Wednesday, November 11, 2026

    முழு நிலவு

    # அத்தியாயம் 5 ஒரு மாதம் கடந்திருந்தது. சிவமும் சாந்தியும் இல்லாத அந்த வீடு, முன்பிருந்த உயிரோட்டத்தை இழந்திருந்தது. ராம் முன்னின்று இருவரின் இறுதிச் சடங்குகளையும் முறையாக செய்து முடித்திருந்தான். ஆனால் அந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தது தீபிகாதான். ஒரே நேரத்தில் தாத்தாவையும் பாட்டியையும் இழந்திருந்தாள். எத்தனை பேர் அவளைச் சுற்றி இருந்தாலும், அந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப...
    அத்தியாயம் 8 இரு வீட்டாரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தபோது, இரவு உணவும் முடிந்திருந்தது. அவர்கள் கிளம்பத் தயாரான நேரம் இரவு ஒன்பது மணியைத் தாண்டியிருந்தது. அனைவரும் பேசிக் கொண்டிருந்தாலும், சிதம்பரத்தின் மனதில் மட்டும் ஒரு வருத்தம் அழுத்தமாக இருந்தது. தன் பேத்திக்கு இப்படி ஒரு திருமணம் நடக்கிறது. அதுவும் மற்ற இரண்டு ஜோடிகளோடு சேர்த்து... அதிலும் தான் அருகில் இல்லாமல். அவரால்...
    அத்தியாயம் 7 கல்யாண வீடு களையிழந்து நின்றது. சில மணி நேரங்களுக்கு முன்பு வரை சிரிப்பும், பேச்சும், உறவினர்களின் நடமாட்டமும் நிறைந்திருந்த அந்த வீடு, இப்போது ஏதோ ஒன்று உடைந்து போனதைப் போல அமைதியாக இருந்தது. சுபாவுடன் கோபமாக கிளம்பிய தீபிகா, சுபாவின் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டாள். கார்த்திகா மட்டும் தளர்ந்து போய் ஒரு பக்கமாக அமர்ந்திருந்தார். அருகில் சரணும்...
    அத்தியாயம் — 9 சரண், கார்த்தியிடம் இன்று தென்காசியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டான். “ரிசார்ட் நமக்கு எப்போ கிடைக்கும்? இங்கிருந்து அங்கே போக எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேட்டான். அதற்கு போஸ், “சார், ரிசார்ட்டில் இப்போ இருக்கிற கெஸ்ட்டை காலி பண்ணிக் கொடுக்க ஒன்பது மணி வரைக்கும் டைம் கேட்டிருக்காங்க. அதோட நாம இங்கிருந்தும் ஆறு...
    அத்தியாயம் 10 காலையில் கார்த்திகாவுக்கும் தகவல் சென்றது. பின் ஆகாஷ் பாட்டி எடுத்து கூறி அனைவரும் தூத்துக்குடிக்கு தனி விமானம் மூலம் வந்து கொண்டிருந்தனர். இந்த விஷயம் சரணுக்குத் தெரிந்திருந்தது. அவன் கரணிடம், “கொஞ்சம் வேலை இருக்கு. தீபிகா வந்தவுடன் அவளை கூட்டிட்டு வந்து இந்த வேலையை முடிச்சிடு. இருபது நிமிஷம் ஆகும்,” என்றான். பின்னர் ஆகாஷைப் பார்த்து, “மாப்பிள்ளை, வாங்க. நாம தனியா...
    ஆனால் முகத்தில் இருந்த சந்தோஷத்தை மறைக்கவும் முடியவில்லை. தீபிகா சைகையில், “நாங்க தென்காசி போறோம். அருவிக்கு.” என்றாள். ஆகாஷின் கண்கள் இன்னும் பிரகாசித்தன. “நானும் வரட்டுமா?” தீபிகா அவனை முறைத்தாள். சுபா உடனே இடைமறித்தாள். “முதல்ல சாப்பிடலாம். தீபிகா இன்னும் சாப்பிடவே இல்லை. டிரைவர் இவ்வளவு தூரம் தனியா ஓட்டிட்டு வந்திருக்கார்.” அவர்கள் அருகிலிருந்த புதிய ஹோட்டலுக்குச் சென்றனர். சுபா மூன்று அறைகளின் சாவிகளை வாங்கி வந்தாள். ஒன்றை ஆகாஷிடம்...
    “அவங்களுக்கும் தான். இவ்வளவு தூரம் வந்து இப்படி சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கிறதா? அவங்களையும் வரச் சொல்லலாம்.” தீபிகாவின் முகத்தில் சிறிய கவலை தெரிந்தது. கார்த்திகா உடனே, “அவங்க வந்தா உன் அப்பா, சித்தப்பா எல்லாரும் வரணும்டா. அது உனக்குப் பிடிக்குமா ,” என்றாள். தீபிகா ஆகாஷைப் பார்த்தாள். ஆகாஷ் அமைதியாக, “எனக்கு எல்லாம் தெரியும். எல்லோரும் இருந்தா நல்லதுதான். எங்க வீட்டுல கொல்கத்தாவுல...
    error: Content is protected !!