அத்தியாயம் -20

கணவனை பிரிந்து செல்வதாக ஸ்ரீ சொன்ன பின் எப்போதும் சிரிப்புடனே வீட்டை சுற்றி வர துவங்கினாள்.

மனைவியின் முகத்தில் இருக்கும் சிரிப்பு தன்னை பிரிவதால்தான் என்று நினைத்தவன் மனதுக்குள்ளேயே துடிக்க துவங்கினான்.

காதல் தன்னை தேடி வந்த போது தட்டிவிட்டவன். இப்போது அந்த காதல் தன் கைக்கு கிடைக்காதா என்று தவித்தான்.

ஒவ்வொரு நாளும் தன் காதலை சொல்ல முடியாமல் தீரன் திணற துவங்கினான். அவளது முடிவில் எதாவது மாற்றம் வராதா’ என்று ஒவ்வொரு நாளும் ஏங்கினான்.

எனக்கும் காதலுக்கும் ராசியே இல்லையா, முதல் காதல் பாதியிலேயே போனது. இரண்டாவது காதல் பிரியும் தருவாயில் வந்து வதைக்கிறது. எனக்கு ஏன் இந்த நிலை. அவள் என் மனைவி. என்னுடையவள். நான் யாருக்கும் அவளை குடுக்க மாட்டேன் என்று யோசித்தவனிடன் வந்து நின்றது அவன் மற்றொரு மனம்.

“அப்போ சந்தியா…….”

“ஆஆஆஆ……. சந்தியா… சந்தியா… சந்தியா….அவள் என் காதலிதான். ஆனால் என் நிதி…. என் நிதி என் மனைவி. நான் சந்தியாவிற்கு துரோகம் செய்யவில்லை. அவள் என் இறந்த காலம். அவள் இப்போது இல்லை என்பதுதான் உண்மை. அந்த உண்மையை ஏற்று கொண்டு, என் மனைவியை என்னோடு வைத்து கொள்ள ஆசைப்படறேன். போதுமா…. முதல்ல இங்க இருந்து போ….. என் முன்னாடி வராத” என்று கத்தியவன் ஆக்ரோஷத்தை கண்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட்டது.

ஒரு பொருளோ நபரோ தன் அருகில் இருக்கும்போதும், எளிதாக கிடைக்கும் போதும் அதன் அருமை நமக்கு தெரிவதில்லை. தன்னைவிட்டு விலகி போகும்போதுதான் தெரியும். அதுபோல்தான், காதலி நினைவில் சுற்றி வந்தவனை, தன்னை கவனிக்க வைத்து, காதலிக்க வைத்திருந்த ஸ்ரீ, இப்போது பிரிவு என்ற வார்த்தையால் அதை அவன் உணரவும் செய்துவிட்டாள்.

மனைவி நினைவிலேயே சுற்றி வந்தவன். எப்போதும் இருப்பதைவிட இருக்கமாகவும், தாடி வளர்த்து தேவதாஸ் போல் சுற்றி வர ஆரம்பித்தான். பெற்றோர் என்னவென்று கேட்க,

அவனோ வேலை டென்சன் அதான் சரியாகிடும் என்றுவிட்டு சென்றுவிட்டான், அதற்கு மேல் அவர்களும் விட்டுவிட்டனர்.

அஷ்வின்தான் அண்ணன் நிலையை புரிந்து கொண்டு ஸ்ரீயிடம் சென்று நின்றான்.

“என்னடா நல்லவனே, ஹாஸ்பிடல் போகல. இங்க வந்து நிக்கற” ,

“எல்லாம் உன்னாலதான். ஒழுங்கா போய் அண்ணாட்ட எல்லா உண்மையும் சொல்லி, அவரோட சேரற வழிய பாரு. பாவம் அவரை பார்க்கவே கஷ்டமா இருக்கு. காலைல சரியாவும் சாப்பிடல, நீ என்னன்னா காலைல நல்லா ஆறு இட்லி முழுங்கிட்டு அது பத்தாதுனு இப்போ ஜூஸ் குடிச்சுட்டு இருக்க. சரியான கல் நெஞ்சகாரிடி நீ”.

“இருந்துட்டு போறேன் போடா. என்னை எவ்ளோ கஷ்டப்படுத்தினாரு, அப்போலாம் நான் அமைதியா இல்ல. இப்போ ஒரு நாலு நாள் மூஞ்ச தூக்கிவச்சுட்டு சுத்துனா நாங்க மாறிடுவோமா, அதெல்லாம் முடியாது.

பிளான் பண்ணுனது பண்ணுனதுதான். மகனே உன் அண்ணன் சட்னி, சட்னிதான்.

நான்லாம் காலேஜ்ல எப்பேர்ப்பட்ட பிகரு. எத்தனை பேர் சுத்தி வந்தானுங்க. அவனுங்களை எல்லாம் விட்டுட்டு என் கேரகம் உன் நொண்ணன்கிட்ட மாட்டிக்கிட்டேன்….” என்க,

உடனே கடுப்பானவன் “உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லடி. மத்தவங்க கஷ்ட்டபடறதை பார்த்து ரசிக்கற சைக்கோடி நீ….” என்றவன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி கொண்டு நிற்க,

அவனை அதிர்ந்து போய் பார்த்தவள் “என்னை பார்த்தாடா இப்படி சொல்ற, உன் அண்ணன்ன பார்த்தா பாவமா இருக்கா” என்று கேட்க,

அவனும் வேகமாக ‘ஆமாம்…’ என்று தலையாட்ட,

“எனக்கு ஜாலியாதான் இருக்கு. போடா……” என்று அசால்ட்டாக சொல்ல,

“ச்ச….லூசு. நான் கூட நீ திருந்திட்டியோன்னு நினைச்சிட்டேன் போடி” என்றுவிட்டு திரும்ப,

“அவ்வளவு கல் நெஞ்சகாரி இல்ல, நண்பா நான்…” என்றவுடன் சந்தேகமாக அவளை பார்த்து திரும்பியவனை கண்டு கண்ணடித்தவள் “இவ்வளவு நேரம் தம்முகட்டி பேசி இருக்க. தொண்ட காஞ்சு போயிருக்கும் இந்தா இந்த ஜூசை குடிச்சுட்டு போ…” என்க,

தலையில் கை வைத்து அமர்ந்தவன் “உன்னையெல்லாம் பெத்தாங்களா? இல்ல அமேசான்ல ஆஃபர்ல வாங்குனாங்களா? இப்படி படுத்தி எடுக்கற,

கட்டுன பாவத்துக்கு என் அண்ணன் படறதுல ஒரு நியாயம் இருக்கு. வை மீ….” என்றவன் அருகில் சென்றவள்,

“ஏன்னா…. நீ என் நண்பேன்டா…” என்று தோளில் கை போட்டு இருக்க,

“கைய எடுடி முதல்ல, இன்னையோட உனக்கும் எனக்கும் பிரேக்அப். இனி நீ ஆரோ…. நான் ஆரோ…. நாளைக்கே கோவிலுக்கு போய் காசு வெட்டி போடறேன். உனக்கு ஒரு பெரிய கும்பிடு போடறேன்.

ஹப்பா….. சாமி முடியல. என் அண்ணன் இவளுக்கு வாக்கப்பட்டு சாகறான்னா, நான் வாக்கபடமாலே சாகறேன். ஆள விடுங்கடா சாமி” என்றுவிட்டு ஓட,

“தம்பி அஷ்வினு…போறதுதான் போற, அந்த நாய ஷு…. னு சொல்லிட்டு போங்கற மாதிரி. உன் அண்ணாகிட்ட, நான் டிக்கெட் புக் பண்ண சொன்னேன்னு சொல்லிட்டு போப்பா” என்க, அவள் காலடியில் வந்து விழுந்தது ஒரு டம்ளர்.

உடனே விலகி நின்றவள் நெஞ்சில் கை வைத்து கொண்டு “ஆத்தி பாவிபய புள்ள அண்ணன் மேல ஓவர் பாசமா இருக்கானே. போற போக்க பார்த்தா, இவனே எல்லாம் சொல்லிடுவான் போல இருக்கே. காசு வேற வெட்டி போடறேன்னு சொல்றான். என்ன பண்ணலாம்…
ஐடியா…காசா வெட்டி போடற. இப்போ பாரு போன வேகத்துல உன்னை வர வைக்கறேன்” என்றவள் போனை எடுத்து அவனுக்கு அழைக்க,

அஷ்வினோ போனை கட் பண்ணி கொண்டே இருந்தான். இவளும் விடாமல் போனை போட அட்டன் செய்தவன் “என்ன?….” என்று கத்த,

“கோபமா அஷ்வினு……”

“ஆமா…. அதுக்கு என்ன?” என்று எரிச்சலாக சொன்னவன், அவள் அமைதியாக இருக்கவும் “சொல்றியா இல்லையா. நான் டிரைவ்பண்ணிட்டு இருக்கேன். உருப்படியான விஷயம் எதுவும் இல்லைனா. வை போனை” என்றவன் சொல்ல,

அவளோ “அது ஒன்னும் இல்ல அஷ்வினு…… பிரியா என்னை பார்க்க வீட்டுக்கு வரேன்னு சொன்னா. அதை சொல்லலாம்னு பார்த்தேன்….” என்றவள் சொல்லும்போதே ஏதோ சத்தம் கேட்க,

பயந்து போனவள் “ஹேய்…அஷு…. என்ன ஆச்சு? என்ன சத்தம் அது?” என்று பதறி போய் கேட்க,

காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தியவனோ தன்னை சுற்றி நாலு பெண்கள் ‘லாலாலலலலல….’ என்று நடனம் ஆடுவது போல் கனவு கண்டு கொண்டு இருந்தான்.

“அஷு…. அஷு….. இருக்கியா…” என்ற குரலில், சுயநினைவு அடைந்தவன் “ம்ம்ம்…ம்ம்ம்…. இருக்கேன். இருக்கேன். இதை ஏன்டி லேட்டா சொல்ற, முதல்லயே சொல்றதுக்கு என்ன. வை வீட்டுக்கு வரேன்” என்றவனிடன்,

“ஏதோ காசு வெட்டி போடறேன். பிரேக்அப்னு எல்லாம் ஒரு நாதாரி பேசுச்சு. அவனை பார்த்தியா அஸ்வினு….. நீ” என்றவள் நக்கல் குரலை எல்லாம் கண்டு கொள்ளாதவன்,

“ஓ…. பிரியா…. பிரியா….. என் பிரியா…. பிரியா….” என்று பாடி கொண்டே, வீட்டை நோக்கி காரை செலுத்த துவங்கினான்.

இந்த பக்கம் ஸ்ரீயோ “ஆத்தாடி. அவன் பிரியாவாமில்ல. மாப்பிள்ளைக்கு அம்புட்டு வெறி. நாம வேற அவ வர்றான்னு சொல்லிட்டோமே. இப்போ அவ எங்க இருக்கானு தெரியலையே.

எங்க இருந்தா என்ன. வீட்டுக்கு ஒரு எட்டு வந்துட்டு போக சொல்லுவோம். இல்ல…அந்த பய காசு வெட்டி போடறது கன்பார்ம்” என்று நினைத்தவள் பிரியாவிற்கு போனை போட்டு பேசிவிட்டு வைத்தவள் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.

‘ஹையோ இன்னைக்கு அவளை பொண்ணு பார்க்க வர்தால வீட்ல இருக்கேன்னு சொல்றாளே. என்னையும் வேற கூப்பிடறா. இப்போ நான் அவனை எப்படி சமாளிப்பேன்னு தெரியலையே’ என்று புலம்பி கொண்டு இருக்கும்போதே கார் ஹாரன் சத்தம் கேட்க,

‘ஆத்தி…. வந்துட்டானே….இப்போ என்ன பண்றது’ என்று அங்கும் இங்கும் ஓடியவள், கடைசியில் கட்டிலுக்கு அடியில் ஒழிந்து கொள்ள,

ஆசையாக வீட்டிற்கு ஓடி வந்தவன். ஸ்ரீயை எல்லா இடத்திலும் தேடி, அவள் அறைக்கு சென்று சுற்றி முற்றி தேடி தலையில் அடித்து கொண்டவன்,

‘ஒழிய கூட தெரியாத தற்குறிய வச்சுக்கிட்டு என்னதான் பண்றதோ’ என்றுவிட்டு குனிந்து அவள் காலை பிடித்து வெளியில் இழுக்க,

“ஆஆஆஆ……” என்று கத்தி கொண்டே வெளியில் வந்தவள். “எதுக்குடா இப்படி புடிச்சு இழுத்த. ஆமா. நான் இங்கதான் ஒளிஞ்சுருக்கேன்னு எப்படி கண்டுபிடிச்ச, என்னை வாட்ச் பண்றியா”.

“நான் ஏன்டி வாட்ச் பண்ணனும். அதான் உன் கால் வெளிய நீட்டிட்டு இருக்குதேடி தற்குறி. உன்னை வச்சு என்னதான் பண்றது”.

“ஆஹா….. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டேனே” என்று தலையில் கை வைக்க,

அவனோ “ரொம்ப முக்கியம் பிரியா எப்போ வர்றான்னு சொல்லு”.

“ஹிஹிஹி…. அதை முழுசா சொல்லி முடிக்கறதுக்குள்ள, நீ ஏன்டா போனை கட் பண்ணுன”.

“ம்ப்ச்……போனை கட் பண்றது இருக்கட்டும். பிரியா எப்போ வருவா”.

“அதான் ராசா. அவ வீட்டுக்கு வரேன்னு சொன்னா. ஆனா அப்புறம் போன் பண்ணி வரலன்னு சொல்லிட்டா….”டேய்…. டேய்… எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம். எதுக்கு அந்த பிளவர் வாஷ்ஷ எடுக்கற”.

“உன் டைம் பாஸ்க்கு நான்தான் கிடைச்சனா. உன்னை……”என்று அவளை துரத்த,

“டேய் நண்பா…. வேண்டாம்டா. ஐ ஆம் யுவர் பெஸ்ட் பிரண்ட்…” என்றவாறு அவள் ஓட, அங்கு வீடே சற்று நேரத்துக்கு களேபரமாக இருந்தது.

ஒருவழியாக ஓடி ஓடி ஓய்ந்தவர்கள் மூச்சு வாங்கி கொண்டு அமர, “சரியான வாலுடி நீ. கொஞ்சம் கூட மாறல. காலேஜ்ல படிக்கும்போது எப்படி இருந்தியோ அப்படியே இருக்க. கொஞ்ச நாள் இந்த நித்திய நான் ரொம்ப மிஸ் பண்ணுன்னேன்”. என்று சொல்ல,

ஸ்ரீயோ அவனை பார்த்து சிரித்து “என்ன பீலிங்கா….. அதுக்கு எல்லாம் நீ செட் ஆகமாட்ட. வா பிரியாதான் கிடைக்கல, பிரியாணியாவது சாப்பிட்டு வரலாம்”.

“அப்போ நிஜமாவே பிரியா வரலையா…” என்று முகம் சுருங்கியவன், தோளில் கை வைத்தவள் “டேய் இப்போதானே சொன்னேன் பீலிங்குக்கு நீ செட் ஆக மாட்டேன்னு திரிஷா இல்லைனா திவ்யா….. பிரியா இல்லைன்னா.. கிராமத்துல வாய்க்கால் வரப்புல சுத்தற கண்ணம்மாவோ, முனியம்மாவோ விடுடா…விடுடா…. வா போலாம்” என்றுவிட்டு இழுத்து செல்ல,

அஷும் அதன் பின் தோழியுடன் அன்றைய நாளை செலவிட்டான்.

நாட்கள் வேகமாக செல்ல, தீரன் ஒவ்வொரு நாளையும், இழுத்து பிடிக்க முடியாதா என்ற கவலையோடு இருக்க,

ஸ்ரீயோ தான் அடுத்ததாக போட்ட பிளான் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற பதைப்போடு இருந்தாள்.

அதோ…இதோ…. என்று தீரன் வர கூடாது என்று எதிர்பார்த்த நாளும், ஸ்ரீ எதிர் பார்த்த நாளும் அழகாக வந்து சேர்ந்தது.

ஸ்ரீ சொன்னது போல் இரவு தன் பெட்டியை எடுத்து அடுக்கி கொண்டிருந்தவள் “அப்பாவை நல்லா பார்த்துக்கோங்க. கொஞ்ச நாள் வருத்தப்படுவார். அப்புறம் சரியாகிடுவார். மீனா அவரை பார்த்துப்பா. நீங்க உங்க லவ்வர கேட்டதா சொல்லுங்க” என்று செல்ல.

தீரனோ “ம்ம்…. எதுல போவ”.

“கேப் புக் பண்ணிதான். ஏன்?”.

“ஹோ…. ஒன்னும் இல்ல” என்றவன் யோசனையில் மூழ்க,

அவளோ “சரி ஓகே பாய். நான் கிளம்பறேன்”,

“ஒரு நிமிஷம்…” என்றவன் குரலில் நின்றவள் ‘போக வேண்டாம் என சொல்ல போகிறான் என்ற மகிழ்ச்சியில் திரும்ப,

அவனோ அவளோடு இருக்கும் நேரத்தை அதிகமாக்கும் பொருட்டு “நான் வந்து விடறேன்”என்க,

அதில் கடுப்பானவள் “இல்ல அவன் அங்க வெயிட்பண்றேன்னு சொன்னான். நான் போயிடுவேன். ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று சிடு சிடுவென்று சொன்னவள் செல்ல,

“நான் வரேன்னு சொல்றேன்ல, வா. உன் ஆள்கிட்ட உன்னை ஒப்படைச்ச பிறகு நான் வீட்டுக்கு வரேன்” என்றவன் முன்னால் செல்ல,

அவளோ தலையில் அடித்து கொண்டு அவனை பின் தொடர்ந்தாள்.

காரில் செல்லும்போது தீரன் அமைதியாக வர, ஸ்ரீ சந்தோஷமாக வந்தாள். அவளை ஓர கண்ணால் பார்த்து கொண்டே வந்தவனுக்கு காதில் புகை வர,

“ரொம்ப ஹேப்பியா இருக்க போல”.

“ம்ம்…. இருக்காதா பின்ன, என்னோட லைப் முடிஞ்சுதுனு நினைச்சுட்டு இருந்தப்ப, எனக்காக ஒருத்தன் காத்துட்டு இருக்கான்னு நினைக்கும்போது எவ்ளோ ஹேப்பியா இருக்கு தெரியுமா?…. அது ஒரு பீல். அதை விடுங்க.

ஏன் உங்களுக்கும் சந்தோஷமா இல்ல. இனி என் தொல்லை இருக்காது. உங்க லவ்வர் கூட சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.

ஆனா மீனாவையும்…. அப்பாவையும் நல்லா பார்த்துக்கோங்க. உங்க வாழ்கைக்குள்ள அவங்க வர மாட்டாங்க இருந்தாலும் நானும் இல்லாம…..”

“இனாஃப்…….”என்று கத்தியவனுக்குள் பொறுமை கரைய துவங்க. என்ன செய்து இவளை தன்னோடு வைப்பது என்று காரணங்களை தேட துவங்கினான்.

“ஏங்க. எதுக்கு இவ்ளோ கோபப்படறீங்க. சரி விடுங்க. நீங்க ஒன்னும் அவங்களை பார்த்துக்க வேண்டாம்”.

“இல்ல…. இல்ல…நான் அதுக்காக கோபப்படல. நீ இல்லைனா, உன் அப்பா நிலை என்ன யோசிச்சு பார்த்தியா, ஏற்கனவே உடம்புக்கு முடியாதவர் வேற. நீ ஏன் போகணும் இங்கயே இருந்து…. முதல்ல மாதிரி….”

“இல்லங்க அது சரி வராது. அவன் இனி என்னைவிட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதுனு சொல்றான். அவனைவிட்டுட்டு இங்க இருந்தாலும் உங்க காதலுக்கு இடைஞ்சலா இருக்க மாதிரி பீல் இருக்கும் அதான்”.

“இடைஞ்சலா இருக்கேன்னு நான் சொன்னேன்னா. உன் சுயநல முடிவுக்கு என்னை காரணம் ஆக்காத சொல்லிட்டேன். என்னை கேட்டா,….. நீ முதல்ல மாதிரி உன் அப்பாக்கூட இருந்துட்டு….. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவருகிட்ட விஷயத்தை சொல்லி……” என்று எப்படியாவது அவள் செல்வதை தடுக்க எண்ணி எதை எதையோ அவன் சொல்ல,

அவளோ “வாய்ப்பில்லைங்க….. நான் இனி இங்க இருந்தா அது நல்லா இருக்காது. ஆஆ….. இங்கதான் நிப்பாட்டுங்க. அவர் இங்கதான் வரேன்னு சொன்னாரு” என்று அப்பேச்சை முடித்தவள்.

“உங்களுக்கு சிரமம் தரேன்னுதான் இப்படி சொல்லறீங்கன்னு நினைக்கறேன். பரவால்ல விடுங்க. கொஞ்ச நாள் அப்பா கோவமா இருப்பாரு. அப்புறம் ஒரு பேரனோ பேத்தியோ வந்தா அவர் கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிடும்.

அவருக்கு என்னைவிட்டா வேற யாரு இருக்கா? இல்லை எனக்குதான் அவரைவிட்டா வேற யார் இருக்கா?” என்றவள் சோகமாக சொல்ல,

தீரனுக்கு கோபமாக வந்தது. தன்னவள் அருகில் இன்னொருவனா என்று நினைக்கும்போதே உடல் திகு.. திகுவென எரிவது போல் இருந்தது. இதில் அவனோடு இணைந்து குழந்தை என்றதில் மேலும் கடுப்பாக, கைகளை இறுக்கி தன் கோபத்தை கட்டுப்படுத்தியவனுள் பொறுமை இப்போது போகவா…. அப்புறம் போகவா என்பது போல் இழுத்து கொண்டு இருக்க,

மேலும் அவள் சொன்ன வார்த்தைகள் அவனுள் ஊசியாக தைத்தது.

‘ஏன்டி இப்படி பேசற. உனக்காக நான் இருகேன்டி. நம்ம குடும்பம் இருக்கு. உனக்காக நாங்க எல்லாரும் இருக்கோம். நீ தப்பு தப்பா முடிவெடுத்து பேசறடி. கொஞ்சம் பொறுமையா இரு.

உனக்கு எல்லாத்தையும் நான் புரிய வைக்கறேன். இவ்ளோ அவசரம் வேண்டாம்டி. அவனை போக சொல்லு” என்று தனக்குள் புலம்பியவன் வாயை திறந்து சொல்லி இருந்தாள் நன்றாக இருந்திருக்கும்.

அந்த நேரத்தில் பேச விடாமல் அவனை தடுத்தது எதுவோ?…. இப்போது உண்மையை அவளிடம் சொன்னால், காதலி இல்லை என்றவுடன் என்னிடம் வந்துட்டீங்களா’ என்று கேட்பாளோ என தயங்கி கொண்டு இருக்க,

காதல் மனமோ அவளை விடாதே உன்னோடே வைத்து கொள். அவள் உன்னவள் என்று ஓலமிட்டு கொண்டு இருக்க,

கண்களை அழுந்த மூடி திறந்தவன் ஒரு முடிவெடுத்தவனாக அவளை இருக்க சொல்லி வாயை திறக்கும் சமயம், அவன் பின்னால் கார் ஹாரன் சத்தம் கேட்க,

“ஹையா…. அவன் வந்துட்டான். நான் கிளம்பறேன். பாய். அத்தை, மாமாவை நல்லா பார்த்துக்கோங்க. அப்புறம்….. உங்களுக்கு ரொம்ப…. ரொம்ப….. தேங்க்ஸ்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா. பொண்டாட்டிய அவ காதலன் கூட அனுப்பி வைக்க கூடவே வந்த முதல் புருஷன் நீங்கதான். கின்னஸ்ல எழுத வேண்டிய விஷயம். இல்லையா. சரி விடுங்க” என்று கண்ணடித்து சிரித்தவள் காரில் இருந்து இறங்கி, பாய் சொல்லிவிட்டு துள்ளலுடன் அந்த காரை நோக்கி ஓட,

தீரனுக்கு மனதில் ஏதோ உடைந்த உணர்வு, அவ்ளோதானா போய்ட்டாளா. என்னைவிட்டு போய்ட்டாளா. நான் வேண்டாம்னு போய்ட்டாளா.

இன்னொரு வாய்ப்பு எனக்கு தராமளே போய்ட்டாளா….’ என்று மனதின்னுள்ளே குமுறி கொண்டு இருந்தான் அந்த ஆறடி ஆண்மகன்.

சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் கைகளில் நீர் துளி விழ, எங்கிருந்து வந்தது இந்த நீர் என்று கன்னத்தை தொட்டு பார்த்தவன் அதிர்ந்து போனான். அழுகிறேனா….
நான் அழுகிறேனா…. என்று எண்ணியவன் சந்தியா இறந்த போதுகூட அழாமல் இறுகி போய் நின்றது நினைவு வர,

என்னை அழ வச்சுட்டா…. இந்த பிரகதீரனை அழ வச்சுட்டா. உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்டி. ஹேப்பியா இருக்கலாம்னு போறியா. நான் இல்லாம எப்படி நீ சந்தோஷமா இருப்பன்னு நானும் பார்க்கறேன். இனிதான் இந்த தீரன் யாருனு பார்க்க போற’ என்று கோபமாக சீட்டை குத்தியவன் கண்கள் கோபத்தில் சிவந்து போனது.

தீரனின் கோபம் மீண்டும் இருவரையும் பிரிக்குமா?… இல்லை சேர்க்குமா….? காத்திருப்போம்.