அத்தியாயம் 2

கோபத்தின் பின்னால் இருந்த பாசம்

காலங்கள் நகர்ந்தன.

தீபிகாவுக்கு பதின்மூன்று வயது.

அவள் வயதுக்குரிய குழந்தைகள் புத்தகங்களோடும் விளையாட்டுகளோடும் நேரத்தை கழித்துக் கொண்டிருந்தபோது, தீபிகாவின் உலகம் முற்றிலும் வேறாக இருந்தது.

கணினித் திரைதான் அவளுடைய உலகம்.

ஒரு நாள், அவள் வழக்கம்போல ஒரு கணினி சென்டரில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாள். அங்கே அவள் உருவாக்கிய ஒரு சிறிய coding program, அவளுக்கே தெரியாமல் அந்த சென்டரால் ஒரு பெரிய நிறுவனத்திடம் விற்கப்பட்டிருந்தது.

அதற்காக அவர்கள் பெற்றிருந்த தொகை மிகப் பெரியது.

ஆனால் அந்த நிறுவனத்திற்கு மென்பொருளை பயன்படுத்தும்போது சில தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டன.

அதைச் சரி செய்ய முடியாமல் தவித்த நிர்வாகம், இறுதியில் அந்த coding-ஐ உருவாக்கிய தீபிகாவைத் தேடி வந்தது.

அன்று அவளுக்கு தேர்வு.

அவர்கள் எவ்வளவு கேட்டும், தேர்வை விட்டுவிட்டு வர அவள் மறுத்துவிட்டாள்.

சைகையில் தெளிவாகச் சொல்லிவிட்டாள்.

“என்னால் இப்போது வர முடியாது.”

அவளுடைய அந்த அமைதியான மறுப்பு, அந்த நிர்வாகத்திற்கு அவமானமாகப் பட்டது.

“நீ வந்து வேலை செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் என்று உனக்குத் தெரியாது,” என்று ஒருவர் மிரட்டும் தொனியில் பேசினார்.

அந்த விஷயம் ஜாஸ்மினின் காதுகளுக்குச் சென்றதும் அவள் அமைதியாக இருக்கவில்லை.

“தீபிகாவை யாரும் மிரட்ட முடியாது,” என்று சொல்லி, நடந்த அனைத்தையும் சிவத்திடமும் மற்றவர்களிடமும் கூறினாள்.

அதற்குப் பிறகு விஷயம் வேறு வடிவம் எடுத்தது.

ரவி, டேவிட் இருவரும் நேரடியாக அந்த சென்டர் நிர்வாகத்தை அணுகினர்.

“இந்தப் பெண்ணுடைய திறமையைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்தது மட்டும் இல்லாமல், இப்போது அவளையே மிரட்டுகிறீர்களா? இன்னும் ஒரு வார்த்தை பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்,” என்று ரவி எச்சரித்தார்.

ஆனால் அந்த நிர்வாகியும் சாதாரணமானவன் அல்ல.

காவல்துறை முதல் உள்ளூர் அரசியல் செல்வாக்கு வரை பல வழிகளில் தப்பிக்க முயன்றான்.

அப்போது ரவிக்கு எதிராக ஒரு பழைய வழக்கை தூசி தட்டி எடுத்தனர்.

அந்த நேரத்தில்தான் எதிர்பாராத உதவி ஒன்று கிடைத்தது.

ஒரு உள்ளூர் தாதாவின் மகன்.

அவன் படித்தவன். நல்ல குணமுடையவன். தந்தையின் பழைய பகை காரணமாக ஏற்பட்ட அடிதடி வழக்கில் சிக்கி, அவனுடைய அரசு வேலை கூட பறிபோகும் நிலைக்கு வந்திருந்தது.

அந்த நேரத்தில் ரவி அவனுக்காக நின்று, அவன் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க உதவியிருந்தார்.

அந்த நன்றியை மறக்காத அவனும் இப்போது ரவியின் பக்கம் நின்றான்.

விஷயம் பெரிதாகிவிட்டது.

இறுதியில் அந்த சென்டர் நிர்வாகி பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

விசாரணை நடந்தபோதுதான் சிவத்திற்கு அதிர்ச்சியான உண்மை ஒன்று தெரிய வந்தது.

இது முதல் முறை அல்ல.

தீபிகாவின் coding-ஐ பயன்படுத்தி அந்த நிறுவனம் ஏற்கனவே இரண்டு முறை பெரிய தொகைகளைப் பெற்றிருந்தது.

இப்போது மூன்றாவது முறை.

அதுவும் அதற்கு முன் கிடைத்த தொகைகளைவிட அதிகமான பணம்.

அந்த நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றது வெளியில் தெரிந்துவிட்டால், சட்டரீதியாக தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதை அந்த நிர்வாகி புரிந்து கொண்டான்.

வேறு வழியின்றி, அந்த மூன்று மாடிக் கட்டிடத்தையே சிவத்தின் பெயரில் பதிவு செய்து கொடுத்தான்.

சிவம் அங்கே இருந்த நம்பிக்கையான சில பணியாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவர்களை நீக்கினார்.

அந்த இடத்தின் நிர்வாகப் பொறுப்பு ரவியின் மகன் கார்த்தியிடம் சென்றது.

அப்போது கார்த்தி தனது இன்ஜினியரிங் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தான்.

அகிலம் நடத்தி வந்த தனியார் கல்லூரி நிர்வாகப் பணியையும் விட்டுவிட்டு, அவன் தந்தைக்கும் சிவத்திற்கும் உதவியாக அந்த சென்டரை கவனிக்கத் தொடங்கினான்.

அதுதான் தீபிகாவின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்.

தீபிகா அன்று உருவாக்கிய ஒரு coding…

அதிலிருந்து பல software-கள் பிறந்தன.

Games.

Apps.

புதிய தொழில்நுட்பங்கள்.

ஒவ்வொன்றும் சந்தையில் பிரபலமாகத் தொடங்கின.

சில ஆண்டுகளில் அந்த சிறிய கணினி சென்டர், ஒரு பெரிய corporate நிறுவனமாக மாறியது.

ஆனால் சிவத்திற்கு பெருமையைவிட பயம்தான் அதிகமாக இருந்தது.

தீபிகாவின் அறிவு வளர வளர, அவள் மீது உலகத்தின் கவனமும் விழத் தொடங்கியது.

அவளுக்கு பதினேழு வயது தொடங்கியபோது, அவள் திறமை சிவத்தை பெருமைப்படுத்தியது.

அதே நேரத்தில்…

அவருக்குள் ஒரு அச்சமும் வளர்ந்துகொண்டே இருந்தது.

அவள் எதைப் பார்த்தாலும் மற்றவர்கள் பார்க்காத ஒன்றைக் கண்டுபிடித்தாள்.

அவள் எதைப் படித்தாலும் அதன் அடிப்படை வரை சென்று புரிந்து கொண்டாள்.

அந்த நேரத்தில் அவள் புதிதாக Stock Market-ல் காலடி வைத்திருந்தாள்.

கடந்த ஒரு வருடமாக குறிப்பாக ஒரு நிறுவனத்தின் பங்குகளை அவள் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.

Vels Group.

சிதம்பரமும் அவரது மகன்களும், பழைய அளவுக்கு அந்த நிறுவனத்தை விரிவுபடுத்த முடியவில்லை என்றாலும், அதை ஒருபோதும் வீழ்ச்சியடைய விடவில்லை.

ஆனால் தீபிகாவின் கண்கள் வேறொரு விஷயத்தை கவனித்தன.

Vels நிறுவனத்தின் பொதுப் பங்குகளில் ஏதோ மாற்றம்.

ஒரு நூலின் முனையைப் பிடித்தவள் போல, அவள் அதைத் தொடர்ந்து ஆராய்ந்தாள்.

மொத்தமாக பத்து சதவீதம் பங்குகள் வெளியில் சென்றிருந்ததை அருள் வேலன் கண்டறிந்தார்.

அந்தப் பங்குகளின் பின்னால் இருந்த தொடர்புகளைத் தேடத் தொடங்கியபோது…

அந்த நூலின் ஒரு முனை வந்து நின்ற இடம்—

சிவம்.

சிதம்பரம் பெரிதாக அதிரவில்லை தனக்கு முன்பே தெரிந்திருந்தது வெளியி காட்டிக்கொள்ளவில்லை.

அவருடைய மகன்களும் அதிர்ந்தனர்.

ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று இன்னும் இருந்தது.

சிவத்தின் பின்னால் இருந்தது—

தீபிகா.

“ஏன்டா… இது என்ன பூதம்?”

உமா கார்த்திகாவிடம் புலம்பியபடி சொன்னார்.

தீபிகாவை பார்த்தாலே உமாவுக்குள் ஒரு பழைய கோபம் எழும்.

அவள் முகத்தில் அமுதாவின் முகத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், பல வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட நினைவுகள் அவருக்குள் மீண்டும் எழுந்தன.

அதோடு ராம்.

தன் செல்ல மகன், அருகில் இல்லது வனவாசம் போல லண்டன் வாசம்.

அந்த நாளோ…

தீபிகாவின் பத்தாவது வயதில் ராம்கு நினைவுகள் வர துவங்க அமுதா என ஆரம்பித்து விடை தீபிகா என கட்ட

சிவத்தின் வீட்டில் வழக்கத்திற்கு மாறாக பெரிய கூட்டம்.

தீபிகா பள்ளி முடிந்து வீட்டிற்குள் வந்தாள்.

வாசலில் கார்த்திகாவைக் கண்டதும் அவளுடைய முகத்தில் ஒரு சிறிய சிரிப்பு மலர்ந்தது.

அந்தச் சிரிப்பு நீடிக்கவில்லை.

அவள் காதில் ஒரு குரல் விழுந்தது.

“தீபி…”

அவள் உறைந்து போனாள்.

அந்தக் குரலை அவள் கேட்டதில்லை.

ஆனால் ஏதோ ஒரு காரணமின்றி அந்தக் குரல் அவளுடைய உள்ளுக்குள் ஏதோ ஒன்றைத் தொட்டது.

அவள் திரும்பிப் பார்த்தாள்.

அங்கே—

ராம்.

அவளுடைய தந்தை.

அவளுக்குத் தெரியாமல் அவள் வாழ்நாள் முழுவதும் தேடிய மனிதன்.

அவருடன் இரண்டாம் மனைவி வாசுகியும், கூடவே மூன்று வயது மகன் ஆதியும்.

அவளைப் பார்த்தவுடன் ராம் குழந்தையைப் போலவே உற்சாகமாக முன்னேறினார்.

ஆனால் அடுத்த நொடியே…

அவள் தனது பள்ளிப் பையை கழற்றி ராமின் மீது வீசியெறிந்தாள்.

படார்!

அறை முழுவதும் அமைதியாகிப் போனது.

தீபிகாவின் கண்கள் ராமின் கால்களில் விழுந்தன.

ராம் நிலைகுலைந்து நின்றார்.

விபத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவர் இன்னும் சற்றுத் தடுமாறித்தான் நடந்தார்.

அவளுடைய பார்வை மாறியது.

யாரும் எதையும் புரிந்து கொள்வதற்குள்—

தீபிகா எதுவும் பேசாமல் நேராகத் தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.

மலரும் ஜாஸ்மினும் அவளுக்குப் பின்னால் ஓடினர்.

அவருடைய முகத்தில் இருந்த அதிர்ச்சியை விட, காயப்பட்ட குழந்தையின் வேதனை அதிகமாகத் தெரிந்தது.

சிவமும் சாந்தியும் அவளைத் தடுக்க முயன்றனர்.

ஆனால் கார்த்திகா உடனே கையை உயர்த்தி அவர்களை நிறுத்தினாள்.

“இப்போ அவளிடம் எதுவும் பேசாதீங்க…”

ஏனெனில் தீபிகாவின் முகத்தை அவள் பார்த்திருந்தாள்.

அது கோபம் மட்டும் அல்ல.

பல வருடங்களாகச் சொல்ல முடியாமல் அவளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கேள்விகளின் வெடிப்பு.

ராம் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.

அவருடைய கண்களில் கண்ணீர்.

“அமுதா…”

அவர் மெதுவாகச் சொன்னார்.

“அவளோட முகம் அப்படியே அமுதா மாதிரி இருக்கு…”

அவருடைய குரல் உடைந்து போனது.

“என் மகள்…”

கார்த்திகா எதையும் மறைக்கவில்லை.

அத்தனை வருடங்களாக நடந்த அனைத்தையும் அவனிடம் சொன்னாள்.

சிதம்பரம் செய்த தவறுகள்.

உமாவின் மனநிலை.

சிவம் தீபிகாவை எப்படி வளர்த்தார்.

அவளுடைய வாழ்க்கை.

அவளுடைய கோபம்.

எதையும் மறைக்கவில்லை.

“ராம்… பத்து, வருடங்களாக அவளை விட்டு நீ இருந்திருக்கிறாய். அதில் உன் தவறு இல்லை விதி”,இப்போ ஒரே நாள்ல எல்லாத்தையும் மாற்ற முடியாது.”

“அவளுக்கு காலம் வேண்டும்.”

“அவள் கோபம் குறையலாம்…”

கார்த்திகா சற்று நின்றாள்.

“இப்போது நெருங்கினாள்  வெறுப்பாக மாறலாம்.”

அந்த வார்த்தை ராமின் நெஞ்சை கிழித்தது.

“அண்ணி…”

அவன் அழுதபடி கேட்டான்.

“கடைசி வரைக்கும்… என் மகள் என்னை ‘அப்பா’ன்னு சொல்லவே மாட்டாளா?”

கார்த்திகாவால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

அப்போது வாசுகி அவனை சமாதானப்படுத்த முயன்றாள்.

ஆனால் ராம் அடங்கவில்லை.

அவனுடைய வாழ்வில் ஏற்கனவே நிறைய இழந்திருந்தான்.

கிரிக்கெட்.

அமுதா.

அவன் நினைவுகள்.

இப்போது மீண்டும் கிடைத்த மகளையும் இழந்துவிடுவோமோ என்ற பயம் அவனை முழுவதுமாக உடைத்தது.

அந்த நேரத்தில் கார்த்திகாவின் அலைபேசி ஒலித்தது.

அழைத்தது மலர்.

“அக்கா… தீபிகா சொல்லுறதை நான் சொல்றேன்.”

சில நொடிகள் அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

பிறகு கார்த்திகாவின் முகம் மாறியது.

தீபிகா சைகை மொழியில் சொன்னதை மலர் வார்த்தைகளாக மாற்றி கூறினாள்.

“புது சொந்தம் எதுவும் தேவையில்லைன்னு சொல்றா.”

ராம் உறைந்து போனார்.

“எங்கிருந்து வந்ததோ… அங்கேயே போகட்டும்.”

ஒரு நொடி அமைதி.

தந்தையின் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுமாறு கூறி

“அவங்க… லண்டன் போகணுமாம்.”

ராமின் கண்கள் விரிந்தன.

மலர் தொடர்ந்தாள்.

“இங்க இருந்தா… நான் எங்கேயாவது போயிடுவேன்னு சொல்றா.”

கார்த்திகா பதறினாள்.

“மீண்டும் எல்லாரும் சேர்ந்து வந்தா… உங்ககிட்டயும் பேச மாட்டேன்னு சொல்றா.”

அதற்குப் பிறகு தீபிகா சொன்ன இன்னொரு விஷயம் அறைக்குள் இருந்தவர்களை எல்லாம் அதிர வைத்தது.

“சிதம்பரம் இங்கே வரக்கூடாது.”

யாரும் சிதம்பரத்தின் பெயரை அப்படி நேரடியாகச் சொல்லியதில்லை.

அந்த வீட்டில் அவர்—

‘பெரியவர்’.

‘ஜமீன்’.

‘அய்யா’.

என்றுதான் அழைக்கப்பட்டவர்.

அவருடைய பெயரையே சொல்ல அங்கே பலருக்கும் பயம்.

மலர் கூட தயங்கினாள்.

“தாத்தா… இங்கே வரக்கூடாதுன்னு சொல்றா…”

அந்த வார்த்தை முடிந்தவுடன் உள்ளே ஏதோ ஒன்று உடையும் சத்தம் கேட்டது.

மலர் பயந்து நின்றாள்.

“அம்மா… அப்படி பெரியவரை பெயர் சொல்லி—”

“சைகை மொழியில் ஓர் அழுத்தம் சொல்லுங்க.”

மலர் ன் குரல் வந்தது.

“சிதம்பரம் இங்கே வரக்கூடாதுன்னு சொல்லுது பாப்பா.”

கார்த்திகா அதிர்ந்து உமாவைப் பார்த்தாள்.

அந்த நேரத்தில்…

ராம் சிரித்துக் கொண்டிருந்தான்.

பல வருடங்களுக்குப் பிறகு அவன் முகத்தில் அப்படியொரு இயல்பான சிரிப்பு.

சிதம்பரமும் உமாவும் அதைப் பார்த்து திகைத்தனர்.

ராம் அழுதவன்தான்.

இழந்தவன்தான்.

ஆனால் இன்று அவன் சிரித்தான்.

ஏனெனில்—

அவனுடைய மகள் கோபப்பட்டிருந்தாலும்…

அவளுடைய கோபத்தின் காரணம் அவன்தான் என்பதை அவன் புரிந்துகொண்டிருந்தான்.

அவள் அவனை வெறுக்கவில்லை.

அவளுக்கு அவன் மீது உரிமை இருந்தது.

அவள் மனதில் அவன் இருந்தான்.

அதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது.

அப்போது கார்த்திகா திடீரென்று ஒரு யோசனை செய்தாள்.

“ப்ரொஜெக்டர் ரெடி பண்ணுங்க.”

அங்கிருந்தவர்கள் புரியாமல் பார்த்தனர்.

சில நிமிடங்களில் அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

சுவரில் ஒரு சிறிய புகைப்படம் தோன்றியது.

ஒரு குழந்தை.

சிறிய தீபிகா.

அடுத்த படம்.

அவளுடைய முதல் சிரிப்பு.

அடுத்தது—

மலரின் கையைப் பிடித்துக் கொண்டு ஓடும் தீபிகா.

ஜாஸ்மினுடன் சண்டை போடும் தீபிகா.

சுபாவுடன் சிரிக்கும் தீபிகா.

பள்ளி விழா.

பிறந்தநாள்.

கணினி முன் அமர்ந்திருந்த தீபிகா.

ஒவ்வொரு வயதிலும் அவள் மாறிய விதம்.

ஒவ்வொரு சிரிப்பும்.

ஒவ்வொரு குறும்பும்.

ஒவ்வொரு சிறிய வெற்றியும்.

அனைத்தும் ஒன்றாக அந்தத் திரையில் ஓடியது.

ராம் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.

“அண்ணி…”

அவன் கைகளை கூப்பினான்.

“நன்றி.”

கார்த்திகா சிரித்தாள்.

“டேய்… நீ என் நண்பன் டா.”

அவள் அவனுடைய தோளில் தட்டினாள்.

“உன் மகள் எப்படி இருந்தாலும்… அவளை நான் விட மாட்டேன்.”

அந்த வார்த்தை ராமுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்தது.

அடுத்த சில நாட்களில் ராம் லண்டன் செல்ல முடிவு செய்தான்.

தீபிகாவின் கோபத்திலிருந்து ஓடுவதற்காக அல்ல.

அவள் ஒருநாள் தன்னை ஏற்றுக்கொள்ளும் வரை காத்திருக்கத் தயாராக இருந்ததால்.

அடுத்த நாள் காலை.

சிதம்பரம் வழக்கம்போல் எழுந்தார்.

முதலில் பூஜை அறைக்குச் சென்றார்.

அங்கே இருந்த தன் தாய் சிவகாமியின் புகைப்படத்தின் முன் நின்றார்.

கைகளை கூப்பினார்.

சில நொடிகள் அமைதியாகப் பார்த்தார்.

பிறகு வெளியே வந்தபோது வேலைக்காரன் ஓடிவந்து சொன்னான்.

“அப்பா… சிவம் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார் முத்த மக.”

சிதம்பரம் புருவத்தைச் சுருக்கினார்.

“எதாவது பங்குகள் சம்பந்தமா பேச வந்தாரா?”

“தெரியலங்க.”

“சரி. உள்ளே அனுப்புங்க.”

சிறிது நேரத்தில் சிவம் வந்தார்.

அவருடைய முகத்தில் வழக்கமான அமைதி இல்லை.

பதட்டம் தெரிந்தது.

கார்த்திகாவும் உமாவும் அங்கே வந்தனர்.

“சித்தப்பா… காப்பி.”

கார்த்திகா காப்பியை அவரிடம் நீட்டினாள்.

சிவத்தின் கை சற்றுத் துடித்தது.

சிதம்பரம் அதை கவனித்தார்.

“என்ன சிவம்?”

“ஒன்னும் இல்லை.”

சிவம் மெதுவாகச் சொன்னார்.

“நாங்க வெளியில் போய் பேசலாம்.”

“வேண்டாம்.”

சிதம்பரம் கார்த்திகாவை நோக்கினார்.

“வெளியில் யாரும் இருக்கிறாங்களா?”

“டேவிட் இருக்கான்.”

“அவனை உள்ளே அனுப்பி கதவை மூடச் சொல்லு.”

சில நொடிகளில் கதவு மூடப்பட்டது.

அறைக்குள் சிதம்பரம், உமா, கார்த்திகா, சிவம் மட்டும்.

சிவம் சுமார் இருபது நிமிடங்கள் பேசினார்.

அவர் சொல்லி முடித்ததும் சிதம்பரம் எதுவும் பேசவில்லை.

ஒரு நீண்ட அமைதி.

பிறகு…

ஒரு சிறிய தலையசைப்பு.

“சரி.”

சிவம் எழுந்து வெளியேறினார்.

அவர் வெளியே சென்றவுடன் கார்த்திகா தந்தையை நோக்கினாள்.

“அப்பா…”

சிதம்பரம் அமைதியாக இருந்தார்.

“உங்களுக்கு எல்லாமே ஏற்கனவே தெரியும் போல இருக்கே?”

உமாவும் உடனே திரும்பிப் பார்த்தாள்.

“என்ன விஷயம்?”

கார்த்திகா தொடர்ந்தாள்.

“அந்த சென்டர் பிரச்சனை… தீபிகாவின் பாதுகாப்பு… பங்குகள்… எல்லாமே உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு போல இருக்கே?”

சிதம்பரத்தின் உதட்டில் ஒரு சிரிப்பு தோன்றியது.

அவர் உமாவைப் பார்த்தார்.

“உமா… உன் மாமியாரை மறந்துட்டியா?”

உமா முகத்தைச் சுளித்தாள்.

“கிழவனுக்கு கொழுப்பு பார்த்தியா…”

“அத்தை!”

கார்த்திகா உடனே அவளை அடக்கினாள்.

சிதம்பரம் சிரித்தார்.

“பார் கார்த்திகா…”

அவர் மெதுவாகச் சொன்னார் மனைவியிடம்.

“உன் பேத்தி…”

சிறிது இடைவெளி.

“உன் மாமியார் இங்கே வரப்போறாங்க.”

அறையில் இருந்த மூவரும் அதிர்ந்து போனார்கள்.

“என்ன?”

கார்த்திகாவின் முகம் வெளிறியது.

உமா சிதம்பரத்தைப் பார்த்தாள்.

இதுவரை தீபிகாவைப் பற்றி சிதம்பரம் நேரடியாக தன்னிடம் எதுவும் கேட்டதில்லை.

ஆனால் இப்போது…

அவளுடைய ஒவ்வொரு அசைவையும் அறிந்த மனிதனைப் போல பேசுகிறார்.

அதன் அர்த்தம் ஒன்றுதான்.

சிதம்பரம் எதையும் மறந்திருக்கவில்லை.

கார்த்திகா தன் கணவனை நோக்கிப் பார்த்தாள்.

அவன் தயங்கினான்.

பிறகு மெதுவாகச் சொன்னான்.

“அப்பாவுக்கு… தினமும் காலையிலேயே எல்லா தகவலும் வந்து சேரும்.”

உமா கண்களைச் சுருக்கினாள்.

“என்ன ஒரு பாசம் உங்க அப்பனுக்கு!”

கார்த்திகா எதுவும் பேசவில்லை.

சிதம்பரம் மட்டும் அமைதியாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.

அந்தச் சிரிப்புக்குப் பின்னால்…

பல வருடங்களாக புதைந்து கிடந்த ஒரு ரகசியம் மீண்டும் விழித்துக் கொண்டிருந்தது.