வாழலாம் வா
அத்தியாயம் 04
அருணாச்சலம் தூக்கி எறிந்த வேகத்தில் அந்த அழகான பீங்கான் கப் சுவரில் பட்டு சில்லுச்சில்லாக நொறுங்கி தரையில் விழுந்தது. பார்த்துப் பார்த்து குமரனுக்காக துளசி போட்ட தேனீர் சுவரை அலங்கோலமாக்கியபடி வடிந்து கொண்டிருந்தது.
“ராஸ்கல், எவ்வளவு திமிர் இருந்தா வீட்டுக்கு வருவான். எல்லாம் உன்னால தான் டி.” இனி என்ன நடக்குமோ என்ற பதட்டத்தில்...
அத்தியாயம் 03
“காவேரி ம்மா...” அந்த ஒற்றை அழைப்பில் துளசிக்கு முகமெங்கும் முத்து முத்தாக வியர்த்துவிட, வேகமாக மாடிப்படி இறங்கி கீழே வந்தாள்.
அவளுடைய நினைப்பை பொய்யாக்காமல் குமரன் தான் அங்கே நின்று கொண்டிருந்தான். கடைசி சில படிகள் இறங்கும் முன்னரே ஹாலில் நிற்கும் குமரன் அவள் பார்வையில் விழுந்துவிட, கால்கள் வேகத்தடையில் சிக்கிக் கொண்டது போல...
“ஐயையோ… அப்பிடி எதுவும் கேட்டு வச்சிடாத காவேரி, முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்.” புதிதாக பிரச்சினை எதையும் தங்கை இழுத்து வைத்து விடக்கூடாது என்று அவசரமாகச் சொன்னாள்.
“அப்போ நீ உண்மையாகவே குமரனை லவ் பண்ணலையா க்கா?” இளையவளின் குரல் இப்போது கோபத்தில் லேசாக உயர்ந்திருந்தது.
“பண்ணுனேன் தான். ஆனா அது தொடங்குன வேகத்துலயே முடிஞ்சும் போச்சு. இப்போ...
அத்தியாயம் 02
தங்கையின் கேள்விக்கு ஆமாம் என்று தலையசைத்த துளசியின் கைகள் எதிர்பாராத விதமாக குமரனைக் கண்ட அதிர்ச்சியில் ஜன்னல் கம்பிகளை இறுக்கமாக பற்றிக் கொண்டன. அவள் பார்வையோ அங்கும் இங்கும் நகராமல் பரவசமாக அவன் மீதே மையம் கொண்டிருந்தது.
கடந்திருந்த வருடங்கள் பெண்ணவளின் தோற்றத்தில் அழகான பருவமாற்றங்களை கொண்டு வந்திருந்தது போல, குமரனின் தோற்றத்திலும் மாற்றங்களை...
“என்ன தம்பி, வீட்டு வேலை எல்லாம் முழுசா முடிஞ்சி போச்சா, தட்டியை எல்லாம் கழட்டுறீங்க?” வேலை ஆட்களை மேற்பார்வை செய்தபடி தெருவில் நின்றிருந்த இன்ஜினியரிடம் கேட்டார் சுலோச்சனா. அடிக்கடி அந்த நபரை எதிர்வீட்டில் பார்த்திருந்ததில் ஒரு நட்புணர்வு தோன்றியிருக்க, தயக்கமின்றி கேட்டுவிட்டார்.
“ஆமா ம்மா, இன்னைக்கு வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றாங்க, இன்னும் ரெண்டு நாள்ல வீடு...
அத்தியாயம் 01
“பிறந்த நாள் வாழ்த்துகள் ம்மா துளசி.” மகளுக்கு பிறந்தநாள் என்று சொல்லி அர்ச்சனை தட்டை கோயில் அர்ச்சகரிடம் துளசியின் அம்மா சுலோச்சனா நீட்ட, பெற்றுக் கொண்டவர் புன்னகைமுகமாக துளசியை வாழ்த்தினார்.
பல வருடங்களாக தொடர்ந்து கோவிலுக்கு வருவதால் அவர்கள் அர்ச்சகருக்கு மிகவும் தெரிந்தவர்களாகவே இருந்தனர். இல்லை என்றாலும் கூட அந்த கிராமத்தில் அவர்களுடைய குடும்பத்தைப்...