“அவங்களுக்கும் தான். இவ்வளவு தூரம் வந்து இப்படி சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கிறதா? அவங்களையும் வரச் சொல்லலாம்.”
தீபிகாவின் முகத்தில் சிறிய கவலை தெரிந்தது.
கார்த்திகா உடனே,
“அவங்க வந்தா உன் அப்பா, சித்தப்பா எல்லாரும் வரணும்டா. அது உனக்குப் பிடிக்குமா ,” என்றாள்.
தீபிகா ஆகாஷைப் பார்த்தாள்.
ஆகாஷ் அமைதியாக,
“எனக்கு எல்லாம் தெரியும். எல்லோரும் இருந்தா நல்லதுதான். எங்க வீட்டுல கொல்கத்தாவுல ஒரு சின்ன வரவேற்பு மாதிரி பண்ணிக்கலாம். இங்கே அப்பா, அம்மா வர முடியாத காரணத்தையும் சொன்னான் ,” என்றான்.
தீபிகா சில நொடிகள் யோசித்தாள்.
தன் அப்பாவும் அம்மாவும் யாருக்கும் தெரியாமல் செய்த திருமணம் நீடிக்கவில்லை.
தனக்கும் அப்படியொரு வாழ்க்கை வேண்டாம்.
ஆகாஷுடன் நீண்ட நாள் வாழ வேண்டும்.
அவனைப் பார்த்த நாள் முதலே அவன் அவளுடைய மனதைப் புரட்டிப் போட்டிருந்தான்.
இந்த இரண்டு நாட்களில் அவன் அருகில் இருந்தபோது தன் மனம் எவ்வளவு அவனைத் தேடுகிறது என்பதும் அவளுக்குப் புரிந்திருந்தது.
திருமணம், குழந்தை—இவை வேண்டாம் என்று பல ஆண்டுகளாக மனதுக்குள் வைத்திருந்த பயத்தையும் அவன் மெதுவாக உடைத்துக் கொண்டிருந்தான்.
பயம் இன்னும் அடிமனதில் இருந்தாலும், ஆகாஷை விட்டுவிட அவளால் முடியவில்லை.
அவள் உறுதியான முடிவை எடுத்தாள்.
கார்த்திகாவிடம் சைகையில் தெரிவித்தாள்.
கார்த்திகா அவளது தலையை வருடி,
“நீயே உன் தாத்தா பாட்டியைக் கூப்பிடு செல்லம்,” என்றாள்.
சரண் உடனே வீடியோ அழைப்பு விடுத்தான்.
அந்த நேரத்தில் சிதம்பரம் கூடத்தில் உமா, தமயந்தி ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். காலையிலேயே மருமகளை அழைத்து சமாதானப்படுத்தி அழைத்து வந்திருந்தார்.
அழைப்பு வந்ததும் சரண் எடுத்தான்.
திரையில் தீபிகா, ஆகாஷுடன் அருகருகே அமர்ந்து தாத்தாவைப் பார்த்து ஜோடியாகக் கைகூப்பினாள்.
“உங்க பேத்தி யாரும் இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டாளாம்.”
பின்னர் தமயந்தி, செந்தில், ராம், வாசுகி ஆகியோர் இருக்கிறார்களா என்று கேட்டாள்.
அவர்கள் திரையில் வந்தனர்.
தீபிகா அவர்களை ஜோடியாகக் கைகூப்பி வணங்கினாள்.
அவர்களும் மனதார ஆசீர்வதித்தனர்.
ராமின் முகத்தில் அளவில்லாத சந்தோஷம்.
இதுவரை வாசுகியுடன் முகம் கொடுத்து பேசாமல் இருந்த தீபிகா, இன்று சிரித்த முகத்துடன் அவர்களை ஏற்றுக்கொண்டிருந்தாள்.
சரண் இங்கே தாங்கள் தங்கியிருக்கும் இடத்தையும், மறுநாள் வனப்பகுதியில் இருக்கும் அருவிக்குச் செல்லப் போவதையும் கூறினான்.
“நாளைக்கே கல்யாணம் ? இன்று காட்டிலுள்ள அருவிக்கு ?” என்று உமா பதறினாள்.
அவள் சொல்லும் முன் வாசுகி, “அத்தை…” என்று கையைப் பிடித்தாள்.
சிதம்பரம் அனைத்தையும் புரிந்துகொண்டார்.
“பாதுகாப்பை நீ பார்த்துக்கோ. நாங்க இரவு வந்து விடுறோம்,” என்றார்.
பின்னர் அருளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.
“பிரம்மாண்டமா பண்ண வேண்டாம். IPL இப்போதான் தொடக்கம். இதைப் பற்றி மீடியா சல்லடை போடுது. இன்னும் நாம எடுத்திருக்கிற விஷயம் வெளியே தெரியாது. நீ இதை வெளியே விடாம பார்த்துக்கோ. நாங்க வர்றது யாருக்கும் தெரியக்கூடாது.”
அவர் மகன்களையும் பேரன்களையும் பார்த்தார்.
*
நீலிமா தீபிகாவிடம் வந்து,
“வாழ்த்துக்கள் அண்ணி,” என்று கைகுலுக்கி அணைத்துக்கொண்டாள் அவள் ஒரே வயது பெயர் சொல்லி அழை என்று சொல்ல சரி என்றவள்.
அவளுக்குப் பிறகு தோழிகளும் தீபிகாவை அணைத்தனர்.
கார்த்திகாவையும் அவர்களுடன் அருவிக்கு வரச் சொன்னார்கள்.
“நான் கல்யாண ஏற்பாடுகளைப் பார்க்கிறேன். நீ பத்திரமா போயிட்டு வா. அண்ணன்கள் சொல்றதைக் கேளு,” என்ற கார்த்திகா, கணவருடன் சென்றுவிட்டாள்.
அவர்கள் சென்றதும் போஸ் டீம் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாகச் செய்துவிட்டது.
*
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம்.
மலை ஏறிப் பழக்கம் இல்லாததால் தீபிகா ஆரம்பத்திலேயே கஷ்டப்படத் தொடங்கினாள்.
ஆனால் சரண், கரண் இருவரும் பலமுறை மலை ஏறியவர்கள் என்பதால், தங்கள் துணைகளை கிண்டல் செய்தும், சீண்டியும் தனித்தனியாக முன்னேறினர்.
சுபா தன் கணவருடன், ஐஸ்வர்யா, நந்தினி ஆகியோரும் முன்னதாகவே வந்து சேர்ந்திருந்தனர்.
அவர்கள் அருவியில் குளித்துக்கொண்டிருந்தனர்.
வெகு நேரம் கழித்துதான் தீபிகா, ஆகாஷ் மற்றும் மற்றவர்கள் அருவி அருகே வந்தனர்.
அருவியைக் கண்டதும் தீபிகா குழந்தையைப் போல ஆர்ப்பரித்தாள்.
சுற்றிலும் மலை.
அடர்ந்த காடு.
அதன் நடுவே ஆர்ப்பரித்துக்கொண்டு விழும் அருவி.
அந்த இயற்கை அவளை முழுவதுமாக ஈர்த்தது.
ஆகாஷிடம் ஒவ்வொன்றாகச் சைகையில் சொல்லிக்கொண்டே குழந்தையாக மாறினாள்.
நீலிமா அவர்களுக்கு தனிமை கொடுக்க அருவி நோக்கிச் சென்றுவிட்டாள்.
சிறிது நேரத்தில் அனைவரும் அருவியில் குளித்துவிட்டு வந்தனர்.
மதிய உணவு அங்கேயே பரிமாறப்பட்டது.
சாப்பிட்ட பிறகு அருகில் சிறிய குளம்போல் தண்ணீர் தேங்கி இருந்த இடத்தில், நீச்சல் தெரிந்தவர்கள் மட்டும் இறங்கினர்.
தீபிகா தயக்கமே இல்லாமல் குதித்தாள்.
அவளுக்கு நன்றாக நீந்தத் தெரியும்.
ஆகாஷும் அவளுடன் இறங்கினான்.
மற்றவர்களுக்கு அவர்களுக்குள் சிறிது தனிமை கிடைக்கட்டும் என்று சரண், கரண் இருவரும் தள்ளி, ஆழம் குறைந்த இடத்தில் தங்கள் துணைகளுடன் நீந்தினர்.
ஜாஸ்மினும் அணுவும் அவர்களுடன் சேர்ந்தனர்.
கார்த்தி, நீலிமா, சுபா ஆகியோர் அருகில் அமர்ந்து தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
லோக்கல் ரேஞ்சரும் சிறிய வலையில் மீன் பிடிக்க ஏற்பாடு செய்திருந்தார்.
கிடைத்த மீன்களை அங்கேயே சுட்டுச் சமைக்க ஏற்பாடுகள் நடந்தன.
அந்த நேரத்தில் நந்தினி, ஐஸ்வர்யாவிடம் மெதுவாக,
“அண்ணனுக்கு போன் பண்ண முடியல. கொஞ்சம் போட்டோஸ் எடுத்திருக்கேன். அனுப்ப முடியல. இங்கே நடக்கிற கூத்தை எல்லாம் சொல்லணும். இவ்வளவு பணம் இருக்குன்னு இவங்க அடிக்கிற கூத்து…” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
அதை கேட்ட சுபா,
“என்ன சொன்ன?” என்று திரும்பிப் பார்த்தாள்.
ஐஸ்வர்யா பதறினாள்.
“அண்ணி…”
சுபா தன் கைப்பையில் இருந்த பிஸ்டல் எடுத்துக் காட்டினாள்.
இருவரும் அலறப் போனார்கள்.
“சத்தம் போடாதீங்க. எனக்காவது குறி பார்த்து சுடத் தெரியாது. ஆனா ஜாஸ்மினுக்கு நல்லா சுடத் தெரியும்,” என்று சுபா, அருகில் இருந்த ஜாஸ்மினைக் காட்டினாள்.
இருவரும் அமைதியாகிவிட்டனர்.
“என்ன பிளான்?” என்று ஐஸ்வர்யா கேட்டாள்.
ஐஸ்வர்யா நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டாள்.
பின்னர் ஐஸ்வர்யாவின் தலையில் மெதுவாகத் தட்டினாள்.
“உங்களுக்கு அறிவே இல்லையா? ஆகாஷ் என் சித்தப்பா பையன். அவன் கல்யாணம் இங்கே நடக்குது. அது சரி. ஆனா ஆகாஷை அடிக்க ஆள், நந்தினியை பார்த்து உன் அண்ணன், இந்தப் போட்டோஸ்… இதை வைத்து என்ன செய்யப் போறீங்க?”
அவள் நந்தினியின் கையில் இருந்த போனை வாங்கிப் பார்த்தாள்.
அதில் தீபிகா, ஆகாஷ் ஆகியோரின் புகைப்படங்கள் இருந்தன.
“இது நல்ல போட்டோஸ். ஆனா இதை வைத்து யாரை அவமானப்படுத்தப் போற?”
சுபா கடுமையாகப் பார்த்தாள்.
“இந்த ஐடியா உங்க அண்ணன் கொடுத்தது. அதனால நீ வந்தது சரி. ஆனா இந்தப் போட்டோ வைச்சு யாரை அவமானப்படுத்தப் போறீங்க?
இங்கே இருக்கிறவர்கள் யாருன்னு தெரியுமா? எல்லாரும் நம்ம குடும்பம்தான்.”
ஐஸ்வர்யாவை பார்த்தாள்.
“உன் அண்ணன் வேலை என்ன ஆகும்ன்னு நினைச்சியா?”
“அது வேற கம்பெனி…” என்று அவள் சொல்ல வர,
“உன் மூளை!” என்று சுபா கோபமாகச் சொன்னாள்.
“என்று நீ அசிங்கமா திட்டிய அந்தக் கம்பெனியின் முதலாளி குடும்பமே இங்கேதான் இருக்கு.”
அந்த நேரத்தில் போஸ் அருகில் வந்தார்.
“மேடம்… அந்த போன்,” என்று மெதுவாகக் கேட்டார்.
சுபா போனை அவரிடம் கொடுத்தாள்.
அதில் இருந்த புகைப்படங்களையும், தகவல்களையும் பார்த்த போஸ் அனைத்தையும் அழித்தார்.
பின்னர் போனை உடைத்துவிட்டு, அதைத் தன்னிடமே வைத்துக்கொண்டார்.
“வேற போன் கிடைக்கும்,” என்றார்.
சுபா நந்தினியைப் பார்த்தாள்.
“இங்கே நடக்கிற உரையாடல் எல்லாமே கண்காணிக்கப்படுது. இது சரண் சாருக்குத் தெரியாது. பெரியவருக்கும், அருள் சாருக்கும் தெரியும்.”
நந்தினி இன்னும் தன்னுடைய பெருமையை விடவில்லை.
“இது எங்க ஊரு. எங்க அண்ணன் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா?” என்றாள்.
போஸ் சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
சுபா நந்தினியைப் பார்த்து,
“இவ்வளவு சொல்லியும் அறிவு வரல. உனக்கும் உங்க குடும்பத்துக்கும் பட்டாதான் தெரியும்,” என்றாள்.
பின்னர் ஐஸ்வர்யாவிடம்,
“இந்த லூசுக்குப் புரிய வை.”
ஐஸ்வர்யா தன் அண்ணன் இருக்கும் நிறுவனமே இவர்களுடைய குடும்பத்தின் நிறுவன வட்டத்துக்குள் இருப்பதைப் புரிந்துகொண்டதும் அதிர்ந்துபோனாள்.
நந்தினியிடம் கோபமாக,
“எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லு. இல்லன்னா நம்ம யாருமே இங்க இருக்க முடியாது,” என்றாள்.
சுபா அருகில் வந்து மெதுவாக,
“இங்க பாருங்க. இங்கே வந்தது என்ஜாய் பண்ணத்தான். நடந்ததை நினைச்சுக்கிட்டு இருக்காதீங்க. அப்படியே இருங்க,” என்றாள்.
அந்த நேரத்தில் அவளுடைய கணவன் அருகில் வந்து, பிடித்த மீனை அவளிடம் கொடுத்தான்.
சுபா அதை வாங்கி அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தாள்.
மாலை நேரம் மெதுவாக இறங்கத் தொடங்கியது.
மலைக்காற்று குளிர்ந்தது.
அருவியின் சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.
அனைவரும் மலையிலிருந்து கீழே இறங்கத் தயாரானார்கள்.
தீபிகா, ஆகாஷின் அருகில் நடந்துகொண்டிருந்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் நீச்சலில் முந்த அருவியில் குளிக்க என்று யாரையும் கன்டுகொள்ளாமல் ஒரு ஆட்டம் அடியிருக்க நிலமாவுக்கு சிரிப்பு பின்னே சரண் கரண் அவ்வப்போது இவர்களை கண்டு ஆகாஷ் புறம் பார்த்து முறைக்க அவன் சட்டை செய்யவில்லை
கார்த்தியின் நிலை பரிதாபம் இவர்கள் அவனை ஏன்டா உன் தம்பி ரொமான்ஸ் பன்னுறதுல எங்களை விட அதிகம் பண்ணுறான் என்க ஜாஸ்மின் அணு உண்மையை ஒத்துக்கிட்டீங்க என்று அவர்களை சிரித்து ஒரு வழியாக்கி விட்டிருந்தனர் இதில் கார்த்தியின் மனைவியும் இணைந்து விட அமர்க்களம் ஆகி இருந்தது.