அநிருத்தன்
அத்தியாயம் - 55-1
மரியாதையில்லாமல் வெங்கடேஷைப் பற்றி பேசியதே வசந்தியின் நிலைப்பாட்டை அவர்களுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும். என்ன நடந்தாலும் எப்படியாவது வசந்தியை அவளுடைய கணவனிடம் சேர்ப்பித்திட வேண்டுமென்ற முடிவோடு புறப்பட்டு வந்தவர்களிடம் அது போய் சேரவில்லை.
“நீ செய்து வைச்சிருக்கற வேலைக்கு உன்னை வேலைக்காரியா வைச்சுக்கிட்டாலே பெரிசு..எப்படியோ அவர் வீட்லே நீ இருந்தா எங்களுக்குப் போதும்.”...
அத்தியாயம் - 51-1
அவர்கள் இருவருக்கும் குளிர்பானங்கள் கொடுத்து உபசரித்தார் மதன். அடுத்த சில நிமிடங்கள் மூவரும் உலக நடப்பில் ஆரம்பித்து நாட்டு நடப்பின் வழியாக வீட்டு நடப்பிற்கு வந்து சேர்ந்தனர். சினேகாவின் குடும்பம், அவளது வேலை என்று பொதுவாக பேசிக் கொண்டிருந்த போது, திடீரென்று,
“அன்னைக்கு பிரகதி மைதானத்திலே, அந்த ஒரிஸா கடைலே கைலே புத்தகம்,...
அத்தியாயம் - 21-1
“கொஞ்ச நாள், கொஞ்ச நாள்னு நிறைய நாள் ஆகிடுச்சு விஜயாம்மா..இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா தில்லிலே குளிர் பிச்சிட்டுப் போகும்..அப்போ எப்படியும் சென்னைக்கு பறந்து வரத் தான் போறீங்க.” என்று கேலி செய்தாள் நித்யா.
“அப்படி எதுவும் நடக்காது..இங்கே இருக்கறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா? வெய்யிலைச் சமாளிக்கற மாதிரி குளிரையும் சமாளிக்கக் கத்துக்க...
அத்தியாயம் - 59
உறக்கம் வராததால் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த சினேகா இப்போது நான்காவது புத்தகத்தில் இருக்க, உறக்கம் மட்டும் வருவேனா என்று வீம்பாக கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருந்தது. அதற்கு மேல் அந்த முயற்சியை செய்வது வீண் என்று உணர்ந்தவள் மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்து மெல்ல அடி மேல் அடி வைத்து அறையை அளக்க...
அத்தியாயம் - 09
ஜோதி அவரது சிந்தனையில் தொலைந்து இருக்க, வீட்டினுள்ளேயிருந்து வந்த ஷிக்கா, சிறிது நேரத்திற்கு முன் கௌண்டர் மீது வைத்த துணி மூட்டையைக் காட்டி,”ஆன்ட்டி இதை ப்ரெஸ் போடணும்.” என்று சொல்லி விட்டு சுவரில் சாய்ந்தபடி அவளது கைப்பேசியில் டைப் செய்ய ஆரம்பித்தாள்.
கேஷ் கௌண்டரிலிருந்து எழுந்து கொண்ட ஜோதி, துணிப் பொதியைத் திறந்து...
அத்தியாயம் - 14-1
அதே போல், ஜெயந்தி, வசந்தி இருவரின் திருமணத்தின் போது சபாபதி மாமா கேட்ட பெரிய தொகையை கொடுத்து அக்காவிற்கு உதவிக்கரம் நீட்டினார் விஜயா. அது மட்டுமில்லாமல் வர் சார்பாக இருவருக்கும் அஞ்சு லட்சம் பெருமானம் கொண்ட தங்க நெக்லெஸ் செட் வாங்கிக் கொடுத்தார். ஜெயந்தியின் பிள்ளை சித்து பிறந்த போது சித்தி...
அத்தியாயம் - 41
தீபாவளிக்கு இரண்டு நாள்கள் இருக்கையில் விஜயாவின் அழைப்பின் பெயரில் ஜோதியும் சினேகாவும் அவருடைய வீட்டிற்கு வந்திருந்தார்கள். அன்று தான் அவர்கள் இருவருக்கும் நேரம் கிடைத்தது. ஷிக்காவின் புதுக் கடையின் வேலை, கல்யாண வேலை என்று ஜோதிக்கு சரியாக இருந்ததால் சினேகாவிற்கு ஓய்வு நேரம் கிடைத்த போது கூட அவருக்கு கிடைக்கவில்லை. இதற்கு...
அத்தியாயம் - 32
அந்த ஞாயிற்றுக்கிழமை ஏன் வந்தது, விடிந்தது என்று இருந்தது சினேகாவிற்கு. பெண் பார்க்க சம்மதம் தெரிவித்த பின்னர் தான் வள்ளிசாக அவளது மனத்தை வள்ளிமணவாளன் களவாடியிருந்ததை ஒரு கைக்குட்டை புரிய வைத்திருந்தது. இன்று காலையில் கண் விழித்ததுமே தலையணை கீழ் இருந்த கைக்குட்டையை எடுத்து அதில் அவள் செய்திருந்த நூல் வேலைபாட்டை...
அத்தியாயம் - 22
கடையின் வாசலை பெருக்கி விட்டு, வெளியே இருந்த விளக்கை போட்டு, கண்ணாடிக் கதவைச் சாத்திக் கொண்டு கையில் துடைப்பத்துடன் உள்ளே சென்றார் ஜோதி. வீட்டுக்கு செல்லும் கதவைத் திறந்து அதற்குப் பின்னால் துடைப்பத்தை வைத்து விட்டு வரவேற்பறை விளக்கை ஒளிர விட்டு, கதவைச் சாத்தி விட்டு கல்லாவில் வந்தமர்ந்து கொண்டார். சில...
அவளுள் எழுகின்ற கேள்விகளுக்கு யாரிடமிருந்து விடை கிடைக்கூடுமென்று யோசித்து யோசித்து வசந்தியின் மனது பெரும் அழுத்தத்திற்கு உள்ளானது. தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஊரே சந்தோஷமான மனநிலையில் சுற்றிக் கொண்டிருக்க தனியாக வீட்டினுள் முடங்கி இருந்தாள் வசந்தி. மாமியார், மாமனார் இருவரிடமும் பேசி பல நாள்களானது. புது மாப்பிள்ளை என்று மகனின் புது தோற்றத்தை...
அத்தியாயம் - 61
காலில் இருந்த ஷுவைக் கழட்டி எறிந்து விட்டு, கைப்பேசியையும் மற்ற பொருள்களையும் செண்டர் டேபிளில் வைத்து விட்டு படு வேகமாக அவனது படுக்கையறைக்கு செல்லயிருந்தவனை சமையலறையிலிருந்து வந்த விஜயா வழிமறித்து,”சாமி..என்னோட ரூம்லே போய் குளிச்சிட்டு அப்புறம் உங்க அறைக்குப் போங்க.” என்று கட்டளையிட்டார்.
“அம்மா, நான் எங்கே ம்மா உள்ளே போறேன்னு சொன்னேன்..வாசல்லே...
அத்தியாயம்-59-1
“நீ வருவ வருவேன்னு காத்திருந்து ஒன்பதாம் மாசமே ஆரம்பிச்சிடுச்சு டா..இதுக்கு மேலே காத்திருந்தா குழந்தையே பிறந்திடும்னு வளைகாப்புக்கு தேதி குறிச்சு இன்னைக்கு தான் நல்லபடியா நடந்து முடிஞ்சது..காலைலே வந்திருந்தா நீ எல்லோரையும் பார்த்திருக்கலாம்…சினேகாவோட சின்ன மாமா செந்தில் அவங்க மனைவியோட வந்திருந்தார்..நம்ம வீட்லேர்ந்து பழனி மாமா, மீனா மாமி, பிரகாஷ், நித்யா வந்திருந்தாங்க..சத்யன் வரலை..அனிதா...
அத்தியாயம் - 20
கேமரா கண் வழியாக பார்க்காமல் நேரடியாக பிரகாஷைப் பார்த்த நொடியில் அவனது கள்ளத்தனம் உறுதியாக சினேகாவின் மனம் உலைக்களமானது. எதிரில் இருந்தவனை கண்களால் எரித்தவளின் மனது அவளுக்குத் தெரியாமல் அவளைக் கேமரா வழியாக நோக்கியிருந்தவனைப் பஸ்மமாக்கும் அளவிற்கு பொங்கியது. அன்று சத்தம் செய்யாமல் கடையினுள் ஷண்முகம் நுழைந்தது இன்று திருட்டுத்தனமாக நுழைந்தது...
அத்தியாயம் - 31
வீட்டினுள்ளே அவன் நுழைந்த போது ஷர்மாவின் கையில் பெரிய பார்சல் இருந்தது. இவனைப் பார்த்ததும்,
“ஸர்” என்று அட்டென்ஷனில் நின்றார் ஷர்மா. லேசாக தலையசைத்து அவரது வணக்கத்தை ஏற்றுக் கொண்டவன், அப்படியே அவர் உடம்போடு ஒட்டி வைத்திருந்த பார்சலுக்காக கையை நீட்ட, பவ்யமாக அதை அவன் கையில் அதைக் கொடுத்தார். உடனே,
”எங்களோட புடவையை...
அத்தியாயம் - 28
“சொல்லுங்க பெரியப்பா..எப்படி இருக்கீங்க?” என்று சபாபதியை விசாரித்தான் ஷண்முகவேல்.
பத்து நிமிடத்திற்கு மேலாக அக்கா, சிந்து இருவருடனும் அளவளாவிய விஜயா, அதன் பின் அவருடைய மாமாவிடம் சில நொடிகளுக்குப் பேசி விட்டு ஷண்முகத்திடம் கைப்பேசியைக் கொடுத்து விட்டார்.
ஷண்முகத்தின் கேள்விக்கு பதில் கொடுக்க சில நொடிகள் எடுத்துக் கொண்டார் சபாபதி. ‘நல்லா இருக்கேன்’ என்று...
அத்தியாயம் - 5
அப்போது,“நல்லவேளை நீ வந்திட்ட சாமி, எதை எடுக்கறதுன்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..இதெல்லாம்..” என்று விஜயா சொல்ல, உடனே தரம் வாரியாக, விலை வாரியாக துணிகளைப் பிரித்து, அதன் சிறப்பை வாசித்தாள் அந்த இளம் பெண்.
அதைக் கேட்ட பின் விஜயாவைப் போல ஷண்முகமும் குழப்பத்தில் இருக்க,”சின்ன டிசைன்ஸ் உங்களுக்கு நல்லா இருக்கும்...
அத்தியாயம் - 1
காலையிலேயே வெய்யில் மண்டையைப் பிளந்தது. எட்டு மணி தானென்று நம்பமுடியவில்லை. சமையலறையில் வேர்வையில் குளித்தபடி ரவைகிச்சடியைக் கிளறிக் கொண்டிருந்தார் விஜயா. கடைசியாக ஒருமுறை அதை கிளறி விட்டு, அடுப்பை அணைத்தார். ஒரு தட்டைப் போட்டு கடாயை மூடி விட்டு, வரவேற்பறை சுவரில் இருந்த கடிகாரத்தில் ஒரு கண் வைத்தபடி, கேஸ் அடுப்புக்கு...
அத்தியாயம் - 29
பெரிய திடல் ஒன்றில் அமைத்திருந்த பந்தலில் ஜோதியோடு அமர்ந்திருந்தார் விஜயா. இரவு எட்டு மணிக்கு ஜேஜே என்று மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது அந்த இடம். பந்தலைச் சுற்றியும் அதன் உள்ளேயும் செய்திருந்த மின்விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவரந்தன. நாற்காலி, மேஜை கூட அழகான, சரி பார்டர் உடை அணிந்திருந்ததைப் பிரமிப்புடன்...
அத்தியாயம் - 55
அழைப்பு மணியை ஷண்முகம் அழுத்தும் முன்னரே கதவு திறக்க, அந்தப் புறம் நின்றிருந்த சினேகா, மெல்லிய புன்னகையோடு,“வாங்க” என்று விருந்தினர்களை வரவேற்றாள்.
இரண்டு சிறிய பெட்டிகளைக் தூக்கிக் கொண்டு பெரியம்மா, பெரியப்பா, ஜெயந்தி அக்காவின் கணவன் ரங்கநாதனோடு வீட்டிற்குள் வந்தான் ஷண்முகம். இன்றைக்கு டிரைவருக்கு விடுமுறை அளித்திருந்ததால் இவர்களை அழைத்து வர அவன்...
அத்தியாயம் - 18-1
அம்மா, சினேகாவின் உதவி, புரிதல் இல்லையென்றால் ஷிக்காவிற்கும் அவனிற்கும் இடையே இருந்த பேதங்கள் அவர்களை எப்போதோ பிரித்திருக்கும். அவனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கும். காதலிக்கும் போது அவனும் ஷிக்காவும் உணர்ந்தது கல்யாணத்திற்கு பின் அவர்கள் உணர்வது முற்றிலும் வேறாக இருந்தது. அதாவது அவர்களுக்கிடையே இருக்கும் அன்பு பலமடங்கு பெருகியிருந்தாலும் அவர்களின்...