Tuesday, July 14, 2026

    சூடிக்கொள் சுடர்கொடியே

    சுடர் - 8     "மாலா!!! என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா???" அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த ஜெகதீசன் மனைவியின் முடிவை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் கேட்க, " ரொம்ப நல்லா யோசிச்சு தாங்க பேசுறேன்" என்றார் மாலாவும் தன் முடிவில் உறுதியாக. இத்தனை உறுதியுடன் கூறுகிறார் என்றால், நிச்சயம் அனைத்தையும் அலசி ஆராய்ந்த பின்பே இந்த முடிவிற்கு வந்திருப்பார் என இத்தனை...
    அவனுக்கான அவளுடைய நேசம் கொஞ்சம் கொஞ்சமாக அவள் கண்முன்னே இறந்து போவதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஐந்து வருடங்கள் காதலித்து மிகவும் ஆசையுடன் அவனின் கரம் பற்றிக்கொண்டு கல்யாண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தவளுக்கு கிடைத்தென்னவோ ஏமாற்றமும், வலிகளும் தான். நல்ல பசியில் இருக்கும் போது, விருந்துண்ண அழைத்து வந்து இலையைப் போட்டு தண்ணீரை மட்டும் வைத்துவிட்டு, உணவிற்காக...
    சுடர் - 7   "மாப்பிள்ளையும் கூட்டிட்டு வந்திருக்க வேண்டிதான?? பக்கத்துல இருக்கன்னு தான் பேரு.. ஆனா ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தான் இந்தப்பக்கம் தலையைக் காட்டுறது!!!" என அங்கலாய்த்துக் கொண்டே தன் மூத்த மகளான துர்காவை வரவேற்றார் மாலா. "நான் என்னம்மா பண்ண?? அங்க அவருக்கு எல்லாத்துக்கும் நான் வேணும்.. ஒரு நாள்...
    சுடர் - 6   ஏழு வருடங்கள் காக்க வைத்து, தன் பொன் வயிற்றில் வரமாய் வந்து பிறந்த ஜெயக்கிருஷ்ணன் மீது, கனகாவிற்கு அத்தனை பிரியம். கனகாவின் எல்லாமும் அவரின் மகன் தான் என்று சொன்னால் மிகையாகது!! அப்படி அவரின் உலகமாய் இருந்தவன், ஒருநாள் இந்த உலகத்தில் இனி இல்லவே இல்லை எனும் நிலை வந்த பொழுது கனகாவால்...
    அதுவரை சற்று அடங்கியிருந்த சுமதியின் அழுகை, கணவரின் நிலையைக் கண்டதும் மீண்டும் ஆரம்பமாகிவிட, வெளிவரத் துடித்த பெரும் கேவலை புடவைத் தலைப்பால் வாயை மூடிக்கொண்டு அணை போட்டார். சுமதியை கண்டிப்புடன் நோக்கிய திவாகர், "ம்மா!!! நர்ஸ் தெளிவாத்தான சொன்னாங்க.. அழுகிற மாதிரி இருந்தா வெளியவே இருங்க... அப்பாகிட்ட வந்து பயமுறுத்துற மாதிரி நடந்துக்காதீங்க!!!" மகனின் கண்டிப்பில் அழுகையை உள்ளடக்க...
    சுடர் - 5   இன்று... அன்றைய நாளுக்கே சென்று விட்டது போல் கனவுலகத்தில் இருந்த நிலன்யாவின் மோனநிலையைக் கலைத்தது அந்த சப்தம். அந்த நிசப்தமான வேளையில், பட படவென கதவைத் தட்டுவது, சுமதிக்கும் நிலாவிற்கும் மனதில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவிக்க, பட்டென்று கட்டிலில் இருந்து இறங்கிய சுமதி, வேகமாய் சென்று கதவைத் திறந்தார். அங்கே, அதீத பதற்றத்தில் முகமெல்லாம் முத்து முத்தாய் வியர்வை...
    அதில் பற்கள் தெரிய பெரிதாய் புன்னகைத்த விஷ்வா, எழுந்து வந்து, தன் தமையனின் தோளில் ஆதரவாய் கையிட்டபடி பக்கவாட்டில் அமர்ந்து கொண்டவன், "ஜெய்!!! நீ என்ன சொன்னாலும் பெரியப்பா முடிவை மாத்த முடியாதுன்னு உனக்கே தெரியும்.. அப்பறம் எதுக்கு எனர்ஜியை வேஸ்ட் பண்ற?? இருபத்தி ஏழு ஸ்டார்ட் ஆகப்போகுது.. இன்னும் மூணு வருஷத்துல அரைக்கிழவன் ஆகிடுவ...
    சுடர் - 4   நான்கு வருடங்களுக்கு முன்.. "சுமதி!!!! நிலா எங்க????" என உற்சாகமாக கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தார் குணசீலன். கோவில் செல்வதற்காக பூ தொடுத்துக் கொண்டிருந்த சுமதியோ, கணவரின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில், பூ கட்டுவதை நிறுத்திவிட்டு எழுந்து கொண்டவர், "என்னங்க?? எதுவும் நல்ல சேதியா??? ரொம்ப சந்தோஷமாத் தெரியுறீங்களே!!!" என்று ஆவலுடன் கேட்க, ஆமோதிப்பாக தலையசைத்த குணசீலனும், "ஆமா சுமதி!!!...
    சுடர் - 3   அந்தி நேரத் தென்றல் காற்று இதமாய் அவளைத் தீண்டி விளையாட, ' என்னை விட்டுவிட்டு நீ மட்டும் எப்படி அவளைத் தீண்டலாம்???' என்று காற்றுடன் செல்லக்கோபம் கொண்ட மழை, அவளைத் தழுவும் நொடிக்காக தயாராக இருந்தது. ' எனக்குச் சொந்தமானவளை நீங்கள் வைத்து போட்டி போடுவீர்களா???' என காற்று தீண்டியதில் சிறிதாய் விலகியிருந்த அவளின்...
    எனவே சற்றும் யோசியாமல், "பத்து வருஷம் என்ன இருபது வருஷம் ஆனாலும், என் தங்கச்சிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாம, என் வாழ்க்கையைப் பத்தி என்னால யோசிக்க முடியாது.. உன்னால அதுவரைக்கும் பொறுமையா இருக்க முடியும்னா இரு!!! இல்லைனா கிளம்பி போயிட்டே இரு டி!!!"  என தான் பேசுவது எத்தனை அபத்தம் என்று புரியாமலே அவன்...
    சுடர் - 2   நிஜத்தில் விட்டுச் சென்றவனின் நிழற்படத்தை மயிலிறகை விட மென்மையாய் வருடிக் கொடுத்தபடி, அவனின் நிழல் உருவத்தையே கண் சிமிட்டாமல் பார்த்திருந்தாள் நிலன்யா!!!! அவன் முகத்தில் தான் அப்பப்பா, எத்தனை சந்தோஷம்!!! உதடுகள் மட்டுமல்லாமல் கண்களும் சேர்ந்து சிரிக்கும் அந்த மாயக்காரனுக்கு!!!! ம்ம்ம்!!! மாயக்காரன் தான்!!!! மின்னலென அவள் வாழ்வில் வந்து கண்மூடித் திறப்பதற்குள்ளே அவளின்...
    சுடர் - 1   "என்ன நிலா?? வேலையா இருக்கியா???" மெதுவாய் பேச்சுக்கொடுத்துக் கொண்டே வந்து தன்னருகில் அமர்ந்த சுமதியை, நிமிர்ந்தும் பாராமலே, "ம்ம்ம்" என்று மட்டும் பதிலளித்து விட்டு, தன் கையில் வைத்திருந்த துணியில் எம்பிராய்டரி போடுவதிலே மும்முரமாக இருந்தாள் நிலா எனும் நிலன்யா. "இன்னைக்குள்ள முடிச்சுக் கொடுக்க வேண்டிய ஜாக்கெட்டா??" என்று மீண்டும் சுமதியிடமிருந்து வந்த...
    error: Content is protected !!