Saturday, July 5, 2025

    அநிருத்தன்

    அத்தியாயம் - 56 பக்கவாட்டு மேஜையில் இருந்த அவளுடைய கைப்பேசியை எடுப்பதும் சில நொடிகள் கழித்து மறுபடியும் மேஜை மீது வைப்பதுமாக ஒரு முடிவிற்கு வரமுடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள் வசந்தி. இரவு பதினொரு மணியாகி இருந்தது. இத்தனை நேரமாக அவளோட பேசிக் கொண்டிருந்த விஜயா இப்போது தான் கண்ணயர்ந்திருந்தார். அவரை எழுப்பாமல் மிக நிதானமாக படுக்கையிலிருந்து...
    அத்தியாயம் - 55-1 மரியாதையில்லாமல் வெங்கடேஷைப் பற்றி பேசியதே வசந்தியின் நிலைப்பாட்டை அவர்களுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும்.  என்ன நடந்தாலும் எப்படியாவது வசந்தியை அவளுடைய கணவனிடம் சேர்ப்பித்திட வேண்டுமென்ற முடிவோடு புறப்பட்டு வந்தவர்களிடம் அது போய் சேரவில்லை. “நீ செய்து வைச்சிருக்கற வேலைக்கு உன்னை வேலைக்காரியா வைச்சுக்கிட்டாலே பெரிசு..எப்படியோ அவர் வீட்லே நீ இருந்தா எங்களுக்குப் போதும்.”...
    அத்தியாயம் - 55 அழைப்பு மணியை ஷண்முகம் அழுத்தும் முன்னரே கதவு திறக்க, அந்தப் புறம் நின்றிருந்த சினேகா, மெல்லிய புன்னகையோடு,“வாங்க” என்று விருந்தினர்களை வரவேற்றாள். இரண்டு சிறிய பெட்டிகளைக் தூக்கிக் கொண்டு பெரியம்மா, பெரியப்பா, ஜெயந்தி அக்காவின் கணவன் ரங்கநாதனோடு வீட்டிற்குள் வந்தான் ஷண்முகம். இன்றைக்கு டிரைவருக்கு விடுமுறை அளித்திருந்ததால் இவர்களை அழைத்து வர அவன்...
    அத்தியாயம் - 54-1 இவளின் வருகைக்காக கதவைத் திறந்து வைத்து காத்திருந்தார் விஜயா. அவள் உள்ளே நுழைந்து கதவைச் சாத்தியதும்,”இன்னும் வரலையான்னு இப்போ தான் ஜோதி ஃபோன் செய்து விசாரிச்சா?” என்றார். “டிராஃபிக் சித்தி.” என்று பதிலளித்தபடி செருப்பைக் கழட்டி அதன் இடத்தில் வைத்தாள். “எங்களுக்கு எப்படி அந்த விவரம் தெரிய வரும்..அவ ஏத்தி விட்டு அரைமணி நேரம்...
    அத்தியாயம் - 54 மாலை நேரத்தில் ஷேர் ஆட்டோவிற்காக கூட்டம் கூட்டமாக மக்கள் காத்திருக்க,“இந்தப் பக்கம் வந்திடு.” என்று வசந்தியின் கையைப் பிடித்து இழுத்து அவரின் இடதுப் பக்கம் அழைத்துக் கொண்டார் ஜோதி. கடந்த மூன்று மாதங்களாக வசந்தி தில்லிவாசியாகி இருந்தாலும் முதல் மாதம்  முழுவதும் வீட்டை விட்டு நகரவேயில்லை. வீட்டு வேலைகள் செய்தபடி வீட்டிற்குள்ளேயே...
    அத்தியாயம் - 53-1 சில மணி நேரங்களுக்கு முன்பு அவர்களை வரவேற்றது போலவே இப்போதும் மதன் அவரது பில்டிங் வாயிலில் நின்று கொண்டிருந்தார். இந்தமுறை அவர்கள் மூவரையும் அவரது ஃபிளாட்டிற்கு அழைத்துச் சென்றார். வீட்டிற்குள் நுழைந்ததும், ஒரு கதவைக் காட்டி,”அவங்களை அந்த ரூமுக்கு அழைச்சிட்டுப் போ டா..நான் கீழே போயிட்டு அண்ணியை அனுப்பி வைக்கறேன்.” என்றார். “இருங்க..நானும்...
    அத்தியாயம் - 53 ஒரு கணவனை இப்படியும் அவமானப்படுத்த முடியுமென்று அவனுடைய வீட்டில், அவனின் கண் முன்னால் நடந்ததைப் பார்த்த பின்னரும் ராதிகாவின் கணவனால் அதை நம்ப முடியவில்லை. அதுவும் தாலியை துச்சமாக கருதி வசந்தி அதை தூக்கி எறிந்ததை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. சில மாதங்களில் விவாகரத்தில் முடிய இருந்த திருமணம் இப்படி...
    அத்தியாயம் - 52-1 காலையிலிருந்து உணவு அருந்தாததால் ஒரு மாதிரி மயக்கம் கலந்த தூக்கத்தில் இருந்த வசந்தி, திடீரென எழுந்த பேச்சு சத்தத்தில் விழித்துக் கொண்டாள். டி வி சத்தம், குழந்தைகள் விளையாடும் சத்தத்தோடு இணைந்து போன குரல்களில் அவளைப் பற்றி தான் பேசுகிறார்களென்று அவளுக்கு தெரியவில்லை.  விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தவள் செவிகளில்,’எங்கே வசந்தி அண்ணி?’...
    அத்தியாயம் - 52 ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே தற்காப்பு யுக்தியைக் கையாண்டு அவர் மறைக்க நினைத்ததை ஷண்முகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார் சீதா. வாசலுக்கு ஒரு செவியைக் கடன் கொடுத்திருந்த ராதிகா அவளுடைய அம்மா பேசியதைக் கேட்டதும் உஷாராகி விட்டாள். அண்ணியைப் பார்க்க அவர்கள் வீட்டிலிருந்து யார் வந்திருக்கிறார்களென்று தெரிந்து கொள்ள சோஃபாவிலிருந்து எழுந்து...
    அத்தியாயம் - 51-1 அவர்கள் இருவருக்கும் குளிர்பானங்கள் கொடுத்து உபசரித்தார் மதன். அடுத்த சில நிமிடங்கள் மூவரும் உலக நடப்பில் ஆரம்பித்து நாட்டு நடப்பின் வழியாக வீட்டு நடப்பிற்கு வந்து சேர்ந்தனர். சினேகாவின் குடும்பம், அவளது வேலை என்று பொதுவாக பேசிக் கொண்டிருந்த போது, திடீரென்று, “அன்னைக்கு பிரகதி மைதானத்திலே, அந்த ஒரிஸா கடைலே கைலே புத்தகம்,...
    அத்தியாயம் - 51 கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச, கணவனின் தோள் மீது சாய்ந்து,”தூக்கமா வருது இன்னும் எத்தனை தூரம்?” என்று கேட்டாள் சினேகா. அவனது கைப்பேசியில் கூகில் மேப்பை பார்த்துக் கொண்டிருந்தவன்,”வந்திடுச்சு..அஞ்சு நிமிஷம்னு மேப் சொல்லுது.” என்றான் ஷண்முகம். “அப்போ அரைமணி நேரமாகும்.” என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டாள். விமான நிலையத்திற்கு கார் அனுப்ப மதன் முன்வந்த...
    அத்தியாயம் - 50 அவனது கேள்வியில் அன்றைய இரவிற்குப் பயணம் செய்தவள் அது ஏற்படுத்திய தாக்கத்தைத் தாங்க முடியாமல் கட்டிலில் அமர்ந்தாள். அந்தக் கேள்வி எதற்கு? அது எங்கே போகிறது? என்று அவளுக்குப் புரிந்தாலும் அதற்கு உண்மையான பதிலைக் கொடுக்க முடியாமல் அமைதி காத்தாள் சினேகா. ‘தாலி’ என்ற வஸ்த்துவைப் பற்றி தனிப்பட்ட கருத்தை உருவாக்கக்...
    அத்தியாயம் - 49 அதைக் கேட்டு ஏமாற்றமடைந்தவள்,“இப்போ தான் போனேன்.” என்றாள்.  “ஏன் ட்ரிப்போட ஃபோட்டோஸ் ஷேர் செய்யலை?” என்று கேட்டான் விளையாடும்வேல். ‘போலீஸ்காரன் குசும்பை பாரேன்...அப்படியே இவங்க செல்ஃபி அலைலே என்னை முழுகடிச்ச மாதிரி.’ என்று மனத்திற்குள் குமைந்தவள் அதை வெளிக்காட்டாமல்,”ப்ளஷர் ட்ரிப் இல்லை…வேலை விஷயமா போனேன்..பெங்களூர் சில்க் தயாரிப்பை நேர்லே பார்க்க போயிருந்தேன்.” என்று பணிவுடன்...
    அத்தியாயம் - 48 மதி மாமியின் கேள்விக்கு விடையைத் தேடியபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள் சினேகா. வீட்டு வாயிலிருந்து படபடவென ஆட்டோ சத்தம் கேட்க அவளது இதயமும் தடதடவென அதன் ஜதியை கூட்ட,  நிமிடங்கள் கடக்க, ‘ஒரு பாய் சொல்லிட்டு கதவைச் சாத்திட்டு வர இத்தனை நேரமா இவங்களுக்கு?’ என்று கணவனுக்குகாக காத்திருந்து அவன் மீது கோபம்...
    அத்தியாயம் - 47-2 இன்று, ஷண்முகத்தின் திருமண நாளன்று அந்தக் கேள்வி மறுபடியும் எழ, வெங்கடேஷின் திடமான மனத்தில் லேசான தடுமாற்றம் வந்திருந்தது. அதை மறைத்துக் கொண்டு, “ராதிகாக்கு உடம்பு சரியில்லை வரமுடியாதுன்னு இன்னைக்குக் காலைலே தான் மெசேஜ் போட்டேன்.” என்று அவனுடைய அப்பாவின் கேள்விக்குப் பதில் அளித்தான். அதற்கு சீதா பதிலளிக்கும் முன் அவளது படுக்கையறையிலிருந்து வெளியே...
    அத்தியாயம் - 47-1 கணவருக்கு காலை உணவு பரிமாறியபடி,“என்ன டா இன்னைக்கு ஆபிஸ் போகலையா? வீட்லேர்ந்து வேலை செய்யப் போறேயா?” என்று கேட்டார் சீதா. வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருந்த வெங்கடேஷிடமிருந்து பதில் வரவில்லை. ஏதோ யோசனையில் பால்கனியைப் பார்த்துக் கொண்டிருந்தான். ராதிகாவின் அறையிலிருந்து குழந்தைகளின் சத்தம், அவளின் அதட்டல் என்று காலை நேரப் பரபரப்பில் வீடு இருக்க...
    அத்தியாயம் - 46-3 “வாங்க..வாங்க சம்மந்தி..வாங்க மாப்பிள்ளை..வாங்க தம்பி.” என்று மூவரையும் வரவேற்றார் செல்வம். காசியப்பனை செந்தில் கண்டு கொள்ளவில்லை. இவர்களை அழைத்துக் கொண்டு வரும் போது கண்டிப்பாக அவர்கள் வீட்டில் அவனிருப்பானென்று அவருக்குத் தெரியும். வனிதா நிச்சயத்தில் நடந்த தவறை இப்படித் தான் சரி செய்தால் தான் நமக்கு மரியாதை என்று ஷண்முகம் சொன்னது சரி...
    அத்தியாயம் -  46 2 ‘எது?’ என்று கேட்காமல் அவன் சொன்ன உப்புச்சப்பு இல்லாத காரணத்தை தான் சொல்கிறான் என்று புரிந்தாலும் அதற்குப் பதில் அளிக்காமல், அவனது கட்டளைக்கு அடிபணியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான் காசியப்பன். அசையாமல், அசராமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் ஷண்முகம். என்ன நடக்கப் போகிறதோ என்ற அனைவரின் பதற்றத்தை காசியப்பனின் கைப்பேசியிலிருந்து...
    அத்தியாயம் - 46-1 ஷண்முகம் சொன்னது சரியாக காதில் விழுந்திருந்தாலும் விழுந்ததைக் காசியப்பனால் நம்ப முடியவில்லை. எனவே,”என்ன சொன்ன?” என்று அழுத்தமான குரலில் கேட்க, சோஃபாவில் சாய்ந்தமர்ந்து, அசால்ட்டாக,”உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சொன்னேன்.” என்று பதிலளித்தான். செல்வத்தின் கையை உதறி விட்டு,“டேய் என் ஃபோனை கொடு டா.” என்று அடியாளிடமிருந்து அவனது கைப்பேசியைப் பெற்றுக் கொண்டவன்,...
    அத்தியாயம் - 45 அன்று காலையில் தான் அவனுக்குத் திருமணம் முடிந்தது என்று யாரும் எண்ண முடியாதபடி புது மாப்பிள்ளைக்கான எந்த அடையாளமும் இல்லாமல் வெகு சாதாரணமான உடையில் மரசோஃபாவில் விநாயகம் அருகே அமர்ந்திருந்தான் ஷண்முகவேல். சினேகாவின் மாமாக்கள் இருவரும் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர். வரவேற்பறையை ஒட்டி இருந்த சின்ன அறையில் அவளுடைய அம்மா...
    error: Content is protected !!