மௌனத்தின் கீர்த்தனங்கள்
1
வானம் பொத்துக் கொண்டதோ என எண்ணும் வண்ணம் மழை கொட்டி தீர்த்தது. இரவு மணி ஏழு.ஒரு காலத்தில் மழை என்றால் புள்ளிமானாய் மழையில் நனைய துள்ளி ஓடிய கால்கள் வெரூன்றி ஒரே இடத்தில் நிற்க கண்களோ சலிப்போடு மழையை வெறித்தன..
காலம் கடக்கையில் சில நேரம் விருப்பு வெறுப்பும் மாற்றம் கொள்கிறது.. இயற்கையின் விதி போலும்....