Monday, November 16, 2026

    மகிழ்வின் முகவரி நீ

    செவிப்பொன் சேர்ப்பு விழா! நதிப்படுகையோடு அமையப் பெற்றிருந்தது அந்தக் கோவில். அதன் வளாகத்தில் பட்டுப் பாவடையில் இளமானாய் துள்ளித் திரிந்து கொண்டிருந்தாள் ஐந்து வயது மகிழினி. “மகிழ் குட்டி! இங்க வா. பூ வெச்சு விடுறேன்” என்ற அவளது அன்னை பத்மினியின் குரலுக்குக் கட்டுப்பட்டு வர, மல்லிச்சரத்தை அவளுக்குச் சூடி அழகு பார்த்தவர், “என் கண்ணே பட்டிடும் என் தங்கம்” என...
    நல்வரவு! வண்ண வண்ண விளக்குகளால் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது அந்தப் பலகை. வரவேற்புத் தோரணங்கள் அந்த பரந்த வாயிலின் இருபுறத்தையும் நன்கு அலங்கரித்திருந்தன. பார்வையைச் சற்று உள்ளே செலுத்தினால் அங்கு நடுநாயகமாய் வினைகள் போக்க வல்லவரான விநாயகப் பெருமான் வீற்றிருந்தார். அவர் அருளால் பல தடைகளைத் தாண்டி கெளதம், மகிழினியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இனிதே நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவ்விடம் நிற்கத்...
    நேரம் எட்டை எட்டியிருந்தது. விருந்தினர்கள் அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு விடைபெற்றிருக்க.. குடும்பத்தினர் உணவருந்த அமர்ந்திருந்தனர். டைனிங் டேபிளின் இருக்கையில் ஆண்கள் மூவரும் அமர்ந்திருக்க, கீர்த்தனாவும் மகிழினியும் அவர்களுக்குப் பரிமாற.. கலைச்செல்வி வெளியே வைஷ்ணவியை கவனித்துக் கொண்டிருந்தார். அதுவரை அந்த வீட்டில் உலவிக் கொண்டிருந்த மனக்கசப்புகள் அத்தனையும் மறைந்து போய், மகிழ் பூக்கள் வீடெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருந்தன. மகிழினியின்...
    இரண்டு மாதங்கள் முழுதாய் முடிவடைந்திருந்தன. அன்று மகிழினியின் பிறந்தநாளும் கூட. “உன் பர்த்டேக்கு அங்க இருப்பேன்” என கெளதம் சொல்லியது அவள் நினைவிலாடியது. தன் பிறந்தநாளிற்கு எப்படியும் வீடு வந்துவிடுவான் என்ற உறுதியோடு அவள் இருந்தாள். ஆனால் அவன் வர மேலும் ஒருவாரம் ஆகும் என்ற செய்தி கிடைக்க, மகிழினிக்கு மனதே இல்லை. கண்மூடி கை கூப்பி கதிர்வேலனை வணங்கியவள்...
    மகிழினி இல்லாத வாழ்வை வினோத்தால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. இனி அவள் கிடைக்க மாட்டாள் என அறிவுக்கு எட்டினாலும், அவன் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “எப்படி மகிழினி.. அவனை எப்படி நீ கல்யாணம் பண்ணலாம்? என்னை உனக்கு பிடிக்கும் தானே.. எனக்கு தெரியும்” என வினோத் பேச, அவனை வெறுப்பாய் பார்த்தாள் மகிழினி. “என்னை விட்டு நீ...
    நந்தி ஹில்ஸ்! அந்த அழகான இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலத்தில் சூரிய உதயத்தைக் காணவே ஆயிரம் கண்கள் போதாது. அந்த அதிகாலை வேளையில் குளிர் காற்றில் சில்லிட்ட கைகளை தேய்த்துவிட்டுக் கொண்டே மலை உச்சியில் நின்றபடி, மேகக்கூட்டங்களுக்கு நடுவே சூரியக் கதிர்கள் உதயமாகும் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தனர் கௌதமும், மகிழினியும். நகரத்தின் பரபரப்பிலும், இரைச்சலிலும் இருந்து விடுபட்டு...
    பத்து இலக்கங்கள் பரிமாறப்பட்டிருக்க, காலை மற்றும் இரவு வாழ்த்தில் துவங்கிய குறுஞ்செய்திகள் யாவும் இப்போது குறுஞ்சிரிப்புகளாய் மாறிப் போயிருந்தன. கைபேசியின் திரை மிளிர்ந்தாலே அந்த ஒருவருடைய செய்தியை மனம் எதிர்பார்க்கத் துவங்கியது. இருவரின் தினசரிகள், பழக்க வழக்கங்கள் பழகிப் போயிருந்தன. அதோடே நாளொன்றிற்கு அன்பும், அக்கறையும் கூடிக்கொண்டே போனது. தினமும் ஒருமுறையேனும் இருவரது குரல்களும் சந்தித்துக்கொள்ள விரும்பின. குறுஞ்செய்திகள்...
    நாட்கள் வேகமாய் நகர்கின்றன நான் நின்றுவிட்டேன். நீயின்றி நகருமா என் நாட்கள்? தன் மனம் கொண்டவனின் நினைவில் நாட்குறிப்பை நிறைத்தாள் மகிழினி. இன்றோடு கெளதம் வெளிநாடு சென்று ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியிருந்தது. அன்றைய தினம் விமான நிலையத்தில் அவனை மகிழ்ச்சியாய் வழியனுப்பி வைத்திருந்தாலும், அவளது விழிகளில் இருந்து அவன் மறையும் வரை மட்டுமே அது நிலைத்தது. “மகிழ்..!” அவளது முகத்தின் பிரதிபலிப்பு அப்படியே...
    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே.. கந்தனுண்டு கவலையில்லை மனமே.. சாம்பிராணியின் மணம் மனையை நிறைக்க, அந்த தெய்வீகக் காலைப் பொழுதில் மகிழினியின் குரல் மதுரமாய் ஒலித்தது. கதவோரம் நின்றவாறு அவள் ஆராதனை செய்வதை கவனித்துக் கொண்டிருந்தார் கலைச்செல்வி. இருவருக்குமே அவன் இஷ்டதெய்வம் ஆயிற்றே. அதுதான் அவன் விசயத்தில் கலைச்செல்வியால் அதிரடி காட்ட முடியவில்லை. பூஜையில் அவரையும் மறந்து அவர்...
    error: Content is protected !!