காவியத் தலைவன்
சத்யேந்திரனும், பூஜிதாவும் அப்படியொரு எதிர்வினையை அவரிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. பூஜிதா மிக வேகமாக அவர்களின் இடையே புகுந்து தந்தையைத் தடுக்கப் பார்க்க, வீராவின் ஆக்ரோஷத்திற்கு முன்னால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
மகள் என்றும் பாராமல் அவளைப் பிடித்து வேகமாகத் தள்ளிவிட அவள் நிலை தடுமாறி தொப்பென கீழே விழுந்திருந்தாள்.
சத்யா அதற்குள் சுதாரித்திருந்தவன், துணிந்து அவர் கையை...
காவியத் தலைவன் – 22
விவேக்கின் கணிப்பு எல்லாம் சரிதான்! சந்தேகம் கொண்ட இரண்டு வாகனங்களையும் தன் டிபார்ட்மெண்ட்டின் உதவியுடன் விரைவாக ட்ரேஸ் செய்திருந்தான்.
ஒன்றுக்கு இரண்டு பேரின் போனுமே ஸ்விட்ச் ஆஃப். அதோடு அவர்கள் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்கிற தகவல் யாருக்கும் தெரியவில்லை என்ற போதே வீரராகவன் தான் விவேக்கின் சந்தேக வட்டத்திற்குள் இருந்தது.
தான் சந்தேகப்பட்ட இரண்டு வாகனங்களையும்...
காவியத் தலைவன் – 21
சத்யேந்திரன், பூஜிதாவின் உறவில் முன்னேற்றம் வந்தபிறகு, ஆதீஸ்வரனுக்கு இப்போதெல்லாம் தம்பியைக் குறித்த கவலைகள் பெருமளவு குறைந்திருந்தது.
ஆதியாக இனி சரிவராது போல என்று விலகிய ஒரு விஷயம் தான் சத்யா, பூஜிதாவின் திருமணம்! இப்பொழுது அது கைக்கூடும் வாய்ப்பு கண்ணெதிரில் மீண்டும் தோன்றினால், அதுவும் அந்த பந்தம்... எதிலேயோ மூழ்கவிருந்த தன் தம்பியை மீட்டெடுக்கும் மந்திரக்கோலாய்...
*** சத்யா, பூஜிதாவின் உறவு மெல்ல மலர்ந்திருந்தது. கனிகா விஷயத்தில் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்திருந்த சத்யாவிற்கு அதிலிருந்து மீண்டு வருவதே பெரிய விஷயமாக இருந்தது!
வெளியேறவே முடியாதோ என்று வேதனையோடு கழிந்த இரவுகள் ஏராளம்! உயிர் பிரியுமளவு வேதனையைச் சுமந்து வந்தவன் மீள வேண்டும் என்று நினைத்தது தன் அண்ணன் ஒருவனுக்காகத்தான்!
பெற்றோரை இழந்து நிலைதடுமாறி நின்றபோது...
காவியத் தலைவன் – 20
தான்பாபுவைப் பற்றி விசாரிப்பதற்கு இனி என்ன இருக்கிறது? எங்கோ கண்கணாத இடத்தில் அவர்களுக்கென்று ஒரு வாழ்வை வாழ்ந்து வருபவர்களை ஒரு பிடியளவு தொந்தரவு செய்யவும் ஆதீஸ்வரனுக்கு மனம் இல்லை.
நீண்ட நாட்கள் கழித்துக் கிடைத்த ஒற்றை துப்பும் உபயோகமின்றி பறிபோனது! வழக்கமாக நடப்பது தான் என்றாலும் மீண்டும் ஒரு பெரிய ஏமாற்றம்!
இதுபோல அலைந்து திரிந்து...
காவியத் தலைவன் – 19
‘பாபு ப்ரோ’ என தாரகேஸ்வரி குறிப்பிட்ட விதமும், அவள் சிந்தும் கண்ணீர் துளியும் உரைக்கிறதே தான்பாபு மீது அவள் கொண்டுள்ள பாசத்தையும் அபிமானத்தையும்.
தாரகேஸ்வரி இந்த அளவிற்குப் பாசம் வைக்கத் தயாராக இருக்கிறாள் என்றால் அவன் நிச்சயம் கெட்டவனாக இருக்க வாய்ப்பில்லை என்று ஆதீஸ்வரன் நம்பினான்.
இந்த தீராத நோயால் தான்பாபு அவதிப்படுகிறான்...
எரிமலை நெருப்பென குமுறிய தாராவின் நினைவுகள் கொஞ்சம் நிதானித்தது. இல்லை அவர்களைப்பற்றி விசாரிப்பவர்கள் வேறு யாரோ இல்லை. விசாரிக்க நினைப்பது தன் கணவன், அவன் குணம் அவளுக்கு தெரியுமே! அவனது நேர்மையையும், தவறுக்குத் துணை போகாத உன்னத குணத்தையும், தைரியத்தையும், உழைப்பையும் அவள் ஐயந்திரிபற அறிவாளே! அவனை எப்படி அவர்களைப் பிரிக்க நினைப்பவன் என...
காவியத் தலைவன் – 18 (part 1)
தான்பாபுவின் கரத்திலிருந்து கேமரா கீழே விழுந்து சிதறிய வேகமே சொன்னது அதில் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் என்று! அவனுடைய நண்பர்கள் அலக்கியாவை தாறுமாறாகத் திட்டத் தொடங்கியிருக்க, கோபத்துடனும் எரிச்சலுடனும் அவளின் புறம் திரும்பியவன், நின்றிருந்தது அவள் என்றதும் தன் வேகத்திற்கு உடனடியாக தடையிட்டு நிதானித்திருந்தான்.
ஒரு கூட்டமே அவளை...
தென்னரசுவின் பெயரைப் பார்த்ததும் நொடியில் அவனது உணர்வுகள் அறுபட பரபரப்பாகி எழுந்து அமர்ந்திருந்தான். அந்த அலைப்பேசியின் ஒலியில் பெண்ணவளும் நிதானித்திருக்க, தன்னிலை எண்ணி முகம் சிவக்க அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள். அவனையுடைய ஆளுமையில் இத்தனை தூரம் தான் கூட்டுண்டிருந்ததை எண்ணி அவளுக்கு ஒருபுறம் ஆச்சரியமாக இருந்ததென்றால் மறுபுறம் கணக்கே இல்லாமல் பிடித்தும்...
காவியத் தலைவன் – 17-1
இரவில் உறக்கம் வராமல் ஆதீஸ்வரன் ஒருபுறம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான் என்றால், தாராகேஸ்வரியின் நிலையும் கிட்டத்தட்ட அதுவே தான்!
அவனது சமாதான வார்த்தைகளா இல்லை அவனது மனநிலையைப் பகிர்ந்து கொண்டதாலா தெரியவில்லை தாராவிற்கு அவன் மீதிருந்த கோபம் வெகுவாக மட்டுப்பட்டிருந்தது. அதன்பிறகு கடந்த மூன்று நாட்களுமே கொஞ்சம் அவனோடு நல்லவிதமாகத்தான்...
மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தாலும் அவளின் பேச்சு சத்தத்தை ஆதி கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
‘அடியே! கரகாட்டாக்காரி. என்னை இழுத்துட்டு போவியா? நீ இப்படி பேசினா பாட்டி நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க?’ அவளின் முந்தைய புரிதலான பேச்சில் பூரித்தவன், வாக்குறுதியில் கொஞ்சம் அரண்டுதான் போனான்.
ஆனால், இவனைப்பற்றி இவன் பாட்டிக்கு தெரியாதா என்ன? அப்படியிருக்க தாராவின் பேச்சை அவர்...
காவியத் தலைவன் – 16
கணவன் எந்நேரமும் எதையோ யோசித்தபடியும், கைப்பேசியில் கட்டளைகளை பிறப்பித்துவிட்டு கோபத்துடனும் எரிச்சலுடனும் அலைவதையும் பார்க்கப் பார்க்க அவனை பேசாமல் வீட்டை விட்டு அவனது வேலைக்கே துரத்தி விடலாமா என்று யோசிக்கும் நிலைக்கு தாராகேஸ்வரி வந்து விட்டாள்.
கிட்டத்தட்ட ஒரு வார காலமாக சென்னையிலேயே தேங்கி விட்டான். இங்கும் அவன் பார்க்க வேண்டிய வேலைகள் வரிசை...
காவியத் தலைவன் - முன்கதை சுருக்கம்
(ஏற்கனவே கதையை வாசிச்சவங்களுக்கு குட்டி refresh க்காக தான் இந்த சுருக்கம். சும்மா டம்மி ஹிண்ட் மாதிரி இருக்கும். கதை வாசிக்காம இதை படிக்காதீங்க. இதுல ரொம்ப ரொம்ப மேலோட்டமா இருக்கிறதால எதுவும் புரியாது)
ஆதீஸ்வரன் ஆளுங்கட்சி MP. அவன் தம்பி சத்யேந்திரன் (mba student) கனிகாங்கிற பெண்ணை காதலிப்பான். ஆனா ஆதி அவனுக்காக பூஜிதாங்கிற...
அவனுடன் வார்த்தையாட அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. ஆக, அவன் இருப்பதை கண்டுகொள்ளாமல் இவர்கள் மேலும் எதையோ தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, பூஜிதாவிற்கு மட்டும் அவனது அருகாமை பெரும் அவஸ்தையாக இருந்தது. அவள் எதுவும் பேசவும் முடியாமல், பேசுபவர்களின் மீது கவனம் வைக்கவும் முடியாமல் வெகுவாக தடுமாறிக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் பார்த்து, “ஏன் பூஜி நானும் கூட...
காவியத் தலைவன் - 15
அந்த வார ஞாயிற்றுக்கிழமை மாலை பெசண்ட் நகர் பீச்சிற்கு ஆர்வமாக கிளம்பிக் கொண்டிருந்த சத்யேந்திரனை அவன் நண்பர்கள் வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“சீக்கிரம் கிளம்புங்களேன்டா. என்னையே பார்த்துட்டு இருந்தா எப்படி?”
“ஏன்டா மச்சான் அந்த ஸ்ட்ரீட் டே ஈவண்ட்க்காகவா எங்க சண்டேவை காலையிலிருந்து மொத்தமா வேஸ்ட் பண்ணிட்டு இருந்த?” ஆற்றாமையுடன் ஒருவன் கேட்க, சத்யா பலமாக...
காவியத் தலைவன் - 14
அந்த அரசியல்காரனுக்கு மனையாளின் பார்வை அசாத்திய நம்பிக்கையை பரிசளித்து விட்டது போலும். தன் புன்னகையில் கட்டுண்டவளின் அடிபட்ட கையை பெருமூச்சுடன் வருடியபடி, “எப்ப அடி பட்டுச்சு” என ஆதீஸ்வரன் விசாரித்தான்.
தாரகேஸ்வரியின் கண நேரம் மயக்கம் சட்டென்று கலைய, “ம்ப்ச்…” என்ற சலிப்புடன் முகம் திருப்பிக் கொண்டாள்.
“தாரா பிளீஸ். தப்பு நிறைய என் பேர்ல தான்....
ஆனால், ஆதிக்கு கோபம் அடங்க மறுத்தது. “அவ சொன்னா என்கிட்ட சொல்ல மாட்டீங்களா?” என்றான் காட்டமாக.
“இல்லைங்க ஐயா, கையில அடி பட்டப்பவும் தாராம்மா நிதானமா என்ன செய்யணும்னு சொன்னாங்க. கொஞ்சமும் பதட்டமே படலை. அப்ப அவங்களே தான் ஹாஸ்பிட்டல் போகணும்ன்னு சொன்னாங்க… இப்ப அவங்களே ஒன்னும் பிரச்சினை இல்லைன்னு சொல்லறப்ப நான் என்ன பண்ணறது?...
காவியத் தலைவன் – 13
ஆதீஸ்வரனுக்கும் தாரகேஸ்வரிக்கும் இன்னமும் எதுவும் நேர் ஆகியிருக்கவில்லை.
இவள் தன் படிப்பில் முழுக, அவன் தன் வேலையில் மூழ்கிப் போனான்.
இப்பொழுதெல்லாம் அவன் சென்னையில் இருப்பதே அரிது என்பதுபோல வெளி மாநிலங்களில் தான் அவனது ஜாகை. அவன் வேலை தொடர்பாக நிறைய கண்டறிய வேண்டியிருந்தது. நிறைய விசாரணைகள், நிறையத் திட்டமிடல்கள் என கடிகாரம்...
ஒரு கட்டத்தில், அந்த விஷயம் ஆதிக்கு தெரிய வந்தபோதும் சரி, கனிகா பிரிந்த போதும் சரி... காரணமே இல்லாமல் பூஜிதா மீது கோபம் கொண்டான். இதற்கும் அவள் இதில் இம்மியும் சம்பந்தப்படவில்லை. ஆதி, திருமணம் குறித்து கேட்டுப் பார்த்தது கூட தம்பியிடம் மட்டும் தான், அது குறித்து வீரராகவனிடமோ, பூஜிதாவிடவோ ஒரு வார்த்தை பேசியதில்லை....
காவியத் தலைவன் – 12
நாட்கள் கடக்க, ஆதீஸ்வரன் தான் எடுத்திருந்த சவாலான பொறுப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் தேங்கிய நிலையிலேயே இருந்தான். அவனுக்கு அதற்கான அழுத்தம் கூடிக்கொண்டே இருந்தது.
கொடுத்த பொறுப்பை கச்சிதமாக முடிப்பவன் என்ற பெயரைப் பெற்றிருந்ததாலேயே கட்சியின் தலைமையிலிருந்து இந்த பொறுப்பை அவனுக்கு நியமித்திருந்தனர். ஆதியும் பல்வேறு வழியில் அந்த குற்றச்சம்பவத்தைக் கண்டறிய...