Advertisement

எனக்கு உதவி பண்ண நீங்க யாரு எங்க போகணும் எப்டி போகணும்னு எனக்கு தெரியும் நீங்க போங்கஎன்று மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு வெடுக்கென பேசினாள் வருணா.

பயத்தில் படித்தெல்லாம் எண்ணத்தில் வந்து எட்டி பார்த்தது அவளுக்கு. இதே போல பலத்த மழையில் தானே அவளையும் அழைப்பான், காரில் ஏற்றி கொண்டு ஊர் சுற்றி சிறு பெண்ணை அப்பப்பா வெறும் கதையையே ஏற்று கொள்ள முடியவில்லை தனக்கும் அதே போல நேர்ந்தால்!. சட்டென தலையை உலுக்கி கொண்டாள்.

என்ன கற்பனையா?” என்று எள்ளல் நிறைந்த குரல் கேட்டு அவன் முகத்தை பார்த்தாள்.

உங்க உதவி மனப்பான்மைக்கு ரொம்ப நன்றி அர்ஜுனரே, வழிய விடுங்க நா போகணும் ஊர் உலகத்துல உதவி இல்லாம நிறைய பேர் இருக்காங்க உங்க சேவைய அவங்ககிட்ட கொண்டு போங்கஎன்று வேகமாக பேசிவிட்டு விலகி செல்ல,

சட்டென கைபிடித்து கொண்டவன்உதவி இல்லாம நிறைய பேர் இருக்காங்க ஆனா தேடி போய் உதவ முடியாது கண்ணுலயும் கருத்துலயும் படும் போது தான் உதவ முடியும். நீ போற பாதையில ஆபத்து நிறைய இருக்கு இந்த நேரத்துல வேற யார்கிட்டயும் மாட்டிக்க கூடாதுன்னு தான் வந்தேன் பேசாம வண்டியில ஏறு  இங்க ரொம்ப நேரம் நிக்கிறதே ஆபத்து தான்என்றான் சுற்றும் முற்றும் பார்த்தபடி எச்சரிக்கை நிறைந்த குரலில்.

 

இல்ல நா வர மாட்டேன் கைய விடுங்க ப்ளீஸ் என்னை விட்டுருங்க நாபடிக்கணும் எனக்குன்னு கனவுகள் இருக்கு அதை சிதைச்சிறாதீங்கஎன கெஞ்சியவள் அவனிடம் இருந்து கையை விடுவிக்க முற்பட்டாள்.

முன்பை விட இதயம் பலமாய் துடித்தது தைரியமெல்லாம் கரைந்து காணாமல் போக, அழுகையில் கூடியவளை இழுத்து சென்று காரின் உள்ளே தள்ளி கதவை சாத்தி, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவன் வேகமாக சென்று முன் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை செலுத்த தொடங்கினான்.

பயத்தில் உடல் நடுங்க, சீட்டின் ஓரமாய் முடங்கி கொண்டவள்ப்ளீஸ் என்னை இறக்கி விட்டுருங்களேன் நீங்க யாருன்னே தெரியாது இப்டி தான் தெரியாத பொண்ணுகிட்ட கடுமையா நடந்துப்பீங்களா?” என அழுகையின் ஊடே கேட்க

உன்னோட பேர் தெரியாது ஊர் தெரியாது ஆனா நீ என்ன பண்ணுவ எப்டி பேசுவன்னு தெரியும். நீ நினைக்கிற மாதிரியான ஆள் நா இல்லை உனக்கு இப்போ ஒரு வீடு தேவை அதை என்னால அரேஞ் பண்ணி தர முடியும் ஆனா இந்த நேரத்துல முடியாது. ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பாங்க இன்னைக்கு ஒரு நைட் மட்டும் உன்னை என்னோட வீட்டுல தங்க வைக்கலாம்னு இருக்கேன் உன்னோட விருப்பம் எனக்கு முக்கியமில்லைஎன்றவன் தான் குடியிருக்கும் குடியிருப்பின் பார்க்கிங் ஏரியாவில் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு பின்னால் திரும்பி அவளை பார்த்தான்.

பயம் கோபமும் கலந்து விழிகளை உருட்டி வெளியே பார்த்து கொண்டிருக்க,

இங்க யாரும் உன்னை வெளிய போக சொல்ல மாட்டாங்க உன்னை பத்திரப்படுத்த தான் இங்க அழைச்சிட்டு வந்தேனே தவிர வேற நோக்கம் எதுவும் இல்லை. நம்பிக்கை இருந்தா என்கூட வரலாம் இல்லைன்னா இந்த கார்லயே இருந்துக்கலாம் நீ பாதுகாப்பா இருக்கணும் அவ்ளோ தான்என காரிலிருந்து இறங்கி கொண்டான் நந்தன்.

கார் சாவி என்கிட்ட தான் இருக்கும் பத்திரமா உள்ளயே இருக்கலாம் காத்து வர்றதுக்கு கண்ணாடியை ஓப்பன்ல வச்சுட்டு போறேன், என்ன.. கொஞ்சம் பேய் பிசாசுகளோட தொல்லை தான் அதிகமா இருக்கும் பாத்து பயப்படமா இருந்துக்கோஎன்றவன்நீ தான் பூலான் தேவி பேத்தியாச்சே உனக்கென்ன பயம் இருக்க போகுதுஎன சிரிக்காமல் சொல்லிவிட்டு செல்வது போல பாவனை செய்ய,

இருள் படர்ந்த இடத்தை திகிலுடன் பார்த்தவளின் கண்களுக்கு ஏதேதோ உருவங்கள் உயிரோடு நிற்பது போல காட்சியளிக்க, ஈர உடலில் வியர்வையின் படிமங்கள் வழிய தொடங்கியது.

எங்கே தனியாய் விட்டு சென்று விடுவானோ என்று வேகமாக,  “நில்லுங்க நானும் வறேன்என காரின் கதவை தட்டினாள் வருணா.

இதை தானே எதிர்பார்த்தேன். நடையை நிறுத்தியவன் எழுந்த சிரிப்பை மறைத்து கொண்டு என்ன என்பது போல பார்க்க,

நானும் வறேன் தனியா என்னை விட்டுட்டு போகாதிங்க ப்ளீஸ்என்றாள் பயம் நிறைந்து.

தனியா அதுவும் யாருன்னே தெரியாத ஒருத்தர் கூட ஒரே வீட்டுல…” என்று இழுக்க,

உதவி செய்ய தானே வந்துருக்கீங்க உங்களை பாத்தா செத்து போன என்னோட தாத்தா மாதிரி இருக்கீங்க. எனக்கு கெடுதல் நினைக்க மாட்டீங்க அதனால உங்களை நம்புறேன் ப்ளீஸ் என்னை இங்க இருந்து கூட்டிட்டு போங்க இருட்டுனா எனக்கு பயம்என்றாள் இருளான பகுதியை மிரட்சியுடன் திரும்பி பார்த்தபடி.

தாத்தா என்றதும் முறைப்பு காட்டியவனின் விழிகள் இக்கட்டான நிலையிலும் அவளின் இயல்பான பேச்சை கண்டு சிறு புன்னகை உதிர்க்க, எதுவும் பேசாமல் காரின் கதவை திறந்தான்.

சத்தம் போடாம வா நம்பி கூட்டிட்டு போறேன் ஏடாகூடமா ஏதாவது செய்யணும்னு நினைக்காதஎன்று மிரட்டியவன், அவள் இறங்கி கொள்ள வழிவிட்டு விலகி நின்றான்.

பயம் தான் ஆனால் தற்சமயம் வேகத்தை விட விவேகம் முக்கியமல்லவா?.

தயக்கம் இழையோட அவள் இறங்கி கொண்டதும்,கதவை வேகமாக சாத்தியவன்வா போலாம்என்றுவிட்டு முன்னே சென்றான்.

பின்னால் திரும்பி பார்த்தபடி அவனை பின் தொடர்ந்தவள்ஒரு நிமிஷம் கதவை நானே ஓபன் பண்றேன்என்று கையை நீட்டி சாவியை வேண்ட,

கண்களில் ஏன் என்ற காரணத்தையும் இதழில் இதமான புன்னகையையும் தாங்கியபடி எதுவும் பேசாமல் அவளிடம் சாவியை கொடுத்தான்

உள்ள வாங்கன்னு சொன்ன பிறகு தான் நீங்க வரணும் சொல்லிட்டேன் முந்திக்கிட்டு வந்திங்கஎன நிபந்தனை விதித்து எச்சரித்தவள் உள்ளே சென்று சுற்றி பார்த்தாள்.

கைகட்டி நின்றவாறு சுவாரஷ்மாய் அவளின் செயலை பார்த்து கொண்டிருந்தவனுக்கு சிரிப்பு மேலோங்கியது.

வேடிக்கையான பெண்என்று முணுமுணுத்தவன் அடுத்து என்ன செய்ய போகிறாள் என்பதை ஆவல் நிறைந்து பார்த்து கொண்டிருந்தான்.

உடைமையை எடுத்து கொண்டு வேகமாக பக்கவாட்டில் திறந்திருந்த அறைக்குள் சென்று வைத்துவிட்டுஎன்ன தான் நீங்க செத்து போன தாத்தா மாதிரி இருந்தாலும் நூறு சதவிகிதம் உங்க மேல நம்பிக்கை வரலை. அதனால இந்த ரூம் தான் இப்போதைக்கு என்னோட பாதுகாப்பு கவசம் உங்க உதவிக்கு நன்றி, நீங்க இப்போ உள்ள வரலாம்என்று கதவை அடைத்து கொண்டாள் வருணா.

கன்னத்தில் கண்ணீர் உறவாட முதன் முதலாய் அவனை சந்தித்த தருணத்தை நினைத்து பார்த்து கொண்டிருக்க

தனியா இங்க என்னடி பண்ணிட்டு இருக்கஎன்று சத்தம் கேட்டு நினைவு கலைத்தாள் வருணா.

 

சுபர்ணா சாப்ட்டா ராஜுவ் அவளை வெளிய கூட்டிட்டு போய்ட்டு வறேன்னு அழைச்சிட்டு போயிருக்காருஎன்று சிறிதும் சந்தேகம் ஏழாத விதமாய் பேசினாள் மலர்கொடி.

அவளிடத்தில் ஆழமான பார்வை செலுத்திய வருணா,”நீ தான் அவருக்கு நா ஸ்டே பண்ணிருந்த ஹோட்டல் அட்ரஸ் கொடுத்தியா மலர்என நிதனமாக கேட்டாள்.

எவருக்கு?” என தெரியாதது போல கேள்வி எழுப்ப,

ப்ச்என்று உச்சி கொட்டி சலித்து கொண்டவள்ஏன் இப்டி பண்ண யார் கண்ணுல பட கூடாதுன்னு நினைச்சேனோ அவரை மறுபடியும் பாக்குற மாதிரி பண்ணிட்ட நா அவ்ளோ சொன்னேனே உனக்குமா என்னோட உணர்வுகள் புரியலை“.

உன்னோட உணர்வுகளை புரிஞ்சிகிட்டதுனால தான் அவர்கிட்ட நீ இருக்குற இடத்தை சொன்னேன். நீ தங்கிருந்த அதே ஹோட்டல் தான் நந்தனும் இருக்காரு வரு. அவருக்கும் உனக்கும் இடையில எதுவுமே இல்லைன்னு வாய் மட்டும் தான் சொல்லுதே தவிர மனசு இல்லை. நீ கண்ணாடி வழியா மிஸ்டர் நந்தனை பாத்ததை நானும் பாத்தேன்

யாருக்கும் தெரிய கூடாதுன்னு கண்ணீரை மறைச்சியே அதையும் பாத்தேன். அவர் கூட வாழ ஆசை இருக்கு ஆனா பிடிவாதமா அதை அடக்கி வச்சுகிற, கணவன் மனைவி உறவோட மூலமே நம்பிக்கை தான்.

அவரு தப்பானவரு இல்லைன்னு நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுக்க கூடாதா? அவர் தரப்பு நியாயத்தை சொல்லட்டுமே தப்பு பண்ணிட்டு தண்டனை அனுபவிக்கிற வலியை விட தப்பே பண்ணாம அனுபவிக்கிற வலி இருக்கே கிட்டத்தட்ட மொத்தமா போகாம கொஞ்சம் கொஞ்சமா உயிர் போற மாதிரி வேதனை நிறைஞ்சது எதுக்கும் இன்னொரு முறை யோசனை பண்ணு. சாப்பாடு எடுத்து வைக்கிறேன் சாப்டுட்டு யோசனை பண்ணுஎன்று கூறிவிட்டு சென்று விட்டாள் மலர்கொடி.

பொய்கள் நிஜம் என்னும் சாயம் பூசப்பட்டதாலோ என்னவோ அத்தனை பக்குவமாய் எடுத்து சொல்லியும், என்ன தான் யோசனை செய்தும் நம்பிக்கை மட்டும் அவள் எண்ணத்தில் துளிர்விடவில்லை. தன் முடிவில் இருந்தும் சற்றும் பிறழவில்லை இருவரையும் ஒன்றாய் கண்ட காட்சி கண்முன்னே விரிந்து விகல்பத்தை இன்னும் விரிவுபடுத்தி உறவில் பிளவை ஏற்படுத்தியது.

தரிசனம் தொடரும்

Advertisement