Sunday, May 11, 2025

    எந்தன் சரிபாதியே.

    ஆதனும் சாத்விகாவும் பீச்சிலிருந்து கிளம்பினார்கள். காரில் ஏறி அமர்ந்ததும் ஆதன் சாத்விகாவிடம்,"பேபி இப்போ வீட்டுக்குப் போய் என்ன பண்ணப் போறோம்? ஒன்னும் பண்ணப் போறது இல்லை. அதுக்கு நாம எங்கேயாவது அப்படியே ஜாலியா ஊர் சுத்திட்டு அதுக்கு அப்புறம் வீட்டுக்குப் போகலாமே!!" என அவன் கூற, சாத்விகா யோசித்தாள். அவன் சொல்வது போல் வீட்டிற்குச்...
    ஆதன் தன்னுடைய காவல் ஜீப்பில் தான் சாத்விகாவின் வீட்டிற்கு வந்திருந்தான். அதனால் சாத்விகாவின் காரில் தான் அவர்கள் பீச்சிற்கு வந்திருந்தனர். சாத்விகா தான் வண்டியை ஓட்டினாள். அதையே தான் ஆதனும் விரும்பினான். இருவரும் அவர்களது பயணம் முழுவதும் அமைதியாகத் தான் கழித்தனர். அந்தப் பயணம் முழுவதும் ஆதன் அவனது காதலை எப்படி அவளிடம் தெரிவிப்பது...
    ஆதனிடம் பேசிவிட்டு வெளியே வந்த எட்வின் எதிர்கொண்டது செல்வத்தை தான். அவர் சாப்பாடு கொண்டு வந்து எட்வினிடம் தர, அதை வாங்கிக் கொண்டு ராஜா இருக்கும் அறைக்குச் சென்று அவனிடம் தந்தான் எட்வின். அதைக் கொடுத்து விட்டு வெளியே வந்தவன் சற்று தள்ளிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்து தன் கைப்பேசியை...
    ஆதன் முதல் நாள் ராஜாவைச் சென்று சந்தித்து வந்த பிறகு அவனுக்குத் தெரியாமல் அவனை நான்கு நாட்கள் கண்காணித்தான். அந்த நான்கு நாட்களில் ராஜா செய்தது அவனது படையுடன் காலையில் அலப்பறையாக ஏதாவது ஒரு உணவகத்திற்குச் சென்று நன்றாகச் சாப்பிடுவது. பின்னர் அங்கு வருவோர் போவோரை வம்புக்கு இழுப்பது. அதன் பின்னர் மதுக்கடைக்குச் சென்று...
    எட்வின் ஆதனிடம் கூறியபடியே அடுத்த நாள் அவனது வீட்டிற்கு வந்தான். ஆனால் வீடு பூட்டியிருந்தது. இவ்ளோ காலையில் ஆதன் எங்குச் சென்றிருப்பான் என்று அறியாமல் அவனுக்குக் கைப்பேசியில் அழைத்தான் எட்வின். ஆதன் குற்றவாளி ராஜாவை கண்காணிக்க என்று சீக்கிரமே கிளம்பிச் சென்று விட்டான் அன்று. மாசாணி கூறிய ஏரியாவில் உள்ள சிறு தேநீர்க் கடையில் அமர்ந்து...
    ஆதனும் சாத்விகாவும் சென்னையின் நுழைவாயில் வரும் போதே மணி ஏழு. பின்னர் சென்னையின் போக்குவரத்து நெரிசலைச் சமாளித்துக் கொண்டு சாத்விகா வீடு வரும் போது எட்டு மணியாகி விட்டது. பிரபு, சக்தி, ரவி, ஜெசிக்கா என்று நால்வரும் இவர்களுக்காக சாத்விகாவின் வீட்டில் காத்திருந்தவர்கள் ஜெசிக்காவின் அம்மா அழைத்து வீட்டிற்கு வரச் சொல்லிச் சொல்ல, வேறு...
    ஆதனும் சாத்விகாவும் கோயம்புத்தூர் வரும் போது அதிகாலை நான்கு மணி. இரயிலிலிருந்து இறங்கிய இருவரும் இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தார்கள். அங்கு ஒரு டீக்கடை இருக்க ஆதன் சாத்விகாவிடம்,"சாத்விகா ஒரு டீ குடிக்கலாமா?" என்று அவன் கேட்க, "ம் குடிக்கலாம் நிவாஸ். நான் ட்ரெயின்லயே ப்ரஷ் பண்ணிட்டேன்." என்று அவள் சிரித்துக் கொண்டே கூற, ஆதனும்...
    சாத்விகா அவளது பெற்றோர்களைப் பற்றிக் கூறியதும், அவள் சாதாரணமாகி விட, கேட்ட ஆதனிற்குத் தான் மனம் கணத்தது. சாத்விகாவை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென முடிவெடுத்தான். அவன் ஏதோ வேகத்தில் முடிவெடுத்து விட்டான். ஆனால் சாத்விகா அவனது காதலை ஏற்பாளா? அப்படி அவள் ஏற்றாலும் அவனது பெற்றோர்கள் அவளை ஏற்றுக் கொள்வார்களா? கண்டிப்பாக அது...
    மூன்று நாட்களாகிவிட்டது மாசாணியிடமிருந்து எந்தத் தகவலும் ஆதனுக்கு வரவில்லை. அடுத்த என்ன செய்வதெனப் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அதே போல் அவன் அனைவரின் முன்பும் எட்வினைக் கத்தியதை சுத்தமாக மறந்து விட்டான். எட்வினைப் பார்க்கும் போது அவன் சாதாரணமாகவே பேச, எட்வினிற்குப் பயங்கர கோபம் வந்து விட்டது. இது மட்டும் பத்தாது என்று தியாகு...
    ஆதன் எட்வினை திட்டியதும் அவன் அவனது வேலையைப் பார்க்கச் சென்று விட, எட்வினுக்கு எல்லோர் முன்பும் திட்டியது ஒரு மாதிரியாக இருந்தாலும் இனி இது போல் நடக்கக் கூடாதென அவன் ட்ராயிங் ஆர்ட்டிஸ்ட்டை கையோடு கூட்டிட்டு வரச் சென்று விட்டான். ஆதனின் காவல் நிலையத்தில் வேலைப் பார்க்கும் மற்றொரு ஆய்வாளர் தான் தியாகு. அவர் கல்யாணிற்கு...
    சாத்விகாவும் ஆதனும் அலமாரிக்குள் நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தனர். காரணம் இருவரும் நெருக்கமாக நிற்பது அவர்களுக்குக் கூச்சத்தைத் தந்தது. ஆதனுக்கு கூச்சமாக இருந்தாலும் அவன் ரசித்துக் கொண்டும் நின்றிருந்தான். பத்து நிமிடங்கள் அப்படியே நின்ற சாத்விகா இதற்கு மேல் முடியாதென அலமாரியைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டாள். அப்பொழுது தான் அவளால் நிம்மதியாக...
    சக்தியும் மங்கையும் முதலில் சென்றது வேலுமணி வீட்டிற்குத் தான். சக்தி வீட்டு வேலை செய்பவள் என்பதைக் காட்டவே அவளிடமிருந்த பழைய சாயம் வெளுத்த உடையைத் தான் அணிந்திருந்தாள். முகத்திலும் எந்த விதமாகவும் அலங்காரம் செய்யாமல் வெறும் பொட்டு மட்டும் வைத்திருந்தாள். வேலுமணி வீட்டில், அவர், அவரது மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் அவரது அம்மா இருக்கிறார்கள்....
    ஆதன், சாத்விகாவின் வீட்டிலிருந்து நேராகச் சென்றது அவனது காவல் நிலையத்திற்குத் தான். போகும் முன் மீண்டும் மங்கையிடம்,"அம்மா நீங்க நாளைக்கு வேலைக்குப் போறதுக்கு முன்னாடி இங்க வந்துட்டு போங்க. கொஞ்சம் சீக்கிரம் வந்தீங்கனா நம்ம என்ன பண்றதுனு பேச வசதியா இருக்கும். உங்களை இன்னைக்கு மாதிரி இவர் கூப்பிட்டு வந்துடுவார்." என்று அவன் கூற, "சரிங்க...
    ஆதன் செல்லும் வழியிலே கமிஷ்னருக்கு அழைத்து விவரத்தைக் கூறிவிட்டான். அவரும் வரச் சொல்ல, ஆதன் தான் மிகுந்த பரபரப்பாக இருந்தான். ஆதன் பின்னால் திரும்பி,"இங்கப் பார் சாமிக்கண்ணு நீ பயப்படாத சரியா. என்கிட்ட என்ன சொன்னியோ அதை அப்படியே கமிஷ்னர்கிட்ட சொல்லு. அவரைப் பார்த்து நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை புரியுதா?" நிதானமாக ஆதன் எடுத்துரைக்க,...
    ஆதனும் எட்வினும் கிளம்பியதும் சதீஷ் வேகமாக அவனது அறைக்குச் சென்று கதவைப் பூட்டி விட்டு அவனது கைப்பேசி எடுத்து யாருக்கோ அழைத்தான். "சொல்லு சதீஷ் எதுக்கு கூப்பிட்ட?" என்று கணீர் குரலில் கேட்டான் பாண்டி. "பாண்டி ரம்யா கேஸை க்ளோஸ் பண்ணிட்டாங்கனு நீங்கச் சொன்னீங்க!! ஆனால் இங்க ஆதன்னு ஒரு ஏ.சி.பி. வந்து எங்களுக்குச் சில சந்தேகம்...
    ஆதனும் சாத்விகாவும் மருத்துவமனை வந்து சேர்ந்த போது மணி எட்டு. கிட்டதட்ட முக்கால் மணி நேரத்தில் வர வேண்டிய இடத்திற்கு ஆதன் ஒரு மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக் கொண்டதால் தான் இந்தத் தாமதம். ஆதன் நன்றாக அதுவும் வேகமாகவே வண்டி ஓட்டக் கூடியவன் தான். ஆனால் இன்று சாத்விகா பின்னால் அமர்ந்திருந்தது அவனுக்கு...
    சாத்விகாவும் ரவியும் பணம் திருடு போன இடத்துக்கு மறுபடியும் வந்தார்கள். இப்பொழுது கழுகு கண்ணுடன் சுற்றுப்புறத்தைக் கவனமாக நோட்டம் விட, அப்பொழுது ஒருத்தர் அவர்களிடம் வந்து,"நானும் அப்போல இருந்து பார்க்கிறேன் இந்தப் பக்கமே சுத்திட்டு இருக்கீங்க? யார் நீங்க? போலிஸை கூப்பிடவா?" என்று நடுத்தர வயதிலிருந்த ஒருத்தர் வந்து அவர்களிடம் மிரட்ட, ரவி ஏதோ...
    சாத்விகாவும் ரவியும் பக்கத்தில் உள்ள ஒரு நல்ல உணவகத்திற்குச் சென்றனர். அங்குக் காலியாக இருந்த இடமாகப் பார்த்து அமர்ந்தனர். பேரர் வந்து ஆர்டர் எடுத்துச் சென்றவுடன் ரவி தான் ஆரம்பித்தான், "என்ன பண்றது ராக்கி? இந்த கேஸ் நமக்குக் கொஞ்சம் ரிஸ்க்கா இருக்கும்னு தோனுது." "பீஸ்ட் இந்த மாதிரி கேஸ் தான் நம்மளை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு...
    ஆதன், சாத்விகா அவளது வீட்டில் இல்லை என்று திரும்பி வந்தவுடன் காலை உணவு கூடச் சாப்பிடாமல் கிளம்ப, செல்வம் தான் அவனிடம்,"சார் டிஃபன் சாப்பிட்டீங்களா?" "இல்லை செல்வம். அதுக்கு நேரமில்லை. அதை விடுங்க உங்களுக்கு மாதவரம் ஸ்டேஷன்ல யாரையாவது தெரியுமா?" என்று ஆதன் கேட்க, சில நிமிடம் யோசித்த செல்வம் வேகமாக, "ம் தெரியும் சார். அந்த...
    கல்யாண் வேகமாக ரம்யா இறந்த வீட்டிற்குள் நுழைந்தான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த வேலுமணி இவனைப் பார்த்து பதற்றமாக எழுந்து அவனிடம் வந்தார். "அந்த ஆதன் அதுக்கு அப்புறம் இங்க வந்தானா?" "இல்லை சார்." "சரி அவன் எங்க எல்லாம் போனான்?" என்று கேட்க, "மாடிக்குப் போனான் சார். அப்புறம் வீட்டுக்குப் பின்னாடி போய் பார்த்திருப்பான் போல கான்ஸ்டபிள் சொன்னான். அதுக்கு...
    error: Content is protected !!