Tuesday, July 21, 2026

    உறவுப் பூக்கள்

    அத்தியாயம் 06 "இன்னைக்கு எந்த ஏரியாவுக்கு போறீங்க ப்ரபா?" "எங்க காலேஜ்க்கு போறவழியில கொஞ்சம் பெருசா ஒரு கால்வாய் ஓடுதுல்ல ம்மா, அததான் சுத்தப்படுத்த போறோம்." "உங்கூட யாரெல்லாம் வர்றாங்க?" "கமலி, ரேஷ்மி, யுகேன், இந்தர்..." தனத்தின் கேள்விகளுக்கு இயல்பாக பதில் சொல்லிக் கொண்டே சென்ற ப்ரபாவுக்கு, இத்தனை நாட்கள் இல்லாமல் புதிதாக இந்த கேள்விகளைக் கேட்கும் அன்னையின் செயல் வித்தியாசமாகத்...
    அத்தியாயம் 05 "நேற்று மாமா அசத்திட்டாங்கல்ல ம்மா. அதுலயும் அந்த பட்டு சாரியோடக் கலர் எனக்கு அவ்ளோ பிடிச்சிருந்தது தெரியுமா?" முகம் பூரிப்பில் மின்ன கற்பகம் சில்க்ஸ் உரிமையாளரின் மகள் மயூரா, தன் தாய்மாமன் கொண்டு வந்திருந்த சாதாரணப் பட்டை சிலாகித்து அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தாள். இன்னும் ஒரு மூன்று நாட்கள் ஓய்வெடுத்துவிட்டே பள்ளிக்குப் போகலாம் என்று சௌந்தர்யா மகளிடம்...
    "அத்தான்... என்னத்தான்... அவர் என்னைத் தான்... எப்படி சொல்வேனடி?" மதிய உணவு இடைவேளையில் வகுப்பறை டெஸ்கில் கவிழ்ந்து படுத்திருந்த ப்ரபாவின் காதுகளில் ராகத்தோடும், அதிகப்படியான குழைவோடும் பாடினாள் கமலி, பிரபாவின் ஆருயிர் தோழி கமலி. காதருகே கேட்ட சத்தத்தில் சட்டென்று கலைந்து, காதை விரலால் தேய்த்து விட்டுக் கொண்டே எழுந்த ப்ரபா, "அடியேய்! எங்காது என்ன சூப்பர் சிங்கர்...
    அத்தியாயம் 10. கற்பகம் விலாஸில் ஒருநாள் காலை உணவை தாய் பரிமாற, தந்தையோடு உண்டு கொண்டிருந்த ரஞ்சித், தான் அமெரிக்கா போகப் போவதாகவும், அப்படி அங்கே போகும் பட்சத்தில் அதன் பிறகு இந்தியா பக்கமே தலைவைத்து படுக்கப் போவதுமில்லை என்றும் தனது அமர்த்தலானக் குரலில் படுதீவிரமாகச் சொல்ல, பெற்றோர்கள் அதிர்ந்து தான் போனார்கள். 'தன் திரண்ட சொத்துக்கள்...
    "ம்ம்.‌.. இதோ வரேன் க்கா" என்றபடியே நகர்ந்தவர், "சாம்பார்ல காரத்தை அள்ளி தட்டிராத." போகிறபோக்கில் மருமகளிடம் சொல்லிக் கொண்டு, “பிள்ளை கவனம்" என்று எச்சரித்து விட்டே சென்றார். அவர் சென்றதும் கதவடைத்துக் கொண்டு உள்ளே வந்த ரேவதி, முதல் வேலையாக ஃபோனில் தன் அம்மாவிற்கு அழைத்தாள். மறுபக்கம் அழைப்பை ஏற்ற அவள் அம்மா மேகலா, "என்னடி, இந்நேரத்துக்கு...
    அத்தியாயம் 07. "என்னுடைய இப்போதைய நிலைமைக்கு உங்களுடைய கவனக்குறைவு தான் காரணம்" என்ற மகளின் நேரடிக் குற்றச்சாட்டில் உள்ளும், புறமும் அதிர்ந்து போயிருந்த இராஜசேகரன், "நான், நம்ம ப்ரபாவதியைத் தான் கல்யாணம் செய்யப் போறேன்" என்ற மகனின் வார்த்தையில், "நம்ம ப்ரபாவதியா! அது யாருடா?” சட்டென்று இப்படித்தான் கேட்டிருந்தார். "வாவ்! சூப்ப்பர்... இதுலயிருந்தே நீங்க குடும்பத்து மேல வச்சிருக்குற...
    அத்தியாயம் 11. "ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு எனக்கு சந்தோஷமா சுபா வழிவிடுவான்னு இத்தனை வருஷமா நான் காத்திருந்தேன். ஆனா அது மட்டும் முடியவே முடியாதுன்னு ஒத்தகால்ல பிடிவாதமா நிக்குறா."  "சரி, அவ வாழ்க்கை, அவ இஷ்டப்படி என்ன வேணா பண்ணிட்டு போகட்டும், நாம ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டு, லைஃப்ல செட்டிலாகுவோம்னு பாத்தா, அதையாவது என்னை நிம்மதியா, சந்தோஷமா...
    அத்தியாயம் 09 "த்த்த... ஆது... ஆது..." உற்சாகப் பந்தாய் தன் இடுப்பிலிருந்து குதித்த அண்ணன் மகள் வைஷ்ணவியிடம், "திடீர்னு ஆடச்சொன்னா, அத்த எப்டி ஆடுவேன் செல்லக்குட்டி? அத்தைக்கு டான்ஸ் வேற வராதே." வீட்டு மொட்டைமாடியில், தான் வளர்த்து வரும் ரோஜாச் செடிகளை, அந்தி மயங்கும் வேளையில் அண்ணன் மகளோடு பார்வையிட்டுக் கொண்டிருந்த ப்ரபா, செடிகளிலிருந்து பார்வையை விலக்காமலேயேச் சொன்னாள். சப்பென்று...
    அத்தியாயம் 08 துளைக்கும் பார்வையோடு தங்களை நெருங்கி கொண்டிருந்த அண்ணனைக் கண்டு சர்வமும் நடுங்கிப்போன ப்ரபாவதி, தன்னியல்பாக ரஞ்சித்தின் பிடியிலிருந்து விலக முயல, அவனின் பிடியோ உடும்பென மாறியிருந்தது. "அண்ணன் பக்கத்துல வந்துட்டாங்க, ப்ளீஸ்ஸ்... விடுங்கத்தான்..." பதறிப்போனவளாய் அவன் முகம் பார்த்து கெஞ்சினாள் ப்ரபா. "உங்களை எப்படி விட்டு கொடுக்க முடியும் அத்தான்னு, இப்போ தான டயலாக் விட்ட...
    "சரிப்பா... சரிப்பா... நீ சொல்லுற மாதிரியே வாங்கிட்டு வந்துடலாம்" என்றவாறே இளையமகனோடு அவர் நகர, ரஞ்சித்திடம், "எங்கப்பா வர்றவரைக்கும் உன் தங்கச்சி காத்திருப்பால்ல" என்று கேட்டான் ஒரு மாதிரியான குரலில். அவனின் கேள்வி, மனதினுள் அடங்கிக் கிடந்த சுபத்ராவின் கோபத்தை தட்டி எழுப்ப முயன்றாலும், அதனை அடக்கியபடியே உட்கார்ந்திருந்தாள். "அதெல்லாம் நீ கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்னா, இந்த...
    அத்தியாயம் 12. அன்னையின் அதட்டலை கண்டுகொள்ளாமல் நிதானமாக மணவறையிலிருந்து எழும்பி நின்ற ரஞ்சித்தைக் கண்டு, ஒரு நிமிடம் அந்த மண்டபமே உறைந்து போனது. அதன்பிறகு சலசலவென்ற சத்தம் உறவினர்களுக்கிடையே ஏற்பட, “என்ன மாப்பிள்ளை இப்பவே எழும்பிண்டேள்? மனையில உக்காந்து மாங்கல்ய தாரணம் முடிச்சிண்டு பொண்ணோட ஜோடியா எழும்புங்கோ" என்றார் ஐயர். ஐயரின் குரலில், விளங்கிக்கொள்ள முடியாத சிரிப்பொன்றை தன்...
    error: Content is protected !!