Wednesday, July 22, 2026

    புதிய பூபாளம்

    அத்தியாயம் 05 “இந்த உலகத்தில், நீங்கள் பாதுகாப்பாக கருதும் இடம் எது?” என்று யாரைக் கேட்டாலும், “என் வீடு” என்று யோசிக்காமல் பதில் சொல்லுவார்கள். ஆனால், அந்த வீடுகூட பாதுகாப்பில்லாமல் போனது மலர்விழிக்கு. ஆமாம்... தாயை இழந்த இரண்டு நாட்களிலேயே அந்த வீட்டிலுள்ளவர்கள் மனதளவில் மலர்விழியை பலவீனமாக்க முயற்சி செய்தார்கள் என்றால், சந்திரன் வேறுவகையில் அவளை பயம்கொள்ள வைத்தான். எனவே,...
    அன்று, முன்மாலைப் பொழுதில், தங்கள் ஊருக்கு அருகில் உள்ள செட்டிக்குளம் என்ற ஊருக்கு, செந்திலோடு பைக்கில் வந்து இறங்கினான் ராகவன். அந்த ஊரில் கோவில் திருவிழா என்றும், கரகாட்டம் உண்டு என்றும் சொல்லிய செந்தில், “போய்த்தான் பார்ப்போமே, ஒருவேளை அந்த பெண்ணைப் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கலாம்” என்று சொல்ல, ஏதோ ஒரு நம்பிக்கையில், ஊர்...
    அத்தியாயம் 04 “இரண்டு மாசத்துக்கு முன்னாடி வராத திருவிழாவுக்கு, உன் அப்பங்காரன் நேற்று பேசும்போதும் கூட திட்டுறான் டா” ராகவனோடு கைபேசி வழியாக பேசிக்கொண்டிருந்த அவன் சித்தப்பா சிதம்பரம் அங்கலாய்த்து கொண்டார். “வந்து தலையை காட்டிட்டு போயிடுங்க. இல்லைன்னா உங்க அண்ணன் ங்குற புயல் கரையைக் கடக்க பலமாசங்கள் ஆகும்னு, நான் தான் சொன்னேன்ல சித்தப்பூ...” என்று...
    அத்தியாயம் 03 மாயனும், பரமேஸ்வரியும் தங்கள் தொழிலில் உச்சத்தில் இருந்த நேரம் தங்கள் பெண்பிள்ளை மீது வைத்த கவனத்தை, ஆண்பிள்ளை தானே என்ற அலட்சியத்தால் மகன்மீது வைக்கத் தவறினார்கள். அந்த தம்பதியருக்கு தங்கள் தவறு புரிந்த போது, அவர்கள் மகனோ திரும்பி வரமுடியாத பாதையில், நெடுந்தூரம் பயணம் செய்திருந்தான். ஆமாம்... பதின்ம வயதிலேயே எல்லா கெட்ட பழக்கங்களுக்கும் அடிமை...
    அத்தியாயம் 01 தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகேயுள்ள செங்குளம் என்னும் கிராமம் திருவிழா கோலம் பூண்டு நின்றது‌. ஊர் முழுவதும் ஆங்காங்கே மரங்களின் உச்சியிலும், வீட்டு மொட்டைமாடிகளிலும், எலக்ட்ரிக் கம்பங்களிலும் கட்டிவைத்திருந்த ஒலிப்பெருக்கிகள், ‘முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம், அவள் முகத்தழகை காணவரும் ஒருநாளாம், சித்திரைப்பூ மாலையிலே தோரணமாம், அவள் சிங்கார தேரில் வர ஊர்வலமாம்...’  என்று, எல்ஆர் ஈஸ்வரியின் தெய்வீகக் குரலில் பாடலை உச்சஸ்தாயியில்...
    error: Content is protected !!