உறவுப் பூக்கள்
அத்தியாயம் 07.
"என்னுடைய இப்போதைய நிலைமைக்கு உங்களுடைய கவனக்குறைவு தான் காரணம்" என்ற மகளின் நேரடிக் குற்றச்சாட்டில் உள்ளும், புறமும் அதிர்ந்து போயிருந்த இராஜசேகரன்,
"நான், நம்ம ப்ரபாவதியைத் தான் கல்யாணம் செய்யப் போறேன்" என்ற மகனின் வார்த்தையில், "நம்ம ப்ரபாவதியா! அது யாருடா?” சட்டென்று இப்படித்தான் கேட்டிருந்தார்.
"வாவ்! சூப்ப்பர்... இதுலயிருந்தே நீங்க குடும்பத்து மேல வச்சிருக்குற...
அத்தியாயம் 06
"இன்னைக்கு எந்த ஏரியாவுக்கு போறீங்க ப்ரபா?"
"எங்க காலேஜ்க்கு போறவழியில கொஞ்சம் பெருசா ஒரு கால்வாய் ஓடுதுல்ல ம்மா, அததான் சுத்தப்படுத்த போறோம்."
"உங்கூட யாரெல்லாம் வர்றாங்க?"
"கமலி, ரேஷ்மி, யுகேன், இந்தர்..."
தனத்தின் கேள்விகளுக்கு இயல்பாக பதில் சொல்லிக் கொண்டே சென்ற ப்ரபாவுக்கு, இத்தனை நாட்கள் இல்லாமல் புதிதாக இந்த கேள்விகளைக் கேட்கும் அன்னையின் செயல் வித்தியாசமாகத்...
அத்தியாயம் 05
"நேற்று மாமா அசத்திட்டாங்கல்ல ம்மா. அதுலயும் அந்த பட்டு சாரியோடக் கலர் எனக்கு அவ்ளோ பிடிச்சிருந்தது தெரியுமா?"
முகம் பூரிப்பில் மின்ன கற்பகம் சில்க்ஸ் உரிமையாளரின் மகள் மயூரா, தன் தாய்மாமன் கொண்டு வந்திருந்த சாதாரணப் பட்டை சிலாகித்து அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
இன்னும் ஒரு மூன்று நாட்கள் ஓய்வெடுத்துவிட்டே பள்ளிக்குப் போகலாம் என்று சௌந்தர்யா மகளிடம்...
"அத்தான்... என்னத்தான்... அவர் என்னைத் தான்...
எப்படி சொல்வேனடி?"
மதிய உணவு இடைவேளையில் வகுப்பறை டெஸ்கில் கவிழ்ந்து படுத்திருந்த ப்ரபாவின் காதுகளில் ராகத்தோடும், அதிகப்படியான குழைவோடும் பாடினாள் கமலி, பிரபாவின் ஆருயிர் தோழி கமலி.
காதருகே கேட்ட சத்தத்தில் சட்டென்று கலைந்து, காதை விரலால் தேய்த்து விட்டுக் கொண்டே எழுந்த ப்ரபா, "அடியேய்! எங்காது என்ன சூப்பர் சிங்கர்...
அத்தியாயம் 04
"அவ்வளவு பெரிய செயினை அத்தான் அந்த பிள்ளைக்கு போடச்சொல்லி மாமா கிட்ட குடுத்ததும், நான் அசந்தே போயிட்டேன் த்த... எப்படியும் ஒரு அஞ்சாறு பவுன் இருக்காது?"
"உங்க சின்ன மகன்கிட்ட கேட்டா அண்ணன் நகை வாங்குனது எனக்கே தெரியாதுன்னு ஆதங்கப்படுறாங்க."
சடங்கு ஃபங்ஷனில் திடீரென்று சத்யா செயினை எடுத்து தகப்பனின் கையில் கொடுத்து போடச்சொன்னது, மாமியாரை...
அங்கே பள்ளியிலிருந்து திரும்பி வந்திருந்த சுபத்ரா தன் தாய்மாமனிடம் நலம் விசாரித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
ஒருவினாடிக்கும் குறைவான நேரம் அவளை உறுத்துப் பார்த்தவன், தன் பார்வையை மாற்றிக்கொண்டு தன் வேலையில் மீண்டும் ஈடுபட,
அவளோ,"ப்ரபா வந்திருக்காளா மாமா?" என்று விசாரித்துக் கொண்டிருந்தாள் மாமனிடம்.
"ம்ம்... வந்திருக்கா ம்மா. உள்ள இருக்கா போய் பாரு" என்று சண்முகம் சொல்லவும், தலையாட்டியபடியே...
அத்தியாயம் 03.
சரியாக ஐந்து மணியளவில் கற்பகம் விலாஸூக்கு முன்னால் வந்து நின்ற இரண்டு கார்களிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள் சண்முகம் குடும்பத்தினர்.
வீட்டில் உள்ளவர்கள் தவிர தவமணியும் அவரது கணவரும், முரளியின் மாமனார் மாமியாரும் வந்திருக்கவே இரண்டு கார்களை வாடகைக்கு பிடித்திருந்தான் சத்யா.
அதற்கே, “தண்டச்செலவு" என்று முணுமுணுத்திருந்தார் தனலட்சுமி.
வண்டியிலிருந்து இறங்கியவர்கள் கற்பகம் விலாஸை நிமிர்ந்து பார்க்க, தனக்கு...
அத்தியாயம் 02
பெரும் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் சென்னை போர்ட் க்ளப் பகுதியில் உள்ள முத்தையா நகர் காலைநேர சுறுசுறுப்பில் பரபரத்துக் கிடந்தது.
சீராக பராமரிக்கப்பட்டு நீண்டிருந்த தெருவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மனிதர்களின் தோற்றமே அங்கு வாழ்பவர்களின் வாழ்க்கைத் தரத்தைச் சொன்னது.
பெரிய பெரிய காம்பவுண்ட் சுவர்களுக்கு பின்னால், பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் ஒவ்வொரு பங்களாக்களும், அதன் உரிமையாளர்களின்...
அத்தியாயம் 01
"கும்மானிங்..."
"சத்யா ப்ப்பா... கும்மானிங்..."
தன் தங்கை ப்ரபாவதியின் கைகளிலிருந்தபடியே மழலை குரலில் மிழற்றிய இரண்டே வயதான குழந்தை வைஷ்ணவியைப் பார்த்து சிரித்தபடியே மாடிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான் அந்த வீட்டின் மூத்த மகன் சத்யா என்ற சத்யநாதன்.
"குட்மார்னிங் செல்லக்குட்டி..."
அருகில் கண்டதும் தன்னை நோக்கி பாய்ந்த மழலையை தன்னிரு கைகளில் அள்ளிக்கொண்டே சொல்லியவன், அதன் குட்டி மூக்கோடு...