காவியத் தலைவன்
“வீட்டுக்கு அழைத்து போ… உன் அண்ணனிடம் அறிமுகம் செய்து வை…” என நண்பர்களாகப் பழகிய காலம் முதலே கேட்டுக்கொண்டே இருக்கிறாள். கேட்டுக்கொண்டு என்பதை விடவும் நச்சரித்துக் கொண்டே இருப்பாள்.
இப்பொழுது அதுவாக நேரம் அமைந்து வந்திருக்கச் சந்தர்ப்பத்தை நழுவ விடுவானா என்ன? அதுவும் முத்தாய்ப்பாய் அவளும் இப்பொழுது சென்னையில் தான் இருக்கிறாள்.
தென்னரசு மீண்டும் சத்யாவைத் தேடி...
அவனுடன் வார்த்தையாட அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. ஆக, அவன் இருப்பதை கண்டுகொள்ளாமல் இவர்கள் மேலும் எதையோ தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, பூஜிதாவிற்கு மட்டும் அவனது அருகாமை பெரும் அவஸ்தையாக இருந்தது. அவள் எதுவும் பேசவும் முடியாமல், பேசுபவர்களின் மீது கவனம் வைக்கவும் முடியாமல் வெகுவாக தடுமாறிக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் பார்த்து, “ஏன் பூஜி நானும் கூட...
தென்னரசுவின் பெயரைப் பார்த்ததும் நொடியில் அவனது உணர்வுகள் அறுபட பரபரப்பாகி எழுந்து அமர்ந்திருந்தான். அந்த அலைப்பேசியின் ஒலியில் பெண்ணவளும் நிதானித்திருக்க, தன்னிலை எண்ணி முகம் சிவக்க அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள். அவனையுடைய ஆளுமையில் இத்தனை தூரம் தான் கூட்டுண்டிருந்ததை எண்ணி அவளுக்கு ஒருபுறம் ஆச்சரியமாக இருந்ததென்றால் மறுபுறம் கணக்கே இல்லாமல் பிடித்தும்...
காவியத் தலைவன் – 6
திருமணம் முடிந்து ஒன்றிரண்டு நாட்கள் தான் தாராவின் கண்களில் ஆதிஸ்வரன் பட்டிருப்பான். அதன் பிறகு ஆளையே காணவில்லை.
இவர்களின் திருமணம் முடிந்த பிறகு வீட்டின் காவல் பல மடங்கு பலப்பட்டு இருப்பதை அவளால் பார்க்க முடிந்தது. முன்பு இங்கேயே தன்னை மறைத்து வாழ்ந்த போது வாசலின் முன்புறம், பின்புறம் என்று இரண்டு...
காவியத் தலைவன் – 20
தான்பாபுவைப் பற்றி விசாரிப்பதற்கு இனி என்ன இருக்கிறது? எங்கோ கண்கணாத இடத்தில் அவர்களுக்கென்று ஒரு வாழ்வை வாழ்ந்து வருபவர்களை ஒரு பிடியளவு தொந்தரவு செய்யவும் ஆதீஸ்வரனுக்கு மனம் இல்லை.
நீண்ட நாட்கள் கழித்துக் கிடைத்த ஒற்றை துப்பும் உபயோகமின்றி பறிபோனது! வழக்கமாக நடப்பது தான் என்றாலும் மீண்டும் ஒரு பெரிய ஏமாற்றம்!
இதுபோல அலைந்து திரிந்து...
காவியத் தலைவன் – 26
சத்யேந்திரனால் மருத்துவமனையில் இருக்கவே முடியவில்லை. மனதில் அளவுக்கதிகமான அழுத்தம்.
நிதர்சனம் புரிகிறது தான்! அவனாலுமே அப்படி தன் அண்ணன் ஆதீஸ்வரன் வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டு தன் சொந்த அன்னை, தங்கை தான் என்றாலும் அவர்களோடு சென்றுவிட முடியாது தான்!
உணர்வுகளால் பிணைந்துவிட்ட உறவைத் துறப்பது பெரிய கொடுமை என்று அவன் மனதிற்கும் புரியாமல் இல்லை.
ஆனால், அன்னை...
காவியத் தலைவன் – 4
ஆதீஸ்வரன் மேலே அழைத்திருக்க, அவன் குரலிலிருந்தே எதுவோ சரியில்லை என்று புரிந்து கொண்ட தென்னரசு அடித்துப் பிடித்துக்கொண்டு மேலே ஓடி வந்தான்.
மேலே ஏறி வந்தவனிடம் எதுவும் பேசாமல் ஆதி அழுத்தமாகப் பார்த்திருக்க, “சார்… என்னாச்சு?” என்று கேட்பதற்குள் அவன் வெகுவாக திணறிப் போனான்.
ஆதி தன் பார்வையை மாற்றிக் கொள்ளவே இல்லை....
காவியத் தலைவன் – 27
எப்பொழுதுமே உறக்கத்தில் கூட கொஞ்சம் விழிப்புடன் இருப்பது ஆதீஸ்வரனின் வழக்கம். ஆழ்ந்த உறக்கம் என்பதை அவன் தொலைத்துப் பல வருடங்கள் ஆகியிருந்தது.
இன்றோ ஓய்வில்லாத அலைச்சல் காரணமாக மனையாளின் வலது கரத்தை தன் கரங்களுக்குள் பொத்தி வைத்தபடி விரைவிலேயே ஆழ்ந்த உறக்கத்திற்குப் போயிருந்தான். பிடியில் மெல்லியதாக அழுத்தம், எளிதாக விடுவதில்லை என்கிற முனைப்பு அதில்...
ஒரு கட்டத்தில், அந்த விஷயம் ஆதிக்கு தெரிய வந்தபோதும் சரி, கனிகா பிரிந்த போதும் சரி... காரணமே இல்லாமல் பூஜிதா மீது கோபம் கொண்டான். இதற்கும் அவள் இதில் இம்மியும் சம்பந்தப்படவில்லை. ஆதி, திருமணம் குறித்து கேட்டுப் பார்த்தது கூட தம்பியிடம் மட்டும் தான், அது குறித்து வீரராகவனிடமோ, பூஜிதாவிடவோ ஒரு வார்த்தை பேசியதில்லை....
காவியத் தலைவன் – 12
நாட்கள் கடக்க, ஆதீஸ்வரன் தான் எடுத்திருந்த சவாலான பொறுப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் தேங்கிய நிலையிலேயே இருந்தான். அவனுக்கு அதற்கான அழுத்தம் கூடிக்கொண்டே இருந்தது.
கொடுத்த பொறுப்பை கச்சிதமாக முடிப்பவன் என்ற பெயரைப் பெற்றிருந்ததாலேயே கட்சியின் தலைமையிலிருந்து இந்த பொறுப்பை அவனுக்கு நியமித்திருந்தனர். ஆதியும் பல்வேறு வழியில் அந்த குற்றச்சம்பவத்தைக் கண்டறிய...
ஓடி வந்த வேகத்தில் மயங்கிக் கிடந்தவனை கையில் அள்ளிக்கொண்டு ஆதி வாசலை நோக்கி ஓடினான். ஏனென்றே புரியாமல் கண்ணில் கண்ணீர் சிதறியது. சத்யாவிற்கு தனக்காக ஒருவன் இந்தளவு உயிரையே பணயம் வைத்தானே என்பது இன்னமும் நடுக்கம் தான்! அவனும் அண்ணன் பின்னாலேயே ஓடியிருந்தான்.
அவர்களுடன் நான்கு பேர் துணைக்குப் போக, மீதம் இருந்தவர்கள் எல்லாரும் அவ்விடத்தை...
காவியத் தலைவன் – 5
“அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கம்மா… உன்னை பிடிச்சிருக்க போயி தான் அவன் கல்யாணமே வேணாம்ன்னு சொல்லிட்டு திரிஞ்சிருக்கான். நீ இப்பதான் டாக்டர் படிப்பை முடிச்சியாமே…” ஆசையாகக் கன்னம் வருடிப் பேசிக்கொண்டிருந்த மூதாட்டிக்கு தாராகேஸ்வரியால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை.
“பயப்படாதம்மா என்கிட்ட நல்லா பேசு…” என அழகாண்டாள் கணீர் குரலில் சொல்லிக்...
அவனின் மோனநிலையை கரடியாய் கைப்பேசியின் அழைப்பு கலைக்க, நொடியில் வேகமாக விலகிக் கொண்டான்.
அவளுக்கும் சொல்ல முடியாத ஒருவித அவஸ்தை!
இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்வோம், வாழ்க்கையாக இங்கே இப்படி நம்மைக் கொண்டு வந்து நிறுத்த நிச்சயம் ஏதோ காரணம் இருக்கும் என்று ஆழ் மனம் அவளுக்கு சொல்லிக் கொண்டே இருந்ததன் விளைவே இந்த திருமணத்தின் மீது தோன்றிய...
காவியத் தலைவன் – 3
‘சார்… இதை சாப்பிடுங்க… அதை சாப்பிடுங்க…’ என்ற ஏகபோக வரவேற்பில் விவேக்கின் முகம் வெளியில் கடுகடுப்பைக் காட்டிக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் ஏனோ அப்படியொரு குதூகலம்.
அடுத்து என்ன என்று அவனுக்கு அத்தனை ஆர்வமும், சுவாரஸ்யமும்.
தன்னை ஏய்த்து வேலை வாங்கப் பார்த்த பிரதாபனை தன்னால் எதிர்க்க முடியவில்லை, ஆனால், அவன் திட்டத்தைத் தவிடுபொடியாக்க...
காவியத் தலைவன் – 23
*** சில ஆண்டுகளுக்கு முன்பு ***
கண்ணபிரான், அழகாண்டாள் தம்பதி ஈரோடு அருகில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது ஒரே மகன் பிரமானந்தம். அந்த சுற்றுவட்டாரத்தில் அவர் மிகவும் செல்வந்தராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் இருந்தார்.
கண்ணபிரானின் உடன்பிறந்த தங்கை ஜோதிமணி. அவருக்கும் மாணிக்கம் என்பவரோடு திருமணம் முடிந்து அதே பகுதியில் தான் வசித்து வந்தார். அவர்களுக்குப் பிறந்தவர்...
ஆதியும் சத்யாவோடு அதே நேரம் வாசலுக்கு வந்திருக்க அவனும் சுந்தரி அம்மாவின் மொத்த தவிப்பையும் கேட்க நேர்ந்தது.
ஆதிக்கு, ‘இந்த அம்மா ஏன் இந்த விஷயத்தை இந்தளவிற்கு சிக்கலாக்குகிறார்?’ என்று புரியவே இல்லை. அம்மா, மகன் உறவு மருமகள் என்கிற உறவு வந்தபிறகு எத்தனை தூரம் விலகியிருக்கிறது. அதையெல்லாம் பக்குவத்தோடு சூழலுக்குத் தக்க ஏற்றுக்கொள்ளும் நிதர்சனம்...
காவியத் தலைவன் – 36 FINAL2
((உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள் டியர்ஸ்.
ஏற்கனவே போட்ட பகுதி தான், கொஞ்சம் தூசு தட்டி இருக்கேன்.))
*** ஆதியின் மனம் என்றுமில்லாத வகையில் இன்று நிறைந்து போயிருந்தது. அவன் எண்ணிய காரியங்கள் எல்லாம் சிறப்பாக முடிந்திருக்க, அவன் மனம் அத்தனை பூரிப்பில் இருந்தது.
அந்த கொண்டாட்ட மனநிலையோடு தன் கரகாட்டக்காரியைத் தேடி வீட்டிற்கு வர,...
காவியத் தலைவன் – 11
தாரகேஸ்வரிக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. நிறைய சஞ்சலங்களும் வருத்தங்களும் மனதை வறுத்த, மிகுந்த சோர்வுடன் கணவனை நாடி சென்றாள்.
வழக்கம் போல அவன் அவனுக்கான பிரத்தியேக உள்ளறையில்!
இதுநாள் வரையிலும் தாரா அந்த அறைக்குச் சென்றதோ, செல்ல வேண்டும் என்று எண்ணியதோ எதுவும் இல்லை. இன்று ஏனோ அவன் வெளியே வரும்...
காவியத் தலைவன் – 25
பூஜிதா நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட ஆதிக்குள் பெரும் பிரளயம். பெற்றோரைக் கொலை செய்தது வீரராகவன் என்கிற அதிர்விலிருந்தே அவன் இன்னும் மீளவில்லை. இப்பொழுது இரு வீட்டுப் பிள்ளைகளை மாற்றி வைத்து தங்கள் குடும்பத்திற்கு பெரும் அநியாயம் இழைத்திருக்கும் விஷயத்தை எப்படி அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியும்?
‘அப்படியானால், பெற்றோரை இழந்த பிறகு...
“அண்ணா என்ன பிளான் வெச்சிருக்காருன்னு தெரியலை அண்ணி. இப்ப இந்துஜா வந்து கேட்டா என்ன சொல்லறது?”
“எதுவா இருந்தாலும் உங்க அண்ணா பார்த்துப்பாங்க. அதோட உங்களுக்கு ஒன்னும் இது விஷயமா தெரியாது தானே? அப்ப தெரியாதுன்னே சொல்லிடுங்க. அதுல என்ன?” என்று தாரகேஸ்வரி சொன்னதும், புரிந்தவன் போல, “ஆமாம், ஆமாம், எங்களுக்கு தான் எதுவும் தெரியாதில்லை....