Thursday, June 4, 2026

    அநிருத்தன்

    அத்தியாயம் - 18-1 அம்மா, சினேகாவின் உதவி, புரிதல் இல்லையென்றால் ஷிக்காவிற்கும் அவனிற்கும் இடையே இருந்த பேதங்கள் அவர்களை எப்போதோ பிரித்திருக்கும். அவனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கும். காதலிக்கும் போது அவனும் ஷிக்காவும் உணர்ந்தது கல்யாணத்திற்கு பின் அவர்கள் உணர்வது முற்றிலும் வேறாக இருந்தது. அதாவது அவர்களுக்கிடையே இருக்கும் அன்பு  பலமடங்கு பெருகியிருந்தாலும் அவர்களின்...
    அத்தியாயம் - 18 மனோகர் கதவைத் திறப்பதற்குள் விடாமல் அழைப்பு மணியை அழுத்திக் கொண்டிருந்தாள் சினேகா.  “வரேன்..வரேன்.” கத்தியபடி வேகமாக வந்து கதவைத் திறந்தவனைத் தள்ளிக் கொண்டு வீட்டினுள்ளே வந்தவள், அங்கே இருந்த நாற்காலி மீது அவளது லேப் டாப் பேக்கை தொப்பென்று போட்டு விட்டு, வாசல் கதவிற்கு நேரெதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தலை முதல்...
    அத்தியாயம் - 17 விஜயாவின் அதிர்ச்சியைப் பார்த்து வேகமாக வந்த ஷண்முகம், வாசலில் நின்றிருந்த பிரகாஷைப் பார்த்து,”என்ன டா இப்படி திடீர்னு வந்து நிக்கற?” என்று கேட்டபடி சங்கிலியை விடுவித்து வாசல் கதவை முழுவதுமாகத் திறந்தான். பெரிதாக புன்னகை சிந்தியபடி,“என்ன அத்தை என்னைப் பார்த்து அப்படியே அதிர்ச்சியாகிட்டே? போலீஸ் வீட்லே தலைமறைவா இருந்தா கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சேயா?”...
    அத்தியாயம் - 16 அம்மாவின் அலைப்புறுதலை உணர்ந்தவன், அதைச் சரி செய்யும் பொருட்டு,”.ஒரு வாக்கிங் போயிட்டு வரலாமா? உப்பும்மா செய்திட்டீங்களா?” என்று வினவினான். “ஆச்சு..சட்னி மட்டும் தான் அரைக்கணும்.” என்றார் விஜயா. “அதுக்குள்ளே எப்படி ம்மா செய்தீங்க?” என்று அவன் ஆச்சிர்யப்பட, “அது சாமி கஞ்சிக்காக அரிசி உடைச்சு வைச்சிருந்தேனில்லே அதையே போட்டு கிளறி வைச்சிட்டேன்.” என்று விஜயா விளக்கம்...
    அத்தியாயம் - 15 - 1 விஜயா தில்லிக்குப் போகப் போகிறார் என்று தெரிந்தவுடன் ஜெயந்தி, வசந்தி இருவரும் மாறி மாறி,’என்ன சித்தி இப்படித் திடீர்னு முடிவு எடுத்திட்டீங்க..என் வீட்டுக்கு வாங்க.’ என்று இருவரும் அவரது மனசை மாற்ற முயல, விஜயாவும் கொஞ்சம் போல் கரைய ஆரம்பித்தார். பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லாமல் முக்கியமாக அவனுடைய...
    அத்தியாயம் - 15 மகாவுடன் விஜயா பேசிக் கொண்டிருந்த போது மீண்டும் அதே இலக்கிலிருந்து அழைப்பு வர,”அக்கா, அதே நம்பர்லேர்ந்து ஃபோன் வருது..யாரா இருக்கும்?” என்று அவரிடம் கேட்க, “இரண்டு முறை ஃபோன் செய்யறாங்கண்ணா உனக்கு தெரிஞ்சவங்களா தான் இருக்கும்.” என்றார். “எனக்கு தெரிஞ்சவங்களா?” என்று உரக்க யோசனை செய்த போது அழைப்பு நின்று போனது. “ஆமாம்..நம்ம சொந்தக்காரங்களா கூட...
    அத்தியாயம் - 14-1 அதே போல், ஜெயந்தி, வசந்தி இருவரின் திருமணத்தின் போது சபாபதி மாமா கேட்ட பெரிய தொகையை கொடுத்து அக்காவிற்கு உதவிக்கரம் நீட்டினார் விஜயா. அது மட்டுமில்லாமல் வர் சார்பாக இருவருக்கும் அஞ்சு லட்சம் பெருமானம் கொண்ட தங்க நெக்லெஸ் செட் வாங்கிக் கொடுத்தார். ஜெயந்தியின் பிள்ளை சித்து பிறந்த போது சித்தி...
    அத்தியாயம் - 14 அவரின் தேநீரை சமையலறையிலேயே குடித்து முடித்தவர் ஷிக்காவிற்காக தயார் செய்த தேநீரோடு வரவேற்பறைக்கு சென்றார். அதை மேஜை மீது வைத்து விட்டு லேசாக சாத்தியிருந்த கதவைத் திறந்து கடைக்குs சென்றார் ஜோதி. கைக்குழந்தையோடு இருந்த பெண்மணிக்கு பார்ட்டியில் அணியக் கூடிய விலையுர்ந்த சல்வார் கமீஸ் செட்களைக் காட்டிக் கொண்டிருந்தாள் ஷிக்கா. ஜோதியைப்...
    அத்தியாயம் - 13 -1 தொண்டை ஒரு மாதிரி கரகரவென்று இருந்ததால் சாதாரண தேநீருக்குப் பதிலாக இஞ்சி போட்ட தேநீரோடு சோபாவில் விஜயா அமர்ந்த போது பக்கவாட்டு மேஜையில் இருந்த அவரது கைப்பேசி ஒலித்தது. அழைத்தது அவருடைய அக்கா மகாலக்ஷ்மி.  காணொளி அழைப்பை ஏற்றவுடன்,“விஜி, டீ குடிக்கறேயா?” என்று அவர் கையிலிருந்த தேநீர் கோப்பையப் பார்த்து விசாரிக்க,  “ஆமாம்...
    அத்தியாயம் - 13 கைப்பேசி அழைப்பைச் சினேகா துண்டித்த பின்னும் அதே இடத்தில் அமர்ந்திருந்தார் ஜோதி. வெளியே, கடையில், வாடிக்கையாளருடன் ஷிக்கா உரையாடவது காதில் விழுந்தாலும் அது அவரது கருத்தில் பதியவில்லை. கவனம், கருத்து இரண்டையும் மகள் தான் நிறைந்திருந்தாள். காலமானது அதன் போக்கில் ஓடிக் கொண்டிருக்க இருபத்தி நாலு வயதாகியும் மகளின் கல்யாணம் இன்னும்...
    அத்தியாயம் - 12-1 சற்றுமுன் சமாதானம் செய்து கொள்ள வேண்டுமென்று மகள் சொன்ன போது அடங்க மறுத்த மனசு இப்போது மகன் சொன்னதைக் கேட்டதும் முற்றிலும் முடங்கிப் போனது. அவரின் சம்மதத்தை கேட்கவில்லை அவருக்குத் தகவல் மட்டும் கொடுக்கிறான் மகன் என்று உணர்ந்த போது உடலில் பாரம் ஏறிப் போன உணர்வு ஜோதிக்கு. சினேகாவின் எதிர்காலத்தை...
    அத்தியாயம் - 12 ஜோதியால் மகன், மகள் இருவரையும்  விட்டுக் கொடுக்க முடியாதென்று அவருடைய மகன், மகள் இருவருக்கும் புரியவேயில்லை. ’அவன் கல்யாணம் செய்துக்கட்டும்…என்ன வேணும்னாலும் செய்துக்கட்டும்..நான் இல்லையா உங்களுக்கு..நான் உங்களைப் பார்த்துக்க மாட்டேனா..நீங்க இப்படி அழுது உடம்பைக் கெடுத்துக்காதீங்க..அவனைப் பற்றி இனி யோசிக்காதீங்க.’ என்று மனோகரின் காதல் விஷயம் தெரிய வந்ததிலிருந்து அழுது கரைந்து...
    அத்தியாயம் - 11 கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த இருவரும் கடந்த காலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அலுவலகத்தில் இருந்த சினேகாவை,’சினேஹ் கம் ஹியர்’என்று யாரோ அழைக்க, நிகழ்விற்கு திரும்பிய சினேகா,“அம்மா, இருக்கீங்களா?” என்று ஜோதியிடம் கேட்டாள். “ம்ம்” என்று அவர் ஆமோதிக்க, “பழசை நினைச்சு டயம் வேஸ்ட் செய்யாதீங்க.” என்று அம்மாவைக் கண்டித்தவள்,”அம்மா, எனக்கு வேலை இருக்கு..இப்போ நான் போகணும்..நீங்க...
    அத்தியாயம் - 10 ‘ஸ்டேஷனுக்குப் போகலாம்..இன்ஸ்பெக்டர் அங்கே தான் இருப்பான்.’ என்று காசியப்பன் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டபடி பின்கட்டிலிருந்து வந்த செந்தில் நாதனின் மனைவி மதி, காமராஜின் மனைவி ப்ரியா, பாண்டியனின் தங்கை வேணி மூவரும் அதிர்ச்சியாகினர். கூடத்தில் ஓர் ஓரமாக நின்றிருந்த மீனாட்சி, ஜோதி அருகில் போய் நின்று கொண்டனர். அதுவரை அறை வாசலில்...
    அத்தியாயம் - 09 ஜோதி அவரது சிந்தனையில் தொலைந்து இருக்க, வீட்டினுள்ளேயிருந்து வந்த ஷிக்கா, சிறிது நேரத்திற்கு முன் கௌண்டர் மீது வைத்த துணி மூட்டையைக் காட்டி,”ஆன்ட்டி இதை ப்ரெஸ் போடணும்.” என்று சொல்லி விட்டு சுவரில் சாய்ந்தபடி அவளது கைப்பேசியில் டைப் செய்ய ஆரம்பித்தாள். கேஷ் கௌண்டரிலிருந்து எழுந்து கொண்ட ஜோதி, துணிப் பொதியைத் திறந்து...
    அத்தியாயம் - 8 கணவர் உயிரோடு இருந்திருந்தால் மனோகரின் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பாரா? என்ற கேள்விக்கு எத்தனை முறை பதில் தேடினாலும் ‘தெரிவித்திருக்கலாம்’ என்ற ஒரே பதில் தான் ஜோதிக்கு கிடைக்கிறது. அதே போல்,’கணவர் அப்படிச் செய்திருப்பாரா?’ என்ற கேள்விக்கு எத்தனை முறை பதில் தேடினாலும்,’செய்திருக்கலாம்’ என்று அவருக்கு விடை கிடைக்க, ‘செய்திருக்க மாட்டாங்க’...
    அத்தியாயம் - 7-1 இப்போது அவை அனைத்தும் நினைவுக்கு வர, வீட்டிலேயே தையல் கடை திறந்து விட்டார் ஜோதி. அதைத் தவிர சின்ன குழந்தைகளுக்கு ஸுவட்டர் பின்னுவது, பெட்ஷீட்டில் பூ வேலை செய்து கொடுப்பது என்று சம்பாதிக்க ஆரம்பித்தர் . விடுமுறை நாள்களிலும் தவறாமல் நீச்சல் குளத்திற்கு சென்று கொண்டிருந்த மகளை இழுத்துப் பிடித்து, சின்ன...
    அத்தியாயம் - 7 மதியம் இரண்டு மணி போல் ஆகியிருந்தாலும் வெய்யில் தணிந்தபாடில்லை. சிறிது நேரத்திற்கு முன்பு தான் வேலைக்குக் கிளம்பிச் சென்றிருந்தான் மனோகர். வீட்டின் உள்ளேயிருந்து சின்ன, முகத்திற்கு மட்டும் காற்று கொடுக்கும் மின்விசிறையக் கொண்டு வந்து கேஷ் கௌண்டரில் வைத்திருந்தார் ஜோதி. என்னவோ இன்றைக்கு அவருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அதுவும் மதிய...
    அத்தியாயம் - 6-1 அதன் முடிவில், “டேய், இதெல்லாம் சித்திக்கு தானா? எனக்குக் கிடையாதா?” என்று வசந்தி கேட்க, “அம்மா இங்கே வந்திருக்காங்க அவங்களை அழைச்சிட்டுப் போய் வாங்கிக் கொடுத்தேன்..நீயும் இங்கே வா..உன்னையும் அழைச்சிட்டுப் போய் வாங்கிக் கொடுக்கறேன்.” என்றான் ஷண்முகம். அதற்கு,”அதெல்லாம் நடக்காது டா..மாமா வர மாட்டார்.” என்றாள் வசந்தி. “ஃபோனை அவர்கிட்டே கொடு..நான் கூப்பிட்டா வர மாட்டேன்னு...
    அத்தியாயம் - 06 அடுத்த சில நிமிடங்களில் அவனது உரையாடலை முடித்துக் கொண்டு கடைக்கு வந்த ஷண்முகம் உடைகளுக்கான பில் பணத்தைக் கட்டினான். மந்தீப்பை நாற்காலியில் உட்கார வைத்து விட்டு, சிரித்த முகத்துடன் பணத்தை வாங்கிக் கொண்டு கவரை விஜயாவின் கையில் கொடுத்து அவர்களை வழி அனுப்பி வைத்தாள் ஷிக்கா. அம்மா, மகன் இருவரும் பிரதானச்...
    error: Content is protected !!