Mounamae Kaathal Mozhi Pesu
மௌனமே காதல் மொழி பேசு
காதல் மொழி - 01
"சிறகிலிருந்து
பிரிந்து வந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத
பக்கங்களில் ஒரு
பறவையின்
வாழ்வை எழுதிச்
செல்கிறது"
என்ற எழுத்தாளர் பிரமிள் அவர்களின் கவிதை வரிகளை விழிகள் விரிய வியப்பாக படித்துக் கொண்டிருந்தாள் அழகே உருவான பனிமலர்.
நமது மண்ணுக்கே உரிய
அழகான மாஞ்சிவப்பு நிறத்தழகி.
மத்தாப்பு சிரிப்பழகி
பெற்றோருக்கு பாசக்காரி
ஊருக்கு குறும்புக்காரி
பிரச்சனை என்று வந்தால்
சண்டைக்காரி எதையும் விட்டுக்கொடுக்காத
வீம்புக்காரி.
எம்.ஏ தமிழ் இவளது படிப்பு. தமிழின் மீது தணியாத காதல் கொண்டவள். புத்தக விரும்பியும் கூட. கல்கி, சாண்டில்யன் முதல் கீட்ஸ், பிரமிள் வரை எழுதிய புத்தகங்களை...