மன்னவன் மயங்கும் மலரவள்
அத்தியாயம்- 29
ஒரு கையை இடுப்பில் வைத்தபடி இன்னொரு கையால் நெற்றியை தேய்த்துக்கொண்டு அவளைப் பார்த்தான் குரு.
"சரி மேடம், நான் போய்த் தூங்குகிறேன்," என அவள் நேராகக் கீழே உள்ள அறைக்குச் சென்றாள்.
மணியம்மை அவளின் பின்னால் சென்றவர், படுக்கை விரிப்பைப் போட அவளுக்கு உதவி செய்ய, "நகருங்க," என அனைத்தையும் சரி செய்து கொடுத்தான் குரு.
"சரி...
அத்தியாயம் - 28 b
நிம்மதியாக உறங்கலாம் என அவளைத் தேடி வந்தான் குரு. ஆனால் ஒரே நொடியில் மொத்தமாகக் கூறு போட்டுவிட்டாள். இனி எப்படித் தூக்கம் வரும்? ஒரு பெரு மூச்சுடன் தனக்கு எதிரில் இருப்பவளைப் பார்த்தவன், "நீ நினைக்கிற போல எதுவும் இல்லை. தேவையில்லாமல் கற்பனை பண்ணிக்காத."
"என்னை இதை நம்ப சொல்றீங்களா? எனக்குத்...
அத்தியாயம் - 28
இரவு பன்னிரண்டு மணி இருக்கும். மெல்ல பாத்ரூம் எழுந்து சென்று வந்தாள் செம்பருத்தி. அவளுக்கு யூரின் சென்சேஷன் அதிகமாக இருந்தது. அவள் முகத்தைத் துடைத்துக்கொண்டு வெளியே வர சட்டென அதிர்ந்தாள்.
"இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்?" என மனதுக்குள் ஓட, எதுவும் பேசாமல் கதவைத் திறந்தவள், "வெளியே போ!" என நின்றாள்.
"நான் எதுக்கு...
அத்தியாயம்- 27
குருசேத்ரன் அவளின் அருகில் நெருங்கினான்.
“வீட்டை விட்டு வெளியே போயிடுங்க!!” என்று கூறினாள் திருத்தமாக.
“என்னாச்சு?”
செம்பருத்தி அவனைப் பார்த்து, “எல்லாமே தெரிஞ்சுதான் நீங்க இங்கே வந்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். என்கிட்ட இதுக்கும் மேலயும் நடிக்க வேணாம். எப்போவும் போல உங்க இயல்புல பேசுங்க.”
“என்னோட இயல்புல பேசணும், ரைட்!”
“ம்ம்!” என்றாள் அவனைப் பார்த்து.
“அப்போ எழுந்திரு, மூச்சு முட்டுது....
அத்தியாயம்- 26
தனது கண்களை நம்ப முடியாமல் பார்த்தாள் செம்பருத்தி. மூச்சு விட சிரமப்பட்டாள்.
நித்யா அவளைப் பார்த்து விட்டு, "என்னாச்சு உங்களுக்கு? எதுவும் பிரச்சினையா?" எனக் கேட்டார்.
"இல்லை, இல்லை டாக்டர், நான் நல்லா இருக்கேன்," என்றவள் மெல்ல தன்னைச் சமப்படுத்திக்கொண்டாள்.
"ப்ளீஸ், ஓப்பனா சொல்லுங்க! உங்க கிட்ட அவர் நல்ல விதமா நடந்துகிட்டாரா? இல்லை எதுவும் 'ஹார்ஷா'...
அத்தியாயம்- 25
அவள் புன்னகையுடன் வீட்டுக்குள் நுழைந்ததும் உடனே போன் பறந்தது. மணியம்மை அழைத்தார்.
"அத்தை!!"
"வீட்டுக்குப் போயிட்டியா மா?"
"இப்போ தான் வீட்டுக்குள் வந்தேன். உங்க பையன் வீட்டுட்டுப் போறாப்டி!"
"அப்படியா? சரி, அப்பப்போ போன் பண்ணு. என்னை மறந்திடாத!" என்றார் மணியம்மை.
"கண்டிப்பா," என்றாள் செம்பருத்தி.
"சரி மா," என போனை வைத்தார் மணியம்மை.
இதோ, அடுத்து குருசேத்ரன் அழைத்தான்.
"ஹலோ, என்னங்க? என்னாச்சு?"
"யார்...
அத்தியாயம்- 24
இரண்டு, மூன்று நாட்களாக ஒரே சோர்வாக இருந்தாள் செம்பருத்தி. திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் ஆகியிருந்தது. இறுதியாக அவளது வீட்டில் தான் மாதவிடாய் முடித்தாள். அதன் பின்தான் திருமணமே நடந்தது.
அன்று கருவாடு ஆசையுடன் தான் செய்து சாப்பிட நினைத்தாள். குருசேத்ரன் வந்து தடுத்து விட்டான். 'எதற்கும் பரிசோதனை செய்து பார்க்கலாம்,' என நினைத்தவள்...
அத்தியாயம்- 23
விடமாட்டேன் என ஒரே வார்த்தையில் முடித்திருந்தான் குருசேத்ரன்.
இருவர் முகமும் சடுதியில் மாற, இரண்டு கையையும் தலைக்கு வைத்தபடி அவர்களை ஏறிட்டுப் பார்த்தான்.
மணியம்மை எதுவும் பேசாமல் திரும்பி நடக்க, "ஒரு நிமிஷம் இருங்க."
"என்ன கண்ணு?"
"நீங்க மட்டும் போக வேணாம். சாந்தாவையும் கூட்டிட்டுப் போங்க! அண்ட்," என்றவன் செம்பருத்தியைப் பார்த்து, "உன்னோட மம்மி டாடி வருவாங்களா?"...
அத்தியாயம்-22
இடுப்பில் கை வைத்தபடி அவளைப் பார்த்தான் குருசேத்ரன்.
செம்பருத்தி எதுவும் பேசாமல் உடை மாற்றச் சென்றாள். அவனால் உள்ளமும் சோர்வு, உடல் அதற்கும் மேல் சோர்வு. தன்னை கொஞ்சிக் கொண்டாடித் தீர்த்தால் ஓடிச் சென்று ஒட்டிக்கொள்வேன் என்று நினைத்தானா? அது மட்டும் செம்பருத்தியிடம் நடக்காது. போர்க்களத்தில் பூக்களுக்கு என்ன வேலை என்பதைப் போலத்தான் அவளின் வாழ்க்கை.
உடையை...
அத்தியாயம்-21
"என்ன பண்ணேன்?"
"நீ செம்பருத்தியை மேரேஜ் பண்ணிருக்கியாமே?" என்றாள் சுப்ரியா.
குருசேத்ரன், ஸ்ரீராமை முறைத்துப் பார்க்க, "பாஸ், நான் சொல்லல பாஸ்!!" என்றான் சத்தியம் செய்வது போல தலையில் கை வைத்து கொண்டே.
"அவன் சொல்லல!!"
"அவனா?" என ஸ்ரீராம் நினைத்தான். ஆனால் கேட்கவா முடியும்?
"செம்பருத்தி சொன்னாளா?" என குரு பார்த்தான்.
"அவள் சொல்லல!! எனக்கு தெரிய வந்தது."
"நானே உன்னை இன்வைட்...
அத்தியாயம் - 20
"இன்னும் என்ன தூக்கம்?" எனக் கேட்டுக்கொண்டே அவளை எழுப்பி விட்டான் குருசேத்ரன்.
கஷ்டப்பட்டு கண்களை விழித்துப் பார்த்தாள் செம்பருத்தி.“அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா?” என்னும் ரீதியில் தான் கண்களை தேய்த்தாள்.
“அப்படி என்ன தூக்கம்?”
“நீ எங்கேடா என்னை தூங்க விட்ட? விடிய விடிய...” என மற்ற வார்த்தைகளை அப்படியே முழுங்கிக்கொண்டாள்.
"நான் இருக்கும் போது, ஐ மீன், நான்...
அத்தியாயம் -19
அவனது குறுகுறு பார்வையில் இருந்து தப்பிக்க வேறு வழி தெரியாததால், அவன் முன்னாலேயே உடையை மாற்றினாள். வேறு என்ன செய்ய முடியும்? “விடா கண்டனாக இருக்கிறானே!”
இருவரும் ஒருவழியாக கீழே வந்தார்கள். “மேடம்,” என்றவள் நாக்கை கடித்துக்கொண்டு, “அத்தை, நீங்க வரலையா?” எனக் கேட்டாள் செம்பருத்தி.
“இல்லை மா! எனக்கு இன்னிக்கி முக்கியமான வேலை,” என்ற...
அத்தியாயம்-18
என்ன?” என செம்பருத்தி அவனை விதிர்விதித்து பார்க்க, அவளின் மோவாய் பற்றி நிமிர்த்தினான் குரு.
”சொல்லுங்க...”
”என்னை கல்யாணம் பண்ணதால உன்னோட வாழ்க்கையில் என்ன நடந்திருக்கு, லிஸ்ட் போடு!”
”ஹாங்!!”
”போடுஊஊஊ!!”
”எங்க வீட்ல இருந்து இங்கே வந்தேன்.”
”அடுத்து?”
”உங்க பொண்டாட்டி ஆகிட்டேன்” என சோகமாக கூறினாள் செம்பருத்தி.
”அடுத்து?” என கன்னத்தை அழுத்தி பற்றினான்.
”வீட்ல இருக்கேன்.”
”பின்ன காட்லயா இருப்பாங்க!! அடுத்து?”
”வேற என்ன? உங்க...
அத்தியாயம்-17
“என்ன மா?” என மணியம்மை பார்த்தார்.
“அங்கே மேலே இருக்கிற ரூம் ரொம்ப பெருசா இருக்கு. கலர் பிடிக்கல. அப்புறம் தூக்கமே வர மாட்டேங்குது. எங்க வீட்டையே அடக்கலாம். என் பக்கத்தில் என்னோட தங்கச்சி சம்பு படுத்துப்பா. இன்னொரு பக்கம் தாமரை அக்கா இருக்கும். அப்படி தூங்கிட்டு இப்போ, தனியா இருக்கிற போல ஒரு ஃபீலிங்....
அத்தியாயம்-16
ஒவ்வொரு படிகளும் ஏறவே அவளுக்கு சிரமமாக இருந்தது. அவன் அறை வரவே கூடாது என வேண்டிக்கொண்டாள். முகமெல்லாம் வியர்த்துப் போனது.
செம்பருத்தி!
“மேடம்” எனத் திரும்பினாள்.
“என்ன சொன்ன?”
“அத்... அத்தை!!”
“கொஞ்சம் வேகமா போம்மா!” என மணியம்மை சிரித்துக்கொண்டே கூற,
“இதோ அத்தை” என வேகமாகச் சென்றாள்.
குருசேத்ரன் அவனது மடிக்கணினியைப் பேக்கில் போட்டுவிட்டு வேகமாக வேறு உடைக்கு மாறியிருந்தான். கதவைத் தட்டியபடி...
அத்தியாயம்-15
செம்பருத்தி தயக்கத்துடன் பார்த்தாள் மணியம்மையை.
”என்னாச்சு? என்னைத்தான் உனக்கு நல்லா தெரியுமே. அப்புறம் எதுக்கு என்னை யாரோ போல பார்க்குற?”
”இல்லை, சும்மா மேடம்! அது எனக்கு ஒண்ணுமே புரியல. இன்னும் சில விஷயங்களில் எனக்கு clarity வேணும்” என்றவள் தயங்கிக்கொண்டே, ”சத்தியமா எனக்கு ஒண்ணுமே புரியல. எதுக்கு நீங்க என்னை செலக்ட் பண்ணீங்க? உங்களோட மருமகளாக?...
அத்தியாயம்-14
“என்ன மாமியாரா? எனக்கு மாமியாரா?” என செம்பருத்தி அதிர்ச்சியுடன் கேட்டாள்.
சம்பூர்ணம் ஆர்வத்துடன் கண்கள் விரிய, ”அக்கா, நான் குளிச்சிட்டு தலையை துவட்டிட்டு வெளியே நின்னுட்டு இருந்தேன். திடீர்னு ஒரு காரு வந்தது. நல்லா பளபளன்னு! இந்த எதிர்த்த வீட்டு பையன் ரோகன், ‘வாயை திறந்து பார்த்துகிட்டே ஆடி கார்!’ அப்டின்னான். அது நேரா நம்ம...
அத்தியாயம்-13
“இனிமே நான் ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவேன், தேங்க்ஸ் சுப்ரியா," என்று கூறியவன், "ஆமா, உனக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்? நீ வேலை செஞ்சதுக்குதான் பணத்தோட சேர்த்து டொனேஷனும் உன்னோட ஹாஸ்பிடலுக்கு அனுப்புறேன்," என்றான், அந்தக் கர்வம் குறையாமல்.
"ஓவரா பேசுற," என்று சுப்ரியா முறைத்துப் பார்க்க...
"நீ பண்றது, நீ பண்ணதிலேயே உருப்படியான காரியம் இது...
அத்தியாயம்-12
“கையில வளையல் எங்கே?” எனக் கேட்க…
“ரூம்ல இருக்கு மேடம்! நீங்க டேப்லெட் போட்டீங்களா?” என அனைத்தையும் கேட்டவள், அவருக்கு எடுத்துக்கொடுத்துவிட்டு நொண்டி நொண்டி நடந்து அறைக்குள் சென்று விட்டாள்.
“என்னாச்சு? ஒரு மாதிரி நடக்கிறா?” என்று மணியம்மை சாந்தாவிடம் கேட்க, “நான் காலையிலேயே கேட்டேன் மேடம். அது செம்பருத்தி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாளாம். அதனால கால்...
அத்தியாயம்-11
வளையலைப் பார்த்தபடி நீச்சல் குளத்தின் பக்கம் அமர்ந்திருந்தாள் செம்பருத்தி. "அய்யோ, தங்க வளையலை வேற இந்த மேடம் போட்டு விட்டுட்டாங்களே! நான் என்ன செய்வேன்?" என நினைத்துக்கொண்டிருந்தாள்.
அந்த நேரம் பார்த்து வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. சம்பூர்ணா அழைத்திருந்தாள்.
"ஹலோ, சொல்லு சம்பு."
"ஹே, அக்காவுக்கு நார்மல் டெலிவரி ஆகிடுச்சு. பையன் பொறந்துட்டான்," என உற்சாகத்துடன் கூறினாள்.
"அப்படியா?"...