Wednesday, November 11, 2026

    நம் சொந்தம் கூடுமோ

    அத்தியாயம் 6 : மாதவனின் திருமண ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, இங்கு சிவா அபர்ணா நிச்சய ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது. அபர்ணாவை விட இந்த திருமணத்தில் துளியும் நாட்டமில்லாமல் இருந்தான் சிவா. ‘இப்போ யாரு இந்த பொண்ணை சரின்னு சொல்ல சொன்னது?’ என்று கோபத்தை முழுவதும் அவள் மீது திருப்பியிருந்தான். அன்று வீட்டிற்கு வந்தவனை...
    அத்தியாயம் 5 : என்றும் இல்லாத திருநாளாய் தங்கள் வீடு தேடி வந்து அமர்ந்திருந்த தங்கையையும் தங்கையின் கணவரையும் தான் பார்த்திருந்தார் மூர்த்தி. சாந்தி அவர்களுக்கு குடிக்க கொண்டு வந்து கொடுக்க, ஒரு செருமலுடன் ஆரம்பித்தார் முத்து மாணிக்கம். “மாதவனுக்கு பொண்ணு பார்த்திருக்கு. எம்எல்ஏ பொண்ணு தான்.அண்ணன் வீட்டுக்கு முறைப்படி தகவல் சொல்லனும்னு என் பொண்டாட்டி சொல்லிட்டா....
    அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கீழே பிரபாகரனின் குரல் கேட்க, வேகமாய் கீழே சென்றனர். சத்தியசீலனும் சரிதாவும் கூட ஊரில் இருந்து வந்துவிட்டிருந்தனர். “என்னாச்சு பிரபா? எதுக்கு இவ்வளவு கோபம்?” என்றார் நடராஜன் பொறுமையாக. “எதுக்கு இவ்வளவு கோபம்னு உங்களுக்குத் தெரியாதாப்பா? என்னமோ இவனுக்கு பொண்ணுப் பார்க்க போயிட்டு வந்திங்களாமே? ஒரு வார்த்தை கூட எங்ககிட்ட சொல்லாம?...
    அத்தியாயம் 4 : “பிடிக்கலைன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கணும்” என்று மனதிற்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டான். “வாங்க” என்று வரவேற்ற கபிலனும் சிவாவை ஆராய்ச்சியுடன் பார்த்தான். ஏதேதோ சிந்தனையில் இருந்த சிவாவும் கபிலனின் பார்வையை கவனிக்கவில்லை. உள்ளே தங்கையிடம் சென்றான் கபிலன். காயத்ரி அவளையே பாவமாய் பார்த்திருக்க, தங்கையின் அருகில் சென்றவன் அவளின் தலையை ஆதுரமாய் வருடினான். “அண்ணா...
    அத்தியாயம் 3 : கவலையுடன் அமர்ந்திருந்தார் நடராஜன். அவரின் கவலை முழுவதுமே சிவாவைப் பற்றியது தான். சமீப காலமாக செல்வி அவனை மட்டம் தட்டிக் கொண்டிருப்பதை அவரும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார். அவளின் தங்கையை சிவா வேண்டாம் என்று சொன்னதில் இருந்தே செல்வி இப்படித்தான் நடந்து கொள்கிறாள். “என்னாச்சுங்க?” என்றார் கலையரசி கணவரின் கவலை நிறைந்த...
    “சாரி காயு..!” என்றபடி எங்கோ வெறித்தவளை பார்த்த காயத்ரிக்கு மனமே ஆறவில்லை. “சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத அபர்ணா. இப்படி நடக்கும்னு ஏற்கனவே நான் எதிர்பார்த்தேன்” என்ற தோழியை அகன்ற விழிகளுடன் எதிர்கொண்டாள் அபர்ணா. “என்னடி பார்க்குற? உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனா ஒரு விஷயம் அபர்ணா, உன்னை மாதிரி ஒருத்தியை வேண்டாம்னு சொன்னது அவங்களுக்குத் தான் இழப்பு....
    அத்தியாயம் 2 : நகரை ஒட்டி அமைந்திருந்த அந்த பேக்கரியில் அன்று கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. பேக்கரியை ஒட்டியே டீ ஸ்டால், பிரஷ் ஜூஸ் என்று தனித் தனி பிரிவுகள் இருக்க, அனைத்திலும் ஆட்கள் நின்று பம்பரமாய் வேலை செய்து கொண்டிருந்தனர். அவ்வூரின் மிகப் பிரபலமான பேக்கரி அது. தரத்தில் எப்போதும் குறையிருக்காது. பேக்கரிக்கு வந்த...
    மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் மாதவனின் வீட்டிற்குள் நுழையும் போதே, பேச்சு சத்தம் வெளியே வரை கேட்டது. “சின்ன வயசுல இருந்து மாதவனுக்கு அபர்ணா தான்னு சொல்லிட்டு இப்போ போய் எப்படிங்க மாத்தி  பேச முடியும்? நீங்க எப்படி மாதவனுக்கு வெளிய பொண்ணு பார்க்கலாம்?” என்றார் அன்னம் கண்ணீர் கலங்கிய குரலில். “நான் என்னைக்காவது சொல்லியிருக்கேனா? உன் அண்ணன்...
    அத்தியாயம் 1 : தேனி- மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகர். நகரை விட்டு சற்று தள்ளி அமைந்திருந்தது அந்த தனியார் பள்ளி. பள்ளி முடிந்து அனைவரும் சென்று கொண்டிருக்க, ஸ்டாப் ரூமில் இருந்து தன் ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் அவள். அந்த...
    error: Content is protected !!