Thursday, April 25, 2024

    Nee Enthan Vaazhkaiyaana Maayam Enna

    ப்ரீதாவின் திருமணம் முடிந்து ஊரிற்கு வந்த ஶ்ரீயின் குடும்பத்தினர் தத்தமது அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.. ஒரு முக்கியமான ப்ராஜெக்டில் ஈடுபட்டிருந்த படியால் ஶ்ரீ தினமும் வீடு வந்து சேர இரவு ஒன்பது மணி ஆகிவிடும்.... பாதுகாப்பு கருதி ஶ்ரீயை அவளது ஆபிசிலிருந்து அழைத்து வருவார் ராஜேஷ்குமார்.... அன்று ஒரு ரிசப்ஷன் இருந்தபடியால் ராஜேஷ்குமாரால் ஶ்ரீயை...
    கனவு கலைந்து எழுந்து பார்த்தேன் கனவாய் உன் பிம்பம் நிஜமாய் உன் விம்பம் திருமண நாள் காலை அழகாக விடிந்தது.கிராமத்து முறைப்படி திருமணம் என்று இரு குடும்பத்தாரும் முடிவு செய்திருந்த படியால் மணப்பெண் வீட்டின் முன் திருமணத்திற்காக பெரிய பந்தல் அமைத்திருந்தனர்... அங்கு ஐயர் திருமணத்திற்கு தேவையான ஒழுங்குகளை செய்தவாறு இருக்க இடையிடையே வீட்டினரை அழைத்து சில பொருட்களை கொண்டு வந்து தருமாறும்...
    ரிஷியும் ஶ்ரீயும் ஹரி மற்றும் ப்ரீதா இருக்கும் இடம் நோக்கி செல்லும் வழியில் ஶ்ரீ திடீரென்று “ஐயோ மாட்டுனோம்...” “என்னாச்சு ஶ்ரீ...??” “அங்க பாருங்க....” என்று தூரத்தில் வந்துக்கொண்டிருந்த ஒரு மத்திய வயது ஆணை காட்டினாள் ஶ்ரீ... “யாரு ஶ்ரீ அது??? உங்க ரிலேட்டிவ்வா???” “அது ஆறுசாமி மாமா... அவரை நாங்க வம்புச்சாமி மாமானு தான் கூப்பிடுவோம்... ஏதாவது வம்பை இழுத்துவிட்டுட்டு...
    கன்னியவள் காதல் காதலனை நிலைதடுமாறச் செய்ததாக கூறியது  வரலாறு... ஆனால் என்னவளின் குறும்புச் செய்கை என்னை அவள் முன் கோழையாக்கியதை எழுதுமா இந்த வரலாறு???   ப்ரீதாவின் திருமணத்திற்கு இரு நாட்கள் முன்னதாகவே வந்திறங்கினர் ராதா தவிர்ந்த மற்ற அனைவரும்.. விடுமுறை கிடைக்காத காரணத்தால் இவர்கள் திருமணத்திற்கு இருநாட்கள் முன் வர ராதாவோ சொல்லியது போல் ஒரு வாரம் இருக்கையிலே ஊரிற்கு வந்து தன் தமக்கைக்கு துணையாய்  இருந்தார்.. வந்திறங்கியதும் வழக்கம் போல் அவளது சேட்டையும்...
    உன் பேச்சுக்கள் என்னை வசியப்படுத்துகின்ற விந்தை உன் கண்கள் என்னை சிறைப்பிடிக்கும் புதுமை உன் சிரிப்பு என்னை சிதறடிக்கும் அதிசயம் உன் மனம் அறிந்ததா பெண்ணே.....???? அன்று தன் தங்கை மற்றும் அம்மாவுடன் ஷாபிங்கிற்காக மாலிற்கு வந்திருந்தாள் ஶ்ரீ... ராதாவை தனியே விட்டுவிட்டு ஶ்ரீயும் அனுவும் அந்த மோலை சுற்றிக்கொண்டிருந்தனர்... அந்த மாலினுள் இருந்த அனைத்து கடைகளிலும் புகுந்து சிறு சேட்டைகள் செய்து கலைத்தவர்கள் ராதாவிடம் சொல்லிக்கொண்டு கடைசியாக புட் கோட்டிற்கு...
    அன்று ஆதேஷின் திருமணத்திற்கு தன் தோழி ஹேமா மற்றும் சஞ்சனாவுடன் வந்திருந்தாள் ஶ்ரீ.... வாட்சப் குரூப்பின் மூலம் வினயாவிற்கு நட்பாகிய சஞ்சனா மற்றும் ஹேமா, ஆதேஷிற்கு உடன் பிறவா சகோதரிகளாகினர்...ஒரு வார உரையாடலில் அவர்களுக்கிடையில் ஒரு வித சகோதரத்துவமும் நட்பும் இழையோடியிருந்தது.... இவர்களுடன் சுந்தர் மற்றும் ரவியும் இணைந்து கொண்டிருந்தனர்... இரண்டு நாட்களுக்கு முதல் நடைபெற்ற...
    கன்னி மனது கலங்கமடைய கண்ணனவன் குழலோசை வழி செய்யுமா??   ரெஸ்டோரண்டில் தன் நண்பர் பட்டாளத்துடன் கொட்டம் அடித்துக்கொண்டிருந்தாள் ஶ்ரீ... “ஏன் ஶ்ரீ நீ எதுக்கும் பயப்பட மாட்டியா??” என்ற கேள்வி கேட்ட சஞ்சுவிற்கு “பயமா?? ஹா.. அதெல்லாம் என்னோட டிக்ஸனரியிலேயே இல்ல....” என்று கெத்தாக சொல்லிய ஶ்ரீயிடம் ரவி “ஏன் ஶ்ரீ நான் லிப்கோ டிக்ஸனரி, ஒக்ஸ்பர்ட் டிக்ஸனரி இப்படிலாம் கேள்வி பட்டுருக்கேன்... இதென்னா புதுசா...
    வசீகரிக்கும் உன்னை வசீகரித்து நான் வசீகரன் ஆகும் நாள் எப்போது???   “ஹாய் ரிஷி!!” என்று தன் நண்பனின் வருகையில் ஶ்ரீதான்யா பற்றிய எண்ணங்கள் தற்காலிகமாக பின்தள்ளப்பட தன் தோழனை வரவேற்பதில் தன் கவனத்தை செலுத்தினான்...... “வாடா அமெரிக்கா ரிட்டன்.. எப்படி இருக்க??? எங்கள எல்லாம் இன்னும் நியாபகம் வச்சிருக்கியே??” என்று உரையாடலை ஆரம்பிக்க “ஏன்டா இப்படி ஓட்டுற?? ஏதோ காண்டக்ட் விட்டுப்போச்சு ... அதுக்காக...
    கனவிலே தோன்றிய விம்பம் வாழ்நாள் முழுவதும் தொடரும் என்று உணர்ந்தது உன்னை பார்த்த அந்த நொடி கார் பாக்கிங்கில் தன் பென்ட்லியை நிறுத்திவிட்டு டைன்மோர் என்று பெயர் பலகையினை தாண்டி வெவ்வேறு நிற குரோட்டன் செடிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்த சிறு நீரூற்று வாயிலிற்கான வழியை மறைத்தாற் போல் நடுவில் நிற்க அவற்றை என்றும் போல் அன்றும் உதாசீனாப்படுத்திய படி அந்த மூன்று நட்சத்திர ஹோட்டலினுள்...
    நிதம் உன்னை அறிய தவம் கிடக்கும் என் கண்களுக்கு…. உன் வரவால் என்று தரிசனம் தருவாய் ரதியே… தனது ஹோண்டாவினை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு கே.டி.சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் என்ற பெயர் பலகையை தாங்கி நின்ற கட்டடத்தினுள் நுழைந்தாள் ஸ்ரீதான்யா. அவளை கண்டவுடன் இன்முகத்துடன் வணக்கம் கூறிய காவலாளி தொடக்கம் வேலைக்கார ஆயா வரை அனைவருக்கும் காலை வணக்கத்தை கூறியவாறு தன் இருக்கையை அடைந்தாள் ஸ்ரீ. அவளை காலை...
    நீ... நான்… என்ற இரு சொல்… நாம்… என்று மாறும் நாள்… அருகிலா தொலைவிலா?? அன்றும் வழக்கம் போல் தன் காதலி நிலவை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தன் கடமையை செய்ய புறப்பட்டான் கதிரவன். தன் வரவுக்காக காத்து நிற்கும் அனைவரையும் மகிழ்விக்க தயாரானான் ஆதவன். அவனது வரவை முன்கூட்டியே அறிவிக்கும் முகமாக அவனது உற்ற தோழனும் நலன் விரும்பியுமான சேவல்...
    உன் கண்கள்… சொல்லும் வார்த்தைகள்… கவிதையா?? காவியமா?? “ஹே விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குட்சுக்கமா…” என்று ஹோம் தியட்டரில் பாடிக்கொண்டு இருந்த அதாவது அலறிக்கொண்டிருந்த பாடலுக்கு ஏற்றாப்போல் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் தன் காலை கடமைகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தாள் ஸ்ரீதான்யா. “தான்யா ஏன்டி காலங்காத்தாலே இப்படி அராஜகம் பண்ணுற?? கொஞ்சமாச்சி பெண் பிள்ளை என்கிற எண்ணம் மனசுல இருக்கா?? எப்ப பார்த்தாலும் இதே சேட்டை...
    error: Content is protected !!