நேசம் மறந்ததேனோ நெஞ்சமே?!!
அத்தியாயம் -3
ஆதவன் தன் பணியை துவங்க செங்கதிர்களை பரப்பும் அதிகாலை வேலை. பறவைகள் அனைத்தும் இரை தேடி செல்ல, சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர் சிலர்.
அமைதியாக இருந்த அந்த வீட்டில் மீனாட்சி தன் மென்மையான குரலில் கந்த சஷ்டி கவசம் பாட, மருமகள் குரல் கேட்டு எழுந்து வந்தார் லதா.
கண்மூடி மனமுருகி பாடி கொண்டிருந்தவள்...
அத்தியாயம் -28
சத்யா கிளம்புகிறேன் என்றவுடன் மீனா முகம் வாடி நிற்பதை கண்ட குமாரி “என்னப்பா அதுக்குள்ள கிளம்பறேன்னு சொல்ற”.
“இல்லம்மா.அம்மா போன்பண்ணிட்டே இருக்காங்க. நேத்து நான் வேற அவங்ககூட பேசல, அதான் பாவம் ரொம்ப பயந்துட்டாங்க”,
“சரி காலை டிபன் மட்டுமாவது சாப்பிட்டு போப்பா. யாரும் இன்னும் எழுந்துக்க கூட இல்ல”
“இல்லம்மா. அவங்ககிட்ட நீங்க சொல்லிடுங்க. நான்…...”
“அட...
அத்தியாயம் -33
“ச்ச….. என்னய்யா நீ. திங்க போக…. திங்க போகன்னு….. என்னால சுத்தம் பண்ணி மாளல. இனி ஒரு நேர சாப்பாடு குறைச்சுடறேன் இரு” என்று கணவனை திட்டி கொண்டே பின்கட்டில் இருந்து முந்தானையில் கையை துடைத்து கொண்டே வந்தார் தனம்.
மலை, “ம்மா…. நான் அக்கா வீட்டுக்கு போறேன். புள்ளைங்க பிறந்தநாள் பங்சனுக்கு வர...
அத்தியாயம் -29
இருவரும் நின்றிருப்பதை கண்டவர்கள் ‘இப்போது யாரை சமாதானப்படுத்துவது’ என்று புரியாமல் விழித்து கொண்டிருந்தனர்.
அப்போது சத்யா அருகில் வந்த தீரன் “உங்க குழந்தைகள நாங்களே பார்த்துக்கறதுனாலும் எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.
ஆனா…அவங்க அப்பா பாசத்துக்கு ஏங்குவாங்க. உங்களுக்குள்ள இருக்க பிரச்சனையால குழந்தைகளை ஏங்க விடாதீங்க. அவங்க உங்க குழந்தைங்க அவங்களை உங்க கூட கூட்டி...
அத்தியாயம் -32
மீனா ஹாஸ்பிடலில் மயக்கத்தில் இருக்க, அனைவரும் அவள் விழிப்பாதற்காக காத்திருந்தனர்.
மலையும், கண்ணம்மாவும் தனத்திற்கு போன் போட்டு நடந்ததை சொல்ல,
“ஐயோ…. என் சிங்கத்த சாச்சுபுட்டிங்களேடி. நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா. ஐயோ என் மனசு பதறுதே. என் சாமி எவ்ளோ கஷ்டப்பட்டுச்சோ தெரியலையே. உங்களை எல்லாம் பெத்ததுக்கு மலடியாவே நான் இருந்திருக்கலாம்டி” என்று நெஞ்சில்...
அத்தியாயம் -17
அனைவரும் கோவிலுக்கு சென்று வந்து பத்து நாட்கள் கடந்து இருந்தது. வேலை வேலை என்று அனைவருக்கும் நிற்க நேரம் இல்லாமல் பத்திரிக்கை வைப்பது, திருமண வேலைகளை பார்ப்பது என்று ஓட ஆரம்பித்தனர்.
ஸ்ரீயும் தீரனுடன் சேர்ந்து பத்திரிக்கை வைக்க செல்வது. வந்தவர்களை நன்றாக கவனித்து கொள்வது என்று மூத்த மருமகளாக பொறுப்பாக நடந்து கொண்டாள்.
தீரன்...
அத்தியாயம்- 21
கோபமாக அமர்ந்திருந்த தீரன் கண்ணாடியை பார்க்க. அவன் காருக்கு பின்னாடி நின்றிருந்தது மற்றொரு கார்.
முகத்தை மறைத்தவாறு அமர்ந்திருந்த உருவமோ கண்கள் கலங்க ஸ்ரீயை பார்க்க, அவளோ நகத்தை கடித்து அமர்ந்திருந்தாள்.
தீரன் காரை ஸ்டார்ட் செய்து செல்ல துவங்க, ஸ்ரீ முகம் தொங்கி போனது.
‘ச்ச…. பிளான் சொதப்பிடுச்சே. அவன்பாட்டுக்கு கிளம்பிட்டான். சரி பிளான் பிபிபி...
அத்தியாயம் -31
மீனா வாழ்க்கையையே வெறுத்தது போல் சுற்றி வர துவங்கினாள்.
கணவன் தன்னை முற்றிலும் வெறுத்துவிட்டான் என்ற நினைப்பே அவளை கொல்லாமல் கொல்ல, அறையில் இருந்து வெளியில் வருவதையே தவிர்த்தாள்.
வந்த இரண்டு நாட்கள் சமையல் அறையில் எதாவது செய்வது. அசோக்கிடம் பேசுவது என்று இருப்பவள் கணவனிடமும் பேச முயற்சிப்பாள். ஆனால் அவனோ முகத்தில் அடித்தார் போல்...
அத்தியாயம் -11
சீனிவாசன், சிவகுமாரி தம்பதிகளின் மூத்த மகன் பிரகதீரன். இளையவன் அஸ்வின் மூன்றாவது மகள் பிரக்யா. இவர்கள் சொந்த ஊர் மதுரை.
பிரகதீரன் மதுரையிலேயே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி துவங்கி வெற்றிகரமாக நடத்தி கொண்டு இருக்கிறான். அஸ்வின் மெடிசின் முடித்துவிட்டு மதுரையின் சிறந்த மருத்துவனாக இருக்கிறான்.தங்கை பிரக்யா பேசன் டெக்னாலஜி முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறாள். அவளுக்குதான் இப்போது...
அத்தியாயம் -25
மாலை ஆறு மணி திருவிழா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்திருந்தது அஷ்வின், கண்ணம்மா வரவேற்பு நிகழ்ச்சி.
தேவலோகம் போல் மின்னிய அந்த மண்டபத்தில் பட்டு புடவை சர சரக்க பெண்களும், பிஸ்னஸ் சம்மந்தமாக ஆண்களும் பேசிக்கொண்டு இருக்க, ஆடம்பரத்திற்கு குறைவில்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அந்த மண்டபம்.
தங்கநிற லெஹங்காவில் கண்ணம்மா...
அத்தியாயம் -8
தன் எதிரில் இருக்கும் உருவத்தை கண்டு மீனா பயந்து போய் கையில் இருந்த பையை கீழே போட,
“அக்கா நாங்கதான் பயப்படாத…” என்றாள் கண்ணம்மா.
உடன் பிறப்புகளை கண்டு நிம்மதி மூச்சு விட்டவள் தம்பியின் கரங்களை பிடித்து கொண்டு “மல…. மல…அது…அது…”என்று தடுமாற,
ஏழுமலையோ அவளை அணைத்து கொண்டவன் “எல்லாத்தையும் நானும் கேட்டேன்க்கா. நீ எந்திரிச்சு போறத...
அத்தியாயம் -4
ஊட்டி மலை மீது டிரெயின் ஏறி கொண்டிருந்தது. மீனா தன் எதிரில் இருந்த குழந்தையை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள்.
குழந்தையும் அவளை பார்த்து சிரிப்பதும் தாயின் தோளில் முகத்தை புதைத்து கொள்வதுமாக இருந்தது.
இயற்கை படைப்பை தன்னை மறந்து ரசித்து கொண்டிருந்த சத்யா எதேச்சையாக மனைவியை பார்க்க, அவள் கவனம் முழுதும் எதிரில் இருந்த குழந்தை...
அத்தியாயம் -16
கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. தீரனுக்கு அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீ மீனாவுடன் தொண தொணவென்று பேசி கொண்டே வருவது எரிச்சலை ஏற்படுத்த,
பொறுமை இழந்தவன் தம்பியை திட்ட துவங்கினான். “டேய் நாம என்ன கல்யாண ஊர்வலமா போறோம் கொஞ்சம் வேகமாதான் போவேன்டா”.
சீனி, “என்ன தீரா வேகமா எதுக்கு போகணும். மெதுவாகவே போலாம். மாசமா...
அத்தியாயம்- 2
அதோ…. இதோ…. என்று நாட்கள் அதன் போக்கில் செல்ல, மீனா கமிஷனையும் வெற்றிகரமாக முடித்துவிட்டாள்.
அவள் மட்டும் இல்லாமல் தங்கை, தம்பி என மூவரும் சேர்ந்துதான்
சாட் வரைவது, நான்காம்,ஐந்தாம் வகுப்பு பாடத்திற்கு ஏற்ற வகையில் ஒர்கிங் மாடல், நான் ஒர்கிங் மாடல் செய்வது, எண்களை எழுதி அட்டையில் ஒட்டி மாணவர்களுக்கு விளையாட்டு வாக்கில் சொல்லி...
அத்தியாயம் -26
தீரன் வீட்டின் நடு ஹாலில் முகம் இறுக அமர்ந்திருந்தான் சத்யா. அனைவரும் அங்கு கூடி இருக்க,
மலையும், கண்ணம்மாவும் சத்யாவின் பின்புறம் நின்றிருந்தனர்.
சீனு, குமாரி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு “என்ன தம்பி ஏன் எல்லாரையும் வர சொன்னீங்க”என்று கேட்க,
“ஆமா. ப்ரோ என்ன ஆச்சு?”என்று அஷ்வினும் கேட்டான்.
தீரன் அமைதியாக கால் மேல் கால்...
அத்தியாயம் -5
“என்ன டாக்டர் சொல்றீங்க?” என்று மொத்த குடும்பமும் அவர் முன் அமர்ந்து கேட்க,
அவரோ “ஆமா சார். இது ஏய்ட்டி பர்சண்ட் கன்பார்ம். புல்லா கன்பார்ம் பண்ண பையாப்சி பண்ணனும் அதுக்கான ஏற்பட்டை நாங்க பாக்கறோம். எதுக்கும் நீங்க டோனர் யாரும் கிடைக்கறாங்களானு பாருங்க” என்றுவிட, மொத்த குடும்பமும் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தது.
மீனா திருவிழாவில்...
அத்தியாயம் -20
கணவனை பிரிந்து செல்வதாக ஸ்ரீ சொன்ன பின் எப்போதும் சிரிப்புடனே வீட்டை சுற்றி வர துவங்கினாள்.
மனைவியின் முகத்தில் இருக்கும் சிரிப்பு தன்னை பிரிவதால்தான் என்று நினைத்தவன் மனதுக்குள்ளேயே துடிக்க துவங்கினான்.
காதல் தன்னை தேடி வந்த போது தட்டிவிட்டவன். இப்போது அந்த காதல் தன் கைக்கு கிடைக்காதா என்று தவித்தான்.
ஒவ்வொரு நாளும் தன் காதலை...
கண்ணம்மா இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு சத்தம் இல்லாமல் வந்து ஹாலில் அமர்ந்துவிட்டாள். ஏழுமலை மீனாவை ஊர் எல்லை வரை கொண்டு சென்று விட்டுவிட்டு வந்து விட,
அவன் வருவதை ஜன்னல் வழியாக பார்த்த கண்ணம்மா ஓடி சென்று மெதுவாக கதவை திறக்க, மூச்சு வாங்க நின்றிருந்தான் ஏழுமலை.
“என்னடா பஸ் எதுவும் இப்போ இல்லையே அக்கா எப்படி...
அத்தியாயம் -10
ஸ்ரீ அழவும் பதறி போன மீனா “என்னக்கா என்ன ஆச்சு” என்று கேட்க,
அழுது கொண்டு இருந்தவள் டக்கென்று விலகி எழுந்து கொண்டு “ஒ…ஒ…. ஒன்னும் இல்லடா….” நான் ரூமுக்கு போறேன். நீ காலைல இருந்த ரூம்ல படுத்துக்கோ” என்றுவிட்டு சென்றுவிட,
மீனா செல்லும் ஸ்ரீயை புரியாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.
அடுத்த நாள் காலை சோர்வாக...
அத்தியாயம் -19
நடு இரவு வேளையில் யாரும் இல்லாத அந்த ரோட்டில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது அந்த வாகனம். வழக்கமான வேகத்தை விட அதிகமாகவும் தடுமாறி கொண்டும் செல்லும் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தது நம் தீரன் தான்.
மனைவியின் பின்னால் செல்லும் மனதை அடக்க முடியாமலும், பழைய காதலை மறக்க முடியாமலும் தடுமாறியவன் தன் நிலை மறக்கும் அளவு...