Monday, May 12, 2025

    அமுதம் பொழியும் குமுதம் மலரும்!

    அத்தியாயம் 23 தேர்வெல்லாம் முடிந்து முடிவும் வந்து விட்ட பிறகும் கூட ஒன்பது மணிக்கு உறங்கும் வழக்கத்தைக் குமுதா மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் சீக்கிரமே உண்டு முடித்து வந்து படுத்து விடுபவளுக்கு அவன் எத்தனை மணிக்கு வருகிறான் என்பது கூடத் தெரியாது. ஒன்பதரைக்கோ, ஒன்பதே முக்காலுக்கோ சில நேரம் பத்து மணிக்கோ கூட வருபவன் மரகதம் உணவைப்...
    அத்தியாயம் 19 அவர் சொன்ன விஷயம் கேட்டுக் குமுதா அதிர்ச்சியடைவாள் என்று அவர் பார்த்திருக்க அவளோ “எனக்குத் தெரியும்த்த!” என்றாள். “எல்லாந் தெரிஞ்சுமா எம் மகனைக் கட்டிகிட்ட?” என்றவருக்கு அந்த விஷயம் அவருக்குத் தெரிய வந்த நாள் நினைவு வந்தது. மரகதம் அமுதன் வீட்டிலிருந்து வந்த மறுநாள் அமுதன் வீட்டு வேலையாள் ரத்தினம் அவரைப் பார்க்க வந்தார். “ஆத்தா! ஒங்ககிட்ட...
    அத்தியாயம் 18 குமுதா தன் புகாரைச் சொல்ல முன் வந்து நின்றதுமே குற்றம் சாட்டப்பட்டவனாக எழுந்து நின்றவனின் கண்ணசைவில் அவன் பின்னிருந்த நாற்காலியை ஒருவன் வந்து எடுத்துச் சென்றான். “ம்ம்ம் சொல்லு தாயி.என்ன உன் ப்ராது?” பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் இருந்த ஒருவர் கேட்க அவள் அமைதியாக நின்றிருந்தாள். “இதா பாராத்தா! நீ இந்த ஊர்க்காரியில்ல. ஆனாலும் நம்ம...
    பின்னுரை ஐந்து வருடங்கள் கழித்து... தன் புல்லட்டை வாசலில் நிறுத்தி விட்டு இறங்கியிருந்தான் அமுதன். அவன் புல்லட் சத்தம் கேட்டதுமே வாசலுக்கு ஓடி வந்த பிள்ளைகள் எழில்குமரன், முத்தழகி இருவரையும் இரண்டு கைகளில் தூக்கியவாறு வீட்டினுள் நுழைந்தான். தன் தாத்தாவின் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரைப் பிள்ளைகளுக்குப் பிரித்துப் பெயரிட்டிருந்தானவன். பெரிய கூடத்தில் ஒருபுறம் அமுதனும் குமுதாவும் சார்பதிவாளர் அலுவலகத்தில் மாலையும்...
    அத்தியாயம் 22 குமுதாவுக்குத் திருநெல்வேலியிலேயே தேர்வு மையம் அமைந்திருக்க, என்னதான் பக்கம் என்றாலும் காலையில் கோடனூரில் இருந்து கிளம்பிச் செல்வது நேர விரயம் என்று கருதியவன் முதல் நாளே தேர்வு மையத்தின் அருகிலேயே ஒரு தங்கும் விடுதியில் அறை பதிவு செய்து அவளை அழைத்துக் கொண்டு சென்றிருந்தான். திருநெல்வேலியில் அவனுக்குச் சொந்தமாக, தங்குவதற்கு வீடுகள் இருந்தாலும் காலைப்...
    அத்தியாயம் 20 அவள் பேச ஆரம்பிக்கும் முன்னதாகவே “அறிவு கிறிவு இருக்கா ஒனக்கு? இன்னும் பத்தே நாளுல பரீச்சைய வச்சுகிட்டு இப்படி வாசல்ல நின்னு லாந்திகிட்டு நேரத்த வீணாக்கிகிட்டுக் கெடக்கே.காலைல இருந்து பட்டினி வேற. ஏன் பரிச்ச நேரத்துல ஒடம்புக்கு ஏதாவது வியாதிய இழுத்து விட்டுக்கிடணுமா? அது சரி! பரீச்ச எழுதுற எண்ணம் இன்னும் இருக்கா...
    அத்தியாயம் 16 தன்னை ஒருவன் இழிவுபடுத்த முயல்கிறான். தன் ஆடைகளைக் கிழித்து அவமானப்படுத்த முயல்கிறான். தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என அவள் தொய்ந்த நேரம் அவள் மூளைக்குள் ‘எவனாவது தப்பா கிப்பா நடக்க முயற்சி பண்ணினா காலுல கெடக்கிறதைக் கழட்டி வெளுத்து விட்டுரு.என்ன வந்தாலும் மாமன் நான் பாத்துக்கிடுதேன். சும்மா மட்டும் விட்ராதே அவனை’...
    “பைக்கில ஒரு பக்கமா உக்காந்தது,வீட்டுல மொகம் கழுவிட்டு முன்னயெல்லாம் நனஞ்சதும் துண்டைத் துப்பட்டா மாரி போட்டுகிட்டதுன்னு மொதல்லயே ஒன்னக் கண்டுகிட்டேன்.ஒன் செர்டிஃபிகேட் பார்த்து உறுதியாவும் ஆயிருச்சு.” “மறுநாப் பள்ளிக்கோடத்துல வச்சு ராத்திரி வர்றியான்னு கேட்டுட்டுத் திரும்பிப் போகையில ஒரே சங்கடமாப் போச்சு எனக்கு.எப்பிடி அந்தப் புள்ளையப் பார்த்து இப்படிக் கேட்டோம்னு யோசிச்ச எனக்கு ஒன்னத் தவிர...
    அத்தியாயம் 11 சுற்றியிருந்த அனைவரும் ஆரவாரிக்க, குமுதாவின் முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி. உட்கார்ந்த இடத்திலிருந்தே நன்றாக உண்டு உடல் கொழுத்துப் போயிருந்தவன் ஓயாத உடற்பயிற்சிகளால் உரமேறிய உடலைக் கொண்டிருந்தவனின் அடிகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறி விழுந்திருக்க அவனருகில் சென்று முழங்காலால் அவன் முதுகில் மண்டியிட்டவன் அவன் அலற அலற ஒரு கையைப் பிடித்துப் பின்புறமாக முறுக்கினான். “இந்தக்...
    அத்தியாயம் 6 மாலை நேரமானாலும் படு உற்சாகமாகத் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அமுதன். இன்னும் சற்று நேரத்தில் அவன் உற்சாகம் பறிபோகப் போவது தெரியாமல் மெலிதாகச் சீழ்க்கை கூட அடித்துக் கொண்டான். அந்த நேரம் இன்டெர்காம் கிணுகிணுக்க எடுத்துக் காதில் பொருத்தினான். “ம்ம்ம்.சொல்லுங்க!” “ஐயா! உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்கு!” “பொண்ணா? ஆரு?” “குமுதான்னு சொல்றாங்க” அவன் மனம் இறக்கை...
    அத்தியாயம் 28 சொன்னது போலவே ஐந்து மணிக்கு வந்து விட்டவள் ஆவலாகக் கணவனைத் தேட “மாமாவும் வில்லியும் ஃபேக்டரிக்குப் போயிருக்காங்க” என்று வேதவல்லி தகவல் சொன்னாள். அவள் கைகளில் தவழ்ந்திருந்த சிறுவனை ஆவலாகக் குமுதா வாங்கிக் கொள்ள “எம் மேல கோபம் போயிருச்சா குமுதா?” “அச்சோ! அதெல்லாம் இல்லக்கா.மாமாவை விட்டுட்டுப் போய்ட்டீங்களேன்னு கோபம் இருந்தது உண்மைதான். ஆனா நடந்த விஷயமெல்லாம்...
    அத்தியாயம் 3 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோடனூர். தலைமை ஆசிரியரின் அறைக்கு முன் போடப்பட்டிருந்த நீள பெஞ்சில் அமர்ந்திருந்தாள் அவள். கண்களோ வலது பக்கமிருந்த பெரிய நுழைவு வாயிலை அடிக்கொருதரம் தொட்டு மீண்டு கொண்டிருந்தன. மனமோ முதல் நாள் மாலை நடந்த நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. முந்தைய தினம் மாலை அமுதன் அவள் கையில் அந்தப் பைகளைக் கொடுத்ததும் மனதில்...
    இறுதி ஆண்டுத் தேர்வை நல்லபடியாகச் செய்து முடித்திருந்த மறுநாளே மனைவியை அழைத்துக் கொண்டு ஊட்டிக்குப் புறப்பட்டு விட்டான் அமுதன். அந்த ஒரு வாரமும், கடந்து போன வருடங்களில் அவளது ஏக்கங்களுக்கெல்லாம் ஈடுகட்டுவது போல் அவளை இந்திரபோகத்தில் திளைக்க வைத்துத் தானும் அந்த மகிழ்ச்சியில் முக்குளித்தான். ஒரு வார முடிவில் இல்லம் திரும்பி இருந்தனர் தம்பதிகள். மறுநாள்...
    அத்தியாயம் 13 வளைகாப்பு வீட்டிலிருந்து வருகையில் குமுதா மரகதத்திடம், “யத்தே! எனக்கு மாமங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நான் அந்த வீட்டுக்குப் போய் வரட்டா?” “ஏம்த்தா மாறங்கிட்ட ஃபோனுல பேச வேண்டியதுதான? இதுக்கு என்னத்துக்கு வெயிலோட கெடந்து அலையுதேங்கே?” “இல்லத்த, இது நேர்லதான் கேக்கணும். மாமன் இன்னிக்கு இங்கன வருவாகன்னு நெனச்சிருந்தேன்” “சர்த்தான் போய் வா! ஆனா இந்நேரம் அவன்...
    அத்தியாயம் 9    நாட்கள் கடுகி விரைந்தன. அமுதன், குமுதா இருவருமே செய்து கொண்டிருந்த முடிவைச் செவ்வனே நிறைவேற்றினார்கள். அதற்கு அமுதனுக்குத் தொழிலும் குமுதாவுக்குப் படிப்பும் உறுதுணையாய் இருந்தன. குமுதாவிடம் எப்போதுமே ஒரு நல்ல பழக்கம் உண்டு. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் பாட புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்க அமர்ந்து விட்டாளானால் மற்றது பின்னுக்குப் போய் விடும். இந்தக் குணம்...
    அத்தியாயம் 12 பேருந்தில் இருந்து இறங்கி முதலில் அவளது பயிற்சி மையத்துக்குச் சென்றவர்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, செய்ய வேண்டிய மற்ற முறைமைகளையும் செய்து முடித்தனர். அன்று துவக்க வகுப்பு அரை மணி நேரம் மட்டுமே என்பதால் மற்றிருவரும் காத்திருக்க குமுதா வகுப்பை முடித்து விட்டு வந்தாள். கோடனூரில் இருந்து கிளம்பும் போதே மரகதம், வந்து வெகு...
    அத்தியாயம் 25 மறுநாள் காலை அவளை அழைத்துக் கொண்டு அவன் சென்ற இடம் சார்பதிவாளர் அலுவலகம். மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றவளை அழைத்துச் சென்று பதிவாளர் முன்னாலிருந்த பதிவேட்டைக் காட்டி அவன் கையெழுத்திடச் சொல்ல அப்போதுதான் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வந்திருக்கிறார்கள் என்பது அவளுக்குப் புரிந்தது. பதிவே செய்யாத திருமணத்தை ரத்து செய்யப் போகிறானோ எனப்...
    அத்தியாயம் 17 தன் அறைக்கு வந்திருந்தவனைக் கதிரவன் அலைபேசியில் அழைக்க எடுத்துக் காதில் வைத்தவன், “சொல்லு கதிர்! என்ன இந்நேரம் கூப்பிட்டுருக்கே?” “அண்ணாச்சி! உங்க வாட்ஸப்புக்கு ரெண்டு மூணு ஃபோட்டோ அனப்பி இருக்கேன். பாருங்க மொதல்ல” பதறிப் போனான் அமுதன். குமுதா அவனிடம் என்ன முயன்றும் சிவஞானத்தால் தன்னைப் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்பது போலத்தான் சொல்லி இருந்தாள். ஒருவேளை இடைப்பட்ட...
    அத்தியாயம் 5 காலை நான்கு மணிக்கு யாரும் எழுப்பத் தேவையில்லாமலே எழுந்து விடும் பழக்கமுள்ள குமுதா அதே பழக்கத்தை மரகதத்தின் வீட்டிலும் பின்பற்றினாள். எழுந்ததும் முகம் கழுவிக் கொண்டு படிக்க உட்கார்ந்து விடுவாள். தானும் நான்கு மணிக்கு எழுந்து விடும் மரகதம் மாடுகளுக்கு வைக்கோல் போட்டு விட்டு, பால் கறக்க வரும் மன்னாருவிடம் முதல் நாள் பகலிலேயே...
    அத்தியாயம் 26 இத்தனை நாட்களாகத் தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருக்கும் அவர்கள் வாழ்க்கையில் மறுபடிக் கல்லெறிந்து குழப்ப வந்து விட்டாளா இவள் என்ற எண்ணம் தோன்றி விட ஆத்திரம் அணைமீற அந்த நேரம் குளியலறையைத் திறந்து கொண்டு வெளியே வந்த அமுதனைக் கவனிக்காமல் பேச, இல்லையில்லை, ஏச ஆரம்பித்தாள். “ஏய்! நீ எதுக்குடி என் மாமனுக்கு ஃபோன்...
    error: Content is protected !!