Sunday, May 11, 2025

    அநிருத்தன்

    அத்தியாயம் - 40 “வசந்தி எப்படி இருக்கா ஜெயந்தி?” என்று கேட்டார் விஜயா. “அவளுக்கு என்ன சித்தி சொந்த கார்லே பெங்களூர், வேலூர், சென்னைன்னு ஊர் சுத்திட்டு இருப்பா..என்னைப் போல ஒரே இடத்திலே அடைஞ்சு கிடக்கணும்னு தலை எழுத்தா என்ன? நான் வெளியே சுத்தறது வீடு தேடத் தான்..அதுவும் அம்மா பக்கத்திலே தான் இருக்கணும்னு இவர் சொன்னதாலே...
    அவளுள் எழுகின்ற கேள்விகளுக்கு யாரிடமிருந்து விடை கிடைக்கூடுமென்று யோசித்து யோசித்து வசந்தியின் மனது பெரும் அழுத்தத்திற்கு உள்ளானது. தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஊரே சந்தோஷமான மனநிலையில் சுற்றிக் கொண்டிருக்க தனியாக வீட்டினுள் முடங்கி இருந்தாள் வசந்தி. மாமியார், மாமனார் இருவரிடமும் பேசி பல நாள்களானது. புது மாப்பிள்ளை என்று மகனின் புது தோற்றத்தை...
    அத்தியாயம் - 38 பிரகதி மைதானத்தில் கைவினை, கைத்தறி கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரிசா கைத்தறி பொருள்களை விற்பனை செய்த கடையின் உள்ளே அமர்ந்திருந்தாள் சினேகா. வேலை விஷயமாக வெளியிடங்களுக்கு செல்லும் போது இது போல் ஓர் இடத்தில் அசமந்தமாக அமர்ந்திருக்க மாட்டாள், சுறுசுறுப்பாக செயல்பட்டு அவளுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை அழகாகப் பயன்படுத்திக் கொள்வாள். அவளின்...
    அத்தியாயம் - 37 இப்படியொரு திருப்பத்தை மகளின் வாழ்க்கையில் எதிர்பார்த்திராத ஜோதிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வர, டீபாயில் இருந்த தண்ணீர் பாட்டிலை அப்படியே தொண்டையில் சரித்துக் கொண்டார். சில நொடிகள் கழித்து,”என்ன கேட்டீங்க விஜயாம்மா?” என்று கேட்டார். ஜோதியின் மனநிலை புரிந்ததால், இந்தமுறை,“ஷண்முகத்திற்கு சினேகாவைக் கட்டிக் கொடுப்பீங்களான்னு கேட்டேன்.” என்று மிகத் தெளிவாக அவரது எண்ணத்தை...
    அத்தியாயம் - 36 சினேகாவின் வீடு இருந்த சந்தின் ஆரம்பத்தில் அவனது வண்டியை நிறுத்திய ஷண்முகவேல்,”எதுக்கு இத்தனை பிடிவாதம் பிடிக்கறீங்க ம்மா?” என்று கேட்டான். சில நொடிகளுக்கு யோசித்தவர்,”என்னோட கல்யாணத்தை முடிச்சுக்கணும்னு பிடிவாதமா இருந்தவ இப்போ உன்னோட கல்யாணத்தை முடிக்கணும்னு பிடிவாதமா இருக்கேன்..அந்த முடிவு நல்ல முடிவுன்னா இந்த முடிவும் நல்ல முடிவு தான்..என் போக்கிலே என்னை...
    அத்தியாயம் - 35 அடுத்த நாள் மதியம் போல் ஜோதிக்கு கைப்பேசி அழைப்பு விடுத்தார் விஜயா. அவரது அழைப்பை ஜோதி ஏற்கவில்லை. மீண்டுமொருமுறை முயற்சி செய்த போதும் அழைப்பு ஏற்கப்படாமல் போனவுடன் நடந்ததிலிருந்து வெளி வர ஜோதிக்கு சிறிது அவகாசம் கொடுக்க முடிவு செய்தார் விஜயா. அந்த நிகழ்விலிருந்து வெளி வர ஜோதிக்கு மட்டுமில்லை சினேகாவிற்கும்...
    அத்தியாயம் - 34 அவளுக்குப் பிடித்தது என்று அந்த தின்பண்டத்தை வாங்கி வரவில்லை ஷண்முகம். விடுமுறை தினம் என்பதால் அன்று போல் இன்றும் கடையில் அதிகச் சரக்கு இல்லை. அன்று அவன் உண்ட தவல வடை அவனுக்குப் பிடித்திருந்ததால் அதையே இன்று வாங்கி வந்தான். அது அவளுக்கும் பிடித்தது என்று தெரிந்திருந்தால்,’நமக்குள்ளே செட்டாகும்னு சொல்ல இது...
    அத்தியாயம் - 33 வேட்டி, சேலை இரண்டும் சிக்கிலில் சிக்கிக் கொண்ட நொடி,”இதோ வந்திட்டான் மனோகர்.” என்று சிக்கல் மேலும் சிக்கலாகும் முன் அதை மீட்டு எடுத்தார் ஜோதி. அவர்களருகே பைக்கில் வந்து இறங்கியது மனோகரின் குடும்பம். ”தாதிகிட்டே போ.” என்று அவளின் மடியிலிருந்த மாண்ட்டியை ஜோதியிடம் கொடுத்தாள் ஷிக்கா. அதே நேரம் சினேகாவின் கையில் பூச்சரத்தை...
    அத்தியாயம் - 32 அந்த ஞாயிற்றுக்கிழமை ஏன் வந்தது, விடிந்தது என்று இருந்தது சினேகாவிற்கு. பெண் பார்க்க சம்மதம் தெரிவித்த பின்னர் தான் வள்ளிசாக அவளது மனத்தை வள்ளிமணவாளன் களவாடியிருந்ததை ஒரு கைக்குட்டை புரிய வைத்திருந்தது. இன்று காலையில் கண் விழித்ததுமே தலையணை கீழ் இருந்த கைக்குட்டையை எடுத்து அதில் அவள் செய்திருந்த நூல் வேலைபாட்டை...
    அத்தியாயம் - 31 வீட்டினுள்ளே அவன் நுழைந்த போது ஷர்மாவின் கையில் பெரிய பார்சல் இருந்தது. இவனைப் பார்த்ததும், “ஸர்” என்று அட்டென்ஷனில் நின்றார் ஷர்மா. லேசாக தலையசைத்து அவரது வணக்கத்தை ஏற்றுக் கொண்டவன், அப்படியே அவர் உடம்போடு ஒட்டி வைத்திருந்த பார்சலுக்காக கையை நீட்ட, பவ்யமாக அதை அவன் கையில் அதைக் கொடுத்தார். உடனே, ”எங்களோட புடவையை...
    அத்தியாயம் - 30 நவராத்திரி என்பதால் வீட்டிற்கு அருகே இருந்த கோவிலுக்கு வந்திருந்தாள் வசந்தி. விஜயா அனுப்பியிருந்த புடவையை உடுத்தியிருந்தாள். வெகு நாள்களுக்குப் பிறகு மனத்தில் ஓர் உற்சாகம். புதுப் புடவையின் மாயமாக இருக்குமென்று எண்ணிக் கொண்டாள். அவளது அந்த எண்ணத்தை மெய்ப்பிப்பது போல், “புதுப் புடவையா வசந்தி? உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு எங்கே வாங்கின?”...
    அத்தியாயம் - 29 பெரிய திடல் ஒன்றில் அமைத்திருந்த பந்தலில் ஜோதியோடு அமர்ந்திருந்தார் விஜயா. இரவு எட்டு மணிக்கு ஜேஜே என்று மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது அந்த இடம். பந்தலைச் சுற்றியும் அதன் உள்ளேயும் செய்திருந்த மின்விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவரந்தன. நாற்காலி, மேஜை கூட அழகான, சரி பார்டர் உடை அணிந்திருந்ததைப் பிரமிப்புடன்...
    அத்தியாயம் - 28-1 கணினியிலிருந்து பார்வையை அகற்றாமல்,”சைட் டேபிள்லே வைச்சிடு.” என்று சொன்ன கணவனை வி நோதமாகப் பார்த்தாள் வசந்தி. அப்படி வைத்து விட்டு போன சமயங்களில்,’எனக்காக காத்திருக்கறதை விட, என்னைப் பார்த்துக்கறதை விட உனக்கு வேற என்ன முக்கியமான வேலை காத்திட்டு இருக்கு?’ என்று வார்த்தையால் காயப்படுத்தி இருக்கிறான். இன்று அவனே வைத்து விட்டு...
    அத்தியாயம் - 28 “சொல்லுங்க பெரியப்பா..எப்படி இருக்கீங்க?” என்று சபாபதியை விசாரித்தான் ஷண்முகவேல். பத்து நிமிடத்திற்கு மேலாக அக்கா, சிந்து இருவருடனும் அளவளாவிய விஜயா, அதன் பின் அவருடைய மாமாவிடம் சில நொடிகளுக்குப் பேசி விட்டு ஷண்முகத்திடம் கைப்பேசியைக் கொடுத்து விட்டார். ஷண்முகத்தின் கேள்விக்கு பதில் கொடுக்க சில நொடிகள் எடுத்துக் கொண்டார் சபாபதி. ‘நல்லா இருக்கேன்’ என்று...
    அத்தியாயம் - 27 அவளது கைப்பேசி அழைப்பு நின்று போனதும் சமையலறையிலிருந்து வெளியே வந்த வசந்தி அவள் சார்பாக யாரிடமோ அவள் பிஸியாக இருப்பதாக வெங்கடேஷ் சொன்னதைக் கேட்டு மீண்டும் சமையலறைக்குள் சென்று விட்டாள். யாரென்று அவனிடம் கேட்டால்,’இந்த நேரத்துக்கு ஃபோன் வருது..நான் இல்லாத போது இப்படித் தான் கண்ட கண்ட நேரத்திலே கால் பேசிட்டு...
    அத்தியாயம் - 26-1 வேலூரில் இருந்தது வசந்தியின் புகுந்த வீடு. சென்னையில் வேலை செய்து வந்த வெங்கடேஷ் கல்யாணம் வரை தனியாக வீடு எடுத்து வசித்து வந்தான். திருமணம் முடிந்ததும் அதே வீட்டில் வசந்தியுடன் தனிக்குடித்தனத்தை ஆரம்பித்தான். பெயருக்கு தான் அது தனிக்குடித்தனம். வசந்தியின் வீட்டை சின்ன வேலூர் என்று தான் சொல்ல வேண்டும். திருமணமான...
    அத்தியாயம் - 26 வீட்டிற்குள் நுழைந்ததுமே,”சாமி, சீக்கிரமா டிரெஸ் மாத்திட்டு வாங்க..சாப்பாடை முடிச்சிட்டு எல்லோருக்கும் ஃபோன் போட்டு புடவை வாங்கி இருக்கற விஷயத்தை சொல்லிடலாம்.” என்றார் விஜயா. அவனது கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன்,”அக்கா இரண்டு பேருக்கும் இப்போவே ஃபோன் போடுங்க ம்மா..சாப்பாட்டை முடிச்சிட்டு அவங்களோட பேசறது சரி வராது..சாப்பாடு முடிச்சிட்டுப் சிந்துவோட பேசலாம்..அவங்க டைம்முக்கு கரெக்ட்டா இருக்கும்..பெரியப்பாகிட்டே...
    அத்தியாயம் - 25 -1 “அரசாங்கத்திலே பெரிய பதவிலே இருந்தும் அந்தத் தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல..ஒருவேளை அதுக்கு தான் அவங்க அம்மாவை இங்கே அழைச்சிட்டு வந்து கூட வைச்சிருக்குதோ அந்தத் தம்பி..பொண்ணுக்கு தில்லி தான் சொந்த ஊரா? விஜயாம்மா பாவம்..தில்லி பொண்ணோட எப்படி மல்லுக்கட்டப் போறாங்களா?” என்ற பேச்சு சினேகாவை எரிச்சல்படுத்த, “உங்களுக்குக் கல்யாணத்தை...
    அத்தியாயம் - 25 உறவை மீட்டெடுத்தாகி விட்டது என்று நிம்மதி பெருமூச்சு விடுமுன் டக்கென்று அவளது வாயிலிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு விஜயா ஆன்ட்டியின் முகம் வாடிப் போனதை பார்த்த சினேகாவின் மனமும் வாடிப் போனது. ‘உன் மேலே நம்பிக்கை இல்லாமயா அம்மா, மகன் இரண்டு பேரும் புடவை செலெக்‌ஷனை உன் கையிலே விட்டாங்க.’ என்று...
    அத்தியாயம் - 24 1 “சரியா சொன்ன கண்ணு..நான் கூட அவளை மறந்திட்டேன்..பிள்ளைத்தாச்சியா வேற இருக்கா..எல்லோருக்கும் பொருந்தற மாதிரி நீயே எடுத்துக் கொடு..இந்தா அவங்களோட ஃபோட்டோ.” என்று அக்காவின் மகள்கள் மூவரும் இணைந்து இருந்த புகைப்படம் ஒன்றை அவரது கைப்பேசியில் திரையில் காட்டினார் விஜயா. புகைப்படத்தில் வசந்தி விறைப்பாக நின்றிருக்க, ஜெயந்தியும் சிந்துவும் புன்னகைத்துக் கொண்டிருந்தனர். புகைப்படத்தைப்...
    error: Content is protected !!