Wednesday, November 11, 2026

    சிவஞானபுரம்

    அத்தியாயம் : 3-2 ஒரு கட்டத்திற்கு மேல் காரில் செல்ல முடியாமல் போகவே, காரை ஓரமாக நிறுத்திவிட்டு, தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டனர். தன் போனில் வீடியோவை ஆன் செய்து, எல்லாவற்றையும் படமாக எடுத்துக்கொண்டபடி அஜித் பின்னால் வர, மற்ற நால்வரும் நடக்க ஆரம்பித்தனர். உள்ளே செல்லச் செல்ல, இதுவரை பளிச்சென்று கண்களைக் கூசச் செய்த சூரிய ஒளி...
    அத்தியாயம் 3: உறுதியோடு டைரியை மூடியவள், அதனை எடுத்த இடத்தில் பத்திரமாக வைத்துவிட்டு வீட்டின் மற்ற வேலைகளை கவனிக்கச் சென்றாள். எல்லா வேலையும் முடித்தவள், சற்று தளர்வாகத் திண்ணையில் அமர்ந்தாள். அப்பொழுது தவழ்ந்து தவழ்ந்து படியேறி வந்த குட்டியைப் பார்த்தவள் பூரித்தாள். அவளுக்கு மிகவும் நெருக்கமான குட்டி என்றால் அவன் தான். ஒன்றரை வயது ஆகியும் இன்னும் சரியாக நடக்கத்...
    அத்தியாயம் 2: "என்னடி சொல்ற? பார்க்க அழகா, இலட்சணமா இருக்கிற இந்தப் பொண்ணுக்கு போய் புத்தி சரியில்லைன்னு சொல்ற?" என்று சந்தேகத்துடன் கேட்டாள் செண்பகம். "அவ அண்ணன் அந்தக் காட்டுக்குள்ள காணாம போய் ஒரு மாசம் ஆச்சு. இன்னும் அவன் உயிரோட இருக்கிறதாகவும், அவன்கிட்ட பேசுறதாகவும் இந்தப் பிள்ளை சொல்லிக்கிட்டு அலையுது." காடு என்றதும் செண்பகத்தின் முகத்தில் அதிர்ச்சி...
    சிவஞானபுரம் .. அத்தியாயம் 1 பச்சைபசேல் வயல்வெளியும், அடர்ந்த காடுகளையும் கொண்ட அழகிய கிராமம் சிவஞானபுரம். இப்பொழுதுதான் சிறிதாக வளர்ச்சி அடைந்து கொண்டு வருவதற்கான அறிகுறியாய் சில சிமெண்ட் வீடுகள் கண்களுக்குத் தென்பட ஆரம்பித்திருந்தன. மற்ற வீடுகள் எல்லாம் முக்கால் வாசி ஓட்டு வீடாகவும், மீதி மண் வீடாகவும் காட்சியளித்தன. அந்த கிராமத்தில், கோவிலுக்கு அருகில் இருக்கும் ஓட்டு வீட்டில்தான்...
    error: Content is protected !!