Wednesday, July 15, 2026

    நீயென் நாயகி

    Neeyan Naayagi 5 2

    0
    என்னவானது இவனுக்கு என இவள் விலகி நிற்க, ஆவேசத்தோடு கண்களை திறந்தவன் வேதாவை பார்த்து விட்டு சத்தம் ஏதும் போடாமல், “என்ன வேணும் உனக்கு?” என எரிச்சலாக கேட்டான். “ப்ளீஸ் அவங்கள விட்ருங்க” என தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கெஞ்சினாள். கண்களை சுருக்கிக் கொண்டு பார்த்தவன், “யார் என் முன்னாடி நிக்கிறது வேதநாயகியா?” என...

    Neeyan Naayagi 5 1

    0
    நீயென் நாயகி -5 அத்தியாயம் -5 வேதா கீழே வந்த போது தாத்தா ஹாலில்தான் அமர்ந்திருந்தார், அவருடைய உதவியாளரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். வேதாவை பார்த்தவர், “வாம்மா, நல்லா தூங்கினியா?” என விசாரித்தார். “தாத்தா அது…” என்றவள் உதவியாளரை பார்த்து பேசத் தயங்க, விஷ்வாவின் பி ஏ வினித்’தும் வந்தான். பெரியவருக்கு வணக்கம் தெரிவித்த வினித், “ஸார் இன்னும் எந்திரிக்கலையா ஸார்?”...

    Neeyen Naayagi 4 2

    0
    கைகளை கட்டிக் கொண்டு தள்ளி நின்றிருந்த விஷ்வா இதையெல்லாம் பார்த்துதான் இருந்தான். தன்னை குறித்து வேதாவின் அம்மாவுக்கு என்னவெல்லாம் கற்பனை ஓடுகிறது என அவனுக்கு புரிந்தது. அங்கு நிற்கவே பிடிக்கவில்லை அவனுக்கு. ஆனால் தாத்தா அவனை நகர விடாமல் நிறுத்தியிருந்தார்.  இப்போது தாத்தாவை கண்டனமாக பார்த்து வைத்தான்.  “நீ செஞ்ச காரியத்தோட வீரியம் உனக்கு இன்னும் புரியலை...

    Neeyen Naayagi 4 1

    0
    நீயென் நாயகி -4 அத்தியாயம் -4 வேதாவை புகுந்த வீட்டில் விட்டு வருவதற்காக மனைவியை தயாராக சொன்னார் சந்திரன். திருமணம் செய்து கொள்ளாமல் ஓடுவான், பின் வலுக் கட்டாயமாக தாலி கட்டுவான், இந்த பையன் நல்ல மன நிலையில் உள்ளவனா? அவளுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது? எப்படி நீங்கள் இதற்கு சம்மதம் சொன்னீர்கள் என...

    Neeyen Naayagi 3 4

    0
    தாலி கட்டி விட்டதால் அழைத்து செல்வோம் எனதான் வந்திருந்தார் பெரியவர். ஆனால் அவளிடம் பேசி பார்த்ததில் பேரனை சமாளிக்க இவளை விட சிறந்தவள் இருக்க போவதில்லை என்ற எண்ணம் வலு பெற்று விட்டது. பேரனுக்கு சொத்து சுகம் சேர்த்ததை விட இவளை அவனுக்கு இணையாக்கி விட்டால் அதுவே அவனுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாக இருக்கும் என...

    Neeyen Naayagi 3 3

    0
    கோவத்தில் முகம் சிவந்து விட, அழுகையும் வர கண்ணீரை அழுத்தி துடைத்துக் கொண்டவள், “அந்த வேதா இல்லை இப்போ நான். எனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு, உன்கிட்ட பேச உன் மூஞ்ச பார்க்க எதுவும் பிடிக்கல எனக்கு” என்றாள். அவள் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவும் ஆயாசமாக பார்த்தான். “நீ போலாம், போ இங்கேருந்து” என சொல்லி...

    Neeyen Naayagi 3 2

    0
    “தாத்தா ப்ளீஸ் இப்படியான பேச்செல்லாம் எனக்கு கேட்க வேணாம். வந்தா வச்சு வாழுறேன், இல்லியா…” என்றவன் தோள்களை குலுக்கினான். “இப்படி சொன்னா பொண்ண அனுப்பி வைப்பாங்களாடா உன்னோட? முட்டாள்!” கோவமாக முகத்தை திருப்பினான் அவன். “நாளைக்கு நாம அங்க போறோம், கூட குறைச்சுதான் பேசுவாங்க, எதிர்த்து ஒரு வார்த்தை பேசக்கூடாது சொல்லிட்டேன். வேதாவை நல்லா வச்சுப்பேங்கிறது தவிர வேற...

    Neeyen Naayagi 3 1

    0
    நீயென் நாயகி -3 அத்தியாயம் -3 தனது வீட்டில் அழுது வீங்கிய இமைகளோடு சோர்வாக படுத்திருந்தாள் வேதா. ‘என் மகளின் வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டாகி விட்டதா? உங்கள் மகன் எது செய்தாலும் நீங்கள் ஆதரவு கொடுங்கள், எங்களையும் அப்படி இருக்க சொல்வது என்ன நியாயம்? உங்கள் அண்ணன் தங்கையின் மீது பாசமாக இருக்கிறார் என்றால் அவர் குடும்பத்தையே ஆட்டி...

    Neeyen Naayagi 2 3

    0
     “கோயில் போற மூட்லாம் இல்லை, வீட்டுக்கே போலாம்” என்ற வேதாவை கோயிலுக்கும் சித்தார்த்தான் வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான். அவளின் பார்வை சென்ற திசையை பார்த்த சித்தார்த்தும் விஷ்வாவை கண்டு விட்டு திகைத்தான், பின் அவனை கோவமாக பார்த்தான். ‘நீயெல்லாம் எனக்கொரு ஆளா?’ என்பது போல தம்பியை அலட்சியமாக பார்த்த விஷ்வா அவர்களை நோக்கி நடந்தான். ஆமாம் சித்தார்த்...

    Neeyen Naayagi 2 2

    0
    இப்போது திருமணம் நின்றாலும் வேண்டிக் கொண்டதை தள்ளிப் போடாமல் நிறைவேற்ற நினைத்தார். பேரன் வரப் போவது நேற்றே தெரிந்து விட்டதால் கோயில் நிர்வாகியிடமும் நேற்றே பேசியிருந்தார். அவர்கள் இன்று நல்ல நாள் என கூறி வர  சொல்லியிருந்தனர். நேற்று மாலையே தங்கத்தில் திருமாங்கல்யம் வாங்கி மஞ்சள் கயிறில் கோர்த்து வீட்டு பூஜையறையில் வைத்திருந்தார் தாத்தா. மாலை கோயிலுக்கு...

    Neeyen Naayagi 2 1

    0
    நீயென் நாயகி -2 அத்தியாயம் -2 கொடைக்காகனலில் இருந்து விஷ்வா ஊர் திரும்ப கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது. பேக்டரியில் போர்ட் மீட்டிங் ஏற்பாடாகியிருந்தது. முதல் நாளே எல்லாருக்கும் மெயில் சென்றிருக்கவும் பேரன் இன்று வருவான் என்பதை நன்றாக அறிந்தே இருந்த சண்முகநாதனுக்கு அவனது வரவு அதிர்ச்சி அளிக்கவில்லை. வீட்டுக்குள் நுழைந்தவனை உக்கிரமாக பார்த்து வைத்தார். இப்போது அவரிடம் பேசினால்...

    Neeyen Naayagi 1 2

    0
    அவளும் அசரவில்லை. “நீங்க என்னை டாமினேட் பண்றது போல இருக்கு, உங்களோட என் லைஃப் எப்படி போகுமோன்னு சந்தேகமா இருந்ததால என்ன செய்யலாம்னு சித்துகிட்ட டிஸ்கஸ் பண்ணினேன்” என்றாள்.  “அதை என்கிட்டதானே சொல்லணும்? அவன் யார் உனக்கு, எதுக்கு அவன்கிட்ட சொன்ன?” என கோவமாக கேட்டான்.  அவனை ஊன்றி பார்த்தவள், “இதோ இந்த ரெண்டு நிமிஷத்திலேயே உங்களுக்கும்...

    Neeyen Naayagi 1

    0
    நீயென் நாயகி -1 அத்தியாயம் -1 தஞ்சையின் அந்த மிகப்பெரிய திருமண மண்டபம் மக்கள் திரளால் நிறைந்து போயிருந்தது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தரான சண்முகநாதனின் பேரன் விஸ்வசுகந்தனின் திருமணம் என்றால் சும்மாவா?  விஷ்வாவுக்கும் அவனது மாமன் மகள் வேதநாயகிக்கும் திருமணம் செய்யலாம் என பெரியவர்களால் பேசி முடிக்கப் பட்டு குறுகிய காலத்துக்குள்ளேயே தேதியும் குறிக்கப் பட்டிருந்தது. ஆனால் எந்தக்...
    error: Content is protected !!