Sunday, May 11, 2025

    அநிருத்தன்

    அத்தியாயம் - 5 அப்போது,“நல்லவேளை நீ வந்திட்ட சாமி, எதை எடுக்கறதுன்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..இதெல்லாம்..” என்று விஜயா சொல்ல, உடனே தரம் வாரியாக, விலை வாரியாக துணிகளைப் பிரித்து, அதன் சிறப்பை வாசித்தாள் அந்த இளம் பெண். அதைக் கேட்ட பின் விஜயாவைப் போல ஷண்முகமும் குழப்பத்தில் இருக்க,”சின்ன டிசைன்ஸ் உங்களுக்கு நல்லா இருக்கும்...
    அத்தியாயம் - 06 அடுத்த சில நிமிடங்களில் அவனது உரையாடலை முடித்துக் கொண்டு கடைக்கு வந்த ஷண்முகம் உடைகளுக்கான பில் பணத்தைக் கட்டினான். மந்தீப்பை நாற்காலியில் உட்கார வைத்து விட்டு, சிரித்த முகத்துடன் பணத்தை வாங்கிக் கொண்டு கவரை விஜயாவின் கையில் கொடுத்து அவர்களை வழி அனுப்பி வைத்தாள் ஷிக்கா. அம்மா, மகன் இருவரும் பிரதானச்...
    அத்தியாயம் - 34 அவளுக்குப் பிடித்தது என்று அந்த தின்பண்டத்தை வாங்கி வரவில்லை ஷண்முகம். விடுமுறை தினம் என்பதால் அன்று போல் இன்றும் கடையில் அதிகச் சரக்கு இல்லை. அன்று அவன் உண்ட தவல வடை அவனுக்குப் பிடித்திருந்ததால் அதையே இன்று வாங்கி வந்தான். அது அவளுக்கும் பிடித்தது என்று தெரிந்திருந்தால்,’நமக்குள்ளே செட்டாகும்னு சொல்ல இது...
    அத்தியாயம் - 4_1 ஸ்ட்டூல் மேல் ஏறி, கீழே குனிந்து என்று கடையில் வேலை செய்யும் நேரிடுவதால், இது போல் வாடிக்கையாளர்களோடு பேசி, பழக வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால், அண்ணனின் வீட்டில் இருக்கும் அவளுடைய உடைக்கு மாறிக் கொள்வது வழக்கம். அதற்காகவே அவளின் உடைகளில் சிலவற்றை இந்த வீட்டில் நிரந்தரமாக வைத்திருக்கிறார் அவளுடைய அம்மா. ஜாகிங்கில்...
    அத்தியாயம் - 7 மதியம் இரண்டு மணி போல் ஆகியிருந்தாலும் வெய்யில் தணிந்தபாடில்லை. சிறிது நேரத்திற்கு முன்பு தான் வேலைக்குக் கிளம்பிச் சென்றிருந்தான் மனோகர். வீட்டின் உள்ளேயிருந்து சின்ன, முகத்திற்கு மட்டும் காற்று கொடுக்கும் மின்விசிறையக் கொண்டு வந்து கேஷ் கௌண்டரில் வைத்திருந்தார் ஜோதி. என்னவோ இன்றைக்கு அவருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அதுவும் மதிய...
    அத்தியாயம் - 7-1 இப்போது அவை அனைத்தும் நினைவுக்கு வர, வீட்டிலேயே தையல் கடை திறந்து விட்டார் ஜோதி. அதைத் தவிர சின்ன குழந்தைகளுக்கு ஸுவட்டர் பின்னுவது, பெட்ஷீட்டில் பூ வேலை செய்து கொடுப்பது என்று சம்பாதிக்க ஆரம்பித்தர் . விடுமுறை நாள்களிலும் தவறாமல் நீச்சல் குளத்திற்கு சென்று கொண்டிருந்த மகளை இழுத்துப் பிடித்து, சின்ன...
    அத்தியாயம் - 10 ‘ஸ்டேஷனுக்குப் போகலாம்..இன்ஸ்பெக்டர் அங்கே தான் இருப்பான்.’ என்று காசியப்பன் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டபடி பின்கட்டிலிருந்து வந்த செந்தில் நாதனின் மனைவி மதி, காமராஜின் மனைவி ப்ரியா, பாண்டியனின் தங்கை வேணி மூவரும் அதிர்ச்சியாகினர். கூடத்தில் ஓர் ஓரமாக நின்றிருந்த மீனாட்சி, ஜோதி அருகில் போய் நின்று கொண்டனர். அதுவரை அறை வாசலில்...
    அத்தியாயம் - 8 கணவர் உயிரோடு இருந்திருந்தால் மனோகரின் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பாரா? என்ற கேள்விக்கு எத்தனை முறை பதில் தேடினாலும் ‘தெரிவித்திருக்கலாம்’ என்ற ஒரே பதில் தான் ஜோதிக்கு கிடைக்கிறது. அதே போல்,’கணவர் அப்படிச் செய்திருப்பாரா?’ என்ற கேள்விக்கு எத்தனை முறை பதில் தேடினாலும்,’செய்திருக்கலாம்’ என்று அவருக்கு விடை கிடைக்க, ‘செய்திருக்க மாட்டாங்க’...
    அத்தியாயம் - 26-1 வேலூரில் இருந்தது வசந்தியின் புகுந்த வீடு. சென்னையில் வேலை செய்து வந்த வெங்கடேஷ் கல்யாணம் வரை தனியாக வீடு எடுத்து வசித்து வந்தான். திருமணம் முடிந்ததும் அதே வீட்டில் வசந்தியுடன் தனிக்குடித்தனத்தை ஆரம்பித்தான். பெயருக்கு தான் அது தனிக்குடித்தனம். வசந்தியின் வீட்டை சின்ன வேலூர் என்று தான் சொல்ல வேண்டும். திருமணமான...
    அத்தியாயம் - 50 அவனது கேள்வியில் அன்றைய இரவிற்குப் பயணம் செய்தவள் அது ஏற்படுத்திய தாக்கத்தைத் தாங்க முடியாமல் கட்டிலில் அமர்ந்தாள். அந்தக் கேள்வி எதற்கு? அது எங்கே போகிறது? என்று அவளுக்குப் புரிந்தாலும் அதற்கு உண்மையான பதிலைக் கொடுக்க முடியாமல் அமைதி காத்தாள் சினேகா. ‘தாலி’ என்ற வஸ்த்துவைப் பற்றி தனிப்பட்ட கருத்தை உருவாக்கக்...
    அத்தியாயம் - 09 ஜோதி அவரது சிந்தனையில் தொலைந்து இருக்க, வீட்டினுள்ளேயிருந்து வந்த ஷிக்கா, சிறிது நேரத்திற்கு முன் கௌண்டர் மீது வைத்த துணி மூட்டையைக் காட்டி,”ஆன்ட்டி இதை ப்ரெஸ் போடணும்.” என்று சொல்லி விட்டு சுவரில் சாய்ந்தபடி அவளது கைப்பேசியில் டைப் செய்ய ஆரம்பித்தாள். கேஷ் கௌண்டரிலிருந்து எழுந்து கொண்ட ஜோதி, துணிப் பொதியைத் திறந்து...
    அத்தியாயம் - 46-3 “வாங்க..வாங்க சம்மந்தி..வாங்க மாப்பிள்ளை..வாங்க தம்பி.” என்று மூவரையும் வரவேற்றார் செல்வம். காசியப்பனை செந்தில் கண்டு கொள்ளவில்லை. இவர்களை அழைத்துக் கொண்டு வரும் போது கண்டிப்பாக அவர்கள் வீட்டில் அவனிருப்பானென்று அவருக்குத் தெரியும். வனிதா நிச்சயத்தில் நடந்த தவறை இப்படித் தான் சரி செய்தால் தான் நமக்கு மரியாதை என்று ஷண்முகம் சொன்னது சரி...
    அத்தியாயம் - 18-1 அம்மா, சினேகாவின் உதவி, புரிதல் இல்லையென்றால் ஷிக்காவிற்கும் அவனிற்கும் இடையே இருந்த பேதங்கள் அவர்களை எப்போதோ பிரித்திருக்கும். அவனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கும். காதலிக்கும் போது அவனும் ஷிக்காவும் உணர்ந்தது கல்யாணத்திற்கு பின் அவர்கள் உணர்வது முற்றிலும் வேறாக இருந்தது. அதாவது அவர்களுக்கிடையே இருக்கும் அன்பு  பலமடங்கு பெருகியிருந்தாலும் அவர்களின்...
    அத்தியாயம் - 20 - 1 அதில் தலையை உயர்த்திய பிரகாஷ், குற்றம் சாட்டும் அவளது பார்வையைச் சந்திக்க முடியாமல் உடனேயே பார்வையைத் தாழ்த்திக் கொள்ள,”அவன் போலீஸ்காரனில்லை கண்ணு.” என்று சொல்லி பிரகாஷிற்கு ஷாக் கொடுக்க, டக்கென்று தலையை உயர்த்தி அதை வெளிப்படுத்தினான் பிரகாஷ். அதற்கு சினேகா எதிர்வினை ஆற்றும் முன்,”அத்தை என்ன உளர்ற?” என்று ஏகவசனத்தில்...
    அத்தியாயம் - 52-1 காலையிலிருந்து உணவு அருந்தாததால் ஒரு மாதிரி மயக்கம் கலந்த தூக்கத்தில் இருந்த வசந்தி, திடீரென எழுந்த பேச்சு சத்தத்தில் விழித்துக் கொண்டாள். டி வி சத்தம், குழந்தைகள் விளையாடும் சத்தத்தோடு இணைந்து போன குரல்களில் அவளைப் பற்றி தான் பேசுகிறார்களென்று அவளுக்கு தெரியவில்லை.  விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தவள் செவிகளில்,’எங்கே வசந்தி அண்ணி?’...
    அத்தியாயம் - 19-1 அந்தப் பதில் சரியான பதில் தானலென்றாலும் அதில் ஏதோ தப்பாக இருக்கிறது என்று உணர்ந்த சினேகாவிற்கு அது என்ன என்ற ஆராய்ச்சியில் இறங்க அவகாசம் கிடைக்கவில்லை. ,”ஷண்முகவேல் என்னோட மகன் கண்ணு..அன்னைக்கு வந்திருந்தானே.” என்றார் விஜயா. “யெஸ்..அன்னைக்கு கடைக்கு வந்திருந்தாங்க..நியாபகமிருக்கு.” என்று சினேகா சொல்ல அதற்கு அடுத்து அந்த உரையாடல் எந்தப் பாதையில்...
    அத்தியாயம் - 13 -1 தொண்டை ஒரு மாதிரி கரகரவென்று இருந்ததால் சாதாரண தேநீருக்குப் பதிலாக இஞ்சி போட்ட தேநீரோடு சோபாவில் விஜயா அமர்ந்த போது பக்கவாட்டு மேஜையில் இருந்த அவரது கைப்பேசி ஒலித்தது. அழைத்தது அவருடைய அக்கா மகாலக்ஷ்மி.  காணொளி அழைப்பை ஏற்றவுடன்,“விஜி, டீ குடிக்கறேயா?” என்று அவர் கையிலிருந்த தேநீர் கோப்பையப் பார்த்து விசாரிக்க,  “ஆமாம்...
    அத்தியாயம் - 33 வேட்டி, சேலை இரண்டும் சிக்கிலில் சிக்கிக் கொண்ட நொடி,”இதோ வந்திட்டான் மனோகர்.” என்று சிக்கல் மேலும் சிக்கலாகும் முன் அதை மீட்டு எடுத்தார் ஜோதி. அவர்களருகே பைக்கில் வந்து இறங்கியது மனோகரின் குடும்பம். ”தாதிகிட்டே போ.” என்று அவளின் மடியிலிருந்த மாண்ட்டியை ஜோதியிடம் கொடுத்தாள் ஷிக்கா. அதே நேரம் சினேகாவின் கையில் பூச்சரத்தை...
    அத்தியாயம் - 55-1 மரியாதையில்லாமல் வெங்கடேஷைப் பற்றி பேசியதே வசந்தியின் நிலைப்பாட்டை அவர்களுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும்.  என்ன நடந்தாலும் எப்படியாவது வசந்தியை அவளுடைய கணவனிடம் சேர்ப்பித்திட வேண்டுமென்ற முடிவோடு புறப்பட்டு வந்தவர்களிடம் அது போய் சேரவில்லை. “நீ செய்து வைச்சிருக்கற வேலைக்கு உன்னை வேலைக்காரியா வைச்சுக்கிட்டாலே பெரிசு..எப்படியோ அவர் வீட்லே நீ இருந்தா எங்களுக்குப் போதும்.”...
    அத்தியாயம் - 11 கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த இருவரும் கடந்த காலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அலுவலகத்தில் இருந்த சினேகாவை,’சினேஹ் கம் ஹியர்’என்று யாரோ அழைக்க, நிகழ்விற்கு திரும்பிய சினேகா,“அம்மா, இருக்கீங்களா?” என்று ஜோதியிடம் கேட்டாள். “ம்ம்” என்று அவர் ஆமோதிக்க, “பழசை நினைச்சு டயம் வேஸ்ட் செய்யாதீங்க.” என்று அம்மாவைக் கண்டித்தவள்,”அம்மா, எனக்கு வேலை இருக்கு..இப்போ நான் போகணும்..நீங்க...
    error: Content is protected !!