Advertisement

என் நந்தவன கனவுகள் வெந்துவிட்டன

ரோஜாவுக்கு முத்தமிட்டோம் கனவில்

முள்ளில் உதடு கிழித்தோம் நிஜத்தில்!!.

கேட்ட வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உறுபோட்டவனுக்கு அவையெல்லாம் உண்மையென ஏற்று கொள்ள முடியவில்லை ஆனால் பேசிய வார்த்தைகளின் வீரியம்?. எத்தனை கேவலமாய் பேசிவிட்டாள் என எண்ணி வெதும்பியது நந்தனின் மனம்.

விழியில் வலியை நிரப்பி ஆகாயத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான்ஆறுதலுக்கு ஆள் இல்லை என்ற குறையை போக்க ஆறாம் விரலை துணையாய் உயிர்த்தெழ வைத்து அதன் தூபத்தை உள்ளிழுத்து வெளியிட்டு கொண்டிருக்க, அலைபேசி அனுமதியற்று சிணுங்கி சிந்தனை கலைத்தது.

முடிந்த வரை புண் பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்றி அதன் ஆயுளை அணைய விட்டு எழுந்து சென்று அலைபேசியை எடுத்து பார்க்க ரிஷி தான் அழைத்திருந்தான்.

சொல்லு ரிஷி ஒர்க் முடிஞ்சதா வீட்டுக்கு வந்துட்டியா?” என சுவாரஸ்யமின்றி, கேட்க வேண்டுமென்று பேச்சை தொடுக்க,

குரலில் தெரிந்த மாறுபாடு என்னவோ ஏதோ என்ற கிலியை கிளப்பியது ரிஷிக்கு.

என்னடா வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு என்னாச்சு ரஞ்சி எதுவும் சொன்னாளா?” என தயக்கம் கோபம் இரண்டும் கலந்து வேகத்தை முன்னிறுத்தி கேட்க,

ப்ச் இல்லடாஎன்றான் குரலில் சுரத்தே இல்லாமல்.

நீ பேசுறதே சரியில்லை என்னாச்சு“, தன்மையாக கேட்டான் ரிஷி.

சில நொடிகள் மௌனத்தில் விரயமாக, மெல்ல பேச தொடங்கினான் அபி நந்தன்.

யாருமே இல்லாத மாதிரி இருக்கு ரிஷி மனசெல்லாம் வலிக்கிது இந்த உலகத்துல உனக்கு யாருமே இல்ல நீ அனாதைன்னு முகத்துக்கு முன்னால சொன்னா எப்டி இருக்கும் அந்த மாதிரி வலிக்கிதுடா தாங்க முடியலை மூச்சு முட்டுது பயமா இருக்கு கிளம்பி வர்றியா நீ பக்கத்துல இருந்தா ஆறுதலா இருக்கும்என்றவனின் குரல் கரகரப்பில் தேய்ந்து அடங்கிட,

நந்துஎன அதிர்ந்தான் ரிஷி.

ப்ளீஸ் ரிஷி கிளம்பி வாடா போன்ல எதுவும் கேட்காத சொல்ற நிலையில நா இல்லைஎன நந்தனின் குரல் உள்ளே செல்ல,

அழுகையை அடக்குகிறான் என்பதை விசும்பல் ஒலி காட்டி கொடுத்துவிட, அவனது பேச்சில் கோபம் கொப்பளித்தது ரிஷிக்கு.

யாரு சொன்னது? உனக்கு யாரும் இல்லைன்னு நா வறேன் இப்பவே கிளம்பி வறேன்என அணைப்பை துண்டித்தவனின் மனம் அடித்து கொண்டது.

இத்தனை விரக்தியாய் தனக்கு எவரும் இல்லை என எண்ணி கவலை கொள்ளதாவனின் பேச்சு ரிஷிக்கு பயத்தை கொடுத்தது

அலுவலகத்தில் இருந்து விரைந்து இல்லம் வந்தவன் வேறு எதையும் கூறாமல் திருச்சி சென்று வருகிறேன் என முத்துவிடம் கூறிவிட்டு கிளம்பினான்.

சக்தியெல்லாம் வடிந்து விட்டதை போல தரையில் தொய்ந்து அமர்ந்தவன்எனக்கு தெரியும் வரும்மா நீயா எதுவும் பேசலை என்ன காயப்படுத்தணும்னு உன்ன நீயே தரம் தாழ்த்தி அந்த மாதிரி பேசுனன்னு எனக்கு தெரியும். சந்தனம் எப்பவும் சாக்கடையாகது

நீ என்ன நினைக்கிற என்ன பேசுற எப்டி பேசுவன்னு எனக்கு தெரியும் நா முட்டாள் இல்ல  வரும்மா ஆனா ஏன் அப்டி பேசுன அந்த வார்த்தை அதை தான் என்னால தாங்கிக்க முடியலை. என்மேல உனக்கிருக்கிற கோபம் நியாயம் இல்லாதது என்னோட காத்திருப்புகளுக்கு பலன் கிடைச்சிருச்சுன்னு சொல்ல முடியாத சந்தோஷத்தை சுமந்துட்டு வந்தேன்

ஆனா ஒரே வார்த்தையில மொத்தமா என்ன கொன்னுட்டியே அந்த அளவுக்கு என்னை வெறுக்குறியா? முதல என்னை வெறுக்க தெரியுமா? எப்ப இருந்து இந்த வெறுப்பு வரும்மா. மனசு வலிக்கிது இப்பவும் என்னால நம்ப முடியலை பேசினது நீ தானான்னு. என்ன வார்த்தை சொல்லிட்டஎன சுட்ட வார்த்தைகளின் வீரியம் தாங்காமல் தன் போக்கில் புலம்பினான்.

அறையின் நிசப்தம் மேலும் மேலும் அவனுக்குள் தனிமையை திணித்தது. கோபம் கட்டுக்கடங்காத கோபம் ஆனால் அதை காட்டும் வழிதான் தெரியவில்லை. அவன் மீதெழுந்த கோபத்தை உயிரற்ற பொருட்களின் மீது காட்டுவது நியாயமில்லையே? சுட்ட வார்த்தைகளை சூட்டோடு சுட்டாக அணைத்து கொள்ள வேண்டி குளிர் நீரை தேடி குளியலறை நாடினான்.

சவரின் அடியில் நின்று குளிர் சாரலை மேனியில் படவிட்டவனின் விழி நீரும் தண்ணீரோடு தண்ணீராக கலந்து கரைந்து சங்கமம் ஆக தொடங்கியது.

விடியாத இரவு விடிந்து விட்ட மகிழ்ச்சியில் மண்டியிட்டு கண்ணீர் வடித்தவனின் செயலை புருவம் இடுங்க மேடையில் இருந்து பார்த்து கொண்டிருந்த ரஞ்சனி, நடையில் வேகத்தை புகுத்தி பதறி கொண்டு அவன் அருகில் வந்தாள்.

அர்த்தமற்ற அவன் அழுகை அவளுக்குள் பரிதவிப்பை ஏற்படுத்தஎன்னாச்சு உங்களுக்கு எதுக்கு அழுகுறிங்க அடி எதுவும் பட்டுட்டுச்சா சொல்லுங்கஎன பதட்டம் நிறைந்து கேட்க,

கண்ணீரோடு கரை சேர்ந்த புன்னகையை மட்டுமே பதிலாய் அளித்தான் நந்தன். அவன் செய்கை புரியவில்லை ஆனால் அவன் அழுகை வலியில் உண்டானது அல்ல என்பது மட்டும் அவளின் சிறிய அறிவிற்கு புரிந்தது.

மண்டியிட்டு அவனை போலவே அவன் முன் அமர்ந்து கொண்டவள்எதுக்கு அழுகுறிங்க ப்ளீஸ் சொல்லிட்டு அழுங்க யாரும் எதுவும் சொன்னாங்களா? இல்லை அடி எதுவும் பலமா பட்டுருச்சு சொல்லுங்க ப்ளீஸ்என நந்தனின் முகத்தை தன் புறம் திருப்பி கேட்டாள்.

அவன் கண்களில் கண்ணீரோடு கலந்த காதல் புதிதாய் தெரிந்தது அவளுக்கு, தலையை லேசாய் சாய்த்து ரஞ்சனியின் பின்னால் பார்வையை படர விட்டவன்வருணாஎன்றான் புன்னகை இழையோட,

ஒருவேளை முற்றிவிட்டதோஎன எண்ணியவள் அவன் பார்வை சென்ற பாதையில் தன் விழிகளை பயணிக்க வைக்க, சற்றும் எதிர்பார்க்கவில்லை வருணாவின் வரவை. அதிர்ந்து உறைந்து போனவள் நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் கண்களை கசக்கி பார்த்தாள் ரஞ்சனி.

இவளா!” என்ற பேரதிர்ச்சியை தாங்கிய வார்த்தைகள் மட்டும் நந்தனின் செவிகளில் தெளிவாய் விழ,

ரஞ்சனியை பார்த்தவன்என்னோட வருணா, எனக்காக பிறந்தவ எனக்கே எனக்கானவ மறுபடியும் என்னோட வாழ்க்கையில ஐக்கியமாக வந்துட்டா. என்னோட நீண்ட கால தவத்துக்கு வரம் கிடைச்சிருச்சுஎன கண்ணீரை அழுந்த துடைத்து விட்டு ரஞ்சனியை விலகி செல்ல,

சட்டென நந்தனின் கையை பிடித்து கொண்டாள்.

உங்களை விட மாட்டேன் நீங்க எனக்கு மட்டும் தான் உங்களை விட மாட்டேன்என்றாள் வார்த்தைகளில் அழுத்தத்தை சேர்த்து.

அவளின் தீடீர் செயலில் திகைத்து போனவன்சின்ன பொண்ணுன்னு பாக்குறேன் கைய விடுஎன அவள் பிடியில் இருந்து கையை உருவ முற்பட,

முடியாது உங்களை விட மாட்டேன் இதை என்னால ஏத்துக்க முடியாது, என்னைக்காவது ஒரு நாள் என்னை புரிஞ்சு ஏத்துப்பிங்கன்ற நம்பிக்கைய உடைச்சிறாதிங்க என்னோட கனவை கலைச்சிடாதீங்க. உங்களை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாது அந்த அளவுக்கு உங்களை நேசிக்கிறேன் ப்ளீஸ் என்னோட நேசிப்பை புரிஞ்சுக்கோங்கஎன மனதில் உள்ளதை உணர்வுகள் பிறழாமல் அழகாய் வார்த்தைகளில் வடித்தாள் ரஞ்சனி.

பேசி புரிய வைக்க முயன்றாலும் அதில் பயனில்லை, சுத்தமான பசும்பாலில் துளி விஷம் கலந்து மொத்தமும் பாழானதை போல நஞ்சாய் அடிமனதில் ஆழமாய் விதைக்கப்பட்ட விஷயங்களை அத்தனை சுலபத்தில் பேசி புரியவைத்து மாற்றிட முடியாது. மனதை மாற்றும் நேரமும் இதுவல்ல எவரோ செய்யும் சுயநலம்மிக்க செயல்கள் சிலரின் வாழ்வை மொத்தமும் சிதைத்து விடுகிறது ரஞ்சனியின் மீது கோபம் இருந்தாலும் அதை காட்டும் தருணம் இது இல்லை முடிந்தவரை சொல்லில் செயலை காட்டுவது தான் நல்லது நிதனமாக சிந்தனைகளை சீர்படுத்தி பேச தொடங்கினான் அபிநந்தன்.

இங்க பாரு ரஞ்சி உன்மேல எனக்கு அந்த மாதிரி எண்ணம் வந்ததே இல்லை யாரோ என்னமோ சொல்றாங்கன்னு வீணா என்மேல ஆசைய வளத்துகிட்ட ஆனா அதெல்லாம் ஒரு காலும் நடக்காதுஎன பொறுமையை இழுத்து பிடித்து சொல்ல,

ஏன் நடக்காதுன்னு சொல்றிங்க?. அவள விட நா எந்த விதத்திலு குறைஞ்சு போயிட்டேன் என்னோட காதல் எதுல தரம் குறைஞ்சு போயிருச்சு சொல்லுங்க நந்தன்என வேகமாக கேட்டாள் ரஞ்சனி.

கண்டுபிடித்தவளை மீண்டும் தொலைத்து விடுவோமோ என்ற பயத்தில் அவ்வப்போது வருணா இருப்பதை பார்வையால் உறுதி செய்து கொண்டான் அபி நந்தன். நிலைமையை புரிந்து  கொள்ளாமல் சொல்வதையே திரும்ப சொல்கிறாளே என்ற எரிச்சல் கோபத்தை விளைவிக்க,

பொறுமை இழந்துபைத்தியம் மாதிரி உளறாத ரஞ்சி கைய விடு உன்கிட்ட விவாதம் பண்ண இது நேரம் இல்லை எல்லாரும் இருக்காங்கன்னு பாக்குறேன் என்னோட பொறுமைக்கும் எல்லை உண்டு வரம்பு மீறி போறதை பாத்துட்டு எப்பவும் போல அமைதியா போவேன்னு நினைக்காதஎன அடிக்குரலில் உறுமினான்.

ரஞ்சனியின் பிடியில் இருந்த கையை வெடுக்கென உதறி விடுவித்து கொண்டவன்உனக்கு அவ்ளோ தான் மரியாதைஎன எச்சரித்துவிட்டு வருணாவை காண விரைந்து செல்ல,

ஆத்திரத்துடன் செல்பவனை பார்த்த ரஞ்சனி என்ன நடக்கிறது என்பதை அறிய அவனை பின் தொடர்ந்து சென்றாள்.

பார்த்த இடத்தில் வருணா இல்லை என்றதும் சுற்றும் முற்றும் பரிதவிப்புடன் நந்தன் தேட

மலரும் வருணாவும் பேசிக்கொண்டே மண்டபத்தின் வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். நடையில் அவசரம் காட்டி கிட்டத்தட்ட மலர்கொடியை கைபிடித்து இழுத்து சென்றாள் வருணா.

உருவம் மறையும் முன்பே கண்டு கொண்டவன்வருணா வருணாஎன உரத்த குரலில் அழைத்து கொண்டே வாயிலை நோக்கி வேக நடையில் செல்ல,

ஏய் என்னடி ஆச்சு எதுக்கு இந்த அவசரம் போலீசை பாத்து திருடன் ஒளியிர மாதிரி எதுக்கு இவ்ளோ படபடப்பு நல்லா தானே பேசிட்டு இருந்த திடீர்னு என்னாச்சு?” என்று வருணாவின் செயலில் குழம்பி போன மலர் கொடி காரணம் கேட்க,

இப்போ எதுவும் கேட்காத ப்பா வீட்டுக்கு போனதும் சொல்றேன்  முதல இங்க இருந்து கிளம்புனா போதும் என்னை வெளிய ஆட்டோ ஸ்டாண்ட்ல இறக்கி விட்டுட்டு பாப்பாவை கூட்டிட்டு நீங்க வீட்டுக்கு போங்க ஹோட்டல் போய் பேக்கை எடுத்துட்டு சொல்லிட்டு வறேன்என்றவள்அண்ணா வண்டிய கிளப்புங்கஎன்றாள் ராஜீவிடம்.

Advertisement