Tuesday, July 15, 2025

    MTN 22 3

    0

    MTN 22 2

    0

    MTN 22 1

    0

    MTN 21 2

    0

    MTN 21 1

    0

    MTN

    MTN 20 2

    0
    “டேய் கார்த்திக்...” என்று ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டான் கெளதம். அம்முவைப் பற்றி நிலா சொல்லிக் கொண்டிருக்கும்போதே கார்த்திக் அங்கு வந்துவிட்டான். அவனை வெறுப்புடன் நெருங்கிய கதிர், “ராஸ்கல்... எல்லாத்தையும் நீ செய்துட்டு நடுவுல காணாமப் போயிட்டு இப்போ எதுக்குடா புதுசா வந்து என்ட்ரி கொடுக்கறே...” என்று அவன் சட்டையைப் பிடித்தான். அதற்குள் கெளதம்...

    MTN 20 1

    0
    நிலா – 20 கெளதம் தலை குனிந்து நின்றிருக்க, கதிர் கோபத்துடன் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தான். கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தவர்களும், கல்யாணத்தில் பங்கெடுக்க வந்தவர்களும் எல்லாம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க நிலா கண்ணீர் விட்டபடி குற்றவுணர்வுடன் நின்றிருந்தாள். இப்படி ஒரு சந்திப்பை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அன்னையை சக்கர நாற்காலியில் கண்டதிலேயே அவள்...

    MTN 19 2

    0
    “ம்ம்... என் ராசாத்தி, அழகா இருக்கே... உன்னை இப்படிக் கல்யாணக் கோலத்துல பார்க்க உன் அப்பாவுக்கு தான் கொடுத்து வைக்கலை... நீ போகுற வீட்டுல சந்தோஷமா இருக்கணும்மா...” மகளை வாஞ்சையுடன் வாழ்த்திக் கொண்டே கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார். “அலமு... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கோவிலுக்குப் பக்கத்துல வந்துட்டதா போன் பண்ணினாங்க... சீர்வரிசைத் தட்டெல்லாம் கொண்டு போயி...

    MTN 19 1

    0
    நிலா – 19 வா... வெண்ணிலா..... உன்னைத்தானே வானம் தேடுதே..... மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...... மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...... வா...... வெண்ணிலா...... உன்னைத்தானே வானம் தேடுதே.....  வா வெண்ணிலா..... முற்றிலும் இருள் விலகிடாத அதிகாலையில், சாலையில் வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டு விரைந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. காலை எட்டு மணிக்கு சென்னையை அடைந்து ரிப்போர்ட் செய்து விடவேண்டும் என்ற விஷயத்தில் டிரைவர்...

    MTN 18 1

    0
    நிலா – 18 தந்தைக்கு செய்ய வேண்டிய புண்ணிய கர்மங்களை செய்து முடித்து விட்டு வீடு திரும்பினான் கெளதம். இன்றோடு அவன் தந்தை இறந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டது. ஒவ்வொரு நினைவு நாளன்றும் அவர் இறந்த போது தான் மகனாய் செய்யத் தவறிய கர்மங்களை நினைத்து மிகவும் துடித்துப் போவான். இன்றும் பித்ரு தர்ப்பணம்...

    MTN 18 2

    0
    “சரி... பார்க்கலாம்... கடைக்கு எப்ப போகணும்...” “மத்தியானம் போனா சீக்கிரம் வாங்கிட்டு வந்திடலாம்... கூட்டமும் அதிகம் இருக்காது... சாப்பிட்டதும் கிளம்பிடலாமா...” “ம்ம்... போகலாம்...” என்ற கெளதம் அதோடு அமைதியாகி விட்டான். நிலாவும் அவன் சம்மதித்ததே சந்தோஷமாய் நினைத்து அடுக்களையில் பணியை முடிக்க ஓடினாள். “அம்மா...” அழைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் கதிர். வெறுமனே கண்ணை மூடிப் படுத்திருந்த அவன் அன்னை...

    MTN 17 1

    0
    நிலா – 17 குழந்தையுடன் ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர் நிலாவும் கெளதமும். வரும் வழியில் குழந்தைக்கு வேண்டிய பொருட்களை கடையில் வாங்கிக் கொண்டு இரவு உணவையும் முடித்துக் கொண்டிருந்தனர். குழந்தை கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்க, கெளதம் இரண்டு கட்டிலில் ஒன்றை சற்று நகர்த்திப் போட்டுக் கொண்டிருந்தான். “கெளதம்...” அவனுக்குப் பின்னில் இருந்து சன்னமாய் ஒலித்த...

    MTN 17 2

    0
    “ஊருல ஒரு சின்ன பிரச்சனை... அதான் ஊரை விட்டு கிளம்பிட்டோம்... இப்போ இங்கே வீடு பார்த்திட்டு இருக்கோம்...” என்றாள் நிலா வேண்டா வெறுப்புடன். “இது என்ன வம்பாப் போயிருச்சு... இந்த அம்மா எல்லா விவரத்தையும் கேட்டுட்டு குடைச்சல் பண்ணிட்டு இருக்கே...” என மனதுக்குள் ஓடியது. ஒரு நிமிடம் அவர்களையே பார்த்த அந்தப் பெண்மணி, “ஏம்மா... இங்க பக்கத்துல...

    MTN 16 2

    0
    “கெளதம்... அப்படி சொல்லாதிங்க, எனக்கு எப்படி சொல்லறதுன்னு தெரியலை... இந்தக் குழந்தையை நாமளே வச்சுக்கணும்னு தோணுது... கோவில்ல என் கைக்கு வந்த குழந்தையை அந்த அம்மனே கொடுத்த போல நினைக்கறேன்... கார்த்திக் கிட்டே சொன்னா அவன் நிச்சயமா புரிஞ்சுக்குவான்... இந்தக் குழந்தையை நான் பார்த்துக்கறேன்... நமக்குத் துணையா இருந்திட்டுப் போகட்டுமே...” என்றவளை வியப்புடன் பார்த்தான்...

    MTN 16 1

    0
    நிலா – 16 சூரியன் பொன்னிறமாய் தகதகத்துக் கொண்டிருந்த மதியம் பனிரெண்டு மணி. அந்த பெரிய மாரியம்மன் கோவிலில், மின்சாரத்தின் உதவியால் இயங்கிக் கொண்டிருந்த இயந்திர மணி, சீரான இடைவெளியில் கம்பீரமாய் ஒலி எழுப்பி அந்த சூழலை தெய்வீகமாக்கிக் கொண்டிருந்தது. மதிய பூஜைக்காய் கூடியிருந்த பக்தர்கள், அம்மனை மறைத்திருந்த கதவு திறந்ததும் தரிசிக்கப் பக்தியுடன் காத்திருந்தனர். உள்ளே மந்திரத்தை...

    MTN 15 1

    0
    நிலா – 15 இரவு உணவு முடிந்து கெளதம் அவனது அறைக்கு சென்றிருக்க, உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள் நிலா. அசதியில் உடலெல்லாம் வலித்தாலும், கண்ணை மூட விடாமல் எதிர்காலம் அவளை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. மங்கலாய் ஒளிர்ந்து கொண்டிருந்த இரவு விளக்கின் ஒளி அறையின் இருட்டை விரட்டினாலும் அவளது மனம் கார்த்திக்கின் நினைவில் இருண்டே...

    MTN 15 2

    0
    உதடுகள் உலர்ந்திருக்க சோர்வுடன் கெளதமைப் பார்த்தாள். “இப்ப எப்படி இருக்குமா, பீலிங் பெட்டரா... தலைவலி இருக்கா...” நரைத்த தலையுடன் நின்று கொண்டிருந்த டாக்டர், வாங்க வேண்டிய மருந்துகளைக் குறித்துக் கொண்டே, மூக்குக் கண்ணாடியை ஏற்றிக் கொண்டு விசாரித்தார். “ம்ம்... கொஞ்சம் பரவால்ல டாக்டர்...” “ம்ம்... குட்.... ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தே ஆகணும்... உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு......

    MTN 14 2

    0
    “நிலா... பயப்படாதே... கார்த்திக் என்னை நம்பினான்... நீயும் என்னை நம்பற தானே...” “ம்ம்...” மௌனமாய் தலையாட்டியவளின் மனது, “உன்னை மட்டும் தான் நம்புறேன் கெளதம்...” என்றது. தன் மனதுக்குள் ஒலித்த குரலைக் கேட்டு சட்டென்று திகைத்தாள் நிலா. அவனுக்கு அருகில் இருக்கையில் அவளுக்கு எதிர்காலத்தைக் குறித்த யோசனை மட்டுமே இருந்தது... தன் பாதுகாப்பை கெளதம் பார்த்துக் கொள்வான்...

    MTN 14 1

    0
    நிலா – 14 பொன்னிறக் கதிர்களை பூமிக்கு அனுப்பி மனிதர்களை சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரியன் மேற்கு திசையை நோக்கி மெல்ல இடம் பெயர்ந்து கொண்டிருந்தான். இளம் மாலை வெயில் தென்றலை வரவேற்கத் தொடங்க, பள்ளி, கல்லூரி முடிந்து அழகுப் பட்டாம்பூச்சிகள் அந்தப் பேருந்து நிலையத்தை வண்ணமயமாய் சுற்றி வந்து கொண்டிருந்தன. பலதரப்பட்ட மனிதர்கள், பலவித உணர்வுகளுடன் யோசனை...

    MTN 13 2

    0
    ஒரு நிமிடம் அவளையே வலியுடன் பார்த்தவன், “யோசிக்காம இருந்தா நடந்த எல்லாம் சரின்னு ஆகிடுமா... என் அப்பா, என்னை எப்படில்லாம் வளர்த்தார்... பொண்டாட்டி, விட்டுட்டு ஓடிப் போயிட்டாளேன்னு வாழ்க்கையே வெறுத்துப் போனவர், எனக்காக தானே மனசைத் தேத்திகிட்டு வாழ்ந்திட்டு இருந்தார்...” அவனது கண்கள் கலங்கியது. “அவரோட மரணத்துக்கு நானே காரணமாகிட்டனே... ஒரேயொரு பிள்ளையா இருந்தும், அவருக்கு...

    MTN 13 1

    0
    நிலா – 13 கார்த்திக் அவனது கதையை சொல்லிக் கொண்டிருக்க, வருத்தத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் மாணிக்கம். “அந்தப் பையன், பாகை உன்கிட்ட கொடுத்துட்டு போலீசைப் பார்த்ததும் இறங்கிட்டானா...? அவன் யார், என்னன்னு எதுவுமே விசாரிக்கலயா... இப்படிதான் முன்னப் பின்னத் தெரியாதவங்க கிட்ட ஒரு பொருளை வாங்கி வச்சுக்கறதா... அதுல தான் வெடிகுண்டு இருந்துச்சா...” அவரது கேள்விகளில் சற்று...

    MTN 12 2

    0
    நேரம் நள்ளிரவு ஒரு மணி... பொம்மிடி ரயில் நிலையம்... அங்கங்கே பயணிகள் தூக்கக் கலக்கத்துடன் தங்கள் ரயிலுக்காகக் காத்திருந்தனர். பொங்கல் நேரமாதலால் நிறைய சிறப்புப் பேருந்துகள் இருந்தாலும் எல்லா வண்டிகளிலும் மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது. உடலை ஊசியாய்த் துளைத்து நுழைந்த காற்று அவஸ்தையாய் குளிரைத் தோற்றுவிக்க, தவிப்புடன் அங்கிருந்த பயணிகளுக்கான இருக்கையில் அமர்ந்திருந்தான் கார்த்திக்....

    MTN 11 1

    0
    நிலா – 11 கருப்பு வானத்தில் வெள்ளித்தட்டை வைத்த போல அழகாய் பிரகாசித்துக் கொண்டிருந்தது பௌர்ணமி நிலவு. மிதமான வெளிச்சம் பூமியை நனைத்துக் கொண்டிருக்க, சுகமான தென்றல் இதமாய் வருடிச் சென்றது. ஜன்னலின் அருகில் நின்றிருந்த நிலாவின் பார்வை, நிலவில் நிலைத்திருந்தது. தெளிந்த வானம், நிறைந்த நிலவு... அங்கங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்... ஊர்வலம் போகும் மேகங்கள்......

    MTN 11 2

    0
    “இங்க பாரு கார்த்திக்... இந்தக் காதல், கண்றாவில எல்லாம் மாட்டிக்காம ஒழுங்கா படிப்பை முடிக்கப் பாரு... இந்த மண்ணாங்கட்டி எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது... அந்த மாயைல தேவையில்லாம மாட்டிக்கிட்டு உன் வாழ்க்கையை வீணாக்கிக்காதே...” “கெளதம்... ப்ளீஸ், இது எனக்கு இப்போ தோணின உணர்வு இல்ல... ரெண்டு வருஷமா எனக்குள்ளேயே ஒளிச்சு வச்சு அந்தக் காதலைத்...

    MTN 10 1

    0
    நிலா – 10 சூரியனும், நிலவும் தங்கள் வேலையை நிறுத்தாமல் செய்து கொண்டிருக்க, இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. கெளதம் ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தான். அவன் வீட்டில் இருந்ததால் அம்முவுக்கு ஒரே கொண்டாட்டமாகி விட்டது. அவன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள். கௌதமின் சின்ன சின்ன தேவைகளையும் அவன் சொல்லாமலே கவனித்துக் கொண்டாள் நிலா....
    error: Content is protected !!