான் உனக்கு ட்ரெயினிங் குடுக்கறேன்னு சொல்லுற..? என்றான் மந்தகாசமாய்.

“ஆமா..! என்றாள் அவளும்.

“வேற யாரும் குடுத்தா தான் தப்பு…நான் குடுத்தா தப்பில்லை..! என்று கண்ணடித்தவன்..அவள் அவனின் பேச்சில் அசந்த நேரம் பார்த்து அவளின் கன்னத்தில் பச்சக்கென்று ஒரு முத்தத்தை வைத்து விட்டு செல்ல…

“டேய் உன்னை..! என்று மனதிற்குள் மட்டுமே திட்ட முடிந்தது அவளால்.

அப்போது பிரியா கிளம்பி கீழே வர….வா பிரியா சாப்பிடு..! என்றாள்.

பிரியா அமைதியாக டைனிங் டேபிளில் அமர…அவளுக்கு டிபனை எடுத்து வைத்தாள் மீனாட்சி.தலையை குனிந்த படி அமைதியாக  சாப்பிட… அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.அது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது போலும்..

“அண்ணி..! என்றாள்.

“சொல்லு பிரியா..!

“சாரி அண்ணி..! என்றவளுக்கு கண்கள் கலங்க…

“இப்ப எதுக்கு சாரி கேட்குற..? இதுக்கு நீ எந்த விதத்திலும் காரணம் இல்லைன்னு சொல்ல மாட்டேன்..! நடந்தது நடந்துடுச்சு..ஆனா இனி சரியா இருப்பேன்னு நம்புறேன்..! இதுக்கு முன்னாடி இங்க யாரைப் பத்தியும் எனக்கு தெரியாது.ஆனா இப்ப நல்லா தெரியும்.உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அத்தையோட நிலைமை அவ்வளவு தான்..மாமா உன்மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கார்…அவருக்குமே உன்மேல அப்படி ஒரு பாசம்…இவங்களுக்கு எந்த காலத்திலும்…கெட்ட பேர் வாங்கிக் கொடுத்துடாத..! என்றாள்.

“கண்டிப்பா அண்ணி..! ரொம்ப தேங்க்ஸ் அண்ணி..! என்றாள்.

“இந்த தேங்க்ஸ் எதுக்கு..? உங்க அண்ணாகிட்ட சொல்லாம விட்டதுக்கா…! என் கணிப்பு சரிண்ணா…அவருக்கு இந்நேரம் விஷயம் தெரிஞ்சிருக்கும்..! என்றாள் மீனா.செல்லம்மா வரவும் அவர்களின் பேச்சு தடைபட்டது. அவளும் கல்லூரி சென்று விட்டாள்.ஆனால் மீனாவிற்கு தான் மனசே சரியில்லாமல் இருந்தது.

செல்லம்மாவிடம் சொல்லிக் கொண்டு…அருகில் இருந்த கோவிலுக்கு சென்றாள்.அமைதியில்லாத மனதிற்கு அமைதியை தேடி.

 ஏனோ கோவிலுக்கு சென்று கடவுளை தரிசனம் செய்த பின்னும்..அவள் எதிர்பார்த்த அந்த அமைதி கிடைக்கவில்லை.அங்கிருந்த கோவில் குளக்கரையில் சென்று அமர…அதற்கு முன் தங்கையுடன் கோவிலுக்கு சென்ற தினங்கள் நியாபகத்திற்கு வர…அவளின் கண்கள் கடந்த கால போக்கில் கலங்கித்தான் போனது.

நினைவுகளில்…

அன்று தையல் கடைக்கு சுடிதார் தைக்க கொடுப்பதற்காக சென்றிருந்தாள் மகா.அவள் செல்லும் போதே ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்பினார் தேவகி.

“சீக்கிரம் வந்துடு மகா..! இன்னைக்கு மீனாவும்,மாப்பிள்ளையும் வரதா சொல்லியிருக்காங்க..! என்று தேவகி சொல்ல..

“அம்மா…இதை நீங்க ஆயிரம் தடவை சொல்லிட்டிங்க…! அக்காவைப் பார்க்குறதுக்காவே நான் சீக்கிரம் வந்துடுவேன்..! என்று சொல்லி செல்ல..

“சரி போயிட்டு வா..! என்று அனுப்பி வைத்தார் தேவகி.ஏனோ அன்று அவளை தனியே அனுப்ப மனமே இல்லை அவருக்கு.

கல்லூரி செல்வதற்காக எடுத்த புது சுடிதார்களை தையல் கடையில் தைக்க கொடுத்து விட்டு திரும்பும் போது…எதிரே இருந்த காபிஷாப்பில்… பிரியா தவிப்புடன் அமர்ந்திருப்பது தெரிந்தது.

“பிரியா எதுக்கு இங்க தனியா இருக்கா..? என்று யோசித்தபடி சாலையை கிராஸ் செய்து அவளிடம் சென்றாள் மகா.

“ஹேய் பிரி..! எப்படி இருக்க..? இங்க என்னடி பண்ற..? கூட அண்ணாவையும் காணோம்..! என்று மகா பேசிக்கொண்டே போக.. பிரியாவின் முகத்திலோ..தவிப்பு அதிகமாகிக் கொண்டே போனது.

“உன்மேல நான் கோவமா இருக்கேன்..! அக்கா கல்யாணத்துக்கு கூட வரலை…! என்று மகா பேசிக்கொண்டே செல்ல..அப்போது தான் கவனித்தாள் பிரியாவை.அவளின் முகம் அழுதுவிடும் நிலையில் இருக்க…

“என்னாச்சு பிரி..? உன் முகமே சரியில்லை..! என்று மகா கேட்க..சுற்றும் முற்றும் பார்த்தவள்..அவளின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த டேபிளில் அமர்ந்தாள்.

“என்னடி ஆச்சு..? என்றாள்.

“மகா..! நான் பெரிய தப்புப் பண்ணிட்டேண்டி…! என்று கண்ணீர் விட..

“என்னடி சொல்ற..? என்று அதிர்ந்தாள் மகா.

“இப்ப ஒரு இக்கட்டுல மாட்டியிருக்கேண்டி..! என்று சொல்ல..மகாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

“புரியற மாதிரி சொல்லு…!

“நான்..தருண்னு ஒருத்தரை  லவ் பண்ணேன்..!

“என்னது லவ்வா..இந்த வயசுல.? இது எப்படி எனக்குத் தெரியாம..? என்றாள்.

“கொஞ்ச நாளா தாண்டி.அவன் பக்கத்து ஸ்ட்ரீட்ல தான் இருந்தான்…இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ப்ரப்போஸ் பண்ணான்.நானும் அக்சப்ட் பண்ணேன்..ஆனா இப்ப..இப்ப.. என்று தயங்க..

“இப்ப என்னடி…?

“என்னை அவன் செல்லுல தப்பா போட்டோ எடுத்து வச்சிருக்காண்டி… அவன் சொல்ற இடத்துக்கு போகலைன்னா..நெட்ல விட்ருவேன்னு மிரட்டுறான்..! என்று அழுக…

“உங்கண்ணா போலீஸ் தான..? அவர்கிட்ட சொல்லிட வேண்டியது தானடி..முதல்ல உன்னோட போட்டோ எப்படி அவனுக்கு கிடைச்சது..? என்று மகா கேள்வி கேட்க…

அவன்கூட ரெண்டு மூணு டைம்..வெளிய போனேன்டி..ஆனா தப்பா எதுவும் நடக்கலை…போட்டோ எப்ப எடுத்தான்னு எனக்கும் தெரியலைடி..! என்றாள்.

“இது நம்புற மாதிரி இல்லை..மார்பிங் கூட பண்ணியிருப்பாங்க..! பேசாம அண்ணாகிட்ட சொல்லிடு..! என்று மகா சொல்ல..

“அண்ணாவும் ஊர்ல இல்லடி..! ஏதோ கேஸ் விஷயமா வெளிய போயிருக்காங்க..! என்று அவள் சொல்ல…

“இப்ப என்ன தான் செய்றது..? என்று மகா கேட்க..

“அதான் மகா.. எனக்கும் தெரியலை.அப்பா,அம்மாகிட்ட சொல்லவே பயம்.அப்ப இத்தனை நாள் எங்களை ஏமாத்துனியான்னு கேட்டா… சத்தியமா நான் செத்துருவேண்டி..! என்று அழுக….

“லூசு மாதிரி பேசாத..இந்த அறிவு எல்லாம் முன்னாடியே இருந்திருக்கணும்.நீ விலகி விலகி போனப்பவே நினைச்சேன்..! இப்படி ஏதாவது இருக்கும்ன்னு..! சரி இப்ப என்னதான் சொல்றான் அவன்..? என்றாள்.

“ஒரு அட்ரஸ் குடுத்து அங்க வர சொல்லியிருக்கான்..! எனக்குப் போகவும் பயமா இருக்கு..! போகாட்டி நெட்ல போட்றுவான்னு நினைச்சா..உசுரே போகுது..! என்று அழ…

“அவன் சொல்ற இடத்துக்கு தனியா போறது அவ்வளவு சேப்டி இல்லை..! என்று சொல்ல..

“அதனால தான்..நானும் யோசிச்சுகிட்டே இங்கயே இருந்தேன்..! அம்மாகிட்ட கூட பிரண்டைப் பார்த்துட்டு வரேன்னு பொய் சொல்லிட்டு தான் வந்தேன்..! என்றாள்.

“அறிவு இருக்கா உனக்கு? ஒரு பொய்யை மறைக்க..இன்னமும் எத்தனை பொய் சொல்ல போற..? சரி வா..! நானும் வரேன்..! அப்படி என்னதான் சொல்றான்னு பார்ப்போம்..! என்றவள்…

“அவன் சொன்ன இடத்தை சொல்லு..! என்று கேட்க…பிரியா தனது செல்லில் இருந்த முகவரியைக் காட்டினாள்.அதை அப்படியே எடுத்து மீனாட்சியின் செல்லுக்கு அனுப்பினால் மகா.கூடவே..சின்ன பிரச்சனை…மாமாவுடன் இங்க வரவும்.. என்ற தகவல் உடன்.

“இப்ப எதுக்குடி உங்க அக்காவுக்கு மெசேஜ் போடுற..? என்றாள்.

“ம்ம்..விளையாட..அங்க என்ன நடக்கும்ன்னு..நமக்குத் தெரியாது.இப்படி முன்னேற்பாடு இல்லாம போறது தப்பு..அதான்.. என்றவள் அவளுடன் சேர்ந்து செல்ல எத்தனிக்க..

“பேசாம போலீஸ்ல சொல்லிடலாமா..? என்றாள் மகா.

“வேண்டாம்டி..அவங்க உடனே அப்பாகிட்டையும்,அண்ணாகிட்டையும் சொல்லிடுவாங்க..!என்று மறுத்தாள் பிரியா.

“சரி வா..!என்றபடி இருவரும் அந்த முகவரியில் இருந்த இடத்திற்கு செல்ல…அது ஒரு அப்பார்ட்மென்ட்டின் கீழ் தளம்.

மகாவின் மனதுக்குள்ளும் கொஞ்சம் பயம் ஏற்பட.. அவள் உள் மனது ஏதோ  தவறு நடக்க போவதாய் அவளுக்கு சுட்டிக் காட்டியது.

அந்த வீட்டின் காலிங் பெல்லை அடிக்க..அடுத்த நிமிடம் அது திறந்து கொள்ள…தயக்கத்துடன் இருவரும் உள்ளே நுழைய..அடுத்த நிமிடம் கதவும் சாத்திக் கொண்டது.பிரியாவிற்கு பயத்தில் வேர்க்க ஆரம்பிக்க…

“இப்ப எதுக்கு உனக்கு இப்படி வேர்க்குது.எந்த நேரத்திலும் நமக்கு ஆயுதம் துணிச்சல் மட்டும் தான்..! என்றாள் மகா தைரியமாய்.

“ஆமா துணிச்சல் மட்டும் தான்..! என்றான் நக்கல் குரலில் தருண் பின்னிருந்து.

“இவன் தானா அவன்..? என்று மகா சர்வ சாதரணாமாக கேட்க.. தருணுக்கு கூட ஒரு நிமிடம் ஆச்சர்யம் தான்..அவளின் தைரியம் கண்டு.

“பரவாயில்லையே..! நான் ஒரு பச்சைக்கிளி வரும்ன்னு நினைச்சேன்.. கூடவே இன்னொரு மயிலையும் கூட்டிட்டு வந்திருக்கே..! என்றான் உல்லாசமாய்.

“மரியாதையா..பிரியாவோட போட்டோஸ் எல்லாத்தையும் டிலீட் பண்ணிடு..! இல்லைன்னா நாங்க போலீஸ்ல கம்ளைண்ட் பண்ணுவோம்..! என்றாள் மகா.

“அப்படி உடனே செய்றதுக்காகவா..இவ அண்ணன் போலீஸ்ன்னு தெரிஞ்சும் இவளை ஸ்கெட்ச் போட்டு தூக்குனேன்..! என்றான் விகாரமாய்.

“நீ என்ன சொல்ற..? என்றாள் பிரியா.

“தெரிஞ்சே தான் எல்லாமே பண்ணேன்னு சொல்றேன்…முட்டாள் பொண்ணே..! என்று அவன் சிரிக்க…

“இதோ பாரு..! இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை..மரியாதையா அவள் போட்டோ எல்லாம் டிலீட் பண்ணிடு..நாங்க இப்படியே போயிடுறோம்.. இல்லைன்னா உனக்கு தான் பிரச்சனை..! என்று மகா மிரட்ட..

“பாருடா..! மயிலு ரொம்ப ஆடுது..! விட்டுடுறேன்…அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காரியம் ஆகணுமே..! எனக்கு இவ முழுசா வேணும்…! ரொம்ப இளசு குட்டிகளை அனுபவிச்சு ரொம்ப நாள் ஆகுது…! என்று அவன் சொல்ல..

தோழிகள் இருவருக்கும் அதிர்ச்சி.என்னது..? என்று அவர்கள் அதிர்ந்து போய் நிற்க…

“சொல்றது புரியலை..எங்க வேலையே இது தான்..வாழ்க்கையை அனுபவிச்சு வாழனும்..அதுவும் இப்படி அழகான மான்குட்டிகளோட..! என்று மகாவின் கன்னத்தைத் தொட..அவனின் கையைப் பட்டென்று தட்டி விட்டவள்…அவனின் கன்னத்தில் அறைந்தாள்.

“உனக்கு பொண்ணுங்கன்னா அவ்வளவு இளக்காரமா..? என்று ஆத்திரத்துடன் அவள் நிற்க..அவள் அடித்த அடியில் அவனின் ஆத்திரம் இன்னமும் கூடியது.

“ஏய்..! என்ன திமிரா..? ஆனா இதுகூட நல்லா தான் இருக்கு..முரண்டு பிடிக்கிற கன்னுகுட்டிய பிடிச்சு காட்டுறது கூட ஒரு தனி சுகம் தான்..என்ன ஒன்னுக்கு ரெண்டு கண்ணுகுட்டிக இருக்கு..! என்றான் உல்லாசமாய்.

“டேய்..நாங்க இங்க வந்தது..வெளிய கேட்கிட்ட இருக்குற சிசிடிவில ரெக்கார்ட் ஆகியிருக்கும்..இங்க வரதுக்கு முன்னாடி..இன்பார்ம் பண்ணிட்டு தான் வந்திருக்கோம்..! உன்னால ஒன்னும் கழட்ட முடியாது.. என்று மகா ஆக்ரோஷமாய் பேச…

“ம்ம் பரவாயில்லையே உனக்கு மூளை நல்லா வேலை செஞ்சிருக்கு.. ஆனா அவங்க வரதுக்கு முன்னாடி கூட…நான் எல்லாத்தையும் நெட்ல விட்டுடலாமே…ஒரு நிமிஷம் போதும்..! என்று சொல்லி சிரிக்க… அவர்களுக்கு மனதிற்குள் கொஞ்சம் பயம் வந்தது என்னவோ உண்மை தான்.

“இன்னமும் எவ்வளவு நேரம் தருண்..! நான் வீட்டுக்கு வேற போகணும்..! என்றபடி உள்ளிருந்த அறையில் இருந்து வெளியே வந்தான் சேகர்.

அவனை அங்கே பார்த்த வினாடி…மொத்தமாக அதிர்ந்து தான் போனாள் மகா லட்சுமி.பிரியாவிற்கு அவன் யாரென்று தெரியவில்லை.மீனாவின் கல்யாணத்திற்கும் அவள் செல்லவில்லையே.

“கொஞ்சம் முரண்டு பண்ணுதுக அண்ணா…! இப்ப சரி பண்ணிடுவேன்..! என்று தருண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…சேகரும் அப்போது தான் அங்கிருந்த மகாவைக் கவனித்தான்.

அவளைப் பார்த்து அதிர்ந்தவனுக்கு கொஞ்சம் வியர்க்க தொடங்க…

“மாமா நீங்களா..? நீங்க எப்படி இங்க..? என்று கேட்டவளுக்கு…ஒரு நொடியில் அனைத்தும் விளங்கியது.

“ச்சி..நீ இவ்வளவு பெரிய அயோக்கியனா…? இது தெரியமா உன்னைப் போய் நல்லவன்னு நினைச்சு..எங்கக்காவை உனக்கு கட்டிக் குடுத்திருக்கோம் பாரு..! என்று காரி துப்பினால்  மகா.

“உங்க பொண்டாட்டியோட தங்கச்சியா இவ..அப்படியே தங்க சிலையாட்டம் இருக்கா..! என்று தருண் ஜொள்ளு வடிக்க..

“செருப்பு பிஞ்சிரும்டா நாயே..! உன் யோக்கிதை என்னன்னு..எங்க அக்காகிட்ட சொல்லலை…என் பேரு மகா லட்சுமி இல்ல.. என்றவள்..

நீ வாடி பிரியா..! என்றபடி அவளை இழுத்துக் கொண்டு செல்ல..

“ஒரு நிமிஷம்..பிரியாவோட மானமே என் கைல தான் இருக்கு..! என்று தருண் நக்கலாக சொல்ல…

“ஒழுங்கா இவனை அதை டிலீட் செய்ய சொல்லு..! என்று சேகரை பார்த்து சொன்னால் மகா.

தருணிடம் இருந்து செல்லை வாங்கிய சேகர்…அவள் கண் முன்னாலேயே.. அனைத்தையும் டிலீட் செய்ய….அதையே பார்த்திருந்தனர் இருவரும்.

“நீ சொன்னபடி நான் டிலீட் பண்ணிட்டேன்..! அதே மாதிரி நீயும் உங்க அக்காகிட்ட சொல்ல கூடாது..! என்றான் சேகர்.

“ம்ம்..எங்கக்காவுக்கு மட்டும் தெரிஞ்சா..அவளே உன்னைக் கொன்னுடுவா..! என்னைவிட அவளுக்கு தைரியம் ஜாஸ்தி..! என்று மகா மிடுக்காய் சொல்ல..

“அப்படிங்கிற…? தருண்..உனக்கு இவளை எவ்வளவு பிடிச்சிருக்கு…? என்றான் தாடையை தடவிக் கொண்டே.

“அதை வார்த்தையால சொல்ல முடியாது…! என்று அவன் ஜொள்ள…

“அப்ப செயல்ல காட்டிடு….! என்று சேகர் சொல்ல…தோழிகள் இருவரும் அதிர்ந்தனர்.

“இதெல்லாம் சரி இல்லை..! என்று அவர்கள் பின்வாங்க..

“இது தான் சரி…! என்று பிரியாவை தன் கைவளைவில் கொண்டு வந்தவன்…நீ ஆரம்பிடா..! என்றான் தருணைப் பார்த்து.

சேகரிடம் இருந்து பிரியா அவன் கைகளை விலக்கி மகாவைக் காப்பற்ற முயல..அவனின் இரும்பு பிடியில் இருந்து அவளால் அசையக்கூட முடியவில்லை.

மகவோ…எவ்வளவோ முயற்சித்து பார்த்தும்..அந்த தருணிடம் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தாள்.காக்க வந்தவள் பலி ஆகிக் கொண்டிருக்க… அழைத்து வந்தவள்…அனுஅனுவாய் துடித்துக் கொண்டிருந்தாள் அவள் படும் பாட்டைப் பார்த்து.

“எந்த நிலையிலும் தன் கற்பை இழக்க மகாவிற்கு மனம் வரவில்லை..

“சரி..சரி…நான் அக்காகிட்ட சொல்ல மாட்டேன்..என்னை விட்டுடு… என்று அவள் கதற…

“விடு தருண்..! என்றான் சேகர்.பழத்தை கையில் இருந்து பிடிங்கிக் கொண்ட பாவனையில் தருண் நிற்க…

“பிளீஸ் அவளை விட்டுடுங்க..! எனக்காக வரப் போயி..அவளுக்கு இந்த நிலைமை…நாங்க யாருகிட்டயும் சொல்ல மாட்டோம்..! என்று பிரியாவும் கெஞ்ச…

“இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம்..! என்று ஒரு விகார சிரிப்பு சிரித்தவன்…மகாவைப் பார்த்து…

“இதோ பார்..உங்க அக்கா எனக்கு ரொம்ப முக்கியம்..இன்னும் அவளை கைப்படாத பாலா வச்சிருக்கேன்..! வெளிய என்ன தான் சாப்பிட்டாலும்.. வீட்டு சாப்பாடு போல வருமா…?அவகிட்ட சொன்ன ..அடுத்த நிமிஷம் குடும்பத்தோட வச்சு கொளுத்திடுவேன்..! என்று மிரட்ட..அந்த மிரட்டலில் கொஞ்சம் பயந்து தான் போனாள் மகா.அவர்கள் பயம் காட்டிய விதம் அப்படி.

“இல்லை..நான் சொல்ல மாட்டேன்…! என்று மகாவும் அவனிடம நடிக்க…

“சர்வா முகத்துக்காக தான் உங்களை விடுறேன்..! எப்படி வந்திங்களோ.. அப்படியே போய்டுங்க..! என்று சொல்ல…அவளும் கலைந்த தலையுடன் வெளியே வந்தாள்.

கண்கள் முழுவதும் கலங்கியிருக்க..இப்படிப்பட்ட அயோக்கியனா தன் அக்காவின் கணவன்..? என்று மனம் வெம்பி அழுது கொண்டிருந்தது.

“என்ன சேகர் அண்ணா  இப்படி பண்ணிட்ட..! நல்ல சான்ஸ்…லட்டு பிகர்..! என்று தருண் சொல்ல…

“டேய்…இவளும் இவ அக்காவும் எனக்கான பீஸ்…உன்னை கொஞ்சம் பயம் தான் காட்ட சொன்னேன்..இப்படி பாய சொல்லலை…! என்று சிகரட்டைத் தட்ட..

“அண்ணா ..இங்க இருந்த உன்னோட செல்லைக் காணோம்..! என்று தருண் சொல்ல..அப்போது தான் கவனித்தான் சேகரும்.ஆம் அவனுடைய செல்போனை கையில் எடுத்து சென்றிருந்தாள் மகா.

“டேய்  அதுல நிறைய வீடியோ இருக்கு..! அவ தெரிஞ்சே தான் எடுத்துட்டு போயிருக்கனும்..! என்று பல்லைக் கடித்தவன்…

“பக்கத்துல தான் போயிருப்பா…செல்லை அவகிட்ட இருந்து வாங்கணும்..! என்றபடி வெளியே வந்த சேகர் அங்கு பார்க்க…அங்கு அவர்கள் இல்லை.வெளியே மெயின் ரோட்டுக்கு வந்து பார்க்க… அவர்கள் தூரத்தில் நடந்து செல்வது தெரிந்தது.

“வரும் போது கூட யாருக்கோ இன்பார்ம் பண்ணிட்டு வந்ததா சொன்னா மச்சான்.. என்றான் தருண்.

“பூல்…இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை..! கண்டிப்பா அவ அக்காகிட்ட சொல்லிட்டு தான் வந்திருப்பா..! என்று ஒரு நிமிடம் யோசித்தவன்…வேகமாக தன் காரை எடுத்தான்.பிறகு யோசித்தவன்…காரை விட்டு இறங்கி..

“டேய் தருண்..! என்ன செய்வியோ தெரியாது…உன்னோட காரை எடு…அவளை தூக்கிடு…கேஸ் ஆனா நான் பார்த்துக்கறேன்..ஆனா இதுல நான் சம்பந்த படாத மாதிரி இருக்கணும்..! என்று சொல்லிக் கொண்டிருக்க…தருணும் ஆயத்தமானான்.

சாலையின் அந்த புறம் மீனாட்சி ஆட்டோவை விட்டு இறங்குவது தெரிய..

“நீ கிளம்பு பிரியா..! அக்கா வந்துட்டா..! நான் பார்த்துக்கறேன்.. என்று மகா சொல்ல..

“இல்லடி..! நானும் இருக்கேன்..அக்காகிட்ட சொல்ல வேண்டாம்..! அப்பறம் அவன் ஏதாவது பண்ணிட்டான்னா..? என்று பிரியா பயப்பட..

“இங்க பாரு அவன் செல்லை கையோட எடுத்துட்டு வந்துட்டேன்..! இதுல நிறைய பொண்ணுங்க வீடியோ இருக்கு..அவன் டிலீட் பண்றப்போ பார்த்தேன்…இதை வச்சே அவனை ஒரு வழி பண்ணிடலாம்..நீ கிளம்பு..நான் அக்காகிட்ட சொல்லி பார்த்துக்கறேன்..! என்றாள் மகா உறுதியாக.

“மகா நானும்…! என்று அவள் இழுக்க…

‘நீ கிளம்பு பிரியா..! என்று கண்டிப்பாய் சொன்னவள்…அங்கு சென்ற ஆட்டோவை அழைத்து அவளை ஏற்றி விட…பிரியாவும் மனமே இல்லாமல் சென்றாள். அவள் ஏறிய ஆட்டோ அவளைக் கடந்து கொஞ்ச தூரம் சென்றிருக்க… கையிலிருந்த செல்லில் எதையோ நோன்டியவள்.. மீனாட்சியை கூப்பிட்டுக் கொண்டே..மகா சாலையைக் கடக்க முற்பட…வேகமாக வந்த காரினால் தூக்கி வீசப்பட்டாள் மகா.

அதற்கு முன்பாக தங்கையைப் பார்த்த மீனா…பார்த்துவாடி..! என்று கத்திக் கொண்டிருந்தாள்.ஒரு நிமிடத்தில் அவள் தூக்கி எறியப்பட்டாள்.

“மகாஆஆஆஅ..! என்று கத்தியபடி மீனா ஓடி வர…முன்னால் சென்ற ஆட்டோவில் இருந்து பிரியாவும் இறங்கி ஓடி வந்தாள்.

அதற்குள் கூட்டம் கூடி விட…தங்கையைத் தூக்கி மடியில் போட்டு அழுது கொண்டிருந்தாள் மீனாட்சி.கொஞ்ச நேரம் கழித்து..எதார்த்தமாய் கூட்டத்தை விலக்கி விட்டு வருவதைப் போல் வந்தான் சேகர்.

“மீனா..! என்று அவன் அழைக்க..

“என்னங்க..! இங்க பாருங்க..! மகா எப்படி இருக்கான்னு பாருங்க..! என்று அவள் கதறி அழ…

“உயிர் இருக்கும் போலம்மா..தூக்குங்க ஹாஸ்பிட்டலுக்கு..! என்று ஒருவர் சொல்ல…

“எங்க காரே இருக்கு..! தூக்குங்க..! என்று சேகர் சொல்ல…அவனின் காரிலேயே சென்றனர்.அதற்கு முன்னரே பிரியாவை அங்கிருந்து ஆட்கள் மூலம் அகற்றி இருந்தான் சேகர்…மிரட்டலுடன்.

அவளிடம் இருந்த செல்போனைக் காணாமல் சேகர் தேட…

“என்ன தேடுறிங்க..? என்றாள் மீனாட்சி.

“ன்காம்…ஒண்ணுமில்லை.. என்றபடி அவன் சமாளிக்க…அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டாள் மகா.எவ்வளவு முயன்றும் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.

தன்னுடைய இறுதி நிமிடத்தில் அவள் ஏதோ சொல்ல வர…சேகரால் அதைத் தடுக்க முடியவில்லை.தேவகியும்,கோபாலனும் அவனை கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்க…

“அக்கா..மா..மா…நல்ல…இல்ல..ல… என்று அவள் சொல்லுவதற்குள் அவள் உயிர் பிரிந்தது.மீனாட்சிக்கு அப்போது இருந்த மனநிலையில் எதுவும் புரியவில்லை.

குடும்பமே கதறி அழ…சேகருக்கு செல்போனைக் காணாமல் உள்ளுக்குள் ஒரு பதற்றம்.ஒருவேளை ஆக்சிடென்ட் ஆனா இடத்தில் விழுந்திருக்குமோ..! என்று நினைத்து அங்கு சென்று பார்க்க… அங்கு ஒரு செல்போன்.. நொறுங்கிப் போய் கிடந்தது..அது அவனுடையது தான்..!.. அதைப் பார்த்த பின் தான் அவனுக்கு மூச்சே வந்தது.

“இது அந்த பொண்ணோட டிரஸ்..! என்று நர்ஸ் ஒருவர் கொடுத்துவிட்டு போக..அதைப் பார்த்த தேவகி..மேலும் அழுது மயங்கினார்.

தங்கையின் உடையை மீனாட்சி தான் நடுக்கத்துடன் கையில் வாங்கினாள்.

போஸ்ட்மார்ட்டம் செய்து…அவர்கள் பிணத்தைத் தர..அவளுக்கான இறுதிக் காரியங்கள் மின் மயானத்திலேயே செய்தனர்.

அந்த ரத்தக்கறை படிஞ்ச டிரசையும்..கூடவே போட்ருங்க..! என்று அனைவரும் சொல்ல…மீனாவிற்கு அழுகை தாங்க முடியவில்லை.அந்த துணியை அவள் போடப் போக..கையில் ஏதோ நெருடியது அவளுக்கு. அதைப் பார்க்க…அவள் துப்பட்டாவின் முனியில் முடிச்சு இடப்பட்டிருந்தது.

எதற்காக அந்த முடிச்சு? என்று தெரியாமல் அதை அவிழ்க்க…அதற்குள் ஒரு மெம்மரி கார்டும்,சிம் கார்டும் இருந்தது.அதை எடுத்த மீனாட்சி… அந்த நிமிடம் யோசிக்காமல் கையில் வைத்துக் கொண்டாள்.

இந்த இரண்டும்..தன் வாழ்க்கையையும்,தங்கை வாழ்க்கையும் அழித்தது அறியாமல்.

Advertisement