முழு நிலவு
அத்தியாயம் 1
சென்னையிலிருந்து தென்காசி நோக்கி அந்தக் கார் நள்ளிரவை நோக்கி பறந்து கொண்டிருந்தது.
நீண்ட தூரப் பயணம், சாலையின் இருபுறமும் இருள் மட்டுமே.
காருக்குள் மெல்லிய குளிர்சாதனக் காற்றின் சத்தத்தைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லை, ஸ்டியரிங்கில் இருந்தவன் சாதாரண டிரைவர் அல்ல. அந்தக் குடும்பத்திற்காக பல வருடங்களாக உயிரையும் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கைக்குரிய...
அத்தியாயம் 4
சிவம் உட்கார்ந்தபடியே சிறிது நேரம் எதுவும் பேசவில்லை..
சாந்தி அவரை நேராகப் பார்த்தார்.
“நமக்கு வயசாகிக்கிட்டு இருக்கு சிவம். நம்ம காலத்துக்கு அப்புறம் அவளுக்கு யார் இருப்பாங்கன்னு நாம யோசிக்க வேண்டிய நேரம் இது.”
சிறிது நேரம் அமைதியாக இருந்த சாந்தி மீண்டும் பேசத் தொடங்கினார்.
“அமுதா இறந்தப்போ யாரும் வரல. இப்போ எல்லோரும் வருவாங்க. உள்ளே நுழைவாங்க....
அத்தியாயம் 2
கோபத்தின் பின்னால் இருந்த பாசம்
காலங்கள் நகர்ந்தன.
தீபிகாவுக்கு பதின்மூன்று வயது.
அவள் வயதுக்குரிய குழந்தைகள் புத்தகங்களோடும் விளையாட்டுகளோடும் நேரத்தை கழித்துக் கொண்டிருந்தபோது, தீபிகாவின் உலகம் முற்றிலும் வேறாக இருந்தது.
கணினித் திரைதான் அவளுடைய உலகம்.
ஒரு நாள், அவள் வழக்கம்போல ஒரு கணினி சென்டரில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாள். அங்கே அவள் உருவாக்கிய ஒரு சிறிய coding program,...
அத்தியாயம் 3 — ஒரு அழைப்பு
அதுவரை சிதம்பரம் யாரிடமும் தீபிகாவைப் பற்றி வெளிப்படையாகப் பேசியதில்லை.
அவளைப் பற்றி விசாரித்ததும் இல்லை.
ஆனால் குடும்பத்தில் சில சமயங்களில் மகன்கள் செய்யும் செயல்கள் பிரச்சினையாக மாறும் நேரங்களில், தீபிகாவைப் பற்றி அவர் மறந்துவிட்டதாகத் தோன்றினாலும், உண்மையில் அவர் அவளை ஒருபோதும் மறந்ததில்லை என்பதை கார்த்திகா புரிந்துகொண்டாள்.
அதிலும் ராம் தினமும் அவளைப்...
ஆனால் முகத்தில் இருந்த சந்தோஷத்தை மறைக்கவும் முடியவில்லை.
தீபிகா சைகையில்,
“நாங்க தென்காசி போறோம். அருவிக்கு.”
என்றாள்.
ஆகாஷின் கண்கள் இன்னும் பிரகாசித்தன.
“நானும் வரட்டுமா?”
தீபிகா அவனை முறைத்தாள்.
சுபா உடனே இடைமறித்தாள்.
“முதல்ல சாப்பிடலாம். தீபிகா இன்னும் சாப்பிடவே இல்லை. டிரைவர் இவ்வளவு தூரம் தனியா ஓட்டிட்டு வந்திருக்கார்.”
அவர்கள் அருகிலிருந்த புதிய ஹோட்டலுக்குச் சென்றனர்.
சுபா மூன்று அறைகளின் சாவிகளை வாங்கி வந்தாள்.
ஒன்றை ஆகாஷிடம்...
அத்தியாயம் 10
காலையில் கார்த்திகாவுக்கும் தகவல் சென்றது.
பின் ஆகாஷ் பாட்டி எடுத்து கூறி அனைவரும் தூத்துக்குடிக்கு தனி விமானம் மூலம் வந்து கொண்டிருந்தனர்.
இந்த விஷயம் சரணுக்குத் தெரிந்திருந்தது.
அவன் கரணிடம்,
“கொஞ்சம் வேலை இருக்கு. தீபிகா வந்தவுடன் அவளை கூட்டிட்டு வந்து இந்த வேலையை முடிச்சிடு. இருபது நிமிஷம் ஆகும்,” என்றான்.
பின்னர் ஆகாஷைப் பார்த்து,
“மாப்பிள்ளை, வாங்க. நாம தனியா...
“அவங்களுக்கும் தான். இவ்வளவு தூரம் வந்து இப்படி சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கிறதா? அவங்களையும் வரச் சொல்லலாம்.”
தீபிகாவின் முகத்தில் சிறிய கவலை தெரிந்தது.
கார்த்திகா உடனே,
“அவங்க வந்தா உன் அப்பா, சித்தப்பா எல்லாரும் வரணும்டா. அது உனக்குப் பிடிக்குமா ,” என்றாள்.
தீபிகா ஆகாஷைப் பார்த்தாள்.
ஆகாஷ் அமைதியாக,
“எனக்கு எல்லாம் தெரியும். எல்லோரும் இருந்தா நல்லதுதான். எங்க வீட்டுல கொல்கத்தாவுல...