Monday, November 16, 2026

    மகிழ்வின் முகவரி நீ

    பத்து இலக்கங்கள் பரிமாறப்பட்டிருக்க, காலை மற்றும் இரவு வாழ்த்தில் துவங்கிய குறுஞ்செய்திகள் யாவும் இப்போது குறுஞ்சிரிப்புகளாய் மாறிப் போயிருந்தன. கைபேசியின் திரை மிளிர்ந்தாலே அந்த ஒருவருடைய செய்தியை மனம் எதிர்பார்க்கத் துவங்கியது. இருவரின் தினசரிகள், பழக்க வழக்கங்கள் பழகிப் போயிருந்தன. அதோடே நாளொன்றிற்கு அன்பும், அக்கறையும் கூடிக்கொண்டே போனது. தினமும் ஒருமுறையேனும் இருவரது குரல்களும் சந்தித்துக்கொள்ள விரும்பின. குறுஞ்செய்திகள்...
    நந்தி ஹில்ஸ்! அந்த அழகான இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலத்தில் சூரிய உதயத்தைக் காணவே ஆயிரம் கண்கள் போதாது. அந்த அதிகாலை வேளையில் குளிர் காற்றில் சில்லிட்ட கைகளை தேய்த்துவிட்டுக் கொண்டே மலை உச்சியில் நின்றபடி, மேகக்கூட்டங்களுக்கு நடுவே சூரியக் கதிர்கள் உதயமாகும் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தனர் கௌதமும், மகிழினியும். நகரத்தின் பரபரப்பிலும், இரைச்சலிலும் இருந்து விடுபட்டு...
    செவிப்பொன் சேர்ப்பு விழா! நதிப்படுகையோடு அமையப் பெற்றிருந்தது அந்தக் கோவில். அதன் வளாகத்தில் பட்டுப் பாவடையில் இளமானாய் துள்ளித் திரிந்து கொண்டிருந்தாள் ஐந்து வயது மகிழினி. “மகிழ் குட்டி! இங்க வா. பூ வெச்சு விடுறேன்” என்ற அவளது அன்னை பத்மினியின் குரலுக்குக் கட்டுப்பட்டு வர, மல்லிச்சரத்தை அவளுக்குச் சூடி அழகு பார்த்தவர், “என் கண்ணே பட்டிடும் என் தங்கம்” என...
    வெறுமை சுமந்திருந்த வீட்டில் ஆளுக்கொரு திசையில் சத்யமூர்த்தியும், கலைச்செல்வியும் தஞ்சம் அடைந்திருந்தனர். வாயிற்கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் சத்யமூர்த்தி வெளியே வந்து பார்க்க, முன்பு அவருடன் பணியாற்றிய சக பேராசிரியர் ஒருவர் தான் வந்து கொண்டிருந்தார். “வாங்க வாங்க மதிவாணன்” என்று மலர்ந்த முகத்தோடு வரவேற்க, “பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சு. நல்லா இருக்கீங்களா சார்?” என்றவாறே உள்ளே...
    நல்வரவு! வண்ண வண்ண விளக்குகளால் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது அந்தப் பலகை. வரவேற்புத் தோரணங்கள் அந்த பரந்த வாயிலின் இருபுறத்தையும் நன்கு அலங்கரித்திருந்தன. பார்வையைச் சற்று உள்ளே செலுத்தினால் அங்கு நடுநாயகமாய் வினைகள் போக்க வல்லவரான விநாயகப் பெருமான் வீற்றிருந்தார். அவர் அருளால் பல தடைகளைத் தாண்டி கெளதம், மகிழினியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இனிதே நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவ்விடம் நிற்கத்...
    கீர்த்தனாவும், விஜய்யும் வரவேற்பு நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாய் செய்துகொண்டு இருந்தனர். கடந்த இரண்டு நாட்களாய் முக்கியமான உறவினர்கள் மற்றும் நண்பர்களை கைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை விளக்கி, வரவேற்புக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர். காலையில் இருந்து ஒவ்வொருவருக்காய் அழைத்துப் பேசிப்பேசியே தலைவலி வந்துவிட்டது கீர்த்தனாவுக்கு. கலைச்செல்வியை பேசச் சொன்னால், “அதை ஏன் கேட்குறீங்க அண்ணி.. அவன் இப்படிப் பண்ணுவான்னு...
    மெல்ல இருள் சூழ ஆரம்பித்தது. சற்று முன்னர் வரையில் ஓயாத விவாத அலைகளால் சூழ்ந்திருந்த அந்த வரவேற்பறை இப்போது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இறுக்கமாய் இருந்த சூழலை தன் மழலை மொழியால் இலகுவாக்கிக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. “அம்மா! பசிக்குது” என்று அவள் கூறியதும் தான் அனைவரும் நேரத்தையே கவனித்தனர். எட்டை எட்டக் காத்திருந்தது கடிகாரம். அனைவரும் பசியையும் நேரத்தையும் மறந்து போய்.....
    நிசப்தம்! சற்றுமுன் கலகலப்பாய் இருந்த இடம் இப்போது அத்தனை அமைதியாய் காட்சியளித்தது. தன் அறைக்குச் சென்ற சத்யமூர்த்தி நாழிகைகள் வெகுவாய் நகர்ந்திருந்தும் வெளியே வந்திருக்கவில்லை.  கரைபுரளும் கண்ணீர்த் துளிகள் தரையைத் தொடாதிருக்க வெகுவாய் போராடிக் கொண்டிருந்தார் கலைச்செல்வி. பேசுவதற்கு வார்த்தைகள் ஏதும் வெளியே வராதபடி துக்கம் தொண்டையை அடைத்துக் கிடந்தது.  கெளதம் இப்படிச் செய்வான் என்று அவர் கனவிலும் நினைத்திருக்கவில்லை....
    உதிர்ந்து கிடந்த சரக்கொன்றை மலர்களும், செங்காந்தள் மலர்களும் காற்றின் வேகத்தில் அங்கும் இங்கும் நகர்ந்து, அந்தப் பெரிய வாயிலுக்கு வண்ணக் கோலம் அமைத்தன. குலை தள்ளிய வாழை மரங்கள் இருபுறமும் தோரணமாய் அமைந்தன.  சிட்டுக்குருவிகளின் கீச்.. கீச்.. ஏதோ இரகசிய பரிமாற்றமாய் இருந்தது. வாயிற்கதவுகள் இரண்டும் யாருடைய நல்வரவுக்காகவோ காத்திருப்பதாய் அகண்டு திறந்திருந்தது. வரவேற்பறையில் வரிசையாய் நாற்காலிகளின்...
    error: Content is protected !!