மிகுகாதல்
அத்தியாயம்-10-1
உடனே,”டேய் உத்தம், ஒரு டாக்ஸி புக் செய்து கொடு டா..யாருக்கு எப்படிக் கல்யாணம் நடந்தா எனக்கு என்ன..நான் என் வீட்டுக்கே போறேன்.” என்று சோஃபாவிலிருந்து எழுந்து கொண்டாள் இந்திரா.
வேகமாக எழுந்து வந்து அவளது தோளைப் பிடித்து அவளை மீண்டும் சோஃபாவில் அமர்த்திய உத்தம்,”நிச்சயத்திலே நீ கலந்துக்காம இருந்தா நல்லாவா இருக்கும்..இன்னைக்கே நீ திரும்பிப் போனா...
அத்தியாயம் - 10
உத்தமின் தற்பெருமையில்,’எல்லோரும் கூப்பிடற பெயரை மறந்த இவங்க அமிக்டாலாவை அடிச்சுத் துவைக்கணும்.’ என்று கோபம் கொண்டவளின் முகம் அதை வெளிக் காட்டாமல் சாந்தமாக இருந்தது. அப்போது அவளது புடவை கொசுவத்தை வேகமாக இழுத்தாள் ப்ரியங்கா. உடனே, அவளைத் தூக்கிக் கொண்டு வேகமாக வீட்டிற்குள் ஓடினாள் மணி. கீழே இருந்த படுக்கையறை ஒன்றின்...
அத்தியாயம் - 9
‘மனோ’ என்று அவளை அழைத்த ஒரே ஜீவன் இந்த உலகத்தை விட்டுப் போய் பத்து வருடங்களாகி விட்டது. உயிர் பிரியும் சில தினங்களுக்கு முன்பு, சுவாசம் பாராமகிப் போன நிலையில், உருக்குலைந்திருந்த உடலை அவள் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, மிகச் சன்னமாக, ‘மனோ’ என்று அழைத்து, சுத்தம் செய்து கொண்டிருந்த கையை...
அத்தியாயம் - 8-1
மாடியில் மதிய வேளை உறக்கத்தை தழுவ ஆரம்பித்திருந்த காவேரி அது நழுவிப் போனவுடன், கோபத்துடன் அவரது படுக்கையறையிலிருந்து வெளியே வந்தார். மாடி வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து அவனது மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த உத்தம், அவனது தலையை உயர்த்தாமல்,
“ஏசி போட்டுக்கிட்டு கதவை அடைச்சிட்டு படுங்க.” என்று கட்டளையிட,
“உங்கப்பாக்கு ஏசி ஒத்துக்காது..கொஞ்ச நேரத்திலே...
அத்தியாயம் - 8
உத்தம் சொன்னதைக் கேட்டு காவேரிக்கு பக்கென்றானது. உடனே பார்வையைக் கணவனின் புறம் திருப்ப, சிவமூர்த்தியின் முகம் உணர்ச்சியற்று இருக்க, அவரது உள்ளமானது அழுது கொண்டிருக்க,‘ஒரே ரத்தம் தான் உசந்ததுன்னு பேச உனக்கு என்ன அருகதை இருக்கு?’ என்று மனைவியைக் கேட்க நாக்கு துடித்தது. ஆனால் இதுவரை அவரைக் கேட்டதில்லை. இனியும் கேட்கப்...
அத்தியாயம் - 7-1
“அந்தப் பையன்..அர்ஜுனுக்கு.” என்று அவனுடைய அம்மாவிற்கு பதிலளித்தவன், தட்டோடு திரும்பிய மணியிடம்,”எங்கே உன் தம்பி..போய் அவனை அழைச்சிட்டு வா.” என்றான்.
எதற்காக அர்ஜுனை அழைத்து வர வேண்டுமென்று அவளுக்குப் புரியவில்லை. அதுவும் வீட்டினர் சாப்பிடும் போது அந்தப் பக்கம் அவர்கள் யாரும் வருவது காவேரி மாமிக்கு பிடிக்கவே பிடிக்காது.
தட்டை மேஜை மீது வைத்து...
அத்தியாயம் - 7
அரக்கோணம் டவுன் எல்லைக்கு வெளியே இருந்த குடியிருப்பு பகுதி ஒன்றை அடைந்தது டாக்ஸி. தனி வீடுகள், சில அடுக்குமாடி கட்டிடங்கள், ஓட்டு வீடுகள், காலி மனைகள் என்று கலவையாக இருந்தது அந்தப் பகுதி. மெயின் ரோட்டில் ஸுப்பர் மார்க்கெட், ஹார்ட்வேர், துணிக் கடை, செங்கல், சிமெண்ட், துணிக் கடை, சின்ன உணவகம்,...
அத்தியாயம் - 6
அந்த வயதில் மாமாவின் வீடு இருக்குமிடம் அரக்கோணம், அது சென்னை இல்லை என்று மணியின் மனத்தில் பதியவில்லை. (readers, இன்னைக்கு அரக்கோணம் சென்னை மெட்ரோபாலிட்டனைலே வருது) அவளை அழைத்து வருவதற்கு முன்பு தான் அரக்கோணம் அருகே புது வீடு கட்டி குடியேறி இருந்தார் சிவமூர்த்தி. பெரிய மகள் அகிலாவை சித்தூரிலும் சின்ன...
அத்தியாயம் - 5_1
பழைய விஷயங்களை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தவனின் காதுகளில் மணியின் பேச்சு சத்தம் விழுந்தது. கண்களைத் திறந்து அவனருகில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான். அவளோ சாளரத்தின் கதவை மேலும் கீழுமாக இழுத்து விளையாடிக் கொண்டிருந்த அர்ஜுனை அதட்டிக் கொண்டிருந்தாள்.
“அதோட விளையாடாதே.” என்று உத்தம் அதட்டியவுடன், கைகளைக் கட்டிக் கொண்டு அமைதியாக இருக்கையில் சாய்ந்து கொண்டான்...
அத்தியாயம் - 5
உத்தம் மீது எழுந்த கோபம் காணாமல் போயிருந்தாலும் அவளது மனம் ஏனோ முழுமையாக சமாதானம் ஆகவில்லை. எதற்காக இந்த விமானப் பயணம் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. மாறாக அந்தக் கேள்வியைத் தொடர்ந்து வேறு சில கேள்விகள் வந்தன.’மாமாக்கு ஏதாச்சும் ஆயிடுச்சா? அதான் நம்மை விமானத்திலே கூட்டிட்டுப் போறாங்களா? என்ற கேள்வியின்...
அத்தியாயம்-4_1
உடனேயே, பட்டென்று,“செருப்பு கடை அந்தப் பக்கம் இருக்குன்னு சொன்னாங்க.” என்று சொல்ல,
“செருப்பு கடையா? எதுக்கு?” என்று கேட்டவனின் பார்வை அர்ஜுனின் பாதங்களுக்குப் பயணம் செய்ய, சாதாரண ரப்பர் செருப்பு அணிந்திருந்தான். அப்படியே மணியின் பாதங்களுக்கு பயணம் செய்தவனின் கண்களுக்கு அவளின் பாதம் தெரியவில்லை. புடவை தான் தெரிந்தது. தரையைத் தொட்டுக் கொண்டிருந்த புடவையை யோசனையோடு...
அத்தியாயம் - 4
விடிகாலையில் அவளுடனே எழுந்து கொண்டதால் அர்ஜுன் இப்போது உறக்கத்தைத் தழுவி இருக்க, அவள் மீது சாய்ந்து கொண்டவனை அவளோடு அணைத்துக் கொண்டு அமைதியாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் மணி.
அவனது கைப்பேசியில் சென்னைக்கு டிக்கெட் தேடிக் கொண்டிருந்த உத்தம்மிற்கு திருப்பதிக்கு டிக்கெட் இருப்பதாக தகவல் வந்தது. பழைய வீடாக இருந்தால் அந்தத்...
அத்தியாயம் - 3
மணியின் விழியானது வெளியே வேடிக்கை பார்க்க அவளின் மனமானது பின்னோக்கி பயணம் செய்தது.
பள்ளி, கல்லூரி விடுதிகள், சித்தி வீடு, அகிலா, இந்திரா அக்கா இருவரின் வீடுகள் என்று எங்கே போனாலும் வந்தாலும் முக்கால்வாசி சமயங்களில் பேருந்து பயணம் தான். சில வருடங்களுக்கு முன்பு இதே பெங்களூருக்கு சாரதியின் திருமண வரவேற்பில் பங்கேற...
அத்தியாயம் - 2_1
அர்ஜுனைச் சுட்டிக் காட்டி,“இன்னொரு அக்கா, தங்கை இல்லைன்னாலும் அண்ணன்னு ஒருத்தன் இருக்கானில்லே இவனுக்கு..அவன்கிட்டே அனுப்பி வைங்க..சாரதிக்கு ஃபோன் போடுங்க..காரியமெல்லாம் முடிஞ்ச கையோட பெங்களூருக்கு அழைச்சிட்டுப் போகாம இவளோட அனுப்பி விட்டிருக்கான்..இவளோட படிப்பு முடிஞ்சதும் அழைச்சுக்கறேன் சொன்னவன் அதுக்கு முன்னாடி அவனோட கல்யாணத்தை முடிச்சிட்டு இவளை நம்ம பொறுப்பிலேயே விட்டு வைச்சிருக்கான்..ஞானம் அவனோட...
அத்தியாயம் - 2
உத்தமின் பார்வை மணியின் கையைப் பற்றிக் கொண்டிருந்த அர்ஜுன் மீது விழ,”யார் இது?” என்று அவளிடம் அவன் விசாரிக்க, அவனைப் போலவே,”இது யார் அக்கா?” என்று மணியிடம் மெல்லியக் குரலில் விசாரித்தான் அர்ஜுன். ஒரு வருடத்திற்கு மேலாக, கிட்டதட்ட இரண்டு வருடங்களாக அவளுடன் எல்லா இடங்களும் அழைத்து சென்றாலும் அவளைத் தவிர...
அத்தியாயம் - 01
அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் பார்க்கிங்கில் கார் நின்றவுடன் பின் கதவைத் திறந்து வெளியே வந்தவன், அவனது கைப்பேசியில்,”விளையாடறீங்களா? அஞ்சு நிமிஷம் தான்..வரலை..நான் கிளம்பிடுவேன்.” என்று அடிக்குரலில் சீறிக் கொண்டிருந்தான்.
அந்தப் புறத்தில் இருந்தவர்,”வந்திடுவா டா..பத்து நிமிஷம் வெயிட் செய்ய முடியாதா உன்னாலே?” என்று கேட்க,
“முடியாது..இங்கே நான் வந்து இரண்டு மாசமாகிடுச்சு..ஒருமுறை கூட நம்ம...