அத்தியாயம் 6

திருமண நாள்.

உறவினர்களால் வீடு நிரம்பியிருந்தது.

தீபிகா எளிமையான அனார்கலி சுடிதாரில் இருந்தாள்.

அவளருகில் சுபா அமர்ந்திருந்தாள்.

உமா முகம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தார்.

ராம் இப்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் நிர்வாகியாகவும், கொல்கத்தா IPL அணியின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தான்.

அந்த நேரத்தில் அருள் கொண்டு வந்த ஒரு புதிய விஷயம் பற்றி தீபிகா கார்த்திகாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

தமயந்தியின் குடும்பம் புதியதாக ஒரு IPL அணியை ஏலம் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.

“ராம் கிரிக்கெட்டை விடாமல் இருந்திருந்தா, நாமும் இப்போ ஒரு அணியை எடுப்பது பற்றி யோசிச்சிருக்கலாம்,” என்றார் கார்த்திகா.

“மாமாவும் ராமுக்கு விபத்து நடந்ததிலிருந்து கிரிக்கெட்டில் அதிகமாக ஈடுபடவில்லை. இப்போ நம்ம முழுக் கவனமும் தொழிலில்தானே.”

தீபிகா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் ஜாஸ்மினிடம் விஷயத்தை விசாரித்தாள்.

ஜாஸ்மின் உடனே சரணைத் தொடர்பு கொண்டாள்.

அடுத்த நாளே முழு விவரங்களுடன் சரண் வந்து நின்றான்.

—

காலையிலேயே வீட்டுக்கு வந்த சரணைப் பார்த்த உமா ஆச்சரியப்பட்டார்.

“என்னடா இவ்வளவு காலையில?”

விஷயத்தைச் சொன்னவுடன், உமா துள்ளிக்குதித்தபடி தீபிகாவைப் பார்க்கச் சென்றார்.

அவருடன் சரணும் சென்றான்.

செய்தி கேட்டு அருளும் பதறியபடி வந்தார்.

“இவ்வளவு காலையில?”

கார்த்திகா கேட்டார்.

விஷயத்தைச் சொன்னதும் அருள் சில நொடிகள் பேசாமல் நின்றார்.

“நேத்துதான் இதைப் பற்றி கார்த்திகாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். தீபிகா இங்கே தனியா இருந்தா…”

அவரால் நம்பவே முடியவில்லை.

ராம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எப்போதும் விலகி நிற்கும் தீபிகா, இப்போது IPL அணியை எடுக்க நினைக்கிறாளா?

அதுவும் ராம் இல்லாமல்?

சிறியவர்கள் யாரும் விளையாட்டு நிர்வாகத்தில் அதிக ஈடுபாடு காட்டவில்லை.

IPL என்பது சாதாரண விஷயம் அல்ல.

அதற்குள் ஜாஸ்மினும் வந்து விட்டாள்.

தீபிகா இன்னும் வரவில்லை.

“எங்கே தீபிகா?” என்று உமா கேட்டார்.

“பாட்டி… அமெரிக்கன் ப்ராஜெக்ட் இரவு ஐந்து மணிக்குத்தான் முடிஞ்சுது. இன்னும் தூங்கிட்டு இருப்பா.”

உமாவின் முகம் சற்றுத் தளர்ந்தது.

அந்த நேரத்தில் தீபிகா வெளியில் வந்தாள்.

சரணையும் பாட்டியையும் பார்த்தாள்.

சரண் கொண்டு வந்த தகவல்களை அவளிடம் கொடுத்தான்.

அதைப் பார்த்த தீபிகா நேராக அருளிடம் கொடுத்தாள்.

பின்னர் சைகையில்,

“நீங்க சொல்லுங்க,” என்றாள்.

அருள் சரணைப் பார்த்தார்.

“குறைந்த நேரத்துல நல்லா ரெடி பண்ணியிருக்க.”

அவர் கையில் இருந்த தகவல்களைப் பார்த்தார்.

“இதுல மூணு விஷயம் இருக்கு.”

முதல் விஷயம் பணம்.

“இதுல மென்பொருள் நிறுவனத்தின் மூலம் நம்ம பங்கு பெறலாம். பிறகு வேல்ஸ் குழுமத்துடன் இணைத்துக்கலாம்.”

தீபிகா அமைதியாகக் கேட்டாள்.

“ஆனா வெளியுலகத்துக்கு நம்ம கம்பெனி பின்னாடி இருக்கிறது தெரிஞ்சா, மீடியா வெளிச்சம் நம்ம மேல அதிகமாகும்.”

அருள் அடுத்த விஷயத்தைச் சொன்னார்.

“இரண்டாவது, உன் சித்தி குடும்பமும் இதில் முக்கியமா இருக்காங்க. அவங்கள பகைக்கிற மாதிரி ஆகிடும். ஏற்கனவே என் பிள்ளைகள் கல்யாண விஷயத்தில கொஞ்சம் உறவு முறையில் விரிசல் இருக்கு.”

“மூன்றாவது, நாம ஏற்கனவே ஒரு பெரிய புதிய தொழிலில் இறங்கியிருக்கோம். சென்னையில் பெட்ரோ கெமிக்கல் கம்பெனி அமைக்கிற வேலை மும்முரமா நடக்குது. செந்திலும் தீபக்கும் அதைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க.”

தீபிகா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

பின்னர் அருளை நோக்கிப் பார்த்தாள்.

“IPL அணியை வாங்குற பணத்துல எழுபது சதவீதம் மென்பொருள் நிறுவனத்தின் புதிதாக முடித்த ப்ராஜெக்ட்டோட லாபத்திலிருந்து வரும்.”

அருள் அவளைப் பார்த்தார்.

“மீதியை வேல்ஸ் குழுமமும் AR-மும் பார்த்துக்கலாம்.”

சிறிது இடைவெளிக்குப் பிறகு அவள் தொடர்ந்தாள்.

“யார் நிர்வாகம் பண்ணுறது, குடும்பத்துல யார் என்ன செய்றாங்கன்னு நாம தலையிட வேண்டாம். அது பாட்டி பொறுப்பு.”

அவ்வளவு சொல்லிவிட்டு அவள் எழுந்தாள்.

அந்த நேரத்தில் உமா அவளை கட்டிப்பிடித்துக் கொண்டார்.

அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

தீபிகா மறைமுகமாக இருந்தாலும் ராமை மீண்டும் கிரிக்கெட் நிர்வாகத்துக்குள் கொண்டு வருவதற்கு தனது முழு சம்மதத்தையும் தெரிவித்திருந்தாள்.

அனைவருக்கும் அது மகிழ்ச்சியாக இருந்தது.

சிறிது நேரம் பேசிய பிறகு தீபிகா ஓய்வெடுக்கச் சென்றாள்.

அருள் உமாவைப் பார்த்தார்.

“உங்க பேத்தி இப்படி ஒரு முடிவு எடுப்பாள்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.”

உமா உடனே அனைவரையும் அழைத்துக் கொண்டு சிதம்பரத்திடம் சென்றார்.

சிதம்பரம் அவர்களைப் பார்த்தார்.

அவருக்கு ஒரு கேள்வி மட்டும்.

“அப்போ உன் பேத்தி கல்யாணத்துக்கும் இந்த வீட்டுக்கும் வர்றதுக்குப் பதிலா, இதைத்தான் தன் வாழ்க்கையா எடுத்துக்கிட்டாளா?”
அவர் இந்த கல்யாணத்துக்கு இரு நிபந்தனை விதித்தார்

அவள் திருமணம் ஒன்று அடுத்தது முழுமையாக இந்தவீட்டில் பேதியை இங்கே வர வேண்டும்.

உமா கணவரை நோக்கி கண்ணீருடன் பார்த்தார்.

“இல்லைங்க… அவளை இங்கே கொண்டு வரணும்னு நாம நினைக்கிறோம். ஆனா அவள் உள்ளே கொண்டு வர்றது அவள் அப்பாவை.”

சிதம்பரம் அமைதியாக இருந்தார்.

“நம்ம மகன் இவ்வளவு நாள் வனவாசம் போதும். அவன் ஏற்கனவே நிறைய இழந்துட்டான்.”

கார்த்திகா மெதுவாக சிதம்பரத்திடம் பேசினார்.

“மாமா… தீபிகாவை அதிகமா நெருக்கினா அது வெறுப்பா மாறிடும். கொஞ்சம் அவள் வழியிலேயே போகலாம்.”

சிதம்பரம் சில நொடிகள் யோசித்தார்.

பின்னர் திடீரென்று,

“அடுத்த மாதம் நல்ல நாள்ல பேரன்களோட கல்யாணம் நடக்கட்டும்,” என்றார்.

அவர் சொன்ன நாள்—

IPL ஏலம் நடைபெறும் நாளாக இருந்தது.

அருள் தயங்கினார்.

உமா உடனே சொன்னார்.

“ராம், வாசுகி, தமயந்தி, அவங்க பிள்ளைகள் தீபக், கார்த்திக் எல்லாரும் ஏலத்துக்கு போகட்டும்.”

அருளுக்கும் அது சரியாகத் தோன்றியது.

தமயந்தியின் குடும்பத்தினருக்கு உறவுமுறையில் ஈபிள் மீது தான் முழு கவனம் இருக்கும் .

மேலும் IPL ஏலம் முடிந்த பிறகு மீடியாவின் கவனம் குடும்பத்தின் மீது அதிகமாகும்.

அதற்கு முன்பே திருமணம் முடிந்துவிட்டால் பல விஷயங்கள் எளிதாகிவிடும்.

செந்திலும் அவர் மனைவி தமயந்தி முழு மனதுடன் ஒப்பு கொண்டனர் அவர் மகன்கள் முன்னிலை படுத்தப்படுகின்றனர் அதில் ஒரு சந்தோசம்.

—

தீபிகாதான் ஜாஸ்மின்–அணுவுக்கான நாத்தனார் முடிச்சைப் போட்டாள்.

தமயந்தியின் குடும்பத்தில் அவளது அம்மாவும் அண்ணன் மனைவியும் மட்டுமே வந்திருந்தனர்.

அவர்களுக்கு இன்னும் IPL விஷயம் தெரியவில்லை.

தீபிகாவைப் பார்த்ததும் அந்தப் முதியவர் ,

“என்ன அழகு! இவளுக்கு பேச முடிஞ்சிருந்தா… நம்ம வீட்டு மருமகளா இவளை கொண்டு வந்திருப்போம்,” என்றார்.

அவரது மருமகள் உடனே,

“அத்தை, இப்ப கொஞ்சம் வசதி இருந்தாலும் நம்ம அளவுக்கு…”

“அப்படின்னா தீபக் உன் மருமகனா வேண்டாமா?”

அதற்கு மேல் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.

தீபிகா அப்போது அனார்கலி சுடிதாரில்தான் இருந்தாள்.

சுபா அவள் காதில் ஏதோ சொல்ல, சிறிது நேரத்தில் அவள் பட்டுச் சேலையில் வந்தாள்.

சிறிய அளவு வைரமும் தங்கமும் மட்டும்.

அவள் நடந்து வந்த விதமே தேவதை போல இருந்தது.

கார்த்திகா அவளைப் பார்த்து சில நொடிகள் அசந்து நின்றார்.

—

அப்போது தமயந்தியின் அண்ணியின் தங்கை ஒருவர் வந்திருந்தார்.

அவர்களது குடும்பம் வேல்ஸ் குடும்பத்தின் அளவுக்கு வசதியானவர்கள் இல்லை.

சர்க்கரை ஆலை தொழில்.

அவரது மகன் சென்னையில் IPS அதிகாரி.

வேல்ஸ் குடும்பத்தின் மீது தமயந்தி அண்ணிக்கு ஏற்கனவே ஒரு வகையான மனக்கசப்பு இருந்தது.

கார்த்திகா, தமயந்தி ஆகியோருடன் பெண் கொடுத்து பெண் எடுக்கும் உறவு வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது அவர்கள் வீட்டில் .

அவரது மகளுக்கும் தீபக்கின் மீது அளவுக்கு அதிகமான காதல்.

அதனால் எப்படியாவது நிலைமையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்று சுயநலமே நினைத்தார்.

அவர்களிடம் தீபிகா பற்றியும் ராம் பற்றியும் பேசப்பட்டது.

“இவங்க வேல்ஸ் குடும்பமா?” என்று அவர்கள் சற்றுப் பின்வாங்கினர்.

ஆனால் அந்த IPS அதிகாரிக்கு தீபிகாவைப் பார்த்தவுடனே பிடித்துவிட்டது.

அவரது தாய்க்கு வேறு வழியில்லாமல் போனது.

“நம்ம வீட்டுப் பெண்ணுக்கு கல்யாண வயசு வந்துடுச்சுன்னா நாலு பேரு இல்ல… நாற்பது பேரு கேட்கலாம். அதுக்காக நாம பின்வாங்க வேண்டியதில்லை,” என்று அவரை அழைத்துச் சென்றார்.

அந்த நேரத்தில் கார்த்திகா மட்டும் தமயந்தியின் அம்மாவுடன் இருந்தார்.

அவள் மனதில் இருந்த எண்ணம் வேறு.

இப்பதான் நம்ம தொழில் கொஞ்சம் நல்லா போகுது. அதுக்கு என் மகனை இந்த குடும்பத்துக்குள் அனுப்பக் கூடாது.

அதனால் இவர்களை அங்கே அழைத்துச் சென்று பேசினால், கார்த்திகாவுக்கு மறைமுகமாகவே புரியவைக்கலாம்—

உன் பொண்ணு எங்களுக்கு தேவையில்லை.

—

கார்த்திகா அப்போது தமயந்தியின் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் தீபிகாவைப் பார்த்து,

“என்னமா இருக்கா… கண்ணே பட்டுடும்,” என்றார்.

பின்னர் மெதுவாக தங்களது ஆசையைச் சொல்ல ஆரம்பித்தார் கார்த்திகா எப்படியாவது தீபிகா இவர்கள் வீட்டு மருமகளாக்கி விடுவது .

அந்த நேரத்தில் தமயந்தியின் அண்ணி குறுக்கே வந்து அவர்களை அறிமுகப்படுத்தினார்.

விஷயத்தையும் நேரடியாகப் போட்டுடைத்தார்.

கார்த்திகா தமயந்தியின் அம்மாவைப் பார்த்தார்.

அவரது முகத்திலும் சங்கடம் தெரிந்தது.

மருமகளிடம் பலமுறை சொல்லியும் அவள் கேட்கவில்லை என்பதற்கான வருத்தம் அது.

“இப்ப இதைப் பற்றி பேச வேண்டாம்…” என்று கார்த்திகா சொல்லும் முன் அந்தப் பெண் பேச ஆரம்பித்தார்.

“எங்களுக்கு வசதி வாய்ப்பு பற்றிய கவலை வேண்டாம். பையன் IPS.”

அதே நேரத்தில் சுபாவுடன் தீபிகா அங்கே வந்தாள்.

கார்த்திகா அருகில் நின்றவள், சைகை மொழியில் ஏதோ சொன்னாள்.

அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை.

அந்த நொடியில் அவள் தன் அக்காவை நோக்கி கிண்டலாகச் சொன்னாள்.

“இந்த ஊமைக்கா என் மகனை வேண்டாம்னு சொல்றாங்க?”

தீபிகா அவளை நேராக முறைத்துப் பார்த்தாள்.

அவளது பார்வையைப் பார்த்தும் அந்தப் பெண் நிற்கவில்லை.

“ஊமையா இருக்கும்போதே பெரியவங்களை முறைக்கிறாளே… தாய் தகப்பன் நல்லா வளர்த்திருந்தாத்தானே பண்பு இருக்கும்?”

அடுத்த நொடி—

அவளது உதடு கிழிந்து ரத்தம் சொட்டியது.

அங்கே இருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்தனர்.

தீபிகாவின் கண்கள் சிவந்திருந்தன.

தமயந்தி அண்ணி தன மாமியார்யிடம் ,

“பார்த்துக்கோங்க… உங்க தேவதையோட லட்சணம்!” என்று சொல்ல,

தீபிகா வெறிகொண்டாள்.

அவளைப் பிடித்திருந்த சுபாவைத் தள்ளிவிட்டு தமயந்தி அண்ணி மீது பாய்ந்தாள்.

அதற்கு முன்—

*பளார்!*

கார்த்திகாவின் கை தீபிகாவின் கன்னத்தில் விழுந்தது.

அந்த அறை முழுவதும் உறைந்தது.

தீபிகா அப்படியே நின்றாள்.

கார்த்திகாவின் முகத்தில் கோபம் இல்லை.

அதிர்ச்சி.

வலி.

அவள் செய்ததை நினைத்துக் கொண்டே கார்த்திகாவின் கண்கள் கலங்கின.

“சுபா… அவளைக் கூட்டிட்டு போ.”

தீபிகா கார்த்திகாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது கண்களில் கண்ணீர் தேங்கியது.

ஒரு வார்த்தையும் பேசாமல் திரும்பி ஓடினாள்.

சுபாவும் அவளுக்குப் பின்னால் ஓடினாள்.

—

சில நிமிடங்களிலேயே விஷயம் எல்லோருக்கும் தெரிந்தது.

அடிபட்ட பெண்ணின் மகன் ஆத்திரத்தில் குதித்தான்.

“நீங்க காப்பாத்திட்டீங்கன்னு நினைக்காதீங்க. நான் இப்பவே FIR போட்டு அரெஸ்ட் பண்ணுவேன்!”

அந்த நேரத்தில் அருள் தந்தை சிதம்பரத்துடன் அங்கே வந்தார்.

முரளி உடனே அங்கிருந்தவர்களைச் சற்று விலக்கினார்.

செந்திலும் தமயந்தியும் அப்போதுதான் அங்கே வந்தனர்.

விஷயம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.

தமயந்தி தன் அம்மாவைப் பார்த்து,

“என்னம்மா நடந்தது?” என்று கேட்க,

அதற்குள் அந்த IPS அதிகாரி மீண்டும் குரலை உயர்த்தினான்.

அவன் சிதம்பரத்தைப் பார்த்த அந்த ஒரு நொடி—

அவனது குரல் தானாகவே அடங்கியது.

சிதம்பரத்தின் பார்வை மட்டும் போதுமானதாக இருந்தது.

அங்கே இருந்த அனைவரும் அமைதியாகினர்.

விஷயத்தை அந்த முதியவர் சொல்ல ஆரம்பித்தார்.

சிதம்பரம் மெதுவாக ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.

அருகில் இருந்த நாற்காலி விசிறி அடித்தார் .

அவரது கையில் வயதின் நடுக்கம் இருந்தது.

ஆனால் கண்களில் இருந்த கோபம் அங்கே இருந்தவர்களையே நடுங்க வைத்தது.

அவர் அருளைப் பார்த்தார்.

“இவன் அம்மா பேர்ல கேஸ் கொடு.”

அருள் அதிர்ந்து அவரைப் பார்த்தார்.

“உன் மகளை அவன் அம்மா மருத்துத்திறனாளி என்று கொச்சைப்படுத்தியிருக்கார் .”

சிதம்பரத்தின் குரல் மேலும் இறுகியது.

“CM கிட்ட சொல்லு முடிச்சு விட்டிடு .”

அங்கே இருந்தவர்கள் மூச்சையே பிடித்தனர்.

“தீபிகா CEO of AR…”

அவர் தொடர்ந்து அவள் பொறுப்பில் இருந்த நிறுவனங்களின் பெயர்களைச் சொன்னார்.

“அதோட கொல்கத்தா IPL டீம் owner.”

அந்த வார்த்தையை கேட்டதும் அந்தப் பெண் மட்டுமல்லாது தமயந்தியின் குடும்பமே அதிர்ந்து போனார்கள் .

தமயந்திக்கும் விஷயம் புரிந்தது.

உமா நேராக தமயந்தி அண்ணியை பார்த்தார் .

“சாக்கடைக்கு பன்னீர் வாசம் தெரியுமா?”

அந்த வார்த்தையில் இருந்த கடுமை அங்கே இருந்தவர்களை அமைதியாக்கியது.

“அத்தை…” என்று தமயந்தி சொல்ல,

“போய்டு. உன் அம்மா வீட்டுக்கே போ.”

உமாவின் கோபம் தணியவில்லை.

“நான் அப்பவே சொன்னேன். இந்தப் பொம்பளையோட குணம் சரியில்லை. என் பேத்தி இவங்க வீட்டுக்கு வேண்டாம் என்று.”

அவர் கார்த்திகாவையும் பார்த்தார்.

தமயந்தியின் அம்மா கண்ணீருடன் உமாவிடம் பேசினார்.

“உங்க பேத்திக்காக உங்க மருமகளைப் போகச் சொன்னது தப்பு. அதுக்காக இங்கே நடந்தது எல்லாம் சரின்னு நான் சொல்லல.”

அவர் தன் மகளைப் பார்த்தார்.

“இப்ப என் மகளை கூட்டிட்டு போறேன். நிலைமை சரியானதும் கூட்டிட்டு வர்றேன்.”

அந்த முதியவருக்கு தன் மகள் கலங்கி நிற்பதைப் பார்ப்பது பெரிய வேதனையாக இருந்தது.

ஆனால் இப்போது நிலைமை தன் கைகளில் இல்லை என்பதை அவர் புரிந்து கொண்டிருந்தார்.

—

அந்த நேரத்தில் உமா தன் கணவரை நோக்கிப் பார்த்தார்.

சிதம்பரத்தின் முகத்தில் இருந்த கோபம் இன்னும் குறையவில்லை.

தமயந்தி குடும்பத்தை தரக்குறைவாகப் பேச வேண்டாம் என்று அவர் தமயந்தியிடம் கூறினார்.

இங்கே உமா இன்னும் ஆத்திரம் குறையாமல் தமயந்தி அம்மாவிடம்

“உன் மருமகளை நிறுத்தச் சொல்லு.”

“அவங்க குடும்பத்துக்கு வசதி இருக்கலாம். அரசியல் செல்வாக்கு இருக்கலாம். ஆனா ஆட்டம் அதிகமா போகக்கூடாது.”

சிதம்பரம் சற்று நின்றார்.

தமயந்தி அம்மா தன் மகள் மருமகளுடன் கிளம்பிவிட்டார் தன மனதில் கணவரின் வார்த்தைகள் நினைவு வர

“இப்ப சிதம்பரம் குடும்பம் முன்ன மாதிரி இல்லை. நிறைய விஷயங்கள் மாறிக்கிட்டு இருக்கு.”

அவர் தமயந்தியை நேராகப் பார்த்தார்.

“உன் மகளும் மருமகனும் நம்மகிட்ட எதுவும் சொல்லாம இருந்தது எனக்கே தப்பா படுது.”

அது ஒரு எச்சரிக்கை.

தமயந்தி அமைதியாகத் தலையசைத்தாள்.

அந்தப் பெண்ணின் கணவர் நல்ல மனிதர்.

அவர் அருளிடம் வந்து,

“மன்னிச்சுக்கோங்க. என் மகனையும் மன்னிச்சிடுங்க,” என்று கேட்டார்.

பின்னர் ஒரு வேண்டுகோள் வைத்தார்.

“தீபிகா பற்றிய இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது.”

முரளியும் அங்கே இருந்தார்.

“அப்படி வெளியே போச்சுன்னா என்ன ஆகும்னு உங்களுக்கு தெரியும்,” என்றார்.

அவர் இப்போது அமைச்சராக இருந்தார்.

அவரை முதலில் சரியாக அடையாளம் காணாத அந்த IPS அதிகாரி, இப்போது அவரைப் பார்த்ததும் நடுங்கிப் போனான்.

ஆனால் அந்த எல்லாவற்றையும் விட—

கெஸ்ட் ஹவுஸின் ஒரு அறைக்குள் சென்று கதவை மூடியிருந்த தீபிகாவின் மனதில்தான் அந்த ஒரு அறை இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது.

*பளார்…*

கார்த்திகாவின் கை.

அவளை விட அதிகமாக வலித்தது அந்த அறை அல்ல.

தன்னை ஒருபோதும் கைவிடமாட்டாள் என்று நம்பிய கார்த்திகா, அந்த நொடியில் தன்னையே அடித்துவிட்டாள் என்பதுதான்.

அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது.

வாழ்க்கையில் முதன்முறையாக—

கார்த்திகாவிடமிருந்தும் தன்னைப் பிரித்துக்கொண்டு ஓட வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது.