அத்தியாயம் -24

அந்த ஹாஸ்பிடல் மொட்டை மாடியில் கண்ணீரோடு நின்றிருந்தாள் அவள்.
வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு கீழே குதிக்க போக, நொடி நேரத்தில் அவள் கையை பிடித்து இழுத்தது ஒரு வலிமையான ஆண் கரம்.
கீழே இழுத்த வேகத்தில் அவன் மார்போடு மோதி நின்றாள் பேதை.
அதே நேரம் “இவன்தானா அது. இவன் கூட போயிட்டு வந்துதான் என் மானத்தை வாங்குனியா. உன்னை வெட்டி பொலி போடறேன் இருடி” என்று கர்ண கொடூரமாக கத்திய குரலை கேட்டு பதறி இருவரும் விலகி நிற்க,
அதை கண்டுகொள்ளாத அந்த குரலுக்கு சொந்தமானவர் வேகமாக அவர்கள் அருகில் வந்து அழுகையோடு பயந்து போய் நின்று கொண்டிருந்தவள் முடியை பிடித்து “ஊர்ல எனக்கு இருக்கற மறுவாதி என்ன. இப்படி சந்தி சிரிக்க வைக்கவே பொட்டையா வந்து பொறந்து தொலைச்சீங்களா. உன்னை வெட்டறத்துக்கு முன்னாடி அவனை வெட்டறேன்” என்று கேவலமாக திட்டியவன் திரும்பி அந்த பெண்ணை காப்பாற்றிய அஷ்வினை பார்த்து முறைத்தான்,
அந்த பெண்ணோ “இல்லப்பா நீங்க நினைக்கற மாதிரி இல்ல. இவரு யாருன்னே எனக்கு தெரியாது. இப்போதான்………” என்று சொல்லும்போதே அந்த பெண்ணை ஓங்கி அறைந்த அப்பெண்ணின் தந்தை.
“வாய மூடுடி கழுதை. உன்னை தொலைச்சுகட்டதான் இங்க கூட்டிட்டு வந்தேன். வந்த இடத்துல இவனையும் காட்டி குடுத்துட்ட. ரெண்டு பேரையும் சேர்த்து கொன்னு போடறேன்” முதல்ல சந்தேகம் தான்பட்டேன். இப்போ உறுதி ஆகிடுச்சு.
இங்க இருந்து மேலும் என் மானத்தை வாங்காம்ம ஒழுங்கா என் கூட வா…”
“ஐயோ….. இல்லப்பா. நான் எந்த தப்பும் பண்ணல என்னை விடுங்க” என்றவள் அவர் காலில் விழ,
அவளை எட்டி உதைத்த அந்த அப்பா என்பவனோ “என்னடி பண்ணல கண்ணால நான்தான் பாத்துட்டேனே அப்புறம் என்ன? உன்னை பார்க்க பார்க்க எனக்கு கொலை வெறி வருதுடி”என்றவர் மேலும் அவளை அடிக்க கையை ஓங்க,
அந்த ஆணின் கையை இறுக்கி பிடித்த அஷ்வின் “இங்க இருந்து போங்க….”என்று அந்த பெண்ணை பார்த்து சொல்ல,
அவளோ தயங்கி நின்று கொண்டே இருந்தாள் அதில் கடுப்பானவன் “போன்னு சொல்றேன்ல போடி…….ஈஈஈ” என்று கத்த,
அந்த சத்தத்தில் திகைத்து போனவள் வேகமாக அங்கிருந்து ஓட,
அஷ்வின் கையை தட்டிவிட்ட அந்த ஆண் “டேய் என்ன அவளை காப்பாத்தலாம்னு நினைக்குறியா? ஒழுங்கா ஊர் போய் சேருற வழிய பாரு. போனா போகுதேனு உன்னை விடறேன். என்னை சீண்டுன உன்னையும் கொன்னு அடையாளம் இல்லாம ஆக்கிடுவேன் பார்த்துக்கோ” என்றுவிட்டு, மகள் சென்ற திசை பக்கம் ஓட,
அஷ்வினோ,‘மனுஷனா இவன். சொந்த பொண்ணை கொல்ல இப்படி வெறி புடிச்சு அலையறான்’ என்று நினைத்து அவர்களை தொடர்ந்து ஓடினான்.
நந்தன் ஆப்ரேசன் முடிந்ததால் அனைவரும் அங்கிருந்த காரிடரில் அமர்ந்திருக்க,
மீனாவும் அங்குதான் இருந்தாள். தனக்கு போன் வரவும் அதை பேசி கொண்டே வந்தவள் எதிரில் ஓடிவந்த பெண்ணை கவனிக்காது மோத, தடுமாறி கீழே விழுந்தாள் அந்த பெண்.
“மாட்டுனியா எங்கடி ஓடுற, சத்தம் இல்லாம என்கூட வா. இங்க இருந்து முதல்ல போகலாம். தேவையில்லாம பேசி எதாவது பண்ணுன. நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என்று மக்கள் நடமாட்டம் இருக்கவும் மெதுவாக பல்லை கடித்து பேசியவன் அவளை இழுத்து செல்ல முனைய,
அப்போது அங்கு வந்து சேர்ந்தார் நடுத்தர வயதை சேர்ந்த பெண் “என்னங்க டெஸ்ட் எடுக்காமையே இந்த புள்ள ஓடி வந்திருச்சுங்க”என்றவர் சொல்ல,
அந்த பெண்ணையும் ஒரு அடி வைத்த அந்த ஆண் “என்னடி புள்ள வளர்த்து வச்சுருக்க. என் மானத்தை வாங்கவே ரெண்டும் பொறந்து தொலைச்சுருக்கு”என்று திட்டி கொண்டே இருவரையும் இழுத்து கொண்டு வெளியே செல்லும் பாதை நோக்கி செல்ல துவங்கினான்.
மீனாட்சி தன் மேல் மோதிய பெண்ணை பார்த்து அதிர்ந்து போனாள்.
காசிக்கு போனாலும் கர்மா தொலையாது என்பது போல் இரண்டரை வருடங்களுக்கு பிறகு அவளுடைய இடத்தில் தந்தையையும், தங்கையையும் பார்த்துவிட்டாள்.
தங்கையின் கண்ணீரை கண்டு குழம்பியவள் ‘கண்ணம்மா….’என்று வாயசைக்க,
அப்போதுதான் அவள் அம்மா வந்து பேசியது.
ஆம், உயிருக்கு பயந்து ஓடி வந்தது கண்ணம்மா என்றால், மகளை தகாதவார்த்தையில் பேசியது சென்னப்பனேதான். அவர்களிடம் வந்து பேசியது தனம்தான்.
மீனா அப்படியே நின்றிருக்க,
வெளியே செல்ல போனவர்கள் எதிரில் போய் நின்றான் அஷ்வின்.
சென்னப்பன்,“டேய் நீ இன்னும் போகலையா?”
அஷ்வின், “நீங்க பேசற பேச்சுலையே தெரியுது அந்த பொண்ணை நீங்க என்னமோ பண்ண போறீங்கன்னு. ஒழுங்கா அவளை விடுங்க. இல்லை நான் போலிசுக்கு போக வேண்டி இருக்கும்”.
“டேய் நீ யாருடா? என் பொண்ணை விட சொல்றதுக்கு. அவ என் பொண்ணு அவளை என்ன பண்ணவும் எனக்கு உரிமை இருக்கு. அதை கேட்க நீ யார்?
“கூட சுத்துற கண்ட கழுதைய எல்லாம் என்னால என் குடும்பத்து ஆளா ஏத்துக்க முடியாது”என்றவர் பேசி கொண்டிருக்கும்போதே கும்பல் கூட துவங்க, அஷ்வின் குடும்பமும் அங்கு வந்து சேர்ந்தது.
சீனு,“இங்க என்ன நடக்குது.நிறுத்த போறீங்களா இல்லையா?. இது ஹாஸ்பிடல் நோயாளிகள் வந்து போற இடத்துல என்ன சண்டை. எங்க எப்படி நடந்துக்கணும்னு உங்களுக்கு தெரியாதா. மரியாதையா வெளிய போங்க”.
சென்னப்பன், “வெளிய போகத்தான்யா போறேன். பின்ன இங்கயே உட்கார்ந்து பொழப்பு ஓட்ட வந்தேன்னு பார்த்தியா. போயா….”என்ற சென்னப்பன் வெளியே செல்ல,
மகள் வராமல் அப்படியே நிற்கவும் கடுப்பானவர் “வர போறியா இல்லையாடி…”என்று திட்டி கொண்டே திரும்ப,
அங்கு கண்ணம்மாவின் கையை அஷ்வின் இறுக்கி பிடித்து வைத்திருந்தான்.
“டேய்…. நானும் போனா போகுதுனு பார்த்தா என் முன்னாடியே. என் பொண்ணு கைய புடிக்கரியா? உன்னை என்ன பண்றேன் பாரு”என்றவர் அவனை அடிக்க செல்ல,
அங்கிருந்தவர்கள் அவரை அடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.பின் “ஏம்ப்பா இப்படி பண்ற. அவரு பொண்ண அவர் கூட்டிட்டு போறாரு. நீ ஏன் தடுக்கற?”என்று ஒருவர் அஷ்வினிடம் கேட்க,
அவனோ கண்ணம்மாவை பார்த்தான் அழுது அழுது முகம் சிவந்து, அவள் தந்தை அடித்ததில் கன்னம் வீங்கி போய் இருந்தவள் கண்கள் மரண பயத்தை வெளிப்படுத்த,
எப்படி இந்த பெண்ணை காப்பாற்றுவது என்ற கவலையில் ஆழ்ந்தான்.
“பொட்ட சிறுக்கி யாருடி அவன். உரிமையா எங்க முன்னாடியே கைய புடிச்சுட்டு நிக்குறான். அப்பாகிட்ட குரல் உசத்தி பேசறான்.
நம்ம ஊர்ல யாரவது அப்பா முன்னாடி நின்னு பேசி பார்த்துருக்கியா? இப்படி அக்காவும், தங்கச்சியும் சேர்ந்து என் சிங்கத்து மானத்தையே வாங்குறீங்களேடி.
உங்களை எல்லாம் பெத்து, வேணுங்கறது வாங்கி குடுத்து, படிக்க வச்சதுக்கு நீங்க செய்யற கை மாறாடி இது. இப்படி ஊர்விட்டு ஊர் வந்த இடத்துல அசிங்கபடுத்திப்புட்டியேடி. வீட்டுக்கு வா. எங்களுக்கு புள்ளையே இல்லைனு ஆக்கி புடுறேன்” என்று தனம் ஒரு பக்கம் மகளை வைது கொண்டு இருக்க,
அஷ்வினுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன இந்த பொண்ணே சாக தான் போணுது. அவளை காப்பாத்திவிட்டதுக்கு இவ்ளோ பேச்சு பேசுறாங்க. என்று யோசித்தவனுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது.
அது அவர்களுடன் அந்த பெண்ணை அனுப்பினாள் கண்டிப்பாக உயிரோடு இருக்கமாட்டாள் என்று,
சற்று நேரம் கண் மூடி நின்றவன் தன் தந்தையையும், தாயையும் திரும்பி பார்க்க,
மகனின் எண்ணத்தை புரிந்து கொண்ட பெற்றோருக்கும் அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்க, சம்மதமாக இருவரும் தலையசைக்க,
பெற்றோரின் சம்மதம் கிடைத்த அடுத்த நிமிடம் கண்ணம்மா கையை பிடித்து ஹாஸ்பிடலில் அவர்கள் வைத்திருக்கும் மீனாட்சி சிலை முன் போய் நின்றவன் கையெடுத்து அம்மனை வணங்கி அவர் கழுத்தில் இருக்கும் சிவன், சக்தி இணைந்த மாங்கல்யத்தை எடுத்து அதிர்ந்து போய் நின்று கொண்டிருந்த கண்ணம்மா கழுத்தில் கட்ட,மொத்த கும்பலும் திகைத்து போனது.
கண்ணம்மா கழுத்தில் மூன்று முடிச்சையும் போட்டவன் உக்கிரமாக முறைத்து கொண்டு நின்றிருந்த சென்னப்பன் தம்பதிகள் அருகில் வந்து “நான் யாருனு கேட்டீங்கள்ள, இப்போ சொல்றேன் நல்லா காது குளிர கேட்டுக்கோங்க. நான் இவ புருஷன். இவளுக்கும் உங்களுக்கும் இடைல இனி எந்த சம்மந்தமும் இல்லை. வெளிய போங்க”என்று சொல்ல,
அவனை அடிக்க பாய்ந்த சென்னப்பனை பிடித்த மக்கள் “சரியோ தப்போ டாக்டர் தாலி கட்டிட்டாரு. வீட்டுக்கு கூட்டிட்டு போய் விருந்து வைப்பா”என்று சொல்ல,
தனமோ, “அடி நாசமா போனவளே கல்லாட்டம் நிக்கிறியே. இங்க வாடி. கழுத்துல போட்டுருக்க கயிறை அத்து போட்டு வாடி ஊருக்கு போய் சேருவோம்”என்றவர் மேலும் நாராசமாய் பேச,
கண்ணம்மாவோ தாலியை இறுக்கி பிடித்து, கணவனின் பின் புறம் சென்று ஒழிந்து கொண்டாள்.
குமாரி, “ஏய்…என்னம்மா நீ. என் புள்ள கட்டுன தாலிய கழட்டி போட்டுட்டு வர சொல்ற. அவன் யாரு தெரியுமா. இந்த ஹாஸ்பிடலோட ஓனர். டாக்டர். அவ என் மருமக. இனி யார் நினைச்சாலும் இந்த உறவை மாத்த முடியாது.
கழட்டி போட்டுட்டு வரணுமாமுள்ள. வாய ஒடச்சுருவேன். புள்ளைகள ஆசீர்வாதம் பண்றதுனா பண்ணு. இல்லை கிளம்பி ஊருக்கு போற வழிய பாரு. அதை விட்டுட்டு எதாவது பேசுன. பேச வாய் இருக்காது பார்த்துக்கோ.
என்னையா? வெள்ள சட்டை போட்டுட்டு ஊருக்குள்ள பெரிய மனுஷன் மாதிரி இருந்தா மட்டும் போதாது. மனசும் பெரிய மனுஷன் மாதிரி இருக்கணும்.
பெத்த புள்ளைகிட்ட நடந்துக்கற மாதிரியா நடந்துக்கற. உன்னையெல்லாம்…….
தனம், “ஹேய் வாய மூடுடி. என் புருஷனபத்தி உனக்கு என்ன தெரியும். அவரு மருவாதிபத்திதான் என்ன தெரியும். வாய் இருக்குன்னு நீப்பாட்டுக்கு பேசிட்டு இருக்க. இதுக்கு மேல எதாவது பேசுன. நான் மனுசியா இருக்க மாட்டேன் பார்த்துக்கோ…”
குமாரி, “இப்போ மட்டும் மனுஷங்க மாதிரியா நடந்துக்கிட்டீங்க. வாய மூடிட்டு போடி. அவன் யாரா இருந்தா எனக்கென்ன”என்க,
கணவனை மரியாதை இல்லாமல் பேசவும் கோபம் கொண்ட தனம் குமாரியை அடிக்க பாய, அவர் குறுக்காக மலை போல் வந்து நின்றனர் தீரணும் அஷ்வினும்.
இரு ஆண்களை கண்டு தனம் கையை பிசைந்து கொண்டு அரண்டு போய் நின்றிருக்க,
தீரனோ, “பொண்ணா போய்ட்டிங்க அதனால உங்களை அப்படியே விடறேன். இல்ல…
எங்க அம்மா மேல கை வைக்க வந்ததுக்கு வாழ்நாள் பூரா நீங்க வருந்தர மாதிரி பண்ணிடுவேன். ஏற்கனவே உங்க கூட தீர்க்க வேண்டிய கணக்கு இருக்கு”என்றவன் பார்வை ஸ்ரீ பின்னால் ஒழிந்து கொண்டு நின்றிருந்த மீனாட்சி மேல் படிந்து மீண்டது.
மேலும் “அது சரிபண்ற நேரம் இது இல்லைங்கறதால அமைதியா சொல்றேன். வெளிய போங்க” என்று சொல்ல,
சென்னப்பன் அவர்களை இருவரையும் உறுத்து விழித்து கொண்டே சென்றான்.
அந்த பார்வையே சொன்னது உங்களை நான் சும்மா விட போவது இல்லை என்று,
கண்ணம்மா தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் தனக்குள்ளே உழண்டு போய் இருக்க,
குமாரியும், ஸ்ரீயும் அவள் அருகில் சென்று பேசி ஆசுவாசப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
வீட்டிற்கு வந்து நேரமாகியும் மீனாவை காணாமல் ஸ்ரீ தேட, அவளோ அங்கு ஓரமாக நின்று தங்கையை எட்டி பார்ப்பதும், கவலைப்படுவதுமாக இருந்தாள்.
‘என்ன பண்றா…. இவ’என்று புரியாமல் விழித்தவள் அவளிடமே கேட்க எண்ணி அவள் முன்பு போய் நின்றாள்.
“என்ன மீனும்மா ஏன் அழற. அந்த பொண்ணை ஏன் மறைஞ்சு மறைஞ்சு பாக்கற” என்று கேட்க,
“சொந்த தங்கச்சியகூட மறைஞ்சு நின்னு பார்க்கணும்னு மீனாட்சி விதி. அதுக்கு அவ என்ன பண்ணுவா” என்றவாறு அங்கு வந்து சேர்ந்தான் தீரன்.
கணவன் சொல்வதை கேட்டு அதிர்ந்து போன ஸ்ரீ, “எதே தங்கச்சியா….. சொல்லவே இல்ல….”என்க,
மீனாவோ ‘உங்களுக்கு எப்படி……’என்பது போல் தீரனை பார்க்க,
அவனோ அந்த பொண்ணு உன் மேல மோதுனத்துல இருந்து நானும் உன்னை கவனிச்சுட்டுதான் இருந்தேன்.
எங்க அவங்க உன்னை பார்த்துருவாங்களோன்னு நிதி பின்னாடி நீ ஒழிஞ்சு நின்னதையும் பார்த்தேன். அவங்களை பார்த்து உன் கண்ணுல வந்த மரண பயத்தையும் பார்த்தேன்.”என்று சொல்ல, வழிந்த கண்ணீரை துடைத்தவள் “ஆமாண்ணா. என்னதான் நான் இந்த உலக்கத்தை தனியா எதிர் கொள்ள பழகிட்டாலும். அவங்களை நேருக்கு நேர் பார்க்கற தைரியம் இன்னும் எனக்கு வரலைண்ணா”என்று சொல்ல,
அவனோ “அவங்களை பார்க்கதான் உன்னால முடியல. உன் தங்கச்சிட்ட பேச, என்ன தயக்கம் போய் பேசு”என்றவன் பின் “வேண்டாம் நீ இங்க இருக்கறது உன் தங்கச்சிக்கு தெரிய வேண்டாம்”என்று சொல்ல,
பெண்கள் இருவரும் அவனை புரியாமல் பார்த்தனர்.
“ஏங்க பேச வேண்டான்னு சொல்லறீங்க”
“காரணமாத்தான்….. சரி மீனாட்சி நீ இங்க இருக்கியா. இல்ல திருச்சி போறியா?”என்று கூர் பார்வை பார்த்து கேட்க,
அவளோ “இல்லண்ணா நீங்க காரணம் இல்லாம எதுவும் சொல்ல மாட்டிங்க. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் இங்க இருந்தா கண்ணம்மாவை பார்க்க வேண்டி இருக்கும் குழந்தைகளை கூட்டிட்டு திருச்சி கிளம்பறேன்”என்று சொல்ல,
அவளை மெச்சுதலாக பார்த்த தீரன் “குட். நிதி நீ போய் அந்த பொண்ண அஷு ரூம்க்கு பக்கத்துல இருக்க ரூம்ல தங்க வை. மீனாட்சி கிளம்பட்டும்”என்று கூற,
ஸ்ரீயும் கண்ணம்மாவை அழைத்து கொண்டு சென்றுவிட, மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வர சொன்ன தீரன் ஹாலில் யோசனையுடன் அமர்ந்திருந்தான்.
அஷ்வின் குழப்பத்துடன் அங்கு வர அவனை தன் அருகில் அமர சொன்ன தீரன் “என்னடா தப்பு பண்ணிட்டோம்னு யோசிக்கறியா?” என்க,
அவனோ, “ச்ச…. ச்ச…அதெல்லாம் ஒன்னும் இல்லண்ணா. அவசரபட்டுட்டனோன்னு தோணுது. அந்த பொண்ண அவங்ககிட்ட இருந்து காப்பாத்தணும்னு யோசிச்ச நான் அந்த பொண்ணு மனசுல வேற யாரும் இருக்காங்கலான்னு கேட்காம தாலி கட்டிட்டேன். அதான் கொஞ்சம் உருத்தலா இருக்கு.
தீரன், “அந்த கவலைதானா…. இல்ல.. அவங்க அப்பா…அம்மா சந்தேகப்படற மாதிரி நீயும் அந்த பொண்ணு கேரக்ட்டர……”
“ச்ச……அப்படி எல்லாம் இல்லண்ணா”.
“சந்தோஷம். அந்த பொண்ணு யாருனு உனக்கு தெரிஞ்சுக்க வேண்டாமா”
“யாரா இருந்தா என்ன அண்ணா. இனி அவ என் பொண்டாட்டி”என்ற தம்பியை தோளில் தட்டி கொடுத்த தீரன்.
தந்தையை பார்த்து “அந்த பொண்ணு பேரு கண்ணம்மா. நம்ம மீனாட்சியோட தங்கச்சி”என்று சொல்ல,
மொத்த குடும்பமும் திகைத்து போனது.
“என்னப்பா…. சொல்ற? என்னங்கண்ணா சொல்லறீங்க?”என்ற குரலை கேட்டு,
ஆமாம் என்பது போல் தலையசைத்தவன். மீனாவை பார்க்க,
மீனா, “அம்மாங்கம்மா அவ என் தங்கச்சிதான். அவ்ளோ கேவலமா நடந்துகிட்டது என்னோட அம்மா, அப்பாதான்”என்று சொல்ல,
சீனுவிற்கு கோபம் சுறு சுறுவென ஏறியது.
“அவனா அந்த பாவி. பெத்த புள்ளைங்கன்னு பார்க்காம எப்படி பேசுனான். இதை நீ அங்கேயே சொல்லியிருக்கலாம்லப்பா. அவனை உண்டு இல்லைனு ஆக்கியிருப்பேன்.
பெரிய பொண்ணு வாழ்க்கையை அழிச்சது பத்தாதுனு சின்ன பொண்ண கொல்லவும் துணிஞ்சுட்டானே. இவனுக்கு எல்லாம் எதுக்கு புள்ள குட்டி. கவுரவம் கவுரவம்னு அலையறவன் அதையே வச்சுட்டு சுத்த வேண்டியதுதானே”.
மீனாட்சி, “எங்களை பெத்துகிட்டதுக்கும் காரணம் கவுரவம்தான்ப்பா. கல்யாணம் முடிஞ்சு புள்ளை இல்லன்னு சொல்ல கூடாதுனு நான். பையன் இல்லைனு சொல்ல கூடாது கண்ணம்மா. அவ பையன் இல்லன்னு மலை இப்படி நாங்க பிறந்ததே அவர் கவுரவத்தை காப்பாத்திக்கதானுங்கும்போது, அவர் எதுக்கு எங்களை பத்தி யோசிக்க போறாரு.
அஷ்வின்,“சரி நீ ஏன் உன் தங்கச்சிட்ட பேசல”.
தீரன், “நான்தான் பேச வேண்டாம்னு சொன்னேன்”. என்றவன் சில விஷயங்களை சொல்ல,
அஷ்வினோ “ஆனா…. அண்ணா இந்த நிலமைல. அந்த பொண்ணு என்ன நினைக்கும்னு…”
“எப்படியா இருந்தாலும். இது நடக்க வேண்டிய விஷேஷம்தான். அடுத்த வாரம் உங்க ரிசப்சன். எல்லாருக்கும் சொல்றோம். நம்ம ஆடிட்டர் சார்க்கும் சொல்றோம்” என்று சொல்ல,
மீனாட்சி அதிர்வுடன் தீரனை பார்த்தாள் என்றால் மொத்த குடும்பமும் மகனை மெச்சுதலாக பார்த்தது.

தீரன் என்ன பிளான் வைத்திருக்கிறான். அவன் பிளான் வெற்றி பெருமா? கண்ணம்மா, அஷ்வின் வாழ்க்கை இனி எப்படி போகும்.
கண்ணம்மாவை கொல்ல போகும் அளவிற்கு சென்னப்பனுக்கு அவள் மேல் என்ன கோபம் அனைத்தையும் அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.