அத்தியாயம் -25
மாலை ஆறு மணி திருவிழா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்திருந்தது அஷ்வின், கண்ணம்மா வரவேற்பு நிகழ்ச்சி.
தேவலோகம் போல் மின்னிய அந்த மண்டபத்தில் பட்டு புடவை சர சரக்க பெண்களும், பிஸ்னஸ் சம்மந்தமாக ஆண்களும் பேசிக்கொண்டு இருக்க, ஆடம்பரத்திற்கு குறைவில்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அந்த மண்டபம்.
தங்கநிற லெஹங்காவில் கண்ணம்மா தயாராகி இருக்க, அஷ்வினும் அதே நிறத்தில் கோட் செலக்ட் செய்து அணிந்திருந்தான்.
ஸ்ரீ, பிரகதீரன் அவர்கள் மகன் அகரன் என மூவரும் மெரூன் நிற உடையில் சுற்றி வர, அனைவரின் கண்களும் அவர்கள் மேல்தான்.
தீரன் வேலை வேலை என்று ஓடினாலும் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை மனைவியை வந்து பார்த்துவிட்டு செல்வான். அது மட்டும் இல்லாமல் எங்கிருந்தாலும் மனைவியின் மீது ஒரு கண்ணை எப்போதும் வைத்திருப்பான்.
அன்று மீனாட்சி திருச்சி கிளம்பிய பிறகு, அனைவரும் வரவேற்பு வேலையில் இறங்கிவிட,
கண்ணம்மா திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல் தவித்து போனாள்.ஸ்ரீதான் அவளுடன் சென்று பேசி சாதாரணமாக மாற்றினாள்.
அறையிலேயே முடங்கி போய் இருந்தவளிடம் பேசி பேசியே சரி செய்து, அனைவருடனும் சேர்ந்து சாப்பிட அழைத்து வந்தாள்.
குமாரி, சீனு இருவரும் நன்றாக பேசினாலும் ஏனோ அவளுள் ஒட்டாத தன்மை ஏற்பட, அமைதியாகவே பொழுதை ஓட்டினாள்.
இரவு நேரம் கதவு தட்டப்படும் சத்தத்தில் பயந்து போனவள் மெதுவாக சென்று கதவை திறக்க, அஷ்வின்தான் அங்கு நின்றிருந்தான்.
அஷ்வின், “உள்ள வரலாமா…”,
கண்ணம்மாவோ தயங்கி பின் கதவை நன்றாக திறந்து “வாங்க…” என்றவள் அமைதியாக இருக்க,
உள்ளே வந்த அஷ்வின் கொஞ்சம் பேசணும். அந்த கதவை சாத்திட்டு வா”
‘எதே….. கதவை சாத்தணுமா…’ என்று மனதில் அரண்டவள். “இல்லைங்க பரவால்ல அப்படியே…”
“உன்னை கதவை சாத்திட்டு வான்னு சொன்னேன். நான் ஒன்னும் உன்னை முழுங்கிற மாட்டேன் தைரியமா வா”என்றவுடன் கதவை அடைத்துவிட்டு வந்தவளை பார்த்தவன்.
“என் பேர் அஷ்வின்”என்று கூற, அவளோ “ம்ம்ம்…..”என்று தலையை மட்டும் அசைத்தாள்.
“ம்ம்…. ன்னா உன் பேர் என்ன?”என்று அதட்டலாக கேட்க, அதில் அரண்டு போனவள் “என் பேர் கண்ணம்மாங்க. எங்க ஊர் பக்கத்துல இருக்க மெடிக்கல் காலேஜ்லதான் ரெண்டாவது வருஷம் படிக்கறேங்க. அப்புறம்…” என்று தயங்கியவள் கண்களில் கண்ணீர் கட கடவென வர, அவள் எதைப்பற்றி சொல்ல போகிறாள் என்பதை அறிந்து கொண்டவன்.
“உனக்கு வருத்தமான விஷயத்தை சொல்லணும்னு அவசியம் இல்லை. அதே போல உன்னோட பாஸ்ட் எனக்கு முக்கியம் இல்லை. இப்போ நீ என் வைப். சாரி….. அவங்ககிட்ட இருந்து உன்னை காப்பாத்த…”
“பரவால்லைங்க. காப்பாத்ததான் தாலி கட்டினீங்கன்னு எனக்கும் தெரியும். நான் காலைல….”
“ஹேய்…. நிறுத்து…. நிறுத்து…. கொரியன் சீரிஸ் நிறைய பார்ப்பியோ….”என்றவன் கேட்க,
அவளோ பெக்க பெக்கவென விழித்தாள். பின்ன சென்னப்பன் டிவி பார்க்க விடுவதே பெருது. இதில் எங்கிருந்து இவள் கொரியன் சீரிஸ் பார்ப்பது.
“என்ன அப்படி முழிக்கற. பார்த்தது இல்லையா? சரி விடு. அது நமக்கு தேவையில்லை. காப்பத்த தாலி கட்டினேன்னுதான் சொன்னேன். ஆனா நல்லா யோசிச்சுதான் தாலி கட்டினேன்.
இனி இதுதான் உன் வீடு. நாங்கதான் உன் உறவு. உன் மனசுல வேற யாரவது……”
“ச்ச…. ச்ச…. அப்படியெல்லாம் இல்லைங்க நல்லா படிச்சு, ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆகணுங்கிறதுதான் என்னோட ஆசை. ஆனா…. அதுக்குள்ள அப்பா தப்பா புரிஞ்சுக்கிட்டு……”என்றவள் சொல்லும்போதே அழுகை வர, இதழ்களை பற்களால் அழுத்தி கடித்து அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு நின்றாள்.
அவள் இதழ்களை அழுத்தமாக பார்த்தவன் பின் தன் பார்வையை திருப்பி கொண்டு “சரி விடு. இனி அதைப்பத்தி பேச வேண்டாம். வா என்னோட ரூம்க்கு போகலாம்”என்றவன் சொன்ன அடுத்த நிமிடம் “ஏன்…. ஏன்…. அங்க வரணும். நான் இங்கேயே…” என்றவள் சொல்லும்போதே அவளை உறுத்து விழித்தவன்,
“லிசன். சொன்னதையே என்ன திரும்ப திரும்ப சொல்ல வைக்காத. நாம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி அதை இனி யாராலும் மாத்த முடியாது. நாம ரெண்டு பேரும் ஒன்னா தங்கரதால எதுவும் மாற போவது இல்ல.
அதேபோல நான் ஒன்னும் இப்பவே லைப்ப ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்லல,
முதல்ல ரெண்டு பேரும் ஒன்னா தங்குவோம். ஒரு ரூம் மெட்ஸ் மாதிரி. அப்புறம் பிரண்ட்ஸ் ஆகி அப்புறம் போக.. போக அதுவா மாறும்போது மாறட்டும் பார்த்துக்கலாம்”என்றவன் கூற,
கண்ணம்மாவோ,’இவனை நம்பலாமா. அதுவா….. மாறுமா ?… என்ன மாறும்?”என்று யோசிக்க,
“என்ன போலாமா?” என்றவன் குரலில் அவனை பார்த்தவள். பின் என்ன நினைத்தாளோ “சரி”என்றுவிட்டு அவனோடு சென்றாள்.
அஷ்வின் அறையில் அவள் கீழே படுத்துக்கொள்ள, ஒரே நாளில் எல்லாத்தையும் மாற்ற முடியாது என்று நினைத்தவன் எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டான்.
அதன் பின் ஒருவாரமும் வரவேற்பு வேலையாக வெளியில் அலைய, இருவரும் பேசி கொள்வதே அரிதாகி போனது.
சீனு கண்ணம்மாவை அழைத்து வரவேற்பு வைத்திருப்பதைபற்றியும் அதற்கு தேவையான உடைகளை தேர்ந்தெடுக்க செல்லலாம் என்றும் சொல்ல, வேக வேகமாக நடக்கும் நிகழ்வுகளில் தன்னை பொருத்தி கொள்ள முடியாமல் மிகவும் திணறி போனாள்.
ஸ்ரீதான் அவள் நிலையை புரிந்து கொண்டு உதவினாள்.
இது போன்ற நிகழ்வில்தான் கண்ணம்மா மனம் அக்காவை தேட துவங்கியது.
தாயே இங்கு அவளுக்கு எதிராக இருக்க, தன் மீது பாசமாக இருந்த அக்காவின் அருக்காமைக்கு அவள் மனம் ஏங்கியது.
‘அக்கா நீ எங்க இருக்க. எப்படி இருக்க. உனக்கு குழந்தை பிறந்துடுச்சா. என்ன குழந்தை. மாமாவையும் நீ பார்க்க போகலைனு மலை சொன்னான். அப்போ நீ எங்கதான் போன.
இந்த ரெண்டு வருஷத்துல எவ்ளோ மாற்றம். எனக்கு கல்யாணமே ஆகிடுச்சு நீ இல்லாம. மலை இல்லாம’என்றவள் நினைக்கும் போதுதான். தன் உடன் பிறந்த சகோதரன் நினைவு வர அங்கிருந்த லேண்ட் லைன் போனில் ஏழுமலையை அழைத்தவள் அந்த அந்த பக்கம் அவன் போன் எடுத்தவுடன் கதறி அழ துவங்கினாள்.
போனில் கண்ணம்மாவின் குரலை கேட்ட பின்புதான் நிம்மதியாக உணர்ந்த அவனும் “என்ன ஆச்சு கண்ணு. கோவிலுக்கு போயிட்டு வரோம்னு போனீங்க. வரும்போது அவங்கமட்டும்தான் வந்தாங்க. நீ கடல்ல மூழ்கி இறந்து போயிட்டதா இங்க சாங்கியம் எல்லாம் பண்றாங்க. எந்த ஊர்க்கு போனீங்க. என்னதான் ஆச்சு”என்று கேட்க,
அவன் சொன்ன விஷயத்தை கேட்டு அதிர்ந்து போனவள் மேலும் விக்கி விக்கி அழ, அவன் கத்தி கொண்டே இருந்தான்.
“கண்ணு….. கண்ணம்மா….. என்ன ஆச்சு சொல்லிட்டு அழு”என்று, அந்த நேரம்தான் அறையின் உள்ளே வந்தான் அஷ்வின்.
மனைவி போனை காதில் வைத்து கொண்டு அழவும் வேகமாக அவள் அருகில் சென்று ரிசீவரை தான் வாங்கி “ஹலோ….”என்க,
அந்த பக்கமும் “ஹலோ……”என்ற ஆண் குரலை கேட்டு, புருவம் சுருக்கியவன் “ஹலோ…. யாருங்க. நான் கண்ணம்மாவோட ஹஸ்பண்ட் பேசறேன்”என்று சொல்ல,
அந்த பக்கம் ஆழ்ந்த அமைதி நிலவியது.
இவன் மீண்டும் “ஹலோ…. ஹலோ…..”என்று கத்திய பின் “நான் கண்ணம்மாவோட ட்வின் பிரதர் பேசறேன்” என்ற குரலில் நிம்மதி ஆனவன்.
“என்ன ஆச்சு? ஏன் கண்ணம்மா அழறா?” என்று கேட்க, அவனும் அவளிடம் சொன்ன அனைத்தையும் கூறினான்.
“சரி எங்க வரவேற்பு நிகழ்ச்சி இன்னும் மூணு நாள்ல மதுரைல அரேன்ஞ் பண்ணியிருக்கோம் உன்னால வர முடிஞ்சா வா”என்று அஷ்வின் சொல்ல,
மலையும் “கண்டிப்பா வரேன். ஆனா என்ன ஆச்சுனு”
“எல்லாம் நேர்ல பேசிக்கலாம் வா” என்று வைத்துவிட்டான்.
கண்ணம்மா புறம் திரும்பியவன் “அழாத உன் தம்பி ரிசப்சனுக்கு வரேன்னு சொல்லியிருக்கான். எல்லாம் சரியாகும்”என்க,
அவனை கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்தவள் “இல்லங்க உங்களுக்கு எங்க அப்பா பத்தி தெரியாது. எதுவும் சரியாகாது. எப்போவும் சரியாகாது”என்றுவிட்டு மேலும் அழ,
அவளுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று புரியாமல் விழித்தவன் பின் அவனால் முடிந்த சமாதான வார்த்தைகளை கூறி, ஸ்ரீயை அழைத்து அவளை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு வேலையை பார்க்க கிளம்பிவிட்டான்.
மனைவியை அவன் சமாதானம் செய்தாலும் அவன் மனமும் உலைகளனாக கொதித்து கொண்டுதான் இருந்தது.
‘என்ன மனுஷங்க இவங்க. பெத்த பொண்ணு உயிரோட இருக்கும்போதே அவ இறந்துட்டதா எல்லா சாங்கியமும் பண்றாங்க. இது மாதிரி எல்லாம் கதைகல்ல படிச்சு, படத்துல பார்த்து கற்பனைனு நினைச்சா.
நிஜத்துலயும் இந்த மாதிரி ஆளுங்க இருக்கதான் செய்யறாங்க போல’என்று திட்டி தீர்த்தவன், தீரனிடம் விஷயத்தை சொல்ல, அவனோ “இதை நான் எதிர்பார்த்தேன்”என்றான்.
“சொந்த மக வாழ்க்கையை மூணு மாசத்துல பிரிச்சி கூட்டிட்டு வந்தவருக்கு இது எல்லாம் பெரிய விஷயம் இல்ல. விடு பார்த்துக்கலாம்”என்றுவிட, அஷ்வினும் அதன்பின் அவர்களைப்பற்றி யோசிக்கவில்லை.
மூன்று நாட்களும் விடு விடுவென ஓட, இதோ அனைவரும் மண்டபத்திற்கும் வந்துவிட்டனர்.
ஸ்ரீ கண்ணம்மா அறைக்கு சென்று என்ன செய்கிறாள் என பார்க்க, அவளோ சோக சித்திரமாக அமர்ந்திருந்தாள்.
ஸ்ரீ, “ஹேய் புது பொண்ணு என்ன ஆச்சு. எங்க பையன் முகத்தை பார்க்க முடியலன்னு வருத்தமா?” என்று கேட்க,
அவளோ பதறி “ஹா…. அப்படி எல்லாம் இல்லங்க அக்கா”என்று சொல்ல,
அவள் அருகில் சென்றவள் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்து “என்ன உன் அம்மா அப்பா வரலன்னு வருத்தப்படறியா.
நான் வேணா அவங்களுக்கு போன் செய்து பேசவா”.
“இல்லக்கா அதெல்லாம் வேண்டாம். அவங்க வரலைனாலும் பரவால்ல.
யாருட்ட பேசறோம்னு யோசிக்காம பேசுவாங்க.
அதுமட்டும் இல்லாம அவங்கதான் பொண்ணு செத்துட்டான்னு காரியம் பண்ணிட்டாங்களே. எங்க மனசை புரிஞ்சுக்கதவங்களபத்தி நான் ஏன் வருத்தப்பட போறேன்.
எனக்குன்னு நான் நினைக்கற ஒரே உறவு என்னோட அக்காவும், மலையும்தான் அவங்க இப்போ என்கூட இல்லைனுதான் வருத்தம்” என்று சொல்ல,
ஸ்ரீயோ, “வருத்தப்படாத. மலை வந்திட்டு இருக்கறதா போன் பண்ணுனான். கவலைப்படாம. புது பொண்ணா சந்தோஷமா மேடைல நில்லு. இது உன்னோட கோல்டன் மொமண்ட் இதை மிஸ் பண்ணுன்னா மறுபடியும் இது மாதிரி ஒரு சான்ஸ் உனக்கு கிடைக்காது.
எங்க அஷு ரொம்ப ரொம்ப நல்லவன் அவன் கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும் சரியா. அவன் உன்னை நல்லா பார்த்துப்பான். உன்னோட பாஸ்டவிட பியூச்சர் அழகா இருக்கும் சரியா” என்க,
கண்ணம்மாவும் சரி என்பது போல் தலையசைத்தாள்.
ஒருவழியாக அஷ்வின், கண்ணம்மா இருவரையும் மேடையில் நிற்க வைக்க, விருந்தினர்கள் அனைவரும் வர துவங்கினர்.
வருபவர்கள் அனைவரையும் மனைவிக்கு அறிமுகபடுத்தி கொண்டும், பேசி கொண்டும், அவளுக்கு தனிமை உணர்வு வராமல் பார்த்து கொண்டான் அஷ்வின்.
கும்பல் அனைத்தும் ஓரளவு குறைந்த பின் மாஸ்க் அணிந்த ஒருவர் அவர்கள் அருகில் வர, அவரை பார்த்து மகிழ்ந்து போன அஷ்வின்,
“அடடே வாங்க ப்ரோ. ஏன் லேட். ஓ…. ஆமா. நீங்க கும்பல அவாய்ட் பண்ணணும்ல. சாரி ப்ரோ”
“கண்ணம்மா இவர் சத்ய தேவ். நம்ம ஆடிட்டர்”என்று சொல்ல,
அவ்வளவு நேரமும் ஏனோ தானோவென நின்றிருந்த கண்ணம்மாவிற்கு அவர் பெயரை கேட்ட உடன் ஏதோ தோன்ற, வந்தவனை நன்றாக பார்த்தவள் கண்கள் மகிழ்ச்சியில் விரிய,
“மாமா……”என்றழைக்க, சத்யா அவளை அமைதியாக பார்த்தான்.
வேகமாக அவன் அருகில் சென்றவள் அவன் கையை பிடித்து கொண்டு “மாமா நல்லா இருக்கீங்களா. அத்த, மாமா எல்லாம் நல்லா இருக்காங்களா”என்று கேட்க, அவனோ “ம்ம்…”என்ற பதிலை மட்டுமே தந்தான்.
அஷ்வின் வேண்டுமென்றே தெரியாதது போல் “கண்ணம்மா இவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா”என்று கேட்க,
அவளும் “ம்ம்.. தெரியுங்க. இவரு என் அக்கா புருஷ……”
“புருஷனா இருந்தேன். இப்போ இல்ல”என்று சொல்லி கொண்டிருக்கும்போதே மலையும் அங்கு வந்துவிட,
சத்யாவை கண்டவன் ஓடி சென்று அவனை அணைத்து கொண்டு கண்ணீர் விட துவங்கினான் .
சத்யாவிற்கு அவனை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. அவன் அன்பை நிராகரிக்கவும் அவனால் முடியவில்லை”அதனால் அவன் தோளில் தட்டி சமாதானப்படுத்தியவன் “என்ன ஏழுமலை இது சின்ன புள்ள மாதிரி. நீ டாக்டருக்கு படிக்கறதா சொன்னாங்க”என்க,
அவனோ “ஆமா. மாமா. அப்பா பெருமைக்கு எங்கள படிக்க வைக்கறாரு”என்றான்.
அப்பா என்றவுடன் அவனுள் எழுந்த கோபத்தை அடக்கியவன் “சரி ரெண்டு பேரும் நல்லா படிங்க. நான் கிளம்பறேன்”என்று செல்ல போனவன் கையை பிடித்த கண்ணம்மா.
“மாமா ப்ளீஸ். எனக்காக ஒரு ரெண்டு நாள் இங்க இருங்களேன். எல்லாரும் புது ஆளுங்க. அவங்க சொந்தம். எனக்குன்னு இருக்கறது நீங்க ரெண்டு பேர்தான்”. என்க,
மீனாட்சி மேடை மறைவில் நின்று அவர்கள் சம்பாசனை அனைத்தையும் கேட்டு கண்ணீர் உகுத்து கொண்டு நின்றாள்.
அஷ்வின்தான் கடைசியில் நிலமையை சமாளிக்கும் பொருட்டு “முதல்ல போட்டோ எடுக்கலாம் வாங்க”என்று சொல்ல,
மேடையில் நின்றிருந்த தாயின் பிடியில் இருந்து தப்பித்து ஓடிவந்த இரண்டு சிட்டுக்களும் அஷ்வின் அருகில் போக,
“அடடே தங்க குட்டிங்க வந்துட்டீங்களா. வாங்க போட்டோ எடுக்கலாம்”என்று தூக்க போக,
குழந்தைகள் என்றால் எப்போதும் ஆசையாக இருக்கும் சத்யா “நீங்க இருங்க அஷ்வின். குழந்தைகளை நான் தூக்கிக்கறேன்”என்றவாறு இருவரையும் இரு பக்கமும் தூக்கி வைத்து கொள்ள,
ஏழுமலை, சத்யா, மீனாட்சி, அஷ்வின், கண்ணம்மா என்று அந்த புகைப்படம் அழகாக வந்தது.
ஆம், மேடையில் ஒதுங்கி நின்றிருந்த மீனாவை அவர்கள் அறியாமல் சத்யா பக்கத்தில் நிற்க வைத்திருந்தாள் ஸ்ரீ,
சத்யா கிளம்பும் முன் இரண்டு குழந்தைகளையும் கொஞ்சிவிட்டே சென்றான்.
மலை மாமா…. மாமா…. என்று சத்யாவுடனே சுற்ற, அவன் மீது கோபப்பட விருப்பம் இல்லாதவன் நன்றாகவே பேசினான்.
அங்கு சத்யா நன்றாக பேசி கொண்டு இருந்தாலும் அவனுள் பல கேள்விகள் எழ, அதை மலையிடமே கேட்டான்.
அவனும் தனக்கு தெரியாது என்றும். மூன்று நாட்கள் முன்பு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சொன்னவன் அக்கா எங்க போனானே தெரியல மாமா. அவ வீட்டவிட்டு போகும்போது கன்சீவா வேற இருந்தா”என்று சொல்ல,
“வாட்……”என்று அதிர்ந்த குரலில் கேட்டவன், அமர்ந்திருந்த சேரில் இருந்து வேகமாக எழ,
“ஆமா மாமா. உங்களுக்கு தெரியாதா. அந்த குழந்தையையும் அழிக்க பிளான் பண்ணுனாங்க. அதனாலதான் அக்கா வீட்டவிட்டே கிளம்பிட்டா”என்று சொல்ல,
“என்ன மீனாட்சி கன்சீவா இருந்தாளா…”என்றவன் கேட்க,
அப்போது அங்கு வந்த தீரன் “வீட்டுக்கு போய் எல்லாம் பேசிக்கலாமே” என்க,
சத்யாவிற்கு அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழ,
“இல்லை. எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும் என்னதான் ஆச்சு”என்று பட படபோடு கேட்க,
“எல்லாம் சொல்றோம். முதல்ல எல்லாரும் வீட்டுக்கு போகலாம்” என்று சொல்ல,
சத்யா வேறு வழி இல்லாமல் அமைதியாக அவர்களுடன் சென்றான்.
வீட்டிற்கு வந்தவுடன் தீரன் மலை, கண்ணம்மா, சத்யா மூவரையும் பார்த்து “நீங்க அந்த ரூம்ல போய் தாராளமா பேசலாம்” என்று சொன்னவுடனே,
எழுந்த சத்யா மலையிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க, அவனும் அனைத்தையும் சொல்லி முடித்தான்.
அவன் சொல்வதை கேட்டு இறுகி போனவன் அப்படியே நின்றிருக்க, அவனோ “அன்னைக்கு நைட் அங்க விட்டுட்டு வந்ததோட சரி. அதுக்கு அப்புறம் நாங்க அவளை பார்க்கவே இல்லை. எங்க இருக்கான்னே தெரியல”என்று சொல்ல,
சத்யாவோ, “எனக்கு தெரியும்”என்று சொல்லிவிட்டு, யோசித்தவனுக்கு பல முடிச்சுகள் அவிழ்வது போல் இருக்க, கண்களை இறுக மூடி தனக்குள் எழுந்த உணர்வை அடக்கியவன் பார்வை மணப்பெண்ணாக நின்ற கண்ணம்மா மேல் விழ, புருவம் சுருக்கியவன் “நீ எப்படி இங்க”என்று கேட்க,
அவள் சொல்வதை கேட்ட இரண்டு ஆண்கள் மட்டும் இல்லாமல் வெளியில் நின்றிருந்த மீனாவும் கேட்டு உடைந்து போய்,வாயில் கைவைத்து அழுது கொண்டே அவளுக்கு என்று ஒதுக்கி இருந்த அறைக்கு சென்று கதற துவங்கினாள்.
அப்படி கண்ணம்மா என்ன சொல்லியிருப்பாள்.
சத்யாவிற்கு மீனாட்சி இங்கு இருக்கும் விஷயம் தெரிந்திருக்குமா? குழந்தைகள்பற்றி தெரிந்து கொண்டாள் அவன் நிலை என்ன என்பதை அடித்தடுத்த எபியில் பார்க்கலாம்.