Advertisement

திரும்பி பார்த்தவன் மனையாளின் தலையசைப்பில் வாகனத்தை உயிர்ப்பித்து கிளப்ப, கண்ணாடி வழியே தெரிந்த உருவத்தை திரும்பி பார்க்க எத்தனித்தவளுக்கு மனம் கட்டுப்பாட்டை விதித்தது. கண்ணீர் எட்டி பார்க்க வெளியே வேடிக்கை பார்ப்பது போல தலை திருப்பி கொண்டவள் வழியவிருந்த நீரை துடைத்து கொண்டு இயல்பாய் இருப்பது போல காட்டி கொண்டாள் வருணா.

மழை வந்தால் பால்கனியில் வந்து அமர்ந்து கொள்பவனின் விழிகள் அன்னிச்சையாய் அவள் வசிக்கும் மாடி வீட்டை வருடும். ஒருமுறையேனும்  நேரில் பார்த்ததில்லை ஆனால் பார்க்கும் ஆவலை மட்டும் அடக்கி வைத்திருந்தான் அபிநந்தன். எப்போதும் போல மழையின் சிரிப்பொலி கேட்டு வழக்கம் போல அமர்ந்து கொண்டு அவள் வரவை எதிர்பார்த்து காத்திருக்க,

என்றும் போல துள்ளலுடன் வந்து மழையின் அழகை தூரி செய்வாள் என்று எண்ணி இருந்தவனுக்கு ஏமாற்றமே!. ஏதோ பிரச்சனை என்று தூரத்தில் இருந்து பார்க்கும் போதே புரிந்து போனது அவனுக்கு.

அறையில் இருந்து கையில் உடைகள் அடங்கிய பையுடன் வெளிப்பட்டவள் வீட்டை பூட்டி சாவியை மைதிலியிடம் நீட்ட,

வெடுக்கென பிடிங்கி கொண்டவள்வந்துட்டா பகுமானமா நானும் படிக்கிறேன் பட்டம் வாங்குறேன்னு. வீட்டுல அடக்கி வைக்க ஆள் இருந்திருந்தா தனியா உன்னை அனுப்பியிருப்பாங்களா? காலை உடைச்சி அடுப்பில வச்சிருக்க மாட்டாங்கஎன்று கடுகடுத்தாள் மைதிலி.

இனிமே அவர்கிட்ட பேசுறதை பாத்தேன் பல்லை தட்டி கையில கொடுத்திருவேன் போடி வெளியஎன்று தள்ளிவிட,

நடந்தவைகளை பார்த்து கொண்டிருந்தவன் பதறி போனான் அவளுக்கு ஆபத்து என்று உள்மனம் உரைக்க, கார் சாவியை எடுத்து கொண்டு ஆபத்பாந்தனாக விரைந்தான்

சத்தமில்லாமல் பளிச்சிட்ட மின்னலின் கீற்றும்அடிமனதின் ஆழத்தில் இருந்து பயத்தை கிளப்பிய பேரிடியின் சத்தமும், உயிரை நடுங்க வைத்தது வருணாவை. இது தான் உலகம் என்பதை முதன் முதலாய் அறிந்த தருணம் அத்தனை கசப்பாய் கடினமாய் இருந்தது அவளுக்கு, சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க

எங்கே செல்வது எப்படி செல்வது துணையில்லாமல் நிற்கும் தனக்கு எவர் அடைக்கலம் அளிப்பார் அதுவும் இந்த நேரம் என்ற நினைவே கண்ணீரை வரவழைத்தது.

இது அழுகுற நேரம் இல்ல வருணா பயம் தான் உன்னோட பலகீனம் தைரியமா இருஎன தனக்கு தானே தைரியம் சொல்லி கொண்டாள்.

பட்டென மூடிய கதவின் சத்தத்தில் திரும்பி பார்த்தவளின் முகத்தில் அத்தனை அருவருப்பு.

சீ எவ்வளவு கீழ் தரமாய் பேசிவிட்டார் நினைக்க நினைக்க நெஞ்சு குமிறியது.

அவ்விடத்தில் நிற்பது தன்னை மேலும் மேலும் குனி குறுக வைக்கும் என்று உடமையை எடுத்து கொண்டு மழையின் பலத்தையும் குளிர் காற்றின் வேகத்தையும் பொருட்படுத்தாமல் விறுவிறுவென நடந்தாள் வருணா.

பலத்த மழையில் செல்லும் வழி தெரியவில்லை சேரும் இடமும் தெரியவில்லை ஆனால் தீயாய் சுட்ட வார்தைகள் நடையின் வேகத்தை அதிகப்படுத்தியது.

வருணா வந்ததில் இருந்தே மைதிலிக்கு சந்தேகம் என்னும் தீ துளிர் விட்டு சுடர் விட தொடங்கியிருந்தது. பாலாஜியின் சாதரணமான பேச்சு கூட அவளுக்குள் பலவிதமான எண்ணங்களை தட்டி எழுப்பியது.

அதுமட்டுமல்லாது அருகில் இருந்தோரின் பார்வையும் கடந்து செல்லும் போது வேண்டுமென்றே கோபத்தை தூண்டும் விதமாக மற்றவர்கள் பேசும் பேச்சும் அவளுக்குள் ஆத்திரத்தை உந்த,

கல்லூரியில் வருணாவை சேர்த்துவிட்டு கையோடு அழைத்து வந்து இல்லத்தில் சேர்ப்பித்த பாலாஜி, வீதியில் நின்றவாறே கல்லூரியை பற்றியும் பார்த்திருக்கும் வீட்டை பற்றியும் சொல்லி கொண்டிருந்தான்.

அதை பார்த்த மைதிலிக்கு அடிவயிற்றில் அமிலம் சுரக்க, வேகமாக இருவரின் அருகில் வந்து, “ரெண்டு நாள்ல வீடு பாத்து கொடுக்குறேன்னு சும்மா பேச்சுக்கு சொல்லிட்டு இவளை இங்கயே தங்க வைக்கலாம்னு நினைக்கிறீங்களா? ஒரு வாரம் ஆச்சு இன்னுமா வீடு கிடைக்கலைஎன்றவள்வீடு கிடைக்கலையாஇல்லை இவளை அனுப்பி வைக்க மனசில்லையா..” என்று சந்தேகமாய் இழுத்தாள் மைதிலி.

மைத்தி என்னாச்சு உனக்கு எதுக்கு இப்டி வீதின்னு கூட பாக்காம காத்திட்டு இருக்கஎன்று தணிவான குரலில் கேட்டான் பாலாஜி.

.. நா கத்துறது தான் உங்களுக்கு பெருசா தெரியிது வீதியே நின்னு நீங்களும் இவளும் சிரிச்சு பேசுறதை பாத்துட்டு இருந்துச்சே அது உங்களுக்கு பெருசா தெரியலை“.  

என்ன உளர்ற?”. 

யாரு நா உளர்றேனா உங்ககிட்ட எனக்கென்ன பேச்சு நா அவகிட்ட பேசிக்கிறேன்என்றவள் வருணாவிடம் பாய்ந்தாள்.

மைதிலியின் கோபத்திற்கான காரணம் தெரியாமல் திகைத்து நின்றவள் சுற்றி இருந்தவர்களின் பார்வையும் கிசுகிசுப்பான பேச்சும் உடலை கூச செய்ய

அக்கா உங்களுக்கு என்னாச்சு எதுக்கு இவ்ளோ கோபமா பேசறீங்க எல்லாரும் நம்மளை தான் பாக்குறாங்க. வெளிய நின்னு பேச வேணாம் எதுனாலும் உள்ள போய் பேசிக்கலாம் வாங்க அக்காஎன்று கைபிடித்து அழைக்க,

வெடுக்கென உதறியவள்நீயும் நானும் கூட பிறந்தவங்களா சொல்லு? அக்கான்னு உரிமையா கூப்பிடுற, வேடிக்கை பாக்கட்டும் அப்ப தான் உனக்கு புத்தி வரும் கல்யாணம் ஆனா ஆம்பளைகிட்ட சிரிச்சு சிரிச்சு அப்டியென்னடி பேச்சு வேண்டி இருக்கு இதை தான் உங்க வீட்டுல சொல்லி அனுப்பினாங்களா?” என்று கடுமையான வார்த்தைகளில் வசைபாட,

மைதிலி பேசிய வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் என்னவென்று கூட அறிந்திடாதவள்இப்போ என்னாச்சுன்னு இப்டியெல்லாம் பேசறீங்க எதுக்கும் ஒரு அளவு இருக்கு மரியாதை கொடுத்தா பதிலுக்கு மரியாதை கிடைக்கும் வயசுல மூத்தவங்கன்னு அமைதியா இருக்கேன்என்று அவளும் கோபமாக பேச,

பாவம் பாத்து வீட்டுல தங்க இடம் கொடுத்தேன்ல நீ ரொம்பவே மரியாதை கொடுப்பஎன்று ஏளனமாக தொனிக்க பேசினாள் மைதிலி.

மைத்தி போதும் காரணமே இல்லாம எதுக்கு இப்டி பைத்தியம் மாதிரி கத்திட்டு இருக்க காலேஜ்ல அட்மிஷன் போட்டாச்சு பக்கத்து தெருவுல வீடு ஒன்னு காலியா இருக்குன்னு கேள்விப்பட்டேன் அதை பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன்“.

இதை நா நம்பணும் அப்டி தானே, இனி ஒரு நிமிஷம் கூட இவ இந்த வீட்டுல இருக்க கூடாது சொல்லிட்டேன் என்னோட வாழ்க்கை எனக்கு முக்கியம் இப்பவே சுதாரிச்சுக்கிட்டா தான் ஆச்சு. ஏய் உன்னோட துணி பையை எடுத்துக்கிட்டு கிளம்பு இனி ஒரு நிமிஷம் நின்னாலும் மானம் கெட்டு போயிரும் கிளம்புடிஎன்று விரட்ட,

இத்தனை பேசிய பிறகும் அங்கிருந்தால் தனக்கு தான் அது அவமானம் என்று எண்ணியவள்

நீங்க என்ன சொல்றது நானே இந்த வீட்டை விட்டு போறேன்என்று வேகமாக பேசிவிட்டு உள்ளே சென்றாள்.

வருணா நில்லுஎன்றவன்என்னமா நீயும் அவளை மாதிரியே பேசுற இங்க உனக்கு யாரை தெரியும். ராகவன் என்னை நம்பி உன்னை இங்க படிக்க அனுப்பி வச்சிருக்கான் உன்னை தனியா அனுப்ப முடியாது திருச்சிக்கு பஸ் ஏத்தி விடுறேன் நீ ஊருக்கு கிளம்பு ராகவன்கிட்ட நா பேசிக்கிறேன்என்று சங்கடமாய் உரைத்தான் பாலாஜி.

இல்லை ண்ணா இங்க நடந்த எதுவும் வீட்டுக்கு தெரிய வேணாம் ரொம்ப வருத்தப்படுவாங்க நீங்க எதுவும் சொல்லிடாதீங்க வீடு பாத்து கொடுத்துட்டேன்னு மட்டும் சொல்லுங்க. லேடீஸ் ஹாஸ்டல் ஏதாவது இருந்தா போய் தங்கிக்கிறேன்,

 வீடு கிடைக்கிற வரைக்கும் அங்கயே இருந்துக்கிறேன் என்னால உங்க நட்புல சங்கடம் உண்டாக வேணாம் ரொம்ப தங்க்ஸ் ண்ணா இங்க தங்க வச்சதுக்குஎன்று சங்கடத்தை மறைத்து சமாதானம் செய்யும் விதமாய் பேசியவள் விறுவிறுவென மாடியில் இருந்த அறைக்கு சென்றாள்.

அதுவரை காற்றில் அலைகழிக்கப்பட்ட மேகங்கள் ஒன்று திரண்டு பூமியை வந்தடைய, மழையென்றும் பாராமல் வெளியே அனுப்பி கதவை சாத்தி கொண்டாள் மைதிலி.

தெருவிளக்கின் துணையோடு தைரியத்தை வரவழைத்து கொண்டு நடந்தாள். தீடீரென அவளை உரசுவது போல வழுக்கி கொண்டு வந்து நின்ற காரை கண்டு திகிலடைந்தவள் நிற்காமல் இன்னும் வேகமாக திரும்பி பார்க்காமல் நடக்க சீரான வேகத்தில் அவளை பின் தொடர்ந்தது அந்த வாகனம்.

யாருமில்லா சாலை ஒற்றை ஆளாய் சமாளிக்க திடம் வேண்டுமே அவசரத்திற்கு ஒதுங்கி கொள்ள ஆள் எவரேனும் இருக்கும் இடம் ஏதேனும் கண்ணில் படக்கூடாதா? அடிவயிற்றில் கிலியை கிளப்ப,

வழியை மறித்தபடி சரக்கென்று பிரேக் இட்டு நின்றது அந்த நான்கு சக்கர வாகனம்திக்திக்கென்று மனம் அடித்து கொண்டது. விசும்பல் விம்மலாய் வெளிப்பட, மழையில் நனைந்து விடாமல் இருக்க குடை விரித்து கூரை அமைத்து கொண்டவன் இறங்கி அவள் அருகே வந்தான்.

இங்க நின்னு எதுவும் பேச வேணாம் கார்ல ஏறு வீட்டுக்கு போய் பேசிக்கலாம்என்றான் அவளுக்கும் சேர்த்து குடை பிடித்தபடி.

விதிர்விதிர்த்து போனாள் வருணா. உடல் நடுங்கியது அதை விட உள்ளம் உதறல் எடுக்க தொடங்கியது. திருதிருவென விழித்தவள் தப்பி செல்ல ஏதேனும் வழி இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்க்க,

மெலிதாய் சிறு புன்னகை சிந்தியவன்எவ்ளோ நேரம் இப்டியே ஈரத்துல தவமிருக்க போறதா உத்தேசம். டைம் ஆகுது மழை இப்போதைக்கு விடுற மாதிரி இல்லை யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்க உதவி செய்ய தான் வந்துருக்கேன் தப்பா நினைக்க வேணாம்என்று தன்மையாய் பேசினான் அவன்.

Advertisement