Wednesday, July 29, 2026

    தகிக்கும் தீயவள்

    *7* வழக்கம் மாறாது நாட்கள் அதன்போக்கில் நகர, அப்பாவும் மகளும் அப்பள்ளியில் கச்சிதமாக பொருந்திவிட்டார்கள். வார விடுமுறை தினமான அன்று இருவரும் நன்றாக இழுத்துப் போர்த்தி உறங்கிக்கொண்டிருக்க, அழைப்பு மணி சத்தத்தில் கண் விழித்தான் சக்திவேலன். தன் மேல் கால் போட்டு உறங்கும் மகளை நகர்த்திவிட்டு எழுந்தவன் அணைவாய் தலையணை வைத்துவிட்டு கண்களை கசக்கிக்கொண்டே வந்து...
    *22* வீட்டு வாயிலிலேயே போதைப்பொருளை டெலிவரி செய்ய சொல்லி யாரோ ஒருவன் நிற்க, அன்றைக்கு கோவத்தில் பாதுகாப்பு குறித்த ஐயத்தில் உடனே கிளம்பியவன் வீட்டிலிருந்து பேருந்து நிலையம் சென்றான். அடுத்து என்ன என்று யோசிக்கும் முன்னே சிறிது நேரம் வெறுமையாய் அமர்ந்திருந்தவனுக்கு சிறிது நேரத்தில் செய்த செயலின் வீரியம் புரிய தலையில் அடித்துக்கொண்டான்.  ‘அப்படி என்ன மனைவியை...
    *13* வாசலை பார்ப்பதுமாய் ஓரமாய் இருக்கும் கூடையை பார்ப்பதுமாய் இருந்த சக்தியின் கவனத்தை காலடி சத்தம் கலைத்தது. நிமிர்ந்து பார்த்த சக்தி ஆசுவாசம் கொண்டவளாய் பெரிதாக புன்னகைத்து, “உனக்காக தான் காத்திட்டு இருந்தேன்மா. எனக்கு ஒரு உதவி ஆகணும் உன்னால.” “காலையிலேயே போன் போட்டு கூப்புட்டிருக்கீங்க, உதவின்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க. என்னனு ஆடர் போடுங்க அக்கா.”...
    “சக்திவேலன் அட்டெண்டென்ட் யாரும் இருக்கீங்களா?” செவிலியர் வந்து கேட்கவும் பதறி எழுந்தவள், “அவருக்கு ஒன்னுமில்லைல நல்லா இருக்காருல்ல?” “உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைம்மா. மத்ததை டாக்டர் சொல்வாங்க. போய் பாருங்க.” என்று மருத்துவர் அறைக்கு வழிகாட்டினார். படபடத்து கனத்திருக்கும் இதயத்தோடு கயல்விழியை தன்னுடன் இறுக்கிப் பிடித்தபடி மருத்துவரிடம் சென்றாள். “அவர் பழையபடி எழுந்து நடமாடனும்னா மூளையில ஒரு ஆப்ரேஷன்...
    “என்னமா எல்லா இடத்துலயும் கை விரிச்சிட்டாங்களா? இந்த சமுதாயமே அப்படிதான். தேவைங்கும் போது கூட நிக்காது. கொள்ளையடிக்கத்தான் பார்க்கும், இந்த ஆஸ்பித்திரி மாதிரி.” என்று மருத்துவமனையை பார்க்க,  “ஏதோ ஐட்டம் அதுஇதுனு சொன்னீங்களே. என்ன அது?” தயக்கம் இருந்தாலும் அழகுராணிக்கும் வேறு வழி தெரியவில்லை. என்னதான் சொல்கிறார் பார்ப்போம் என்று கேட்டாள். “பெருசா ஒன்னுமில்லைமா. எங்கிட்ட ஒரு...
    *15* உறக்கம் கலைந்து எழ முனைகையில் அருகில் உறங்கிக்கொண்டிருந்த கயல்விழி மீது லேசாக கை பட்டுவிட, சட்டென தன் குட்டி இமைகளை பிரித்து  விழித்தவளோ சிணுங்கினாள். ஐயோ என்று நெற்றியில் கை வைத்து பதறிய அழகி அவளை தூக்கி தோளில் போட்டு தட்டி கொடுத்துக்கொண்டே பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க, சத்தத்தில் புரண்டு படுத்தான் சக்திவேலன். “அப்பா தூங்குறாங்கடா...
    கடலூர் மாவட்டத்தில் ஒரு பகுதியின் பெயரை சொல்லி அங்கிருக்கும் பள்ளியின் பெயரை குறிப்பிட்டவள், “நான் அங்க ரெண்டு வருஷம் படிச்சேன் சார். நீங்ககூட எனக்கு அப்போ சயின்ஸ் க்ளாஸ் எடுத்தீங்க, குடும்ப கஷ்டம்னு ஒருதடவை புக்ஸ், நோட்ஸ் வாங்க ஹெல்ப் கூட பண்ணீங்க.” என்று அவளே அறிமுகப்படுத்திக்கொள்ள, அந்த ஊர் மற்றும் பள்ளியின் பெயரைக்...
    *8* வாக்கு கொடுத்தது போல் மாலை பள்ளி முடித்து வீடு வந்து வயிற்றை கவனித்து உடை மாற்றி கயல்விழியை கடற்கரைக்கு அழைத்துச் சென்றான் சக்திவேலன். மாலை மங்கி இருள் கவிழத் தொடங்கியது. சிலிர்க்க வைக்கும் தென்றலின்றி மனதை இலகுவாக்கும் காற்றாய் தேகம் உரசிச் செல்ல, ஆங்காங்கு மக்கள் கூட்டம்.  கடலூரில் கடற்கரை இருந்தாலும் அவர்கள் இருந்த இடத்திலிருந்து...
    *14* அனைத்தையும் விட்டுவிடலாம் என்று இலகுவாக சொல்லியிருந்தாலும் ரவி காவல் நிலையத்தில் இருக்கிறான் என்றதும் அப்படியே அனைத்தையும் விட்டுவிட முடியும் என்று தோன்றவில்லை சக்திக்கு. அதுவும் போதை பொருள் வழக்கில் கைதாகி இருப்பவனை முயன்றுதான் வெளியே எடுக்க வேண்டும். அதற்கு தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி சில பல காரியங்களை மீண்டும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்....
    *19* தான் மறுத்தால் சண்டைபிடிப்பாள், அழுவாள் பின் நிதர்சனம் உணர்ந்து விலகிவிடுவாள் என்று எங்கோ ஒரு மூலையில் நம்பிக்கொண்டிருந்தவனுக்கு பெருத்த அடியானது அவள் மகளுடன் சென்று படுத்துக்கொண்டது. இயலாமை, கோபம், அதிர்ச்சி என உணர்வுப்பிரவாகமாய் இருந்தவன் மனம் இளக்கமும் கலக்குமாய் கலங்கிக்கிடந்தது. இரவு உணவு சமைக்க வருவேன் என்று அவள் சொல்லிச் சென்றதிலேயே பீதியாகி ஊர்...
    *16* “அண்ணாச்சி பேசுனாரு. ரவியை வெளிய விடுறது கஷ்டங்குற மாதிரிதான் சொல்லியிருக்காங்க.” என்றான் ராஜா அந்நாளின் முடிவில். “வேற எதுவும் பண்ணமுடியாதா?” சக்தியின் முகத்தில் கவலையும் யோசனையும் போட்டி போட்டு அமர்ந்திருந்தது. “சந்தேகத்தின் பேர்ல அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகல. எவிடென்சோட புடிச்சிருக்காங்க. அவ்வளவு சீக்கிரம் கையில தொக்கா கிடைச்ச ஆளை விடுவாங்கனு தோனல.”  “யாரையும் பதிலுக்கு உள்ள இழுத்துவிட்டா...
    *10* அன்று பள்ளி முடிந்ததற்கான பெல் அடிக்கவும் அரட்டையடித்துக்கொண்டு மாணவர்கள் வெளியேற, கயல்விழி பேக்கை மாட்டிக்கொண்டு வகுப்பறையில் இருந்து மெதுவாக ஆசிரியர் அறை நோக்கி நடந்தாள். எதிர்ப்பட்ட நிலா இவளைக் கண்டதும் அப்படியே நிற்க, அவளை கூர்ந்து பார்த்த கயல்விழி உதடு சுழித்தபடி கடந்தாள். ‘இந்த சிறுசு கூட மதிக்க மாட்டேங்குது. என்ன பொழப்புடா இது.’ விரக்தி...
    *17* ஒரு நிமிடம் முழுதாய் ஒரே நிமிடம் தான் அழகுராணியைக் கண்டு சக்திவேலன் தடம்புரண்டு நின்றது. மீண்டுக்கொண்டவன் நிதர்சனம் உணர்ந்து விறைத்து நிற்க, அடுத்து அவன் செய்யவிருப்பதை அனுமானித்தவள் போல் சட்டென்று வீட்டினுள் நுழைந்துவிட்டாள் அழகி. அவள் செயலில் அதிருப்தி கொண்டாலும் முந்திய சந்திப்பின் நிகழ்வில் பட்டென்று முகத்திற்கெதிரே கதவை சாற்றியது போல் இப்போது செய்ய...
    சாமான்களை ஏற்றிச் சென்ற லாரி முன்னே சென்றிருக்க, மூன்றரை மணி நேர பயணத்தின் இடையில் காரை நிறுத்தி சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். முன்னிரவில் சென்னை வாகன நெரிசலில் போராடி பட்டினப்பாக்கம் வந்துவிட்டிருந்தனர். பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு செல்லும் தெருவொன்றில் அவன் வீடு பார்த்திருந்தான். அந்த தெருவுக்கு பின்னே அவன் வேலை செய்யும் பள்ளி இருப்பதால் கடற்கரை...
    *23* அன்னையின் கதகதப்பில் அவளின் அரவணைப்பில் புரிந்தும் புரியாத நிதர்சனத்தில் உறக்கம் தழுவியிருந்தாள் கயல்விழி. தன் கை சேர்ந்துவிட்ட பொக்கிஷத்தை நொடிநேரம் கூட விலகியிருக்க முடியாது என்பது போல் கயல்விழியை அணைத்தே கிடந்தாள் அழகுராணி. கணவன் தன்னிடமே முரடு பிடிப்பான் ராஜாவை அனுப்பிவைத்தால் என்ன நினைப்பானோ என்று அத்தனை தயக்கம். செய்திகளை பார்த்து தன்னை தவறாக...
    *2* தான் வேலை செய்யும் அதே பள்ளியில் கயல்விழியை இரண்டாம் வகுப்பில் சேர்த்திருந்தான் சக்திவேலன். காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து இரண்டு நாட்கள் சென்றிருந்தது. புது பள்ளி, புது சூழ்நிலை, புதிய சீருடை என்று மருண்ட விழிகளுடன் தந்தை கையை பற்றிக்கொண்டு தன் வகுப்பு நோக்கி நடந்தாள் கயல்விழி. மகளை போலவே சுற்றத்தை நோட்டமிட்டபடி...
    *5* எழுந்ததிலிருந்து அவனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டபடி பரபரப்பாய் அங்குமிங்குமாய் சுழன்று கொண்டிருந்தவளை நாற்காலியில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டிருந்தான் சக்திவேலன்.  “எதுக்கு இப்போ இப்படி பாத்துட்டு இருக்கீங்க? போய் வேற வேலை இருந்தா பாருங்க.” அவன் பார்வை வீச்சை பொறுக்க 7முடியாமல் சிணுங்கினாள் அழகி. “என் வேலையைத் தானடி பாக்குறேன்.” என்றான் இவனும் கிறக்கமாய். “நீங்க இப்படி என்னை...
    *1* கண்களைப் பறிக்கும் வெளிப்பூச்சுகளின்றி இருப்பதை சற்று எடுத்துக்காட்டும் விதமாய் ஓரடுக்கு பவுடரும் கள்வனைக் கவரவென மான் விழிகளில் மைப்பூச்சிட்டு உடைக்கு ஏற்றார் போல் நெற்றியில் அரக்கு பொட்டிட்டு தேவதையென ஆட்டோவில் வந்திறங்கிய பாவையை விரிந்த புன்னகையோடு வரவேற்றான் அவன். உடுத்தியிருக்கும் உடையை விழி மொழியாலே சுட்டிக்காட்டி எதிர்பார்ப்புடன் அவனை அவள் ஏறிட, அவளை நெருங்கி விரல்கள்...
    *9* அன்று தீபாவளிப் பண்டிகை. ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, சக்திவேலன் எழுவேனா என்று உறக்கத்தை தழுவியிருந்தான். அவன் அழகியும் விடுவேனா என்று தலை குளித்து துவட்டிய துண்டின் நுனியை மெலிதாக சுருட்டி அவன் செவி துவாரத்தில் விட்டு தீண்டினாள். உறக்கம் தடைபட முகம் சுழித்து செவி தீண்டுவதை தட்டிவிட்டு முகத்தை மறுபுறம் திருப்பி உறக்கத்தை தொடர,...
    *6* “சக்தி கவுன்சிலரை போய் பாத்துட்டு வந்துடுவோமா?” காலை உணவு முடித்து ஓய்வாக அமர்ந்திருக்கும் வேளையில் ராஜா கேள்வியெழுப்ப, நெற்றி சுருக்கியவள், “எதுக்கு இப்போ?” “உன் பிறந்தநாளுக்கு ஒரு அட்டனென்ஸை போட்டுட்டு வரணும்.” “ம்ச்… நான் என்ன அரசியல்லையா குதிக்க போறேன், அவர் வீட்டுக்கு போய் கும்புடு போட?” என்று அலட்சியம் செய்தவளை மறுப்பாய் பார்த்த ராஜா, “பெரிய இடத்து...
    error: Content is protected !!