அநிருத்தன்
அத்தியாயம் - 30
நவராத்திரி என்பதால் வீட்டிற்கு அருகே இருந்த கோவிலுக்கு வந்திருந்தாள் வசந்தி. விஜயா அனுப்பியிருந்த புடவையை உடுத்தியிருந்தாள். வெகு நாள்களுக்குப் பிறகு மனத்தில் ஓர் உற்சாகம். புதுப் புடவையின் மாயமாக இருக்குமென்று எண்ணிக் கொண்டாள். அவளது அந்த எண்ணத்தை மெய்ப்பிப்பது போல்,
“புதுப் புடவையா வசந்தி? உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு எங்கே வாங்கின?”...
அத்தியாயம் - 29
பெரிய திடல் ஒன்றில் அமைத்திருந்த பந்தலில் ஜோதியோடு அமர்ந்திருந்தார் விஜயா. இரவு எட்டு மணிக்கு ஜேஜே என்று மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது அந்த இடம். பந்தலைச் சுற்றியும் அதன் உள்ளேயும் செய்திருந்த மின்விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவரந்தன. நாற்காலி, மேஜை கூட அழகான, சரி பார்டர் உடை அணிந்திருந்ததைப் பிரமிப்புடன்...
அத்தியாயம் - 28-1
கணினியிலிருந்து பார்வையை அகற்றாமல்,”சைட் டேபிள்லே வைச்சிடு.” என்று சொன்ன கணவனை வி நோதமாகப் பார்த்தாள் வசந்தி. அப்படி வைத்து விட்டு போன சமயங்களில்,’எனக்காக காத்திருக்கறதை விட, என்னைப் பார்த்துக்கறதை விட உனக்கு வேற என்ன முக்கியமான வேலை காத்திட்டு இருக்கு?’ என்று வார்த்தையால் காயப்படுத்தி இருக்கிறான். இன்று அவனே வைத்து விட்டு...
அத்தியாயம் - 28
“சொல்லுங்க பெரியப்பா..எப்படி இருக்கீங்க?” என்று சபாபதியை விசாரித்தான் ஷண்முகவேல்.
பத்து நிமிடத்திற்கு மேலாக அக்கா, சிந்து இருவருடனும் அளவளாவிய விஜயா, அதன் பின் அவருடைய மாமாவிடம் சில நொடிகளுக்குப் பேசி விட்டு ஷண்முகத்திடம் கைப்பேசியைக் கொடுத்து விட்டார்.
ஷண்முகத்தின் கேள்விக்கு பதில் கொடுக்க சில நொடிகள் எடுத்துக் கொண்டார் சபாபதி. ‘நல்லா இருக்கேன்’ என்று...
அத்தியாயம் - 27
அவளது கைப்பேசி அழைப்பு நின்று போனதும் சமையலறையிலிருந்து வெளியே வந்த வசந்தி அவள் சார்பாக யாரிடமோ அவள் பிஸியாக இருப்பதாக வெங்கடேஷ் சொன்னதைக் கேட்டு மீண்டும் சமையலறைக்குள் சென்று விட்டாள். யாரென்று அவனிடம் கேட்டால்,’இந்த நேரத்துக்கு ஃபோன் வருது..நான் இல்லாத போது இப்படித் தான் கண்ட கண்ட நேரத்திலே கால் பேசிட்டு...
அத்தியாயம் - 26-1
வேலூரில் இருந்தது வசந்தியின் புகுந்த வீடு. சென்னையில் வேலை செய்து வந்த வெங்கடேஷ் கல்யாணம் வரை தனியாக வீடு எடுத்து வசித்து வந்தான். திருமணம் முடிந்ததும் அதே வீட்டில் வசந்தியுடன் தனிக்குடித்தனத்தை ஆரம்பித்தான். பெயருக்கு தான் அது தனிக்குடித்தனம். வசந்தியின் வீட்டை சின்ன வேலூர் என்று தான் சொல்ல வேண்டும். திருமணமான...
அத்தியாயம் - 26
வீட்டிற்குள் நுழைந்ததுமே,”சாமி, சீக்கிரமா டிரெஸ் மாத்திட்டு வாங்க..சாப்பாடை முடிச்சிட்டு எல்லோருக்கும் ஃபோன் போட்டு புடவை வாங்கி இருக்கற விஷயத்தை சொல்லிடலாம்.” என்றார் விஜயா.
அவனது கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன்,”அக்கா இரண்டு பேருக்கும் இப்போவே ஃபோன் போடுங்க ம்மா..சாப்பாட்டை முடிச்சிட்டு அவங்களோட பேசறது சரி வராது..சாப்பாடு முடிச்சிட்டுப் சிந்துவோட பேசலாம்..அவங்க டைம்முக்கு கரெக்ட்டா இருக்கும்..பெரியப்பாகிட்டே...
அத்தியாயம் - 25 -1
“அரசாங்கத்திலே பெரிய பதவிலே இருந்தும் அந்தத் தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல..ஒருவேளை அதுக்கு தான் அவங்க அம்மாவை இங்கே அழைச்சிட்டு வந்து கூட வைச்சிருக்குதோ அந்தத் தம்பி..பொண்ணுக்கு தில்லி தான் சொந்த ஊரா? விஜயாம்மா பாவம்..தில்லி பொண்ணோட எப்படி மல்லுக்கட்டப் போறாங்களா?” என்ற பேச்சு சினேகாவை எரிச்சல்படுத்த,
“உங்களுக்குக் கல்யாணத்தை...
அத்தியாயம் - 25
உறவை மீட்டெடுத்தாகி விட்டது என்று நிம்மதி பெருமூச்சு விடுமுன் டக்கென்று அவளது வாயிலிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு விஜயா ஆன்ட்டியின் முகம் வாடிப் போனதை பார்த்த சினேகாவின் மனமும் வாடிப் போனது. ‘உன் மேலே நம்பிக்கை இல்லாமயா அம்மா, மகன் இரண்டு பேரும் புடவை செலெக்ஷனை உன் கையிலே விட்டாங்க.’ என்று...
அத்தியாயம் - 24 1
“சரியா சொன்ன கண்ணு..நான் கூட அவளை மறந்திட்டேன்..பிள்ளைத்தாச்சியா வேற இருக்கா..எல்லோருக்கும் பொருந்தற மாதிரி நீயே எடுத்துக் கொடு..இந்தா அவங்களோட ஃபோட்டோ.” என்று அக்காவின் மகள்கள் மூவரும் இணைந்து இருந்த புகைப்படம் ஒன்றை அவரது கைப்பேசியில் திரையில் காட்டினார் விஜயா.
புகைப்படத்தில் வசந்தி விறைப்பாக நின்றிருக்க, ஜெயந்தியும் சிந்துவும் புன்னகைத்துக் கொண்டிருந்தனர். புகைப்படத்தைப்...
அத்தியாயம் - 24
ஜோதியின் பேச்சு ஓய்ந்தவுடன் அந்த இடமே அமைதியானது. அவருடைய ஆதங்கம், ஆத்திரம், அங்கலாய்ப்பு அனைத்திற்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்று விஜயாவிற்குத் தெரியவில்லை. ஆறுதல் சொல்லும் அளவிற்கு அறிமுகம் இல்லாததால் அமைதியாக இருந்தார். அவர் சொன்னதை உள்வாங்கிய ஷண்முகமும் அவனுடைய அம்மாவைப் போல் அமைதியாக தான் இருந்தான். அந்த அமைதி தான்...
அத்தியாயம் - 23
கை சொடுக்கும் இடைவெளியில் முகத்திலிருந்து கால் வரை பலரை அலசி ஆராயந்து செயல்படும் மகனின் திறமை அம்மாவிற்கு கிடையாது. மகனின் தன்னிலை விளக்கத்தை கேட்டு சினேகாவின் எதிர்வினையை ஓரளவிற்கு விஜயாவின் மனது ஏற்றுக் கொண்டிருந்தாலும் அவரது மனத்தின் அலைப்புறுதல் ஓய்ந்தபாடில்லை. இன்றும் வலுக்கட்டாயமாக அவரைக் கடைக்கு அழைத்து வந்திருந்ததால் அவரது முகத்தில்...
அத்தியாயம் - 22-1
அதுவரை பொறுமையாக இருந்த அந்த இளைஞன்,”ஆன்ட்டி” என்று ஜோதியை அழைத்து, அவனது கைப்பேசித் திரையைக் காட்டி ஹிந்தியில் ஏதோ சொன்னான். அவனது கைப்பேசியைத் தீவிரமாக சில நொடிகளுக்குப் பார்த்த ஜோதி,”ஆன்லைன்லே வாங்கிக்கோங்க.” என்று இரண்டே வார்த்தைகளில் நிர்தாட்சண்யமாக பதில் கொடுக்க,”டீக் ஹே ஜி” என்று சொல்லி விட்டு வெளியேறி விட்டான் அந்த...
அத்தியாயம் - 22
கடையின் வாசலை பெருக்கி விட்டு, வெளியே இருந்த விளக்கை போட்டு, கண்ணாடிக் கதவைச் சாத்திக் கொண்டு கையில் துடைப்பத்துடன் உள்ளே சென்றார் ஜோதி. வீட்டுக்கு செல்லும் கதவைத் திறந்து அதற்குப் பின்னால் துடைப்பத்தை வைத்து விட்டு வரவேற்பறை விளக்கை ஒளிர விட்டு, கதவைச் சாத்தி விட்டு கல்லாவில் வந்தமர்ந்து கொண்டார். சில...
அத்தியாயம் - 21-1
“கொஞ்ச நாள், கொஞ்ச நாள்னு நிறைய நாள் ஆகிடுச்சு விஜயாம்மா..இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா தில்லிலே குளிர் பிச்சிட்டுப் போகும்..அப்போ எப்படியும் சென்னைக்கு பறந்து வரத் தான் போறீங்க.” என்று கேலி செய்தாள் நித்யா.
“அப்படி எதுவும் நடக்காது..இங்கே இருக்கறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா? வெய்யிலைச் சமாளிக்கற மாதிரி குளிரையும் சமாளிக்கக் கத்துக்க...
அத்தியாயம் - 21
பிரகாஷின் தில்லி விஜயம் நடந்து கிட்டதட்ட ஒரு மாதமாகி இருந்தது. அந்த விஜயத்திற்குப் பின் பிரகாஷின் சொல்வளத்திலிருந்து போலீஸ்க்காரன் என்ற வார்த்தை நிரந்தரமாகக் காணாமல் போயிருந்தது. அதே சமயம் அந்த ஒரு மாதத்தில் மகன் மீது சினேகாவிற்கு ஏற்பட்ட தவறான அபிப்பிராயமானது அவள் மீது தவறான அபிப்பிராயத்தை விஜயாவின் மனத்தில் ஏற்படுத்தியிருந்தது....
அத்தியாயம் - 20 - 1
அதில் தலையை உயர்த்திய பிரகாஷ், குற்றம் சாட்டும் அவளது பார்வையைச் சந்திக்க முடியாமல் உடனேயே பார்வையைத் தாழ்த்திக் கொள்ள,”அவன் போலீஸ்காரனில்லை கண்ணு.” என்று சொல்லி பிரகாஷிற்கு ஷாக் கொடுக்க, டக்கென்று தலையை உயர்த்தி அதை வெளிப்படுத்தினான் பிரகாஷ்.
அதற்கு சினேகா எதிர்வினை ஆற்றும் முன்,”அத்தை என்ன உளர்ற?” என்று ஏகவசனத்தில்...
அத்தியாயம் - 20
கேமரா கண் வழியாக பார்க்காமல் நேரடியாக பிரகாஷைப் பார்த்த நொடியில் அவனது கள்ளத்தனம் உறுதியாக சினேகாவின் மனம் உலைக்களமானது. எதிரில் இருந்தவனை கண்களால் எரித்தவளின் மனது அவளுக்குத் தெரியாமல் அவளைக் கேமரா வழியாக நோக்கியிருந்தவனைப் பஸ்மமாக்கும் அளவிற்கு பொங்கியது. அன்று சத்தம் செய்யாமல் கடையினுள் ஷண்முகம் நுழைந்தது இன்று திருட்டுத்தனமாக நுழைந்தது...
அத்தியாயம் - 19-1
அந்தப் பதில் சரியான பதில் தானலென்றாலும் அதில் ஏதோ தப்பாக இருக்கிறது என்று உணர்ந்த சினேகாவிற்கு அது என்ன என்ற ஆராய்ச்சியில் இறங்க அவகாசம் கிடைக்கவில்லை. ,”ஷண்முகவேல் என்னோட மகன் கண்ணு..அன்னைக்கு வந்திருந்தானே.” என்றார் விஜயா.
“யெஸ்..அன்னைக்கு கடைக்கு வந்திருந்தாங்க..நியாபகமிருக்கு.” என்று சினேகா சொல்ல அதற்கு அடுத்து அந்த உரையாடல் எந்தப் பாதையில்...
அத்தியாயம் - 19
பெருக்கி சுத்தம் செய்திருந்தாலும் கடை கந்தகோளமாக இருந்தது. கல்லாவில் ரசீதுகள் இறைந்து கிடந்தன. கௌண்டர் மீது துணிகள் குமிந்து கிடந்தன. மொத்தத்தில் சுலபமான வேலையை அவன் பங்காக செய்து விட்டு கடினமானதை சினேகாவிடம் தள்ளியிருந்தான் மனோகர். அவளுடைய மடிக்கணினியோடு கல்லாவில் போய் அமர்ந்து கொண்ட சினேகா, முந்தைய தினத்தின் ரசீதுகளை ஒரு...