எந்தன் சரிபாதியே.
சாத்விகா மாட்டுவாள் என்று சுத்தமாக எதிர்பார்க்க வில்லை. அவளுக்குப் புரியவுமில்லை எப்படித் தன்னைக் கண்டுபிடித்தார்கள் என்று. அவள் சுதாரிப்பதற்குள் பாண்டியின் ஆட்கள் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டார்கள். இல்லை என்றால் அவள் அவர்களைக் கண்டிப்பாகச் சமாளித்துத் தப்பியிருப்பாள்.
அந்த ஃபேக்ட்டரியின் பின்னால் உள்ள காலியிடத்தில் தான் சாத்விகாவின் கையையும் காலையும் கட்டிப் போட்டு அவளை...
சக்தியும் மங்கையும் முதலில் சென்றது வேலுமணி வீட்டிற்குத் தான். சக்தி வீட்டு வேலை செய்பவள் என்பதைக் காட்டவே அவளிடமிருந்த பழைய சாயம் வெளுத்த உடையைத் தான் அணிந்திருந்தாள். முகத்திலும் எந்த விதமாகவும் அலங்காரம் செய்யாமல் வெறும் பொட்டு மட்டும் வைத்திருந்தாள்.
வேலுமணி வீட்டில், அவர், அவரது மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் அவரது அம்மா இருக்கிறார்கள்....
எட்வின் ஆதனிடம் கூறியபடியே அடுத்த நாள் அவனது வீட்டிற்கு வந்தான். ஆனால் வீடு பூட்டியிருந்தது. இவ்ளோ காலையில் ஆதன் எங்குச் சென்றிருப்பான் என்று அறியாமல் அவனுக்குக் கைப்பேசியில் அழைத்தான் எட்வின்.
ஆதன் குற்றவாளி ராஜாவை கண்காணிக்க என்று சீக்கிரமே கிளம்பிச் சென்று விட்டான் அன்று. மாசாணி கூறிய ஏரியாவில் உள்ள சிறு தேநீர்க் கடையில் அமர்ந்து...
ஆதனும் சாத்விகாவும் சென்னையின் நுழைவாயில் வரும் போதே மணி ஏழு. பின்னர் சென்னையின் போக்குவரத்து நெரிசலைச் சமாளித்துக் கொண்டு சாத்விகா வீடு வரும் போது எட்டு மணியாகி விட்டது. பிரபு, சக்தி, ரவி, ஜெசிக்கா என்று நால்வரும் இவர்களுக்காக சாத்விகாவின் வீட்டில் காத்திருந்தவர்கள் ஜெசிக்காவின் அம்மா அழைத்து வீட்டிற்கு வரச் சொல்லிச் சொல்ல, வேறு...
ஆதன் செல்லும் வழியிலே கமிஷ்னருக்கு அழைத்து விவரத்தைக் கூறிவிட்டான். அவரும் வரச் சொல்ல, ஆதன் தான் மிகுந்த பரபரப்பாக இருந்தான்.
ஆதன் பின்னால் திரும்பி,"இங்கப் பார் சாமிக்கண்ணு நீ பயப்படாத சரியா. என்கிட்ட என்ன சொன்னியோ அதை அப்படியே கமிஷ்னர்கிட்ட சொல்லு. அவரைப் பார்த்து நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை புரியுதா?" நிதானமாக ஆதன் எடுத்துரைக்க,...
தேவிகா அவரது வீட்டில் தொலைக்காட்சியில் போட்ட செய்தியை மிகுந்த சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். நேற்று வரை அவரைப் பயமுறுத்திய வழக்கு இன்று ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. அதை நினைத்து அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. தன் வீட்டில் சமையல் வேலைச் செய்யும் பெண்ணை அழைத்து,"இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால ஐயாகிட்ட காசை வாங்கிக்கோ....
ஆதன் கமிஷ்னர் அறையிலிருந்து வெளியே வந்து அவனது வண்டிக்குப் பக்கத்தில் நின்றான். சிறிது நேரத்தில் சாமிக்கண்ணுவுடன் எட்வின் வெளியே வரவும் அவனைக் க்ரோதத்துடன் பார்த்தான் ஆதன்.
வேகமாக அவனிடம் சென்றவன் அவனது சட்டைக் காலரைப் பிடித்து,"உனக்கு என்ன டா துரோகம் பண்ணேன் நான்? ஏன் டா இப்படி என்னை நம்ப வைச்சு கழுத்தறுத்த?" என்று கோபமாகக்...
சாத்விகாவும் ரவியும் பணம் திருடு போன இடத்துக்கு மறுபடியும் வந்தார்கள். இப்பொழுது கழுகு கண்ணுடன் சுற்றுப்புறத்தைக் கவனமாக நோட்டம் விட, அப்பொழுது ஒருத்தர் அவர்களிடம் வந்து,"நானும் அப்போல இருந்து பார்க்கிறேன் இந்தப் பக்கமே சுத்திட்டு இருக்கீங்க? யார் நீங்க? போலிஸை கூப்பிடவா?" என்று நடுத்தர வயதிலிருந்த ஒருத்தர் வந்து அவர்களிடம் மிரட்ட, ரவி ஏதோ...
ஆதன் முதல் நாள் ராஜாவைச் சென்று சந்தித்து வந்த பிறகு அவனுக்குத் தெரியாமல் அவனை நான்கு நாட்கள் கண்காணித்தான். அந்த நான்கு நாட்களில் ராஜா செய்தது அவனது படையுடன் காலையில் அலப்பறையாக ஏதாவது ஒரு உணவகத்திற்குச் சென்று நன்றாகச் சாப்பிடுவது. பின்னர் அங்கு வருவோர் போவோரை வம்புக்கு இழுப்பது. அதன் பின்னர் மதுக்கடைக்குச் சென்று...
ஆதனிடம் பேசிவிட்டு வெளியே வந்த எட்வின் எதிர்கொண்டது செல்வத்தை தான். அவர் சாப்பாடு கொண்டு வந்து எட்வினிடம் தர, அதை வாங்கிக் கொண்டு ராஜா இருக்கும் அறைக்குச் சென்று அவனிடம் தந்தான் எட்வின். அதைக் கொடுத்து விட்டு வெளியே வந்தவன் சற்று தள்ளிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்து தன் கைப்பேசியை...
கமிஷ்னர் பத்திரிகையாளர்களிடம் பேசி முடித்துவிட்டு உள்ளே வர, ஆதன் இன்னும் வெறித்த பார்வையுடன் தான் நின்று கொண்டிருந்தான். அவனிற்கு அடுத்து என்ன செய்வதெனப் புரியவில்லை. யாரோ என்ன யாரோ கண்டிப்பாக இதை அந்த பாண்டி தான் செய்திருக்க வேண்டும். ஆனால் எப்படி அவன் உள்ளே வந்து இந்த ராஜாவை அடித்துக் கொன்றான் என்பது இன்னும்...
ஆதன், சாத்விகா அவளது வீட்டில் இல்லை என்று திரும்பி வந்தவுடன் காலை உணவு கூடச் சாப்பிடாமல் கிளம்ப, செல்வம் தான் அவனிடம்,"சார் டிஃபன் சாப்பிட்டீங்களா?"
"இல்லை செல்வம். அதுக்கு நேரமில்லை. அதை விடுங்க உங்களுக்கு மாதவரம் ஸ்டேஷன்ல யாரையாவது தெரியுமா?" என்று ஆதன் கேட்க, சில நிமிடம் யோசித்த செல்வம் வேகமாக,
"ம் தெரியும் சார். அந்த...
ஆதனும் எட்வினும் கிளம்பியதும் சதீஷ் வேகமாக அவனது அறைக்குச் சென்று கதவைப் பூட்டி விட்டு அவனது கைப்பேசி எடுத்து யாருக்கோ அழைத்தான்.
"சொல்லு சதீஷ் எதுக்கு கூப்பிட்ட?" என்று கணீர் குரலில் கேட்டான் பாண்டி.
"பாண்டி ரம்யா கேஸை க்ளோஸ் பண்ணிட்டாங்கனு நீங்கச் சொன்னீங்க!! ஆனால் இங்க ஆதன்னு ஒரு ஏ.சி.பி. வந்து எங்களுக்குச் சில சந்தேகம்...
ஆதன் காலையில் எழுந்து எப்பொழுதும் போல் வேலைக்குக் கிளம்பினான். அதுவும் அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பினான். என்ன தான் அந்தப் பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு வந்தாலும் அவன் மனதில் ஏதோ சரியில்லாதது போல் உறுத்திக் கொண்டே இருந்தது. அதைத் தெளிவுபடுத்த அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்த்து விட்டு வர வேண்டும் என்று சீக்கிரம்...
இரவு நேரம், தெரு விளக்கின் ஒளியில் வண்டி ஓட்டிக் கொண்டு அந்தச் சாலையில் வந்து கொண்டிருந்தான் அவன். அவனது முகத்தில் வேர்வையின் தடங்கள். அதைத் துடைத்துக் கொண்டே வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். தீடிரென பின்னால் ஏதோ சத்தம் கேட்க, வண்டியின் கண்ணாடி வழியாக அவன் பார்க்கச் சரியாக பின்னால் வந்த அந்த லாரி வேகமாக...
ஆதனும் சாத்விகாவும் பீச்சிலிருந்து கிளம்பினார்கள். காரில் ஏறி அமர்ந்ததும் ஆதன் சாத்விகாவிடம்,"பேபி இப்போ வீட்டுக்குப் போய் என்ன பண்ணப் போறோம்? ஒன்னும் பண்ணப் போறது இல்லை. அதுக்கு நாம எங்கேயாவது அப்படியே ஜாலியா ஊர் சுத்திட்டு அதுக்கு அப்புறம் வீட்டுக்குப் போகலாமே!!" என அவன் கூற, சாத்விகா யோசித்தாள். அவன் சொல்வது போல் வீட்டிற்குச்...
வீட்டிற்கு வந்த ஆதனுக்கு நினைவு முழுவதும் சாத்விகா பற்றித் தான். அவனால் அவளது சந்திப்பைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவனிற்கு அவனது செயல் சரியாகப் படவில்லை. அவள் ஒரு பெண் என்றும் பாராமல் அவளைத் தான் கையாண்ட விதம் சரியில்லை என்று ஒரு பக்கம் குற்றவுணர்ச்சியாக இருக்க,
"டேய் ஆதன் அவளை அப்படியே விட்டுட்டு...
சாத்விகா தன் வீட்டுக்குள் வந்து வேக வேகமாக அவளது வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டாள். ஒரு வாரம் போட்டிருந்த துணிகளைத் துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டுவிட்டு வீடு முழுவதையும் கூட்டித் துடைத்து விட்டாள். வீடு கூட்டுவது மற்றும் துடைப்பது தினமும் நடக்கும். துணி மட்டும் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மொத்தமாகப்...
ஆதனும் சாத்விகாவும் கோயம்புத்தூர் வரும் போது அதிகாலை நான்கு மணி. இரயிலிலிருந்து இறங்கிய இருவரும் இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தார்கள். அங்கு ஒரு டீக்கடை இருக்க ஆதன் சாத்விகாவிடம்,"சாத்விகா ஒரு டீ குடிக்கலாமா?" என்று அவன் கேட்க,
"ம் குடிக்கலாம் நிவாஸ். நான் ட்ரெயின்லயே ப்ரஷ் பண்ணிட்டேன்." என்று அவள் சிரித்துக் கொண்டே கூற, ஆதனும்...
மூன்று நாட்களாகிவிட்டது மாசாணியிடமிருந்து எந்தத் தகவலும் ஆதனுக்கு வரவில்லை. அடுத்த என்ன செய்வதெனப் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அதே போல் அவன் அனைவரின் முன்பும் எட்வினைக் கத்தியதை சுத்தமாக மறந்து விட்டான். எட்வினைப் பார்க்கும் போது அவன் சாதாரணமாகவே பேச, எட்வினிற்குப் பயங்கர கோபம் வந்து விட்டது. இது மட்டும் பத்தாது என்று தியாகு...