விடியலில் ஒரு வெண்ணிலா
அத்தியாயம் - 11
காலையில் சீக்கிரமே கிளம்பி ஹாஸ்டலுக்கு அருகே இருந்த கோவிலுக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் ஆபீஸுக்கு கிளம்பினாள் பாரதி. ‘அன்னை குரூப் ஆப் கம்பெனீஸ்’ கட்டிடத்தின் முன் இறங்கியவள் மனம் பிரமிப்புடன் அந்தப் பெரிய கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தது.
தானும் இந்தப் பெரிய அலுவலகத்தில் ஒரு ஸ்டாப் என்ற எண்ணமே பெருமையாய் இருந்தது. புன்னகையுடன் உள்ளே...
அத்தியாயம் - 10
நல்ல உறக்கத்தில் இருந்த அஷ்டலட்சுமி சட்டென்று ஏதோ சத்தம் கேட்கவும் கண் விழித்தார். சுவரில் இருந்த கடிகாரத்தில் சின்ன முள் பனிரெண்டை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்க கண்ணைத் தேய்த்துக் கொண்டு பார்த்தார்.
அறையின் ஓரமாய் இருந்த மேஜையில் விளக்கு எரிந்து கொண்டிருக்க, மூக்குக் கண்ணாடியுடன் அதன் முன்னில் அமர்ந்திருந்த கோபாலகிருஷ்ணன், குனிந்து கையிலிருந்து...
அத்தியாயம் - 9
பாரதி ரிஷி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் அமைதியாய் இருக்கவே அவன் சிரிப்புடன் தொடர்ந்தான்.
“என்ன, பேச்சையே காணோம்... என்னடா இவன்...? அன்னைக்கு தண்ணி போட்டுட்டு போதைல புரபோஸ் பண்ணான், இன்னைக்கு தண்ணி போடாமலே புரபோஸ் பண்ணறான்னு ஷாக் ஆயிட்டீங்களா...?”
அவன் குரலில் தன்னை மீட்டுக் கொண்டவள், “ஹலோ, என்ன மிஸ்டர் இது... சாரி சொல்லறேன்னு...
“எதுக்குடி ஒரு நிமிஷம்... ஒரு சீரியல் பார்க்க நிம்மதியா விடறிங்களா, அடுத்து ஏதாச்சும் பஞ்சாயத்து கொண்டு வந்திருக்கியா என்ன... நேத்து காலைல சென்னை கிளம்பிப் போனவ இன்னைக்கு சாயந்திரம் வீட்டுக்கு வர்ற... ஹால்ல உக்கார்ந்திருக்கிற என்னை மதிச்சு ரெண்டு வார்த்தை பேசுனியா... யாரோ உக்கார்ந்திருக்கிற போல கண்டுக்காம உள்ள போற, எல்லாம் உன் மாமா...
அத்தியாயம் - 8
வான்மதியின் பெற்றோரிடம் தனக்கு வேலை கிடைத்த விவரத்தை சொல்லிவிட்டு அவள் அன்னையின் கையால் சூடான காபியைக் குடித்துவிட்டு சந்தோஷத்துடன் வீட்டுக்குக் கிளம்பினாள் பாரதி.
வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழையும்போதே அத்தை அஷ்டலட்சுமியின் குரல் வெண்கலப் பானைக்குள் ஒலிப்பது போல் கிறீச்சிட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.
“தினம் யாருகிட்டயாச்சும் பஞ்சாயத்து பண்ணறதே தலை எழுத்தாப் போயிருச்சு......
கல்பனாவிடம் விஷயத்தை சொல்ல அவளுக்கும் சந்தோஷம். மதிய உணவை அவள் வீட்டில் முடித்துக் கொண்டு இருவரும் விடைபெற்று ஊருக்குக் கிளம்பினர்.
பேருந்தில் பயணிக்கையில் பாரதியின் மனது ஒரு நிலையிலேயே இல்லாமல் குதூகலித்தது. இளையராஜாவின் குரலில், ‘நான் தேடும் செவ்வந்திப்பூவிது... ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது...’ பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அதைக் கூட ரசிக்க முடியாமல்...
அத்தியாயம் - 7
ஹாலைக் கடந்து வேகமாய் அறைக்குள் சென்ற கங்காவை அதிர்ச்சியுடன் தொடர்ந்த தோழியரின் பார்வை அந்த அறையின் முன்னில் இருந்த பெயர்ப்பலகையில் நிலைத்தது. கறுப்புப் பிளாஸ்டிக் பலகையில் தங்க நிறத்தில் பளபளத்த பெயர்ப்பலகை மிசஸ் கங்கா ஹரி, மேனேஜிங் பார்ட்னர் என்ற எழுத்துகளை கம்பீரமாய் தாங்கி நிற்க தோழியர் இருவரும் அதிர்ச்சியுடன் நோக்கிக்...
அத்தியாயம் - 6
மழை நின்றும் மிச்சமிருந்த மழைத்துளிகள் மரத்திலிருந்து தண்ணீர் முத்துகளாய் கீழே விழுந்து சிதறிக் கொண்டிருந்தது. சுகமான மாலைக்காற்று தேகம் தழுவ அந்தப் பூங்காவில் சிலர் நடை பயின்று கொண்டும், மழைக் காற்றை ரசனையோடு அனுபவித்துக் கொண்டும் இருந்தனர். பூச்செடிகளின் மேல் சில பூச்சிகள் ரீங்காரமிட்டபடி இசையமைத்துக் கொண்டிருந்தன.
பூங்காவின் வெளியே ஒரு காரில்...
அத்தியாயம்- 5
சூரியன் சட்டென்று கருமேகப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு காணாமல் போக, காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்தது போல மழை வருமா, இல்லியா என பயமுறுத்தி நின்ற மேகம் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து வேகமாய் தூறலைப் போடத் தொடங்கி இருந்தது.
அந்த உயர்தர ரெஸ்டாரண்டின் ஓரமாய் இருந்த மேஜை ஒன்றின் முன் கன்னத்தில் கை வைத்துக்...
அத்தியாயம் – 4
“பாரு, வானு... வந்துட்டிங்களா...” ஓடி வந்து தோழிகளைக் கட்டிக் கொண்டாள் கல்பனா. நிச்சயதார்த்த விழாவுக்குப் புறப்படுவதற்குத் தயாராய் நின்றவளின் கையைப் புன்னகையுடன் பற்றிக் கொள்ள “சரி, ரெண்டு பேரும் முதல்ல சாப்பிட்டு வாங்க... நீங்கதான் எனக்கு அலங்காரம் பண்ணனும், அம்மா, இவங்களை அழைச்சிட்டுப் போங்க...” என்றாள் அன்னையிடம்.
“வாங்கம்மா, காலைல நேரமா வீட்டுல...
அத்தியாயம் – 3
“அம்மா... கீரை கொண்டு வந்திருக்கேன்...”
வாசலில் வழக்கமாய் வீட்டுக்குக் கீரை கொண்டு வரும் பெண்மணி குரல் கொடுக்க, ஹாலில் அமர்ந்து காபியுடன் தினசரியைப் பருகிக் கொண்டிருந்த அஷ்டலட்சுமி உள்ளே நோக்கிக் குரல் கொடுத்தாள்.
“சக்தி, கீரை வந்திருக்கு பாரு...” எனவும் கையின் ஈரத்தை முந்தானையில் துடைத்தபடியே வந்தாள் சக்தி பிரியா.
“இதோ வாங்கறேன், அத்தை...” சொன்னவள்...
அத்தியாயம் – 2
“ரிஷி... மணி பதினொன்னு முடிஞ்சுது, போதும் வாடா... வீட்டுக்குக் கிளம்பலாம்...”
அழகான விளக்குகள் அங்கங்கே ஒளிர்ந்து இருட்டை விரட்டிக் கொண்டிருக்க குடிமகன்களின் தாகம் தீர்க்க இரவு நேரத்திலும் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்த அந்த மூன்று ஸ்டார் பாரின் மேஜை ஒன்றின் முன்பு அருகருகே அமர்ந்திருந்தனர் ரிஷியும், நண்பன் சூர்யாவும்.
ரிஷி குழறலாய் புலம்பிக் கொண்டே...
ஹாலில் காலை நீட்டி அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டே சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தார் வான்மதியின் அன்னை கௌசல்யா.
இவர்களைக் கண்டதும் புன்னகைத்து, “வாங்கடி, டைம் ஆச்சே, உங்களைக் காணமேன்னு பார்த்தேன்...” என்றார்.
“ம்ம்... கிளம்ப கொஞ்சம் லேட்டாகிருச்சு, அப்பா எங்கே மா...” என்றாள் வான்மதி.
“கடைக்குப் போயி பழம் வாங்கிட்டு வரேன்னு போனார், இப்ப வந்திருவார்... நீ...
அத்தியாயம் – 1
வெற்று வெள்ளைக்
காகிதம் நான்... அதில்
உன்னை வரைந்து
வண்ணமாக்கிய
வண்ணத்தூரிகை நீ...
“பாரதி, என்ன இருந்தாலும் நீ கவிதாவை எல்லார் முன்னாடியும் அப்படி அடிச்சது தப்புதான்...” தோழியைக் கடிந்து கொண்டே காலியாய் இருந்த மேஜையின் முன்னிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள் வான்மதி. மதியம் முடிந்து மாலையை நெருங்கிக் கொண்டிருந்த நேரமாதலால் அந்த ரெஸ்டாரண்டில் கூட்டம் குறைவாகவே...