தேவியின் திருமுக தரிசனம்
செடிக்கொடியில் பனி துளிகள் இன்னமும் விடைபெறாமல் உறங்கி கொண்டிருந்தன.கதிரவன் கண் பார்க்க மெல்ல வண்ண வண்ண மலர்கள் வாசனையை பரப்பியவாறே மொட்டவிழ தொடங்கிய அதிகாலைநேரம்.
சிறுக சிறுக சேமித்து வைத்த காசில் சிரத்தையில்லாமல் வாங்கிய, கௌடா அப்பார்மெண்ட் குடியிருப்பின் இரண்டாவது தளத்தின் முதல் வீட்டில் கந்த சஷ்டி கவசம் டேப்ர்காடில் ஒலித்து கொண்டிருந்தது.
அன்று வைகாசி விசாகம் என்பதால்...